حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا رَوْحٌ وَهُوَ ابْنُ الْقَاسِمِ عَنْ إِسْمَعِيلَ بْنِ أُمَيَّةَ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ عَنْ أَبِي مَعْبَدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ قَالَ إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ أَهْلِ كِتَابٍ فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ عِبَادَةُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَإِذَا عَرَفُوا اللَّهَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ فَإِذَا فَعَلُوا فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ زَكَاةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِذَا أَطَاعُوا بِهَا فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِهِمْ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தபோது சொன்னார்கள்:
நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சாராரிடம் செல்கின்றீர்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் விடுக்கும் முதல் அழைப்பு, (ஏக இறைவனான) அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள் என்பதாகவே இருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) ஏற்றுக்கொண்டால், அல்லாஹ் அவர்கள் மீது அவர்களது ஒரு நாளின் இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.
தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால், அவர்களுள் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பெற்று அவர்களுள் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஜகாத்தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கி உள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.
இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்களிடமிருந்து ஜகாத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களது சொத்துகளில் அவர்கள் மதிப்பாய் நினைப்பவற்றை(ஜகாத்தாக எடுப்பதை)த் தவிர்த்துக் கொள்க!
அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)