அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2813

‏حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُمَرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ اشْتَرَى طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى ‏ ‏يَسْتَوْفِيَهُ ‏ ‏وَيَقْبِضَهُ

“உணவு தானியத்தை விலைக்கு வாங்கியவர், அதைத் தன் கையகப்படுத்திக்கொள்வதற்கு முன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2812

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ اشْتَرَى طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى ‏ ‏يَسْتَوْفِيَهُ


قَالَ وَكُنَّا نَشْتَرِي الطَّعَامَ مِنْ الرُّكْبَانِ ‏ ‏جِزَافًا ‏ ‏فَنَهَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ نَبِيعَهُ حَتَّى نَنْقُلَهُ مِنْ مَكَانِهِ

“உணவு தானியத்தை விலைக்கு வாங்கியவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு:

“நாங்கள் வணிகர்களிடமிருந்து உணவு தானியத்தை மொத்த விலைக்கு வாங்குவது வழக்கம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அதை அங்கிருந்து வேறு இடத்திற்குக் கொண்டுசெல்வதற்கு முன் விற்க வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்” என்று .இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2811

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ : ‏

كُنَّا فِي زَمَانِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَبْتَاعُ الطَّعَامَ فَيَبْعَثُ عَلَيْنَا مَنْ يَأْمُرُنَا بِانْتِقَالِهِ مِنْ الْمَكَانِ الَّذِي ابْتَعْنَاهُ فِيهِ إِلَى مَكَانٍ سِوَاهُ قَبْلَ أَنْ نَبِيعَهُ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் உணவு தானியத்தை விலைக்கு வாங்குவோம். அப்போது அவர்கள் எங்களிடம் ஆளனுப்பி, அதை (மற்றவருக்கு) விற்பதற்கு முன் வாங்கிய இடத்திலிருந்து வேறு இடத்திற்குக் கொண்டு சென்றுவிடுமாறு எங்களுக்கு உத்தரவிடுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2810

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى ‏ ‏يَسْتَوْفِيَهُ

“உணவு தானியத்தை விலைக்கு வாங்கியவர், அது தமக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2809

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى ‏ ‏يَكْتَالَهُ ‏


فَقُلْتُ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏لِمَ فَقَالَ أَلَا ‏ ‏تُرَاهُمْ يَتَبَايَعُونَ بِالذَّهَبِ وَالطَّعَامُ ‏ ‏مُرْجَأٌ ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏مُرْجَأٌ

“உணவு தானியத்தை விலைக்கு வாங்கியவர், அதை அளந்து பார்ப்பதற்கு முன் விற்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஏன்?”  என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “உணவு தானியம் இன்னும் வந்து சேராத நிலையில், அவர்கள் தானியத்திற்குத் தங்கத்தை (ஏற்றத் தாழ்வாக) விற்கிறார்கள் என்பதை நீர் கவனிக்கவில்லையா?” என்று கேட்டார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூகுரைப் (ரஹ்) வழி அறிவிப்பில் “ … வந்து சேராத நிலையில் …” எனும் குறிப்பு இல்லை.

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2808

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ ‏


قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏وَأَحْسِبُ كُلَّ شَيْءٍ بِمَنْزِلَةِ الطَّعَامِ

“உணவு தானியத்தை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

“உணவு தானியத்தைப் போன்றே எல்லாப் பொருட்களையும் நான் கருதுகின்றேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2807

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ : ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى ‏ ‏يَسْتَوْفِيَهُ ‏


قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏وَأَحْسِبُ كُلَّ شَيْءٍ مِثْلَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ وَهُوَ الثَّوْرِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

“உணவு தானியத்தை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

“உணவு தானியத்தைப் போன்றே எல்லாப் பொருட்களையும் நான் கருதுகின்றேன். (கைக்கு வந்து சேர்வதற்கு முன் எதையும் விற்கலாகாது)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அத்தியாயம்: 21, பாடம்: 7, ஹதீஸ்: 2806

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا مَا أَحَدُكُمْ اشْتَرَى ‏ ‏لِقْحَةً ‏ ‏مُصَرَّاةً ‏ ‏أَوْ شَاةً مُصَرَّاةً فَهُوَ بِخَيْرِ ‏ ‏النَّظَرَيْنِ ‏ ‏بَعْدَ أَنْ يَحْلُبَهَا إِمَّا هِيَ وَإِلَّا فَلْيَرُدَّهَا وَصَاعًا مِنْ تَمْرٍ

“உங்களில் ஒருவர் மடி கனக்கச் செய்யப்பட்ட பெண் ஒட்டகத்தையோ அல்லது ஆட்டையோ வாங்கிய பின் பால் கறந்து பார்க்கும்போது, இரண்டு உரிமைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். (1) அதைத் தம்மிடம் வைத்துக்கொள்ளலாம்; (2). ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்துடன் அதைத் திருப்பிக் கொடுத்து (வியாபாரத்தை ரத்துச் செய்து) விடலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 21, பாடம்: 7, ஹதீஸ்: 2805

‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ اشْتَرَى شَاةً ‏ ‏مُصَرَّاةً ‏ ‏فَهُوَ بِخَيْرِ ‏ ‏النَّظَرَيْنِ ‏ ‏إِنْ شَاءَ أَمْسَكَهَا وَإِنْ شَاءَ رَدَّهَا وَصَاعًا مِنْ تَمْرٍ لَا ‏ ‏سَمْرَاءَ ‏


و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ مَنْ اشْتَرَى مِنْ الْغَنَمِ فَهُوَ ‏ ‏بِالْخِيَارِ

“மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவர், இரண்டு உரிமைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அவர் நாடினால் அதைத் தம்மிடம் வைத்துக் கொள்ளலாம். நாடினால் அந்த ஆட்டை ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்து (வியாபாரத்தை ரத்து செய்து) விடலாம். கோதுமையைத்தான் கொடுக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், “… ஆடு வாங்குபவருக்கு தேர்ந்துகொள்ளும் உரிமை உண்டு” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 21, பாடம்: 7, ஹதீஸ்: 2804

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ يَعْنِي الْعَقَدِيَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُرَّةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ اشْتَرَى شَاةً ‏ ‏مُصَرَّاةً ‏ ‏فَهُوَ ‏ ‏بِالْخِيَارِ ‏ ‏ثَلَاثَةَ أَيَّامٍ فَإِنْ رَدَّهَا رَدَّ مَعَهَا صَاعًا مِنْ طَعَامٍ لَا ‏ ‏سَمْرَاءَ

“மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவருக்கு மூன்று நாள்கள் விருப்ப உரிமை உண்டு. அதைத் திருப்பிக் கொடுத்து (வியாபாரத்தை ரத்து செய்யும்போது) ஒரு ‘ஸாஉ’ உணவுப் பொருளுடன் அதைத் திருப்பிக் கொடுக்கட்டும். (உணவு என்பது) கோதுமையாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)