அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2819

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ: ‏
كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِذَا ابْتَعْتَ طَعَامًا فَلَا تَبِعْهُ حَتَّى ‏ ‏تَسْتَوْفِيَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஓர் உணவு தானியத்தை நீ விலைக்கு வாங்கினால், அது உன் கைக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்காதே” என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2818

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ الْمَخْزُومِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ قَالَ: ‏ ‏لِمَرْوَانَ ‏ ‏أَحْلَلْتَ بَيْعَ الرِّبَا فَقَالَ ‏ ‏مَرْوَانُ ‏ ‏مَا فَعَلْتُ فَقَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَحْلَلْتَ بَيْعَ ‏ ‏الصِّكَاكِ ‏وَقَدْ ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ بَيْعِ الطَّعَامِ حَتَّى ‏ ‏يُسْتَوْفَى ‏
‏قَالَ ‏ ‏فَخَطَبَ ‏ ‏مَرْوَانُ ‏ ‏النَّاسَ ‏ ‏فَنَهَى عَنْ بَيْعِهَا قَالَ ‏ ‏سُلَيْمَانُ ‏ ‏فَنَظَرْتُ إِلَى حَرَسٍ يَأْخُذُونَهَا مِنْ أَيْدِي النَّاسِ

அபூஹுரைரா (ரலி), மர்வான் பின் அல்ஹகமிடம், “வட்டித் தொழிலுக்கு நீங்கள் அனுமதியளித்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மர்வான், “இல்லையே!“ என்றார். அதற்கு அபூஹுரைரா (ரலி), “உணவுப் பொருள் பங்கீட்டு அடையாள அட்டைகளை (அரசு ஊழியர்கள் பிறருக்கு) விற்பதற்கு அனுமதியளித்துவிட்டீர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உணவு தானியம் கைக்கு வந்து சேர்வதற்கு முன் அதை (மற்றவரிடம்) விற்பதற்குத் தடை விதித்துள்ளார்களே!” என்று கூறினார்கள். பின்னர் மர்வான் மக்களுக்கு உரையாற்றுகையில், உணவுப் பொருள் பங்கீட்டு அடையாள அட்டையை விற்பதற்குத் தடை விதித்தார்.

உடனே காவலர்கள் மக்களின் கரங்களிலிருந்து அந்த உணவுப் பொருள் பங்கீட்டு அடையாள அட்டைகளைப் பறித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஸுலைமான் பின் யஸார் (ரஹ்)


குறிப்பு :

இறைத் தூதர் (ஸல்) அவர்களின் மறைவிற்கும் கலீஃபாக்கள் நால்வரின் மறைவிற்குப் பின்னரும் ஆட்சிக்கு வந்த உமையா வம்சத்தின் மர்வான் (ரஹ்) காலத்தில் (ஹி 65) அரசு ஊழியர்களுக்கும் ஆதரவற்ற ஏழைகளுக்கும் உணவுப் பொருள் பங்கீட்டு அடையாள அட்டைகள் அரசால் வழங்கப்பட்டன. அவற்றைப் பெற்றுக்கொண்டவர்கள் தமக்கான அட்டைகளை மக்களிடம் விற்கத் தலைப்பட்டனர் என்றும் ரேஷன் கார்டு ஸிஸ்டம், 1380 ஆண்டுகளுக்கு முன்னர் (ஹிஜ்ரீ 65இல்) முஸ்லிம் ஆட்சியாளர்களால் அரபு நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என்றும்  இந்த ஹதீஸின் மூலம் விளங்க முடிகிறது.

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2817

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ حُبَابٍ ‏ ‏عَنْ ‏ ‏الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَة‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ اشْتَرَى طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى ‏ ‏يَكْتَالَهُ ‏


وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏مَنْ ابْتَاعَ

“உணவு தானியத்தை விலைக்கு வாங்கியவர், அதை அளந்து பார்ப்பதற்கு முன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2816

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏قَالَ: ‏
قَدْ رَأَيْتُ النَّاسَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ابْتَاعُوا الطَّعَامَ ‏ ‏جِزَافًا ‏ ‏يُضْرَبُونَ فِي أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِمْ وَذَلِكِ حَتَّى يُؤْوُوهُ إِلَى رِحَالِهِمْ ‏


قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏كَانَ يَشْتَرِي الطَّعَامَ ‏ ‏جِزَافًا ‏ ‏فَيَحْمِلُهُ إِلَى أَهْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் மக்கள் உணவு தானியங்களை மொத்த விலைக்கு வாங்கியபோது, அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), உணவு தானியத்தை மொத்த விலைக்கு வாங்குவார்கள். பின்னர் அதை (அங்கேயே விற்றுவிடாமல்) தம் வீட்டாரிடம் எடுத்துச் சென்று விடுவார்கள்” என்று உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) தம்மிடம் கூறியதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2815

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏
أَنَّهُمْ كَانُوا يُضْرَبُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا اشْتَرَوْا طَعَامًا ‏ ‏جِزَافًا ‏ ‏أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِ حَتَّى يُحَوِّلُوهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் உணவு தானியத்தை மொத்தமாக வாங்கிக்கொண்டிருந்த மக்கள், அவற்றை(க் கைப்பற்றி) அங்கிருந்து வேறு இடத்திற்குக் கொண்டுசெல்லாமல் அங்கேயே விற்றதற்காக அடிக்கப்பட்டனர்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2814

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏و قَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ

“உணவு தானியத்தை விலைக்கு வாங்கியவர், அதைக் கையகப்படுத்துவதற்கு முன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2813

‏حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُمَرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ اشْتَرَى طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى ‏ ‏يَسْتَوْفِيَهُ ‏ ‏وَيَقْبِضَهُ

“உணவு தானியத்தை விலைக்கு வாங்கியவர், அதைத் தன் கையகப்படுத்திக்கொள்வதற்கு முன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2812

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ اشْتَرَى طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى ‏ ‏يَسْتَوْفِيَهُ


قَالَ وَكُنَّا نَشْتَرِي الطَّعَامَ مِنْ الرُّكْبَانِ ‏ ‏جِزَافًا ‏ ‏فَنَهَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ نَبِيعَهُ حَتَّى نَنْقُلَهُ مِنْ مَكَانِهِ

“உணவு தானியத்தை விலைக்கு வாங்கியவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு:

“நாங்கள் வணிகர்களிடமிருந்து உணவு தானியத்தை மொத்த விலைக்கு வாங்குவது வழக்கம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அதை அங்கிருந்து வேறு இடத்திற்குக் கொண்டுசெல்வதற்கு முன் விற்க வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்” என்று .இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2811

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏
كُنَّا فِي زَمَانِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَبْتَاعُ الطَّعَامَ فَيَبْعَثُ عَلَيْنَا مَنْ يَأْمُرُنَا بِانْتِقَالِهِ مِنْ الْمَكَانِ الَّذِي ابْتَعْنَاهُ فِيهِ إِلَى مَكَانٍ سِوَاهُ قَبْلَ أَنْ نَبِيعَهُ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் உணவு தானியத்தை விலைக்கு வாங்குவோம். அப்போது அவர்கள் எங்களிடம் ஆளனுப்பி, அதை (மற்றவருக்கு) விற்பதற்கு முன் வாங்கிய இடத்திலிருந்து வேறு இடத்திற்குக் கொண்டு சென்றுவிடுமாறு எங்களுக்கு உத்தரவிடுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2810

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى ‏ ‏يَسْتَوْفِيَهُ

“உணவு தானியத்தை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)