அத்தியாயம்: 12, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1784

حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جُوَيْرِيَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلِ بْنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏عَبْدَ الْمُطَّلِبِ بْنَ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ ‏ ‏حَدَّثَهُ قَالَ ‏

اجْتَمَعَ ‏ ‏رَبِيعَةُ بْنُ الْحَارِثِ ‏ ‏وَالْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏فَقَالَا وَاللَّهِ لَوْ بَعَثْنَا هَذَيْنِ الْغُلَامَيْنِ قَالَا لِي ‏ ‏وَلِلْفَضْلِ بْنِ عَبَّاسٍ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَكَلَّمَاهُ فَأَمَّرَهُمَا عَلَى هَذِهِ الصَّدَقَاتِ فَأَدَّيَا مَا يُؤَدِّي النَّاسُ وَأَصَابَا مِمَّا يُصِيبُ النَّاسُ قَالَ فَبَيْنَمَا هُمَا فِي ذَلِكَ جَاءَ ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏ ‏فَوَقَفَ عَلَيْهِمَا فَذَكَرَا لَهُ ذَلِكَ فَقَالَ ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏ ‏لَا تَفْعَلَا فَوَاللَّهِ مَا هُوَ بِفَاعِلٍ فَانْتَحَاهُ ‏ ‏رَبِيعَةُ بْنُ الْحَارِثِ ‏ ‏فَقَالَ وَاللَّهِ مَا تَصْنَعُ هَذَا إِلَّا ‏ ‏نَفَاسَةً ‏ ‏مِنْكَ عَلَيْنَا فَوَاللَّهِ لَقَدْ نِلْتَ صِهْرَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَمَا نَفِسْنَاهُ عَلَيْكَ قَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏أَرْسِلُوهُمَا فَانْطَلَقَا وَاضْطَجَعَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏قَالَ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الظُّهْرَ سَبَقْنَاهُ إِلَى الْحُجْرَةِ فَقُمْنَا عِنْدَهَا حَتَّى جَاءَ فَأَخَذَ بِآذَانِنَا ثُمَّ قَالَ أَخْرِجَا مَا تُصَرِّرَانِ ثُمَّ دَخَلَ وَدَخَلْنَا عَلَيْهِ وَهُوَ يَوْمَئِذٍ عِنْدَ ‏ ‏زَيْنَبَ بِنْتِ جَحْشٍ ‏ ‏قَالَ فَتَوَاكَلْنَا الْكَلَامَ ثُمَّ تَكَلَّمَ أَحَدُنَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنْتَ أَبَرُّ النَّاسِ ‏ ‏وَأَوْصَلُ النَّاسِ وَقَدْ بَلَغْنَا النِّكَاحَ فَجِئْنَا لِتُؤَمِّرَنَا عَلَى بَعْضِ هَذِهِ الصَّدَقَاتِ فَنُؤَدِّيَ إِلَيْكَ كَمَا يُؤَدِّي النَّاسُ وَنُصِيبَ كَمَا يُصِيبُونَ قَالَ فَسَكَتَ طَوِيلًا حَتَّى أَرَدْنَا أَنْ نُكَلِّمَهُ قَالَ وَجَعَلَتْ ‏ ‏زَيْنَبُ ‏ ‏تُلْمِعُ ‏ ‏عَلَيْنَا مِنْ وَرَاءِ الْحِجَابِ أَنْ لَا تُكَلِّمَاهُ قَالَ ثُمَّ قَالَ ‏ ‏إِنَّ الصَّدَقَةَ لَا ‏ ‏تَنْبَغِي لِآلِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ ادْعُوَا لِي ‏ ‏مَحْمِيَةَ ‏ ‏وَكَانَ عَلَى الْخُمُسِ ‏ ‏وَنَوْفَلَ بْنَ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏قَالَ فَجَاءَاهُ فَقَالَ ‏ ‏لِمَحْمِيَةَ ‏ ‏أَنْكِحْ هَذَا الْغُلَامَ ابْنَتَكَ ‏ ‏لِلْفَضْلِ بْنِ عَبَّاسٍ ‏ ‏فَأَنْكَحَهُ وَقَالَ ‏ ‏لِنَوْفَلِ بْنِ الْحَارِثِ ‏ ‏أَنْكِحْ هَذَا الْغُلَامَ ابْنَتَكَ لِي فَأَنْكَحَنِي وَقَالَ ‏ ‏لِمَحْمِيَةَ ‏ ‏أَصْدِقْ عَنْهُمَا مِنْ الْخُمُسِ كَذَا وَكَذَا ‏

‏قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏وَلَمْ يُسَمِّهِ لِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ الْهَاشِمِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ الْمُطَّلِبِ بْنَ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏أَنَّ أَبَاهُ ‏ ‏رَبِيعَةَ بْنَ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏وَالْعَبَّاسَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏قَالَا ‏ ‏لِعَبْدِ الْمُطَّلِبِ بْنِ رَبِيعَةَ ‏ ‏وَلِلْفَضْلِ بْنِ عَبَّاسٍ ‏ ‏ائْتِيَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَقَالَ فِيهِ فَأَلْقَى ‏ ‏عَلِيٌّ ‏ ‏رِدَاءَهُ ثُمَّ اضْطَجَعَ عَلَيْهِ وَقَالَ أَنَا ‏ ‏أَبُو حَسَنٍ الْقَرْمُ ‏ ‏وَاللَّهِ لَا أَرِيمُ مَكَانِي حَتَّى يَرْجِعَ إِلَيْكُمَا ابْنَاكُمَا بِحَوْرِ مَا بَعَثْتُمَا بِهِ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ فِي الْحَدِيثِ ثُمَّ قَالَ لَنَا إِنَّ هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ وَإِنَّهَا لَا تَحِلُّ ‏ ‏لِمُحَمَّدٍ ‏ ‏وَلَا لِآلِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏وَقَالَ أَيْضًا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِوَسَلَّمَ ‏ ‏ادْعُوَا لِي ‏ ‏مَحْمِيَةَ بْنَ جَزْءٍ ‏ ‏وَهُوَ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي أَسَدٍ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اسْتَعْمَلَهُ عَلَى الْأَخْمَاسِ

ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி-என் தந்தை) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்னையும் ஃபள்லு பின் அப்பாஸையும் சுட்டிக் காட்டி) “இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, தர்மப் பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம். (அவ்வாறு அமர்த்தப்பட்டால்,) மக்கள் வழங்குகின்ற(ஸகாத்)தை இவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்படைப்பார்கள். (இந்தப் பணிக்காக) பிறருக்குக் கிடைக்கின்ற (பரிசுப்) பொருள் போல இவர்களுக்கும் கிடைக்கும்” என்று பேசிக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது அலீ பின் அபீதாலிப் (ரலி) அங்கு வந்து அவர்களுக்கு முன்னால் நின்றார்கள். அப்போது அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை அலீ (ரலி) அவர்களிடம் தெரிவித்தனர். அதைக் கேட்ட அலீ பின் அபீதாலிப் (ரலி), “அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நீங்கள் சொல்வதுபோல் செய்யமாட்டார்கள்” என்று சொன்னார்கள்.

ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி), அலீ (ரலி) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் மீதுள்ள பொறாமையால்தான் இவ்வாறு நீங்கள் சொல்கின்றீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (மகளை மணந்து) மருமகன் உறவானீர்கள். அதனால் நாங்கள் உங்கள் மீது பொறாமை கொள்ளவில்லையே!” என்று கூறினர். அலீ (ரலி), “அவர்களிருவரையும் அனுப்பிப் பாருங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அலீ (ரலி) (அங்கேயே) சாய்ந்து படுத்துக்கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் நாங்கள் (இருவரும்) முந்திக் கொண்டு சென்று, அவர்களது அறைக்கு அருகில் நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து எங்களுடைய காதுகளைப் பிடித்து, “நீங்கள் இருவரும் உங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துங்கள்” என்று சொன்னார்கள். பிறகு அறைக்குள் நுழைந்தார்கள். நாங்களும் உள்ளே நுழைந்தோம். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பேசுமாறு சொல்லிக் கொண்டிருந்தோம்.

இறுதியாக, எங்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்களிலேயே மிகவும் ஈகைக் குணம் கொண்டவரும் உறவினர்களை நன்கு அரவணைத்துக் கொள்பவரும் ஆவீர்கள். நாங்கள் மணமுடிக்கும் வயதை அடைந்துவிட்டோம். எனவே, தான-தர்மங்களை வசூலிக்கும் பொறுப்புகளில் ஒன்றில் எங்களை நியமிக்குமாறு கேட்டு உங்களிடம் நாங்கள் வந்துள்ளோம். மக்கள் வழங்கும் ஸகாத் பொருட்களை அப்படியே உங்களிடம் கொண்டுவந்து ஒப்படைப்போம். (இப்பணிக்குப் பரிசாக) பிறர் பெற்றுக்கொள்வதைப் போன்று நாங்களும் பெற்றுக்கொள்வோம்”’ என்று கூறினார்.

இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நீண்ட நேரம் அமைதியாக இருந்தார்கள். இறுதியில் அவர்களிடம் (மீண்டும்) பேசலாமா என்று எண்ணினோம். (இதற்குள்) ஸைனப் (ரலி) திரைக்கு அப்பாலிருந்து ‘பேச வேண்டாம்’ என எங்களுக்குச் சைகை செய்யலானார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்” என்று கூறிவிட்டு, “(பனூ அஸத் கூட்டத்தைச் சேர்ந்தவரான) மஹ்மியாவையும் நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிபையும் என்னிடம் வரச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (அப்போது மஹ்மியா (ரலி), போரில் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான குமுஸ் நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார்கள்).

அவர்கள் இருவரும் வந்தபோது மஹ்மியா (ரலி) அவர்களிடம், “இந்த (ஃபள்லு பின் அப்பாஸ்) இளைஞருக்கு உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே மஹ்மியா (ரலி) மணமுடித்து வைத்தார்கள். பிறகு நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம், (என்னைச் சுட்டிக்காட்டி), “இந்த இளைஞருக்கு உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நவ்ஃபல் (ரலி) எனக்கு(த் தம் மகளை) மணமுடித்து வைத்தார்கள். மேலும், மஹ்மியா (ரலி) அவர்களிடம் “இவர்கள் இருவருக்காகவும் போரில் கிடைத்த ஐந்தில் ஒருபாகம் நிதியிலிருந்து இன்ன இன்னதை மணக் கொடையாக (மஹர்) கொடுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி)


குறிப்புகள் : இதன் அறிவிப்பாளரான ஸுஹ்ரீ (ரஹ்), “அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் நவ்ஃபல் (ரஹ்) (அந்த) மஹர் தொகை (எவ்வளவு என்பது) குறித்து என்னிடம் குறிப்பிடவில்லை” என்று கூறினார்கள்.

யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) வழி அறிவிப்பு “என் தந்தை ரபிஆ பின் அல் ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) மற்றும் அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் என்னிடமும் ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் நீங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறியதாகத் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

மேலும் அதில், அலீ (ரலி) தமது மேல்துண்டைப் போட்டு அதன் மீது சாய்ந்து படுத்துக் கொண்டார்கள். மேலும், “நான் ஹஸனின் தந்தை ஆவேன்; கருத்துடையவனும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியனுப்பிய விஷயத்திற்கு உங்களுடைய புதல்வர்கள் இருவரும் பதில் கொண்டு வரும்வரை இவ்விடத்தைவிட்டு நான் நகரமாட்டேன்” என்று அலீ (ரலி) கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.

கூடுதலாக,

எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இந்தத் தர்மப் பொருட்கள், மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம். இவை முஹம்மதுக்கோ முஹம்மதின் குடும்பத்தாருக்கோ அனுமதிக்கப்படவில்லை” என்று கூறினார்கள். மேலும், “மஹ்மியா பின் ஜஸ்உவை என்னிடம் வரச் சொல்லுங்கள்” என்றார்கள். அவர் பனூ அஸத் குலத்தைச் சேர்ந்தவராவார். போரில் கிடைத்த செல்வங்களில் ஐந்தில் ஒரு பாக (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரை நியமித்திருந்தார்கள் என்றும் காணப்படுகிறது:

அத்தியாயம்: 12, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1630

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ سَرْحٍ ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَعَمْرُو بْنُ سَوَّادٍ ‏ ‏وَالْوَلِيدُ بْنُ شُجَاعٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ وَهْبٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَذْكُرُ ‏

‏أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏فِيمَا سَقَتْ الْأَنْهَارُ وَالْغَيْمُ ‏ ‏الْعُشُورُ ‏ ‏وَفِيمَا سُقِيَ ‏ ‏بِالسَّانِيَةِ ‏ ‏نِصْفُ الْعُشْرِ

“நதிகளாலும் மேகமழையாலும் முளைத்தவற்றில் பத்து சதவீதம் (ஸகாத் கடமை) ஆகும். நீர் பாய்ச்சி முளைத்தவற்றில் ஐந்து சதவீதம் (ஸகாத் கடமை) ஆகும்” என்று நபி (ஸல் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 29

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاسْتُخْلِفَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏بَعْدَهُ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ ‏ ‏الْعَرَبِ ‏ ‏قَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَدْ ‏ ‏عَصَمَ ‏ ‏مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي ‏ ‏عِقَالًا ‏ ‏كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ ‏
‏فَقَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ شَرَحَ صَدْرَ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபின் அபூபக்ரு (ரலி) அவர்கள் ஆட்சியாளர் ஆக்கப்பட்டதும் அரபுகளில் சிலர் (ஜகாத் செலுத்த) மறுத்து நின்றனர்.

(அவர்களுடன் போர் தொடுக்க கலீஃபா அபூபக்ரு (ரலி) அவர்கள் ஆயத்தமானபோது) உமர் பின் அல்-கத்தாப் (ரலி) அவர்கள் அபூபக்ரு (ரலி) அவர்களிடம், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உறுதி கூறியவர், அவர்தம் (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாகத் தமது உயிரையும் உடமைகளையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது நீங்கள் எவ்வாறு (இறை நம்பிக்கை கொண்டுள்ள) இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ரு (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! தொழுகையையும் ஜகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஏனெனில் ஜகாத், செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக!, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஜகாத்தாகச்) செலுத்திய ஒட்டகத்தின் கயிற்றை இவர்கள் என்னிடம் செலுத்த மறுத்தால்கூட, அதை மறுத்தவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள்.

இது குறித்து உமர் பின் அல்-கத்தாப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரு (ரலி) அவர்களின் இதயத்தை, (ஜகாத்தை மறுத்தவர்களுக்கு எதிராகப்) போர் தொடுக்கும் அளவுக்கு அல்லாஹ் விசாலமாக்கி இருந்ததை நான் கண்டுகொண்டேன். அபூபக்ரு (ரலி) அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு:

முஸ்லிம்கள் தங்கள் அடிப்படைத் தேவைகள் போக மீந்துள்ள சொத்துகளுக்கு 2.5 சதவீதம் முதல் 20 சதவீதம்வரை ஜகாத் என்னும் வளவரி செலுத்த வேண்டும். இது முஸ்லிமான ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் பொதுவான கடைமையாகும். இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் முஸ்லிம்கள் தங்கள் ஜகாத்தை அரசிடம் செலுத்த வேண்டும். இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் முஸ்லிமல்லாதோருக்கு ஜிஸ்யா எனும் கப்பம் கட்டுதல் கடமையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஓராண்டுக்கான ஜிஸ்யா ஒரு தீனாராகவும் உமையாக்களின் ஆட்சியின்போது நான்கு தீனார்களாகவும் இருந்தது. முஸ்லிமல்லாத சிறுவர்கள் மீதும் பெண்கள் மீதும் ஆண்களில் மூத்த குடிமக்கள் மீதும் ஜிஸ்யா கடமையில்லை. போர் செய்ய வலுவுள்ள முஸ்லிமல்லாத ஆண்கள் மீது மட்டுமே ஜிஸ்யா கடமையாகும்.

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்” என்ற அல்லாஹ்வின் தூதரது கூற்றில் உள்ள “இந்த மக்களுடன்” என்ற குறிப்பாகு சுட்டுப் பெயர், இஸ்லாமிய அரசின்கீழ் மதீனாவில் வாழ்ந்த, ஜிஸ்யாவை மறுத்த முஸ்லிம் அல்லாதவர்களைக் குறிப்பாகச் சுட்டுவதாகும்.

மேற்காணும் 29ஆவது ஹதீஸில் ஜகாத்தை மறுத்த முஸ்லிம்கள் ஜிஸ்யாவை மறுத்த முஸ்லிமல்லாதோருடன் ஒப்பு நோக்கப் பட்டிருப்பதும் “இஸ்லாமிய மார்க்கத்தில் (இணைவதில்) வற்புறுத்தல் ஏதுமில்லை … (002:256) என்ற அனைத்தையும் மிகைத்த அல்லாஹ்வின் கூற்றும் இங்குப் பொருந்திப் பார்க்கத் தக்கன.

அத்தியாயம்: 1, பாடம்: 1.07, ஹதீஸ் எண்: 28

حَدَّثَنَا ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ وَهُوَ ابْنُ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أُمَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا بَعَثَ ‏ ‏مُعَاذًا ‏ ‏إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ ‏ ‏أَهْلِ كِتَابٍ ‏ ‏فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ عِبَادَةُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَإِذَا عَرَفُوا اللَّهَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ فَإِذَا فَعَلُوا فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ زَكَاةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِذَا أَطَاعُوا بِهَا فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ ‏ ‏كَرَائِمَ ‏ ‏أَمْوَالِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தபோது சொன்னார்கள்:

நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சாராரிடம் செல்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் விடுக்கும் முதல் அழைப்பு, (ஏக இறைவனான) அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள் என்பதாகவே இருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) ஏற்றுக்கொண்டால், அல்லாஹ் அவர்கள் மீது அவர்களது ஒரு நாளின் இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.

தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால், அவர்களுள் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பெற்று அவர்களுள் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஜகாத்தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கி உள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.

இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்களிடமிருந்து ஜகாத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களது சொத்துகளில் அவர்கள் மதிப்பாய் நினைப்பவற்றை (ஜகாத்தாக எடுப்பதை)த் தவிர்த்துக் கொள்க!

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.07, ஹதீஸ் எண்: 27

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ بْنِ إِسْحَقَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذِ بْنِ جَبَلٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏رُبَّمَا قَالَ ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏مُعَاذًا ‏ ‏قَالَ ‏
‏بَعَثَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّكَ تَأْتِي قَوْمًا مِنْ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ فِي فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَإِيَّاكَ ‏ ‏وَكَرَائِمَ ‏ ‏أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ ‏
‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ بْنِ إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَ ‏ ‏مُعَاذًا ‏ ‏إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَقَالَ إِنَّكَ سَتَأْتِي قَوْمًا ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமனுக்கு) அனுப்பி வைத்தபோது சொன்னார்கள்:

“நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சாராரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம், வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் (முஹம்மத் ஆகிய) நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி எடுக்கும்படி அவர்களுக்கு அழைப்பு விடுங்கள்.

இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால், அல்லாஹ் அவர்கள் மீது ஒவ்வொரு நாளின் இரவிலும் பகலிலும் ஐந்து (வேளைத்) தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள் மீது அல்லாஹ் ஜகாத் (எனும் கட்டாய தானத்)தைக் கடமையாக்கி உள்ளான் என்றும், அது அவர்களுள் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களுள் ஏழைகளுக்கு வழங்கப் படவேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்கள் கட்டுப் படும்போது அவர்களது சொத்துகளில் அவர்கள் மதிப்பாய் நினைப்பவற்றை (ஜகாத்தாக) எடுப்பதைத் தவிர்த்துக் கொள்க என உங்களை நான் எச்சரிக்கின்றேன். அநீதி இழைக்கப் பட்டவனது பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில் அவனது பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே திரை ஏதுமில்லை”. என்று முஆத் பின் ஜபல் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)


குறிப்பு:

மேற்காணும் ஹதீஸ், இரு அறிவிப்பாளர் வரிசைகளில் அறிவிக்கப் படுகிறது. அவற்றுள் ஒரு தொடரில் இடம்பெறும் அபூமஅபத் (நாஃபித்-ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது ‘நீங்கள் ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள்…’ எனத் தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்கு முழுமையாக அறிவித்தார்கள் எனக் குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 12

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ حَدَّثَنَا مُوسَى بْنُ طَلْحَةَ قَالَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ أَنَّ أَعْرَابِيًّا عَرَضَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي سَفَرٍ فَأَخَذَ بِخِطَامِ نَاقَتِهِ أَوْ بِزِمَامِهَا ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَوْ يَا مُحَمَّدُ أَخْبِرْنِي بِمَا يُقَرِّبُنِي مِنْ الْجَنَّةِ وَمَا يُبَاعِدُنِي مِنْ النَّارِ قَالَ فَكَفَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَظَرَ فِي أَصْحَابِهِ ثُمَّ قَالَ لَقَدْ وُفِّقَ أَوْ لَقَدْ هُدِيَ قَالَ كَيْفَ قُلْتَ قَالَ فَأَعَادَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْبُدُ اللَّهَ لا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ الرَّحِمَ دَعْ النَّاقَةَ

ஒரு பயணத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் கிராமவாசி ஒருவர் இடை மறித்து அவர்களது ஒட்டகத்தின் ‘கடிவாளத்தை’ அல்லது ‘மூக்கணாங் கயிற்றைப்’ பிடித்துக் கொண்டார். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே” அல்லது “முஹம்மதே” என விளித்து, “என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்க வல்லதொரு (நற்)செயலை எனக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு பதில் கூறாமல்) நிதானமாகத் தம் தோழர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். பின்னர் “நிச்சயமாக இவர் நல்லருள் பெற்றுவிட்டார்” என்றோ அல்லது “நேர்வழி நடத்தப்பட்டு விட்டார்'” என்றோ கூறிவிட்டுப் பின்னர் அவரிடம் திரும்பி, “நீங்கள் என்ன கேட்டீர்கள்?” என்று (அந்தக் கிராமவாசியிடம்) கேட்டார்கள். அவர் முன்பு கூறியதைப் போன்றே மீண்டும் கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை (மட்டுமே) நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைபிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உறவைப் பேணி வாழ வேண்டும்” என்று கூறிவிட்டு, “எனது ஒட்டகத்தை விடுங்கள் (நாங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்).” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.02, ஹதீஸ் எண்: 8

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدِ بْنِ جَمِيلِ بْنِ طَرِيفِ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيُّ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ أَبِي سُهَيْلٍ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُا جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرُ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ وَلا نَفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الإسْلامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ قَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُ فَقَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لا أَزِيدُ عَلَى هَذَا وَلا أَنْقُصُ مِنْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ إِنْ صَدَقَ

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைமுடி கலைந்தவராக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார். (அவர் சற்றுத் தொலைவில் இருந்ததால்) அவரது குரலை எங்களால் கேட்க முடிந்ததே தவிர, அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நெருங்கி வந்தபோதுதான் அவர் இஸ்லாத்(தின் அடிப்படைக் கடமைகள் யாவை என்ப)தைப் பற்றி வினவுகிறார் என்று எங்களுக்குப் புரிந்தது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “(ஒரு நாளின்) பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (நிறைவேற்றுவது)” என்று அவருக்கு பதிலளித்தார்கள். உடனே அவர் “இவற்றைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமைத் தொழுகைகள்) உள்ளதா?” என்று கேட்க “நீயாக விரும்பினாலேயன்றி(க் கூடுதலாகக் கடமை) இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அடுத்து, “ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர், “இதைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமையான நோன்புகள்) உள்ளதா?” என்று கேட்க, “நீயாக விரும்பினாலேயன்றி(க் கூடுதலாகக் கடமை) ஏதுமில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், ‘ஜகாத்’ (செலுத்துவது) பற்றியும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். அதற்கவர், “இதைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமையான தானம்) உண்டா?” எனக் கேட்க, “நீயாக விரும்பி(வழங்கி)டுவதைத் தவிரக் கூடுதலாக(க் கடமை) இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த மனிதர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதை (விடக்) குறைக்கவும் மாட்டேன்” என்று கூறித் திரும்பிச் சென்றார். “அவருடைய கூற்றை உண்மைப் படுத்திச் செயலாற்றினால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)