அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2343

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا ‏ ‏وَقَالَ : ‏

بَيْنَمَا رَجُلٌ يَسُوقُ ‏ ‏بَدَنَةً ‏ ‏مُقَلَّدَةً ‏ ‏قَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيْلَكَ ارْكَبْهَا فَقَالَ ‏ ‏بَدَنَةٌ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ قَالَ وَيْلَكَ ارْكَبْهَا وَيْلَكَ ارْكَبْهَا

ஒருவர், கழுத்தில் அடையாள மாலை தொங்கவிடப்பட்ட ஒரு பலி ஒட்டகத்தை நடத்திச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு (என்ன) கேடு! அதில் ஏறிச் செல்!” என்றார்கள். அதற்கு அவர், “(இது) பலி ஒட்டகமாயிற்றே, அல்லாஹ்வின் தூதரே?” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு (என்ன) கேடு! அதில் ஏறிச் செல்!; உனக்கு (என்ன) கேடு!. அதில் ஏறிச் செல்!” என்று (மீண்டும் மீண்டும்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இது, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் ஒன்றாகும் என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2342

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَأَى رَجُلًا يَسُوقُ ‏ ‏بَدَنَةً ‏ ‏فَقَالَ ‏ ‏ارْكَبْهَا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا ‏ ‏بَدَنَةٌ ‏ ‏فَقَالَ ارْكَبْهَا وَيْلَكَ فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ ‏


و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏بَيْنَمَا رَجُلٌ يَسُوقُ ‏ ‏بَدَنَةً ‏ ‏مُقَلَّدَةً

ஒருவர் ஒரு பலி ஒட்டகத்தை நடத்திக் கொண்டு செல்வதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவரிடம்), “அதில் ஏறிச் செல்!” என்றார்கள். அவர் “அல்லாஹ்வின் தூதரே! இது, பலி ஒட்டகமாயிற்றே!” என்றார். அதற்கு “அதில் ஏறிச்செல்!” என்று (மீண்டும்) கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை “உனக்கு (அதில் ஏறிச்செல்ல என்ன) கேடு!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

முகீரா (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர், கழுத்தில் அடையாள மாலை தொங்கவிடப்பட்ட ஒரு பலி ஒட்டகத்தை நடத்திச் சென்றபோது…” என்று தொடங்குகிறது.

அத்தியாயம்: 15, பாடம்: 64, ஹதீஸ் எண்: 2340

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهَا أَخْبَرَتْهُ ‏ ‏أَنَّ ابن زِيَادٍ ‏ ‏كَتَبَ إِلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ مَنْ أَهْدَى ‏ ‏هَدْيًا ‏ ‏حَرُمَ عَلَيْهِ مَا يَحْرُمُ عَلَى الْحَاجِّ حَتَّى يُنْحَرَ ‏ ‏الْهَدْيُ ‏ ‏وَقَدْ بَعَثْتُ بِهَدْيِي فَاكْتُبِي إِلَيَّ بِأَمْرِكِ قَالَتْ ‏ ‏عَمْرَةُ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ : ‏ ‏

لَيْسَ كَمَا قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏أَنَا ‏ ‏فَتَلْتُ ‏ ‏قَلَائِدَ ‏ ‏هَدْيِ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدَيَّ ثُمَّ ‏ ‏قَلَّدَهَا ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِهِ ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي فَلَمْ يَحْرُمْ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَيْءٌ أَحَلَّهُ اللَّهُ لَهُ حَتَّى ‏ ‏نُحِرَ ‏ ‏الْهَدْيُ


شرح [شرح محمد فؤاد عبد الباقي] (إن ابن زياد) هكذا وقع في جميع نسخ صحيح مسلم أن ابن زياد قال أبو علي الغساني والمازري والقاضي عياض وجميع المتكلمين على صحيح مسلم هذا غلط وصوابه أن زياد بن أبي سفيان وهو المعروف بزياد بن أبيه وهكذا وقع على الصواب في صحيح البخاري والموطأ وسنن أبي داود وغيرها من الكتب المعتمدة ولأن ابن زياد لم يدرك عائشة

ஸியாத் பின் அபீஸுஃப்யான், ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, “ஹாஜிகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ள அனைத்தும், பலிப் பிராணியை (மக்காவிற்கு) அனுப்பி வைப்பவருக்கும் அப்பிராணி அறுக்கப்படும்வரை தடை செய்யப்படும் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள். நானும் எனது பலிப் பிராணியை (மக்காவிற்கு) அனுப்பியுள்ளேன். எனவே, உங்களது தீர்ப்பை எனக்கு எழுதுங்கள்” என்று கேட்டார்.

அதற்கு ஆயிஷா (ரலி), “இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதைப் போல (நடைமுறை) இல்லை. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப் பிராணியின் அடையாள மாலைகளை, என் கைகளாலேயே திரித்(துத் தயாரித்)தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கையால் அந்த மாலையைப் பலிப் பிராணியின் கழுத்தில் தொங்கவிட்டார்கள். பிறகு (அந்தப்) பிராணியை என் தந்தையுடன் அனுப்பிவைத்தார்கள். (மக்காவில்) பலிப் பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்திருந்த எதுவும் தடை செய்யப்படவில்லை” என்று (பதில் கடிதத்தில்) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அம்ரா பின்த்தி அப்திர் ரஹ்மான் (ரஹ்)


குறிப்பு :

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதியவரின் பெயரை, இமாம் முஸ்லிம் (ரஹ்) ’இப்னு ஸியாத்’ என்று (பிழையாகக்) குறிப்பிட்டுள்ளார்கள். அவருடைய சரியான பெயர் ஸியாத் பின் அபீஸுஃப்யான் என்பதாகும். சரியான இப்பெயர்  ஸஹீஹ் அல்புகாரீ, அல் அமுஅத்தா, அபூதாவூத் ஆகிய நூல்களில் பதிவாகி உள்ளது  – இமாம் முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ.

அத்தியாயம்: 15, பாடம்: 64, ஹதீஸ் எண்: 2341

‏و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏قَالَ : ‏

‏سَمِعْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏وَهِيَ مِنْ وَرَاءِ الْحِجَابِ تُصَفِّقُ وَتَقُولُ كُنْتُ ‏ ‏أَفْتِلُ ‏ ‏قَلَائِدَ ‏ ‏هَدْيِ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدَيَّ ثُمَّ يَبْعَثُ بِهَا وَمَا يُمْسِكُ عَنْ شَيْءٍ مِمَّا يُمْسِكُ عَنْهُ الْمُحْرِمُ حَتَّى يُنْحَرَ ‏ ‏هَدْيُهُ ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏بِمِثْلِهِ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஆயிஷா (ரலி) திரைக்குப் பின்னாலிருந்து (ஆச்சரியப்பட்டு) கை தட்டுவதை நான் செவியுற்றேன். (காரணம் பலிப் பிராணியை ஹரமுக்கு அனுப்பிவைத்தவரின் நிலை பற்றி நான் வினவியிருந்தேன்) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப் பிராணிகளின் அடையாள மாலைகளைத் திரி(த்துத் தயாரி)ப்பேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பலிப் பிராணிகளை (ஹஜ் காலத்தில் மக்காவிற்கு) அனுப்புவார்கள். முஹ்ரிமானவர் தமது பலிப் பிராணி பலியிடப்படும்வரை தடுத்துக்கொள்ளக்கூடிய எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமக்காகத்) தடுத்துக்கொள்ளவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக மஸ்ரூக் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 64, ஹதீஸ் எண்: 2339

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ جُحَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏كُنَّا ‏ ‏نُقَلِّدُ الشَّاءَ فَنُرْسِلُ بِهَا وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَلَالٌ لَمْ يَحْرُمْ عَلَيْهِ مِنْهُ شَيْءٌ

நாங்கள் பலி ஆடுகளின் கழுத்தில் அடையாள மாலைகளைத் தொங்கவிட்டு அவற்றை (ஹரமிற்கு) அனுப்பிவைப்போம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராமற்ற நிலையிலேயே இருப்பார்கள்; அவர்களுக்கு எதுவும் தடை செய்யப்பட்டதாக இருக்கவில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 64, ஹதீஸ் எண்: 2338

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏أَهْدَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّةً إِلَى ‏ ‏الْبَيْتِ ‏ ‏غَنَمًا فَقَلَّدَهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு முறை இறையில்லம் கஅபாவிற்குப் பலி ஆட்டை அனுப்பிவைத்தபோது, அதன் கழுத்தில் அடையாள மாலையைத் தொங்கவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 64, ஹதீஸ் எண்: 2337

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏رُبَّمَا ‏ ‏فَتَلْتُ ‏ ‏الْقَلَائِدَ ‏ ‏لِهَدْيِ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيُقَلِّدُ ‏ ‏هَدْيَهُ ‏ ‏ثُمَّ يَبْعَثُ بِهِ ثُمَّ يُقِيمُ لَا يَجْتَنِبُ شَيْئًا مِمَّا يَجْتَنِبُ الْمُحْرِمُ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப் பிராணிகளுக்கான அடையாள மாலைகளைத் திரித்(துத் தயாரித்)ததுண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவற்றைத் தம் பலிப் பிராணிகளின் கழுத்தில் தொங்கவிட்டு, (ஹரமிற்கு) அனுப்பிவைப்பார்கள். பிறகு ஒரு முஹ்ரிம் விலக்கிக் கொள்ளும் எதையும் விலக்காதவர்களாக (எங்களிடையே) அவர்கள் தங்கியிருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 64, ஹதீஸ் எண்: 2336

‏و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏لَقَدْ رَأَيْتُنِي ‏ ‏أَفْتِلُ ‏ ‏الْقَلَائِدَ ‏ ‏لِهَدْيِ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الْغَنَمِ فَيَبْعَثُ بِهِ ثُمَّ يُقِيمُ فِينَا حَلَالًا

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப் பிராணியான ஆட்டிற்குரிய அடையாள மாலையைத் திரித்(துத் தயாரித்)தேன். அந்த ஆட்டை (ஹரமிற்கு) அனுப்பிவிட்டு, அவர்கள் அனுமதிக்கப்பட்ட (இயல்பான) நிலையிலேயே எங்களிடையே தங்கியிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 64, ஹதீஸ் எண்: 2335

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ الْحَسَنِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْمُؤْمِنِينَ ‏ ‏قَالَتْ : ‏

‏أَنَا ‏ ‏فَتَلْتُ ‏ ‏تِلْكَ ‏ ‏الْقَلَائِدَ ‏ ‏مِنْ ‏ ‏عِهْنٍ ‏ ‏كَانَ عِنْدَنَا فَأَصْبَحَ فِينَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَلَالًا يَأْتِي مَا يَأْتِي الْحَلَالُ مِنْ أَهْلِهِ أَوْ يَأْتِي مَا يَأْتِي الرَّجُلُ مِنْ أَهْلِهِ

நான் அந்தப் பலிப் பிராணிகளின் அடையாள மாலைகளை, எங்களிடமிருந்த கம்பளியால் திரித்(துத் தயாரித்)தேன். (பலிப் பிராணிகளை அனுப்பிய பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராமின் நிலையேதும் இல்லாமல் எங்களிடையே (இயல்பாகவே) இருந்தார்கள். முஹ்ரிமல்லாதவர் அல்லது ஒரு கணவர், தன் மனைவியிடம் பெற்றுக்கொள்ளும்  அனுமதிக்கப்பட்ட அனைத்தையும் (எங்களிடமிருந்து) பெற்றுக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 64, ஹதீஸ் எண்: 2334

‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏وَأَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَبْعَثُ ‏ ‏بِالْهَدْيِ ‏ ‏أَفْتِلُ ‏ ‏قَلَائِدَهَا بِيَدَيَّ ثُمَّ لَا يُمْسِكُ عَنْ شَيْءٍ لَا يُمْسِكُ عَنْهُ الْحَلَالُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வேறொருவர் மூலம் மக்காவுக்கு) அனுப்பிவைக்கும் பலிப் பிராணிகளுக்கு, நான் என் கைகளால் அடையாள மாலைகளைத் திரி(த்துத் தயாரி)ப்பேன். (பலிப் பிராணிகளை அனுப்பிய) பின்னர் (முஹ்ரிமல்லாதவருக்கு அனுமதிக்கப்பட்ட) எதையும் அல்லாஹ்வின் தூதர் தனக்குத் தடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)