அத்தியாயம்: 32, பாடம்: 33, ஹதீஸ் எண்: 3333

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَوَكِيعٌ، عَنْ زَكَرِيَّاءَ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُطِيعٍ، عَنْ أَبِيهِ قَالَ :‏

سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ يَوْمَ فَتْحِ مَكَّةَ ‏ “‏ لاَ يُقْتَلُ قُرَشِيٌّ صَبْرًا بَعْدَ هَذَا الْيَوْمِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ‏”‏


حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَزَادَ قَالَ وَلَمْ يَكُنْ أَسْلَمَ أَحَدٌ مِنْ عُصَاةِ قُرَيْشٍ غَيْرَ مُطِيعٍ كَانَ اسْمُهُ الْعَاصِي فَسَمَّاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُطِيعًا

நபி (ஸல்) மக்கா வெற்றி நாளில், “இன்றைக்குப் பிறகு மறுமை நாள்வரை குறைஷியர் எவரும் கட்டிவைத்து அடிக்கப்படும் நிலை ஏற்படாது” என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பாளர் : முதீஉ பின் அல்அஸ்வத் பின் ஹாரிஸா (ரலி)


குறிப்பு :

நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அன்றைய தினம் குறைஷியரில் ‘அல்ஆஸ்’ எனும் பெயர் பெற்றிருந்தவர்களில் முதீஉ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அப்போது முதீஉ அவர்களுடைய பெயர் ‘அல்ஆஸீ’ (மாறு செய்பவர்) என்றிருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘முதீஉ’ (கீழ்ப்படிந்தவர்) என்று பெயர் மாற்றினார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 32, ஹதீஸ் எண்: 3332

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ،  – وَاللَّفْظُ لاِبْنِ أَبِي شَيْبَةَ – قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ وَحَوْلَ الْكَعْبَةِ ثَلاَثُمِائَةٍ وَسِتُّونَ نُصُبًا فَجَعَلَ يَطْعُنُهَا بِعُودٍ كَانَ بِيَدِهِ وَيَقُولُ ‏”‏ ‏{‏ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا‏}‏ ‏{‏ جَاءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيدُ‏}‏ زَادَ ابْنُ أَبِي عُمَرَ يَوْمَ الْفَتْحِ


وَحَدَّثَنَاهُ حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، كِلاَهُمَا عَنْ عَبْدِ الرَّزَّاقِ، أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، بِهَذَا الإِسْنَادِ إِلَى قَوْلِهِ زَهُوقًا ‏.‏ وَلَمْ يَذْكُرِ الآيَةَ الأُخْرَى وَقَالَ بَدَلَ نُصُبًا صَنَمًا

நபி (ஸல்) மக்கா நகருக்குள் நுழைந்தபோது, கஅபாவைச் சுற்றிலும் முன்னூற்று அறுபது சிலைகள் இருந்தன. அப்போது அவர்கள், தமது கையிலிருந்த குச்சியால் அவற்றைக் குத்தி (அடிக்கத் தொடங்கி)னார்கள். மேலும் “உண்மை வந்துவிட்டது. பொய் அழிந்துவிட்டது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது” (17:81) என்றும், “உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை; இனியும் செய்யப்போவதில்லை” (34:49) என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

இப்னு அபீஉமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) மக்கா வெற்றி நாளில் மக்க நகரினுள் நுழைந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அப்து பின் ஹுமைத் (ரஹ்) வழி அறிவிப்பில், “அழியக்கூடியதாகவே உள்ளது” என்பது வரையில்தான் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது வசனம் இடம்பெறவில்லை. மேலும் சிலை என்பதைக் குறிக்க ‘ஸனம்’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 31, ஹதீஸ் எண்: 3331

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ قَالَ :‏

وَفَدْنَا إِلَى مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ وَفِينَا أَبُو هُرَيْرَةَ فَكَانَ كُلُّ رَجُلٍ مِنَّا يَصْنَعُ طَعَامًا يَوْمًا لأَصْحَابِهِ فَكَانَتْ نَوْبَتِي فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ الْيَوْمُ نَوْبَتِي ‏.‏ فَجَاءُوا إِلَى الْمَنْزِلِ وَلَمْ يُدْرِكْ طَعَامُنَا فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ لَوْ حَدَّثْتَنَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى يُدْرِكَ طَعَامُنَا فَقَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْفَتْحِ فَجَعَلَ خَالِدَ بْنَ الْوَلِيدِ عَلَى الْمُجَنِّبَةِ الْيُمْنَى وَجَعَلَ الزُّبَيْرَ عَلَى الْمُجَنِّبَةِ الْيُسْرَى وَجَعَلَ أَبَا عُبَيْدَةَ عَلَى الْبَيَاذِقَةِ وَبَطْنِ الْوَادِي فَقَالَ ‏”‏ يَا أَبَا هُرَيْرَةَ ادْعُ لِي الأَنْصَارَ ‏”‏ ‏.‏ فَدَعَوْتُهُمْ فَجَاءُوا يُهَرْوِلُونَ فَقَالَ ‏”‏ يَا مَعْشَرَ الأَنْصَارِ هَلْ تَرَوْنَ أَوْبَاشَ قُرَيْشٍ ‏”‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ قَالَ ‏”‏ انْظُرُوا إِذَا لَقِيتُمُوهُمْ غَدًا أَنْ تَحْصِدُوهُمْ حَصْدًا ‏”‏ ‏.‏ وَأَخْفَى بِيَدِهِ وَوَضَعَ يَمِينَهُ عَلَى شِمَالِهِ وَقَالَ ‏”‏ مَوْعِدُكُمُ الصَّفَا ‏”‏ ‏.‏ قَالَ فَمَا أَشْرَفَ يَوْمَئِذٍ لَهُمْ أَحَدٌ إِلاَّ أَنَامُوهُ – قَالَ – وَصَعِدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الصَّفَا وَجَاءَتِ الأَنْصَارُ فَأَطَافُوا بِالصَّفَا فَجَاءَ أَبُو سُفْيَانَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أُبِيدَتْ خَضْرَاءُ قُرَيْشٍ لاَ قُرَيْشَ بَعْدَ الْيَوْمِ ‏.‏ قَالَ أَبُو سُفْيَانَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَنْ دَخَلَ دَارَ أَبِي سُفْيَانَ فَهُوَ آمِنٌ وَمَنْ أَلْقَى السِّلاَحَ فَهُوَ آمِنٌ وَمَنْ أَغْلَقَ بَابَهُ فَهُوَ آمِنٌ ‏”‏ ‏.‏ فَقَالَتِ الأَنْصَارُ أَمَّا الرَّجُلُ فَقَدْ أَخَذَتْهُ رَأْفَةٌ بِعَشِيرَتِهِ وَرَغْبَةٌ فِي قَرْيَتِهِ ‏.‏ وَنَزَلَ الْوَحْىُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ قُلْتُمْ أَمَّا الرَّجُلُ فَقَدْ أَخَذَتْهُ رَأْفَةٌ بِعَشِيرَتِهِ وَرَغْبَةٌ فِي قَرْيَتِهِ ‏.‏ أَلاَ فَمَا اسْمِي إِذًا – ثَلاَثَ مَرَّاتٍ – أَنَا مُحَمَّدٌ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ هَاجَرْتُ إِلَى اللَّهِ وَإِلَيْكُمْ فَالْمَحْيَا مَحْيَاكُمْ وَالْمَمَاتُ مَمَاتُكُمْ ‏”‏ ‏.‏ قَالُوا وَاللَّهِ مَا قُلْنَا إِلاَّ ضِنًّا بِاللَّهِ وَرَسُولِهِ ‏.‏ قَالَ ‏”‏ فَإِنَّ اللَّهَ وَرَسُولَهُ يُصَدِّقَانِكُمْ وَيَعْذِرَانِكُمْ ‏”‏

நாங்கள் (சிரியாவிலிருந்த) முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களைச் சந்திக்க ஒரு தூதுக் குழுவில் சென்றோம். எங்களிடையே அபூஹுரைரா (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

எங்களில் ஒவ்வொருவரும் தம் சக பயணிகளுக்கு ஒரு நாளைக்கு ஒருவர் என்ற முறையில் உணவு தயாரித்தோம். என்னுடைய முறைநாள் வந்தபோது நான், “அபூஹுரைரா (ரலி) அவர்களே! இன்று எனது முறைநாள். மக்கள் (எனது) இருப்பிடத்திற்கு வந்துவிட்டனர். ஆனால், உணவு இன்னும் (தயாராகி) வந்து சேரவில்லை. உணவு வரும்வரை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி(ய ஹதீஸ்) கூறினால் நன்றாயிருக்குமே!” என்று கூறினேன். அப்போது அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்:

மக்கா வெற்றி நாளில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை வலப் பக்க அணியினருக்குத் தளபதியாக நியமித்தார்கள்; ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை இடப் பக்க அணியினருக்கும் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை (நிராயுதபாணிகளாயிருந்த) காலாட் படையினருக்கும் பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் இருந்தவர்களுக்கும் தளபதிகளாக நியமித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூஹுரைரா! அன்ஸாரிகளை எனக்காக அழையுங்கள்!” என்று கூறினார்கள். அவ்வாறே நான் அவர்களை அழைத்தேன். அப்போது அன்ஸாரிகள் விரைந்து வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அன்ஸாரி சமுதாயத்தாரே! (எதிரிக்) குறைஷியரின் பல்வேறு குலத்தாரை நீங்கள் காண்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தமது கையை வெளியிலெடுத்து வலக் கையை இடக் கையின் மீது வைத்து சைகை செய்து காட்டியபடி, “நாளைய தினம் (களத்தில்) அவர்களை நீங்கள் சந்தித்தால் எதிர்ப்பவர்களை அறுவடை செய்துவிடுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, “ஸஃபாவில் சந்திப்போம்” என்று கூறி(விட்டுச் செல்லலா)னார்கள். அவ்வாறே முஸ்லிம்கள், எதிர்த்து வந்தவர்களை மீளாத் துயிலில் ஆழ்த்தினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஸஃபா மலைமீது ஏறினார்கள். அன்ஸாரிகள் வந்து ஸஃபா மலையைச் சுற்றி நின்றுகொண்டனர். அப்போது அபூஸுஃப்யான் (ரலி) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் கூட்டத்தார் முற்றாகத் துடைத்தெறியப்படுகின்றனர். இன்றைய தினத்திற்குப் பிறகு குறைஷியர் எவரும் இருக்கமாட்டார்கள் (போலிருக்கிறது)” என்று கூறினார்கள்.

“அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அபூஸுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்துகொள்கின்றவர் அபயம் பெற்றவராவார். ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டவரும் அபயம் பெற்றவராவார். தமது வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டவரும் அபயம் பெற்றவராவார்’ என்று கூறினார்கள்” என்று அபூஸுஃப்யான் (ரலி) கூறினார்கள்.

அப்போது அன்ஸாரிகள், “இவரை(நபியவர்களை)க்  குலப் பாசமும் ஊர்ப் பற்றும் பற்றிக்கொண்டுவிட்டன” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) வந்தது. (அன்ஸாரிகள் தம்மைப் பற்றிப் பேசிக் கொண்டதை நபியவர்கள் அறிந்துகொண்டார்கள்). பிறகு “இவரைக் குலப் பாசமும் ஊர்ப் பற்றும் பற்றிக்கொண்டுவிட்டன என்று கூறினீர்கள் அல்லவா? நன்றாக அறிந்துகொள்ளுங்கள்: அப்படியானால் எனது (முஹம்மது – புகழப்பட்டவர் எனும்) பெயருக்கு என்ன அர்த்தமிருக்க முடியும்?” என்று (மூன்று முறை) கேட்டுவிட்டு, “நான் அல்லாஹ்வின் அடியானும் அவனுடைய தூதருமான முஹம்மது ஆவேன். நான் அல்லாஹ்வுக்காக (நாடு துறந்து) ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தேன். இனி என் வாழ்வு உங்கள் வாழ்வோடுதான்; என் இறப்பு உங்கள் இறப்போடுதான்” என்று கூறினார்கள்.

அதற்கு அன்ஸாரிகள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேரன்பின் காரணத்தாலேயே நாங்கள் அவ்வாறு சொன்னோம்” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியானால், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை ஏற்று, நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 32, பாடம்: 31, ஹதீஸ் எண்: 3330

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

وَفَدَتْ وُفُودٌ إِلَى مُعَاوِيَةَ وَذَلِكَ فِي رَمَضَانَ فَكَانَ يَصْنَعُ بَعْضُنَا لِبَعْضٍ الطَّعَامَ فَكَانَ أَبُو هُرَيْرَةَ مِمَّا يُكْثِرُ أَنْ يَدْعُوَنَا إِلَى رَحْلِهِ فَقُلْتُ أَلاَ أَصْنَعُ طَعَامًا فَأَدْعُوَهُمْ إِلَى رَحْلِي فَأَمَرْتُ بِطَعَامٍ يُصْنَعُ ثُمَّ لَقِيتُ أَبَا هُرَيْرَةَ مِنَ الْعَشِيِّ فَقُلْتُ الدَّعْوَةُ عِنْدِي اللَّيْلَةَ فَقَالَ سَبَقْتَنِي ‏.‏ قُلْتُ نَعَمْ ‏.‏ فَدَعَوْتُهُمْ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَلاَ أُعْلِمُكُمْ بِحَدِيثٍ مِنْ حَدِيثِكُمْ يَا مَعْشَرَ الأَنْصَارِ ثُمَّ ذَكَرَ فَتْحَ مَكَّةَ فَقَالَ أَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى قَدِمَ مَكَّةَ فَبَعَثَ الزُّبَيْرَ عَلَى إِحْدَى الْمُجَنِّبَتَيْنِ وَبَعَثَ خَالِدًا عَلَى الْمُجَنِّبَةِ الأُخْرَى وَبَعَثَ أَبَا عُبَيْدَةَ عَلَى الْحُسَّرِ فَأَخَذُوا بَطْنَ الْوَادِي وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي كَتِيبَةٍ – قَالَ – فَنَظَرَ فَرَآنِي فَقَالَ ‏”‏ أَبُو هُرَيْرَةَ ‏”‏ ‏.‏ قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ ‏”‏ لاَ يَأْتِينِي إِلاَّ أَنْصَارِيٌّ ‏”‏ ‏.‏ زَادَ غَيْرُ شَيْبَانَ فَقَالَ ‏”‏ اهْتِفْ لِي بِالأَنْصَارِ ‏”‏ ‏.‏ قَالَ فَأَطَافُوا بِهِ وَوَبَّشَتْ قُرَيْشٌ أَوْبَاشًا لَهَا وَأَتْبَاعًا ‏.‏ فَقَالُوا نُقَدِّمُ هَؤُلاَءِ فَإِنْ كَانَ لَهُمْ شَىْءٌ كُنَّا مَعَهُمْ ‏.‏ وَإِنْ أُصِيبُوا أَعْطَيْنَا الَّذِي سُئِلْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ تَرَوْنَ إِلَى أَوْبَاشِ قُرَيْشٍ وَأَتْبَاعِهِمْ ‏”‏ ‏.‏ ثُمَّ قَالَ بِيَدَيْهِ إِحْدَاهُمَا عَلَى الأُخْرَى ثُمَّ قَالَ ‏”‏ حَتَّى تُوَافُونِي بِالصَّفَا ‏”‏ ‏.‏ قَالَ فَانْطَلَقْنَا فَمَا شَاءَ أَحَدٌ مِنَّا أَنْ يَقْتُلَ أَحَدًا إِلاَّ قَتَلَهُ وَمَا أَحَدٌ مِنْهُمْ يُوَجِّهُ إِلَيْنَا شَيْئًا – قَالَ – فَجَاءَ أَبُو سُفْيَانَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أُبِيحَتْ خَضْرَاءُ قُرَيْشٍ لاَ قُرَيْشَ بَعْدَ الْيَوْمِ ‏.‏ ثُمَّ قَالَ ‏”‏ مَنْ دَخَلَ دَارَ أَبِي سُفْيَانَ فَهُوَ آمِنٌ ‏”‏ ‏.‏ فَقَالَتِ الأَنْصَارُ بَعْضُهُمْ لِبَعْضٍ أَمَّا الرَّجُلُ فَأَدْرَكَتْهُ رَغْبَةٌ فِي قَرْيَتِهِ وَرَأْفَةٌ بِعَشِيرَتِهِ ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ وَجَاءَ الْوَحْىُ وَكَانَ إِذَا جَاءَ الْوَحْىُ لاَ يَخْفَى عَلَيْنَا فَإِذَا جَاءَ فَلَيْسَ أَحَدٌ يَرْفَعُ طَرْفَهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى يَنْقَضِيَ الْوَحْىُ فَلَمَّا انْقَضَى الْوَحْىُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَا مَعْشَرَ الأَنْصَارِ ‏”‏ ‏.‏ قَالُوا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ قُلْتُمْ أَمَّا الرَّجُلُ فَأَدْرَكَتْهُ رَغْبَةٌ فِي قَرْيَتِهِ ‏”‏ ‏.‏ قَالُوا قَدْ كَانَ ذَاكَ ‏.‏ قَالَ ‏”‏ كَلاَّ إِنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ هَاجَرْتُ إِلَى اللَّهِ وَإِلَيْكُمْ وَالْمَحْيَا مَحْيَاكُمْ وَالْمَمَاتُ مَمَاتُكُمْ ‏”‏ ‏.‏ فَأَقْبَلُوا إِلَيْهِ يَبْكُونَ وَيَقُولُونَ وَاللَّهِ مَا قُلْنَا الَّذِي قُلْنَا إِلاَّ الضِّنَّ بِاللَّهِ وَبِرَسُولِهِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يُصَدِّقَانِكُمْ وَيَعْذِرَانِكُمْ ‏”‏ ‏.‏ قَالَ فَأَقْبَلَ النَّاسُ إِلَى دَارِ أَبِي سُفْيَانَ وَأَغْلَقَ النَّاسُ أَبْوَابَهُمْ – قَالَ – وَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَقْبَلَ إِلَى الْحَجَرِ فَاسْتَلَمَهُ ثُمَّ طَافَ بِالْبَيْتِ – قَالَ – فَأَتَى عَلَى صَنَمٍ إِلَى جَنْبِ الْبَيْتِ كَانُوا يَعْبُدُونَهُ – قَالَ – وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَوْسٌ وَهُوَ آخِذٌ بِسِيَةِ الْقَوْسِ فَلَمَّا أَتَى عَلَى الصَّنَمِ جَعَلَ يَطْعُنُهُ فِي عَيْنِهِ وَيَقُولُ ‏”‏ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ‏”‏ ‏.‏ فَلَمَّا فَرَغَ مِنْ طَوَافِهِ أَتَى الصَّفَا فَعَلاَ عَلَيْهِ حَتَّى نَظَرَ إِلَى الْبَيْتِ وَرَفَعَ يَدَيْهِ فَجَعَلَ يَحْمَدُ اللَّهَ وَيَدْعُو بِمَا شَاءَ أَنْ يَدْعُوَ ‏.‏


وَحَدَّثَنِيهِ عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ فِي الْحَدِيثِ ثُمَّ قَالَ بِيَدَيْهِ إِحْدَاهُمَا عَلَى الأُخْرَى ‏”‏ احْصُدُوهُمْ حَصْدًا ‏”‏ ‏.‏ وَقَالَ فِي الْحَدِيثِ قَالُوا قُلْنَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ فَمَا اسْمِي إِذًا كَلاَّ إِنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ‏”‏ ‏

ஒரு ரமளான் மாதத்தில் (சிரியா நாட்டிலிருந்த) முஆவியா (ரலி) அவர்களைச் சந்திக்க (நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அடங்கிய) சில தூதுக் குழுக்கள் சென்றன. அப்போது எங்களுடன் இருந்தவர்கள் (முறைவைத்து) உணவு சமைத்(து விருந்தளித்)தனர். அபூஹுரைரா (ரலி) தமது கூடாரத்திற்கு மக்களை அதிகமாக (விருந்திற்கு) அழைப்பவராக இருந்தார்கள்.

அப்போது நான், “நான் உணவு சமைத்து மக்களை என் கூடாரத்திற்கு அழைக்கக் கூடாதா?” என்று கூறிவிட்டு, உணவு தயாரிக்க உத்தரவிட்டேன். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்களை மாலையில் சந்தித்து, “இன்றிரவு என்னிடம்தான் விருந்து” என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி), “நீ என்னை முந்திக்கொண்டாய்” என்று கூறினார்கள். நான் “ஆம்“ என்று கூறிவிட்டு, மக்களை (எனது கூடாரத்திற்கு) அழைத்தேன்.

அப்போது அபூஹுரைரா (ரலி), (நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க) “அன்ஸாரிக் கூட்டத்தாரே! உங்கள் செய்திகளில் ஒன்றைக் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்ட பின்னர் மக்கா வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை, (தமது படையின்) இரு பக்கவாட்டுப் படைகளில் ஒன்றுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை மற்றொரு பக்கவாட்டுப் படைக்குத் தளபதியாக நியமித்தார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை நிராயுதபாணி(களான காலாட் படை)யினருக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) படையின் முக்கியப் பகுதியில் இருந்தார்கள். அப்போது அவர்களது பார்வையில் நான் பட்டபோது, “அபூஹுரைரா நீயா?” என்று கேட்டார்கள். நான், “(ஆம்) இதோ, வந்தேன் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அப்போது, “அன்ஸாரித் தோழர் ஒருவர் என்னிடம் வருவார் (என்றே நான் எதிர்பார்த்தேன்)” என்றார்கள்.

குறைஷியர் தம்முடைய பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் ஒன்றுகூட்டி, “இவர்களை நாம் (முதலில் போருக்கு) அனுப்பிவைப்போம். இவர்களுக்கு (வெற்றி) ஏதேனும் கிடைத்தால், (குறைஷியரான) நாமும் இவர்களுடன் சேர்ந்துகொள்வோம். இவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டால், நம்மிடம் (முஸ்லிம்களால்) கோரப்படுவதை நாம் வழங்கிவிடுவோம்” என்று கூறிக்கொண்டிருந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “நீங்கள் (ஒற்றுமையாக உள்ள) குறைஷியரின் பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் காண்கிறீர்கள் (அல்லவா?)” என்று கூறிவிட்டு, தம்முடைய ஒரு கையின் மீது மற்றொரு கையை வைத்து (அவர்களது ஒற்றுமையை) சைகை செய்து காட்டினார்கள்.

பிறகு “நீங்கள் (வெற்றி அடைந்த பின்) என்னை ‘ஸஃபா’ மலைக்கருகில் வந்து சந்தியுங்கள்” என்று கூறி(விட்டுப் போ)னார்கள்.

அவ்வாறே நாங்கள் நடந்து சென்றோம். எங்களில் ஒருவர் எதிரிகளில் ஒருவரைத் தாக்கி வீழ்த்த நினைத்தால், (எதிர்ப்பின்றித்) தாக்கி வீழ்த்தினார். ஆனால், எதிரிகளில் யாரும் எங்களை நோக்கி எதையும் வீச இயலவில்லை.

அப்போது (இஸ்லாத்தைத் தழுவியிருந்த) அபூஸுஃப்யான் (ரலி) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் குலமே அடியோடு அழிக்கப்பட்டு, இன்றைக்குப் பிறகு குறைஷியரே இருக்கமாட்டார்கள் (போலிருக்கிறது)” என்று கூறினார்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூஸுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்துகொள்கின்றவர் அபயம் பெற்றவராவார்” என்று அறிவித்தார்கள்.

அப்போது அன்ஸாரிகள் (நபியவர்களைக் குறித்துத்) தங்களுக்குள், “இவருக்கு  தமது ஊர்மீது பற்றும், தம் குலத்தார்மீது பரிவும் ஏற்பட்டுவிட்டது” என்று பேசிக்கொண்டனர்.

அப்போது இறைவனிடமிருந்து செய்தி (வஹீ) வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ’ வந்தால், அது எங்களுக்குத் தெரியாமல் போகாது. அப்போது வஹீ முடிவடையும்வரை எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்தமாட்டர்.

அவ்வாறே வஹீ’ வந்து முடிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அன்ஸாரி சமுதாயமே!“ என்று அழைத்தார்கள். அம்மக்கள் “இதோ வந்தோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். “இவருக்குத் தமது ஊர்மீது பற்று ஏற்பட்டுவிட் டது என்று நீங்கள் பேசிக்கொண்டீர்கள்(தானே)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்று (உண்மை) சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறன்று; நான் அல்லாஹ்வின் அடியானும் தூதரும் ஆவேன். நான் அல்லாஹ்வை நோக்கி, உங்களிடம் (நாடு துறந்து) ஹிஜ்ரத் வந்தேன். என் வாழ்வு உங்கள் வாழ்வோடுதான்; என் இறப்பு உங்கள் இறப்போடுதான்” என்று கூறினார்கள்.

அப்போது அன்ஸாரிகள் அழுதுகொண்டே வந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேரன்பின் காரணத்தாலேயே அவ்வாறு நாங்கள் கூறினோம்” என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை உண்மை என ஏற்று, நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர்“ என்று சொன்னார்கள்.

அப்போது மக்களில் சிலர், அபூஸுஃப்யானின் வீட்டை நோக்கிச் சென்றனர். வேறுசிலர் தங்கள் (வீட்டுக்) கதவுகளைப் பூட்டிக்கொண்டனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஹஜருல் அஸ்வத்’ எனும் கல் இருக்குமிடத்தை நோக்கி வந்து, அதைத் தமது கையால் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்.

அப்போது இறையில்லம் கஅபாவுக்கு அருகில் மக்கள் வழிபட்டுவந்த ஒரு சிலையை நோக்கி வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கையில் வில்லொன்று இருந்தது. அவர்கள் அந்த வில்லின் வளைவுப் பகுதியைப் பிடித்திருந்தார்கள். அந்தச் சிலைக்கு அருகில் வந்ததும், அந்த வில்லால் அதன் கண்ணில் குத்திக்கொண்டே “உண்மை வந்துவிட்டது. பொய்மை அழிந்துவிட்டது” என்று கூறலானார்கள்.

இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்ததும், ‘ஸஃபா’ குன்றுக்கு வந்து, அதன் மீது ஏறி, இறையில்லம் கஅபாவைப் பார்த்தார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழவும், அவன் நாடிய சிலவற்றை வேண்டிப் பிரார்த்திக்கவும் ஆரம்பித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்)


குறிப்புகள் :

அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “… பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடைய ஒரு கையை மற்றொரு கைமீது வைத்து இரு கைகளையும் இணைத்துக் காட்டியபடி ‘அவர்களை அறுவடை செய்துவிடுங்கள்’ என்று கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பில், “அன்ஸாரிகள் அவ்வாறு நாங்கள் கூறினோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று ஒப்புக்கொண்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அவ்வாறாயின் (முஹம்மது – புகழப்பட்டவர் எனும்) என் பெயருக்கு என்ன அர்த்தம்? அவ்வாறன்று; நான் அல்லாஹ்வின் அடியானும் தூதரும் ஆவேன்’ என்று கூறினார்கள்” என்றும் இடம்பெற்றுள்ளது.

ஷைபான் பின் ஃபர்ரூக் (ரஹ்) அல்லாதோரின் அறிவிப்பில், “… அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எனக்காக அன்ஸாரிகளைச் சப்தமிட்டு அழைப்பீராக! என்றார்கள். உடனே அன்ஸாரிகள் வந்து குழுமினர்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 30, ஹதீஸ் எண்: 3329

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ:‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم شَاوَرَ حِينَ بَلَغَهُ إِقْبَالُ أَبِي سُفْيَانَ قَالَ فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَأَعْرَضَ عَنْهُ ثُمَّ تَكَلَّمَ عُمَرُ فَأَعْرَضَ عَنْهُ فَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ فَقَالَ إِيَّانَا تُرِيدُ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَمَرْتَنَا أَنْ نُخِيضَهَا الْبَحْرَ لأَخَضْنَاهَا وَلَوْ أَمَرْتَنَا أَنْ نَضْرِبَ أَكْبَادَهَا إِلَى بَرْكِ الْغِمَادِ لَفَعَلْنَا – قَالَ – فَنَدَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّاسَ فَانْطَلَقُوا حَتَّى نَزَلُوا بَدْرًا وَوَرَدَتْ عَلَيْهِمْ رَوَايَا قُرَيْشٍ وَفِيهِمْ غُلاَمٌ أَسْوَدُ لِبَنِي الْحَجَّاجِ فَأَخَذُوهُ فَكَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَسْأَلُونَهُ عَنْ أَبِي سُفْيَانَ وَأَصْحَابِهِ ‏.‏ فَيَقُولُ مَا لِي عِلْمٌ بِأَبِي سُفْيَانَ وَلَكِنْ هَذَا أَبُو جَهْلٍ وَعُتْبَةُ وَشَيْبَةُ وَأُمَيَّةُ بْنُ خَلَفٍ ‏.‏ فَإِذَا قَالَ ذَلِكَ ضَرَبُوهُ فَقَالَ نَعَمْ أَنَا أُخْبِرُكُمْ هَذَا أَبُو سُفْيَانَ ‏.‏ فَإِذَا تَرَكُوهُ فَسَأَلُوهُ فَقَالَ مَا لِي بِأَبِي سُفْيَانَ عِلْمٌ وَلَكِنْ هَذَا أَبُو جَهْلٍ وَعُتْبَةُ وَأُمَيَّةُ بْنُ خَلَفٍ فِي النَّاسِ ‏.‏ فَإِذَا قَالَ هَذَا أَيْضًا ضَرَبُوهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي فَلَمَّا رَأَى ذَلِكَ انْصَرَفَ قَالَ ‏”‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَضْرِبُوهُ إِذَا صَدَقَكُمْ وَتَتْرُكُوهُ إِذَا كَذَبَكُمْ ‏”‏ ‏.‏ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ هَذَا مَصْرَعُ فُلاَنٍ ‏”‏ ‏.‏ قَالَ وَيَضَعُ يَدَهُ عَلَى الأَرْضِ هَا هُنَا وَهَا هُنَا قَالَ فَمَا مَاطَ أَحَدُهُمْ عَنْ مَوْضِعِ يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

அபூஸுஃப்யான் (தலைமையில் வணிகக் குழு) வரும் தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (தம் தோழர்களிடம்) ஆலோசனை கேட்டார்கள்.

அபூபக்ரு (ரலி) (தமது கருத்தைச்) சொன்னபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டுகொள்ளவில்லை. பின்னர் உமர் (ரலி) (தமது கருத்தைச்) சொன்னபோதும் கண்டுகொள்ளவில்லை.

அப்போது (அன்ஸாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தாரின்) தலைவர் ஸஅத் பின் உபாதா (ரலி) எழுந்து, “எங்(கள் அன்ஸாரிகளின் கருத்து)களையா நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என் உயிர் கையிலுள்ளவன் மீதாணையாக! எங்கள் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்துமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் செலுத்துவோம். எங்கள் குதிரைகளின் பிடரிகளில் அடித்து (தொலைவில் உள்ள) ‘பர்குல் ஃகிமாத்’ நோக்கி (விரட்டிச்) செல்லுமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நாங்கள் அவ்வாறே செய்வோம்” என்று கூறினார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களைப் புறப்படச் சொன்னார்கள். மக்கள் புறப்பட்டுச் சென்று ‘பத்ரு’ எனும் இடத்தில் தங்கினர். அப்போது அவர்களிடம் குறைஷியரின் தண்ணீர் சுமக்கும் ஒட்டகக் குழாம் ஒன்று வந்தது. அவர்களில் பனுல் ஹஜ்ஜாஜ் குலத்தாரின் கறுப்பு அடிமை ஒருவனும் இருந்தான்.

நபித்தோழர்கள், அவனைப் பிடித்துக்கொண்டனர். அவனிடம் அபூஸுஃப்யானைப் பற்றியும் அவருடைய சக பயணிகள் பற்றியும் விசாரித்தனர். அவன் “அபூஸுஃப்யானைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்லு, உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் (ஆகியோர் உங்களை நோக்கிப் படை திரட்டி வந்துகொண்டிருக்கின்றனர்)” என்று சொன்னான். அவன் இவ்வாறு சொன்னதும் (அவன் பொய் சொல்வதாக எண்ணிக்கொண்டு) அவனை நபித் தோழர்களை அடித்தனர். அப்போது அவன் “ஆம் (எனக்குத் தெரியும்); நான் சொல்கிறேன். இதோ அபூஸுஃப்யான் வந்துகொண்டிருக்கிறார்” என்று (பொய்) சொன்னான்.

அடிப்பதை நிறுத்திவிட்டு அவனிடம் கேட்டால், “அபூஸுஃப்யான் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்லு, உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் மக்களுடன் (வந்துகொண்டிருக்கின்றனர்)” என்று சொன்னான். மீண்டும் அவன் இவ்வாறு சொன்னதும் அவனை நபித்தோழர்கள் அடித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அங்கு) நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். இ(வ்வாறு அவர்கள் நடந்து கொள்வ)தை அவர்கள் கண்டதும் தொழுகையை (சுருக்கமாக) முடித்துத் திரும்பினார்கள். மேலும், “என் உயிர் கையிலுள்ளவன் மீதாணையாக! அவன் உண்மையைச் சொல்லும்போது அடிக்கின்றீர்கள். பொய் சொல்லும்போது அடிப்பதை நிறுத்து விடுகிறீர்களே!” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “இது இன்னவர் மாண்டு விழும் இடம்” என்று கூறி, பூமியில் தமது கையை வைத்து “இவ்விடத்தில் … இவ்விடத்தில்” என்று காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கை வைத்துக் காட்டிய இடத்தைவிட்டு அவர்களில் எவரும் தள்ளி விழவில்லை. (சரியாக அதே இடத்தில் போரில் மாண்டு கிடந்தனர்).

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 29, ஹதீஸ் எண்: 3328

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ جَمِيعًا عَنْ سُفْيَانَ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْعَبَّاسِ الشَّاعِرِ الأَعْمَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ :‏

حَاصَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَهْلَ الطَّائِفِ فَلَمْ يَنَلْ مِنْهُمْ شَيْئًا فَقَالَ ‏”‏ إِنَّا قَافِلُونَ إِنْ شَاءَ اللَّهُ ‏”‏ ‏.‏ قَالَ أَصْحَابُهُ نَرْجِعُ وَلَمْ نَفْتَتِحْهُ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اغْدُوا عَلَى الْقِتَالِ ‏”‏ ‏.‏ فَغَدَوْا عَلَيْهِ فَأَصَابَهُمْ جِرَاحٌ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّا قَافِلُونَ غَدًا ‏”‏ ‏.‏ قَالَ فَأَعْجَبَهُمْ ذَلِكَ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தாயிஃப் நகரத்தாரை முற்றுகையிட்டபோது அந்நகரத்தாரை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, “இறைவன் நாடினால், நாம் (முற்றுகையை விலக்கிக்கொண்டு, நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று கூறினார்கள். நபித்தோழர்கள், “இ(ந்நகரத்)தை வெல்லாமல் நாம் திரும்புவதா?” என்று கேட்டார்கள்.

(தோழர்களின் தயக்கத்தைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “காலையில் போருக்குப் போவோம், தயாராகுங்கள்” என்றார்கள். அவ்வாறே அவர்கள் (மறு நாள்) காலை போருக்குச் சென்று, பலத்த காயங்களுக்கு ஆளானார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இப்படிச் சொன்னது நபித் தோழர்களுக்கு (இப்போது) மகிழ்ச்சி(தரும் செய்தி)யாக அமைந்தது. (அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 28, ஹதீஸ் எண்: 3327

وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنِي أَبِي قَالَ :‏

غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُنَيْنًا فَلَمَّا وَاجَهْنَا الْعَدُوَّ تَقَدَّمْتُ فَأَعْلُو ثَنِيَّةً فَاسْتَقْبَلَنِي رَجُلٌ مِنَ الْعَدُوِّ فَأَرْمِيهِ بِسَهْمٍ فَتَوَارَى عَنِّي فَمَا دَرَيْتُ مَا صَنَعَ وَنَظَرْتُ إِلَى الْقَوْمِ فَإِذَا هُمْ قَدْ طَلَعُوا مِنْ ثَنِيَّةٍ أُخْرَى فَالْتَقَوْا هُمْ وَصَحَابَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَوَلَّى صَحَابَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَرْجِعُ مُنْهَزِمًا وَعَلَىَّ بُرْدَتَانِ مُتَّزِرًا بِإِحْدَاهُمَا مُرْتَدِيًا بِالأُخْرَى فَاسْتَطْلَقَ إِزَارِي فَجَمَعْتُهُمَا جَمِيعًا وَمَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُنْهَزِمًا وَهُوَ عَلَى بَغْلَتِهِ الشَّهْبَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لَقَدْ رَأَى ابْنُ الأَكْوَعِ فَزَعًا ‏”‏ ‏.‏ فَلَمَّا غَشُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَزَلَ عَنِ الْبَغْلَةِ ثُمَّ قَبَضَ قَبْضَةً مِنْ تُرَابٍ مِنَ الأَرْضِ ثُمَّ اسْتَقْبَلَ بِهِ وُجُوهَهُمْ فَقَالَ ‏”‏ شَاهَتِ الْوُجُوهُ ‏”‏ ‏.‏ فَمَا خَلَقَ اللَّهُ مِنْهُمْ إِنْسَانًا إِلاَّ مَلأَ عَيْنَيْهِ تُرَابًا بِتِلْكَ الْقَبْضَةِ فَوَلَّوْا مُدْبِرِينَ فَهَزَمَهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ وَقَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم غَنَائِمَهُمْ بَيْنَ الْمُسْلِمِينَ ‏.‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்த்து ஹுனைன் போரில் கலந்து கொண்டோம். நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டபோது, நான் முன்னேறிச் சென்றேன். அப்போது நான் ஒரு மலைக் கணவாய்மீது ஏறினேன்; எதிரிகளில் ஒருவன் என்னை எதிர்கொண்டான். உடனே நான் ஓர் அம்பை எடுத்து அவன்மீது எய்தேன். அவன் என்னைவிட்டு மறைந்து (தப்பித்துக்)கொண்டான். பிறகு அவன் என்ன ஆனான் என்று எனக்குத் தெரியவில்லை.

அப்போது எதிரிகளை நான் பார்த்தேன். அவர்கள் மற்றொரு கணவாய்மீது ஏறி விட்டிருந்தார்கள். அவர்களும் நபித்தோழர்களும் மோதிக்கொண்டனர். பிறகு நபித் தோழர்கள் பின்வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். நானும் தோல்வி கண்டு திரும்பினேன். அப்போது என்மீது இரு போர்வைகள் இருந்தன. ஒன்றை நான் கீழங்கியாகவும் மற்றொன்றை மேலங்கியாகவும் போர்த்திக்கொண்டிருந்தேன்.

எனது கீழங்கி (நான் திரும்பிக்கொண்டிருந்தபோது) அவிழ்ந்துவிட்டது. உடனே நான் மேலங்கியையும் கீழங்கியையும் சேர்த்து (சுருட்டிப்) பிடித்துக்கொண்டேன். அப்போது நான் தோற்றுப்போனவனாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தமது வெள்ளைக் கோவேறு கழுதையில் (நிலைகுலையாமல்) இருந்தார்கள்.

அப்போது அவர்கள், “இப்னுல் அக்வஉ, திடுக்கிடும் நிகழ்வெதையோ கண்டுள்ளார்” என்று கூறினார்கள். எதிரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டதும் அவர்கள் தமது கோவேறு கழுதையிலிருந்து இறங்கி, பூமியிலிருந்து ஒரு கைப்பிடி மண் அள்ளி, அவர்களது முகங்களை நோக்கி எறிந்தார்கள்.

அப்போது “இம்முகங்கள் இழிவடைந்தன” என்று கூறினார்கள். எதிரிகளில் ஒருவரது முகம்கூட விடுபடாமல் அனைவருடைய கண்களையும் அந்த ஒரு பிடி மண்ணால் அல்லாஹ் நிரப்பாமல் விடவில்லை. பிறகு அவர்கள் புறமுதுகிட்டு ஓடினர்.

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் எதிரிகளைத் தோற்கடித்தான். அவர்கள் விட்டுச் சென்ற போர் வெற்றிச் செல்வங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்லிம்களுக்கிடையே பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 28, ஹதீஸ் எண்: 3326

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ :‏

سَمِعْتُ الْبَرَاءَ، وَسَأَلَهُ رَجُلٌ مِنْ قَيْسٍ أَفَرَرْتُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ فَقَالَ الْبَرَاءُ وَلَكِنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَفِرَّ وَكَانَتْ هَوَازِنُ يَوْمَئِذٍ رُمَاةً وَإِنَّا لَمَّا حَمَلْنَا عَلَيْهِمُ انْكَشَفُوا فَأَكْبَبْنَا عَلَى الْغَنَائِمِ فَاسْتَقْبَلُونَا بِالسِّهَامِ وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ وَإِنَّ أَبَا سُفْيَانَ بْنَ الْحَارِثِ آخِذٌ بِلِجَامِهَا وَهُوَ يَقُولُ ‏ “‏ أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ ‏”‏


وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَأَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ قَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عُمَارَةَ ‏.‏ فَذَكَرَ الْحَدِيثَ وَهُوَ أَقَلُّ مِنْ حَدِيثِهِمْ وَهَؤُلاَءِ أَتَمُّ حَدِيثًا ‏.‏

கைஸ் குலத்தைச் சேர்ந்த ஒருவர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், “ஹுனைன் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுவிட்டு நீங்கள் வெருண்டு ஓடினீர் களா?” என்று கேட்டார். அதற்கு பராஉ (ரலி) கூறினார்கள்: “இல்லை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பின்வாங்கவில்லை. ஹவாஸின் குலத்தார் அன்றைய தினம் வில் வீரர்களாய்த் திகழ்ந்தனர்.

நாங்கள் (முதலில்) அவர்கள்மீது தாக்குதல் நடத்தியபோது அவர்கள் சிதறியோடினர். எனவே, நாங்கள் குனிந்து போர் வெற்றிச் செல்வங்களைச் சேகரிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டோம். அப்போது (சிதறியோடிய) எதிரிகள் எங்களை முன்னோக்கி அம்புகளை (கூட்டமாக நின்று) எய்தனர். (எனவே, நிலைகுலைய வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வெள்ளைக் கோவேறு கழுதையில் அமர்ந்திருந்ததை நான் பார்த்தேன். அபூஸுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் இறைத்தூதர்! (இதில்) பொய் இல்லை. நான் அப்துல் முத்தலிபின் (குடும்பத்துப்) பிள்ளை ஆவேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அபூஇஸ்ஹாக் (ரஹ்)


குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பு, “பராஉ (ரலி) அவர்களிடம் ஒருவர், அபூஉமாரா! …” என்று அழைத்துக் கேட்டதாக ஆரம்பமாகிறது. அந்த ஹதீஸில் குறைந்த தகவல்களே இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில் முழுமையான தகவல்கள் காணப்படுகின்றன.

அத்தியாயம்: 32, பாடம்: 28, ஹதீஸ் எண்: 3325

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَنَابٍ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ زَكَرِيَّاءَ، عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى الْبَرَاءِ فَقَالَ أَكُنْتُمْ وَلَّيْتُمْ يَوْمَ حُنَيْنٍ يَا أَبَا عُمَارَةَ فَقَالَ أَشْهَدُ عَلَى نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم مَا وَلَّى وَلَكِنَّهُ انْطَلَقَ أَخِفَّاءُ مِنَ النَّاسِ وَحُسَّرٌ إِلَى هَذَا الْحَىِّ مِنْ هَوَازِنَ وَهُمْ قَوْمٌ رُمَاةٌ فَرَمَوْهُمْ بِرِشْقٍ مِنْ نَبْلٍ كَأَنَّهَا رِجْلٌ مِنْ جَرَادٍ فَانْكَشَفُوا فَأَقْبَلَ الْقَوْمُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ يَقُودُ بِهِ بَغْلَتَهُ فَنَزَلَ وَدَعَا وَاسْتَنْصَرَ وَهُوَ يَقُولُ ‏ “‏ أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ اللَّهُمَّ نَزِّلْ نَصْرَكَ ‏”‏ ‏.‏ قَالَ الْبَرَاءُ كُنَّا وَاللَّهِ إِذَا احْمَرَّ الْبَأْسُ نَتَّقِي بِهِ وَإِنَّ الشُّجَاعَ مِنَّا لَلَّذِي يُحَاذِي بِهِ ‏.‏ يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, “நீங்கள் (அனைவரும்) ஹுனைன் போர் நாளில் பின்வாங்கி ஓடினீர்களா, அபூஉமாரா?” என்று கேட்டார்.

அதற்கு பராஉ (ரலி) கூறினார்கள்: “நான் அறுதியிட்டுச் சொல்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பின்வாங்கிச் செல்லவில்லை. ஆயினும், மக்களில் அவசரப்பட்டுவந்த சில நிராயுதபாணிகள் (எதிரிகளான) அந்த ஹவாஸின் குலத்தாரை எதிர்கொண்டனர். அவர்களோ வில் வித்தையில் வீரர்களாய் இருந்தனர். அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரே நேரத்தில் அம்புக் கூட்டிலிருந்து அம்புகளை எடுத்து எய்தனர்.

அந்த அம்புகள் வெட்டுக்கிளி கூட்டங்களைப் போன்று (பறந்துவந்தன). இதனால், (முஸ்லிம்கள்) சிதறி ஓடினர். பிறகு மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். அப்போது அபூஸுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோவேறு கழுதையை ஓட்டிக்கொண்டு (நடந்து) வந்தார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது கழுதையிலிருந்து) இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘நான் இறைத்தூதர்; (இதில்) பொய் இல்லை; நான் அப்துல் முத்தலிபின் (குடும்பத்துப்) பிள்ளை ஆவேன்’ என்றும், ‘இறைவா! உன் உதவியை இறக்குவாயாக!’ என்றும் கூறிக்கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! போர் (உச்சகட்டமடைந்து) சிவந்து (கனன்று) கொண்டிருந்த போது நபியவர்களையே கேடயமாக்கி நாங்கள் தப்பித்துக்கொண்டிருந்தோம். எங்களில் வீரர்கள்கூட நபியவர்களுக்கு நேராக (அவர்களுக்குப் பின்னாலேயே) நின்றுகொண்டிருந்தனர்”

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அபூஇஸ்ஹாக் (ரஹ்)

அத்தியாயம்: 32, பாடம்: 28, ஹதீஸ் எண்: 3324

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ :‏

قَالَ رَجُلٌ لِلْبَرَاءِ يَا أَبَا عُمَارَةَ أَفَرَرْتُمْ يَوْمَ حُنَيْنٍ قَالَ لاَ وَاللَّهِ مَا وَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَكِنَّهُ خَرَجَ شُبَّانُ أَصْحَابِهِ وَأَخِفَّاؤُهُمْ حُسَّرًا لَيْسَ عَلَيْهِمْ سِلاَحٌ أَوْ كَثِيرُ سِلاَحٍ فَلَقُوا قَوْمًا رُمَاةً لاَ يَكَادُ يَسْقُطُ لَهُمْ سَهْمٌ جَمْعَ هَوَازِنَ وَبَنِي نَصْرٍ فَرَشَقُوهُمْ رَشْقًا مَا يَكَادُونَ يُخْطِئُونَ فَأَقْبَلُوا هُنَاكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ يَقُودُ بِهِ فَنَزَلَ فَاسْتَنْصَرَ وَقَالَ ‏ “‏ أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ ‏”‏ ‏.‏ ثُمَّ صَفَّهُمْ ‏.‏

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒருவர், “அபூஉமாரா! நீங்கள் ஹுனைன் போர் நாளில் வெருண்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். அதற்கு பராஉ (ரலி) கூறினார்கள்: “இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறமுதுகிடவில்லை. ஆயினும், அவர்களுடைய தோழர்களில் சில இளைஞர்கள் ஆயுதமின்றி, அல்லது போதுமான ஆயுதங்கள் இல்லாமல் அவசரப்பட்டு நிராயுதபாணிகளாக(போருக்கு)ப் புறப்பட்டு வந்துவிட்டார்கள்.

அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ரு குலத்தாரில் அம்பெய்யும் வீரர்களை(க் களத்தில்) எதிர்கொண்டனர். அந்தக் குலத்தாரின் ஓர் அம்புகூட குறி தவறாது. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்பெய்தார்கள். எனவே, அங்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிவந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு வெள்ளைக் கோவேறு கழுதையில் அமர்ந்துகொண்டிருக்க, அதை அபூஸுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக்கொண்டு வந்தார்கள். (நபித்தோழர்களின் நிலையைக் கண்டதும் தமது கழுதையிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள்.

மேலும், “நான் இறைத்தூதரே!; (இதில்) பொய் இல்லை. நான் அப்துல் முத்தலிபின் (குடும்பத்துப்) பிள்ளை ஆவேன்”என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுத்தார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அபூஇஸ்ஹாக் (ரஹ்)