அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2303

‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏عِيسَى بْنُ طَلْحَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ : ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَا هُوَ يَخْطُبُ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ مَا كُنْتُ أَحْسِبُ يَا رَسُولَ اللَّهِ أَنَّ كَذَا وَكَذَا قَبْلَ كَذَا وَكَذَا ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كُنْتُ أَحْسِبُ أَنَّ كَذَا قَبْلَ كَذَا وَكَذَا لِهَؤُلَاءِ الثَّلَاثِ قَالَ ‏ ‏افْعَلْ وَلَا ‏ ‏حَرَجَ ‏


و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا رِوَايَةُ ‏ ‏ابْنِ بَكْرٍ ‏ ‏فَكَرِوَايَةِ ‏ ‏عِيسَى ‏ ‏إِلَّا قَوْلَهُ لِهَؤُلَاءِ الثَّلَاثِ فَإِنَّهُ لَمْ يَذْكُرْ ذَلِكَ وَأَمَّا ‏ ‏يَحْيَى الْأُمَوِيُّ ‏ ‏فَفِي رِوَايَتِهِ حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ وَأَشْبَاهُ ذَلِكَ

நபி (ஸல்), ‘நஹ்ரு’டைய (துல் ஹஜ் பத்தாவது) நாளில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் ஒருவர் (வந்து) நின்று, “நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்னின்ன கிரியைகளைச் செய்ய வேண்டும் என அறிந்திருக்கவில்லை” என்றார். பிறகு மற்றொருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்ன கிரியையைச் செய்ய வேண்டும் என (தவறாக) நினைத்துக் கொண்டுவிட்டேன்” எனக் கூறி, (கல்லெறிதல், பலிப் பிராணியை அறுத்தல், தலைமுடி களைதல் ஆகிய) இம்மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார். அவற்றுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்” என்றே விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)


குறிப்புகள்  :

முஹம்மது பின் பக்ரு (ரஹ்) வழி அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ள “மூன்று விஷயங்கள்’’ என்பதைத் தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.

யஹ்யா அல்உமவீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் பலியிடுவதற்கு முன் தலைமுடியை மழித்துவிட்டேன். கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்” என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2302

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عِيسَى بْنُ طَلْحَةَ التَّيْمِيُّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏يَقُولُ : ‏

‏وَقَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏فَطَفِقَ ‏ ‏نَاسٌ يَسْأَلُونَهُ فَيَقُولُ الْقَائِلُ مِنْهُمْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمْ أَكُنْ أَشْعُرُ أَنَّ الرَّمْيَ قَبْلَ ‏ ‏النَّحْرِ ‏ ‏فَنَحَرْتُ قَبْلَ الرَّمْيِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏قَالَ ‏ ‏وَطَفِقَ ‏ ‏آخَرُ يَقُولُ إِنِّي لَمْ أَشْعُرْ أَنَّ ‏ ‏النَّحْرَ ‏ ‏قَبْلَ الْحَلْقِ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ فَيَقُولُ انْحَرْ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏قَالَ فَمَا سَمِعْتُهُ يُسْأَلُ يَوْمَئِذٍ عَنْ أَمْرٍ مِمَّا ‏ ‏يَنْسَى الْمَرْءُ وَيَجْهَلُ مِنْ تَقْدِيمِ بَعْضِ الْأُمُورِ قَبْلَ بَعْضٍ وَأَشْبَاهِهَا إِلَّا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏افْعَلُوا ذَلِكَ وَلَا ‏ ‏حَرَجَ ‏


حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏إِلَى آخِرِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (விடைபெறும் ஹஜ்ஜின்போது) தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம் மக்கள் (சில விளக்கங்களைக்) கேட்கலாயினர். அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறுத்துப் பலியிடுவதற்கு முன் கல்லெறிய வேண்டும் என அறிந்திருக்கவில்லை. எனவே, கல்லெறிவதற்கு முன்பே பலியிட்டுவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். மற்றொருவர், “தலைமுடியை மழிப்பதற்கு முன் பலியிட வேண்டும் என்பதை அறியாமல், நான் பலியிடுவதற்கு முன்பாக தலைமுடியை மழித்துவிட்டேன்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக!” என்றார்கள்.

அன்றைய தினத்தில் மறதியால், அல்லது அறியாமையால் ஒருவர் சில கிரியைகளைவிடச் சிலவற்றை முந்திச் செய்துவிட்டதாகக் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை; (இப்போது) அதைச் செய்யுங்கள்” என்று விடையளிப்பதையே நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2301

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏قَالَ : ‏

‏وَقَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ ‏ ‏بِمِنًى ‏ ‏لِلنَّاسِ يَسْأَلُونَهُ فَجَاءَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ فَقَالَ ‏ ‏اذْبَحْ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏ثُمَّ جَاءَهُ رَجُلٌ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ فَقَالَ ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏قَالَ فَمَا سُئِلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ شَيْءٍ قُدِّمَ وَلَا أُخِّرَ إِلَّا قَالَ افْعَلْ وَلَا ‏ ‏حَرَجَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விடைபெறும் ஹஜ்ஜின்போது மக்களின் கேள்விகளுக்கு விடையளித்தவாறு மினாவில் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தெரியாமல் பலியிடுவதற்கு முன்பே தலைமுடியையை மழித்துவிட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக!” என்றார்கள். பின்னர் மற்றொருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தெரியாமல் நான் கல்லெறிவதற்கு முன்பே அறுத்துப் பலியிட்டுவிட்டேன்” என்றார். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். அன்றைய நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முந்திச் செய்யப்பட்டது என்றோ, அல்லது பிந்திச் செய்யப்பட்டது என்றோ கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்திற்கும் “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்” என்றே விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 56, ஹதீஸ் எண்: 2300

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏سَمِعْتُ ‏ ‏هِشَامَ بْنَ حَسَّانَ ‏ ‏يُخْبِرُ عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ : ‏

‏لَمَّا رَمَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏وَنَحَرَ ‏ ‏نُسُكَهُ ‏ ‏وَحَلَقَ نَاوَلَ الْحَالِقَ شِقَّهُ الْأَيْمَنَ فَحَلَقَهُ ثُمَّ دَعَا ‏ ‏أَبَا طَلْحَةَ الْأَنْصَارِيَّ ‏ ‏فَأَعْطَاهُ إِيَّاهُ ثُمَّ نَاوَلَهُ الشِّقَّ الْأَيْسَرَ فَقَالَ ‏ ‏احْلِقْ فَحَلَقَهُ فَأَعْطَاهُ ‏ ‏أَبَا طَلْحَةَ ‏ ‏فَقَالَ اقْسِمْهُ بَيْنَ النَّاسِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (துல்ஹஜ் பத்தாவது நாளில்) ‘ஜம்ரத்துல் அகபா’வில் கற்களை எறிந்து, தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்டதும் தமது தலைமுடியை மழித்தார்கள். நாவிதரிடம் தமது தலையின் வலப் பக்கத்தைக் காட்டியபோது, அவர் அதை மழித்தார். அபூதல்ஹா அல்அன்ஸாரி (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் இடப் பக்கத்தைக் காட்டி “மழி” என்றார்கள். அவர் மழித்ததும் அதை அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்து “இதை மக்களிடையே விநியோகிப்பீராக!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 56, ஹதீஸ் எண்: 2299

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَمَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ ‏ ‏ثُمَّ انْصَرَفَ إِلَى ‏ ‏الْبُدْنِ ‏ ‏فَنَحَرَهَا وَالْحَجَّامُ جَالِسٌ وَقَالَ بِيَدِهِ عَنْ رَأْسِهِ فَحَلَقَ شِقَّهُ الْأَيْمَنَ فَقَسَمَهُ فِيمَنْ يَلِيهِ ثُمَّ قَالَ ‏ ‏احْلِقْ الشِّقَّ الْآخَرَ فَقَالَ أَيْنَ ‏ ‏أَبُو طَلْحَةَ ‏ ‏فَأَعْطَاهُ إِيَّاهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (துல்ஹஜ் பத்தாவது நாளில்) ‘ஜம்ரத்துல் அகபா’வில் கல்லெறிந்துவிட்டுப் பிறகு பலி ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதை அறுத்தார்கள். நாவிதரும் அங்கே அமர்ந்திருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தலையைக் கையால் சுட்டிக் காட்டினார்கள். வலப் பக்கத்தை அவர் மழித்ததும் முடியைத் தமக்கு அருகில் இருந்தவர்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பிறகு நாவிதரிடம் “மறு பக்கத்தை மழி” என்றார்கள். பின்னர் “அபூதல்ஹா எங்கே?” என்று கேட்டு, (அவர்கள் வந்ததும்) அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 56, ஹதீஸ் எண்: 2298

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَى ‏ ‏مِنًى ‏ ‏فَأَتَى ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏فَرَمَاهَا ثُمَّ أَتَى مَنْزِلَهُ ‏ ‏بِمِنًى ‏ ‏وَنَحَرَ ثُمَّ قَالَ لِلْحَلَّاقِ خُذْ وَأَشَارَ إِلَى جَانِبِهِ الْأَيْمَنِ ثُمَّ الْأَيْسَرِ ثُمَّ جَعَلَ يُعْطِيهِ النَّاسَ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالُوا أَخْبَرَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَقَالَ فِي رِوَايَتِهِ لِلْحَلَّاقِ هَا وَأَشَارَ بِيَدِهِ إِلَى الْجَانِبِ الْأَيْمَنِ هَكَذَا فَقَسَمَ شَعَرَهُ بَيْنَ مَنْ يَلِيهِ قَالَ ثُمَّ أَشَارَ إِلَى الْحَلَّاقِ وَإِلَى الْجَانِبِ الْأَيْسَرِ فَحَلَقَهُ فَأَعْطَاهُ ‏ ‏أُمَّ سُلَيْمٍ ‏ ‏وَأَمَّا فِي رِوَايَةِ ‏ ‏أَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَ فَبَدَأَ بِالشِّقِّ الْأَيْمَنِ فَوَزَّعَهُ الشَّعَرَةَ وَالشَّعَرَتَيْنِ بَيْنَ النَّاسِ ثُمَّ قَالَ بِالْأَيْسَرِ فَصَنَعَ بِهِ مِثْلَ ذَلِكَ ثُمَّ قَالَ هَا هُنَا ‏ ‏أَبُو طَلْحَةَ ‏ ‏فَدَفَعَهُ إِلَى ‏ ‏أَبِي طَلْحَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (விடைபெறும் ஹஜ்ஜில்) மினாவிற்குச் சென்ற போது, (முதலில்) ஜம்ர(த்துல் அகபா)விற்குச் சென்று கற்களை எறிந்தார்கள். பின்னர் மினாவிலிருந்த தமது கூடாரத்திற்கு வந்து அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் வலப் பக்கத்தையும் பின்னர் இடப் பக்கத்தையும் காட்டி, “எடு” என்றார்கள். பிறகு அந்த முடியை மக்களிடையே வழங்கி(டச் சொன்)னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு  :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது (தலையின்) வலப் பக்கத்தை நாவிதரிடம் காட்டி “எடு” என்றார்கள். பிறகு அந்த முடியைத் தமக்கு அருகிலிருந்த மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பின்னர் தமது (தலையின்) இடப் பக்கத்தை நாவிதரிடம் காட்டினார்கள். அவர் அதை மழித்தார். அந்த முடியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மு ஸுலைம் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முதலில் (தமது தலையின்) வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தார்கள். ஓரிரு முடிகளை மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பின்னர் இடப் பக்கத்தைக் காட்டி அவ்வாறே (மழிக்கச்) செய்தார்கள். பிறகு, ‘அபூதல்ஹா இங்கே இருக்கிறாரா?‘ என்று கேட்டார்கள். (அவர் வந்ததும்) அவரிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 55, ஹதீஸ் எண்: 2297

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَعِيلَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَلَقَ رَأْسَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விடைபெறும் ஹஜ்ஜில் (இறுதிச் சடக்காகத்) தமது தலைமுடியை மழித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 55, ஹதீஸ் எண்: 2296

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَأَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ الْحُصَيْنِ ‏ ‏عَنْ ‏ ‏جَدَّتِهِ ‏ ‏أَنَّهَا :‏

سَمِعَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ ‏ ‏دَعَا لِلْمُحَلِّقِينَ ثَلَاثًا وَلِلْمُقَصِّرِينَ مَرَّةً ‏


وَلَمْ يَقُلْ ‏ ‏وَكِيعٌ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ

நபி (ஸல்) விடைபெறும் ஹஜ்ஜின்போது தலைமுடியை மழித்துக்கொள்பவர்களுக்காக மூன்று முறையும், முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்காக ஒரு முறையும் பிரார்த்தித்ததை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : உம்முல் ஹுஸைன் பின்த்தி இஸ்ஹாக் (ரலி)


குறிப்பு :

வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “விடைபெறும் ஹஜ்ஜின்போது… ” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 55, ஹதீஸ் எண்: 2295

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ فُضَيْلٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَارَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلِلْمُقَصِّرِينَ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلِلْمُقَصِّرِينَ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلِلْمُقَصِّرِينَ قَالَ وَلِلْمُقَصِّرِينَ ‏


و حَدَّثَنِي ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா, (தலைமுடியை) மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!” எனப் பிரார்த்தித்ததும் மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! “குறைத்துக்கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா, மழித்துக் கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!” என்று (மீண்டும்) பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்), “அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா, மழித்துக் கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். மக்கள் (மறுபடியும்) “அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்…” என்றதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குறைத்துக்கொள்பவர்களுக்கும் (மன்னிப்பு அளிப்பாயாக)” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 55, ஹதீஸ் எண்: 2294

‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمِ بْنِ الْحَجَّاجِ ‏ ‏قَالَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ قَالَ رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ قَالَ رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَالْمُقَصِّرِينَ ‏


و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ ‏ ‏فَلَمَّا كَانَتْ الرَّابِعَةُ قَالَ وَالْمُقَصِّرِينَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ், (தலைமுடியை) மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவானாக!” என்று பிரார்த்தித்ததும் மக்கள், “அல்லாஹ்வின் தூதரே, குறைத்துக்கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ், மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவானாக!” எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்), “அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்…” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மறுபடியும்) “அல்லாஹ், மழித்துக் கொள்பவர்களுக்கு அருள் புரிவானாக!” எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்) “அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக் கொள்வர்களுக்கும்…” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக)” எனப் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான்காவது தடவையில், குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக) ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.