அத்தியாயம்: 1, பாடம்: 1.07, ஹதீஸ் எண்: 27

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ بْنِ إِسْحَقَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذِ بْنِ جَبَلٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏رُبَّمَا قَالَ ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏مُعَاذًا ‏ ‏قَالَ ‏
‏بَعَثَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّكَ تَأْتِي قَوْمًا مِنْ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ فِي فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَإِيَّاكَ ‏ ‏وَكَرَائِمَ ‏ ‏أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ ‏
‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ بْنِ إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَ ‏ ‏مُعَاذًا ‏ ‏إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَقَالَ إِنَّكَ سَتَأْتِي قَوْمًا ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமனுக்கு) அனுப்பி வைத்தபோது சொன்னார்கள்:

“நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சாராரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம், வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் (முஹம்மத் ஆகிய) நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி எடுக்கும்படி அவர்களுக்கு அழைப்பு விடுங்கள்.

இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால், அல்லாஹ் அவர்கள் மீது ஒவ்வொரு நாளின் இரவிலும் பகலிலும் ஐந்து (வேளைத்) தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள் மீது அல்லாஹ் ஜகாத் (எனும் கட்டாய தானத்)தைக் கடமையாக்கி உள்ளான் என்றும், அது அவர்களுள் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களுள் ஏழைகளுக்கு வழங்கப் படவேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்கள் கட்டுப் படும்போது அவர்களது சொத்துகளில் அவர்கள் மதிப்பாய் நினைப்பவற்றை (ஜகாத்தாக) எடுப்பதைத் தவிர்த்துக் கொள்க என உங்களை நான் எச்சரிக்கின்றேன். அநீதி இழைக்கப் பட்டவனது பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில் அவனது பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே திரை ஏதுமில்லை”. என்று முஆத் பின் ஜபல் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)


குறிப்பு:

மேற்காணும் ஹதீஸ், இரு அறிவிப்பாளர் வரிசைகளில் அறிவிக்கப் படுகிறது. அவற்றுள் ஒரு தொடரில் இடம்பெறும் அபூமஅபத் (நாஃபித்-ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது ‘நீங்கள் ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள்…’ எனத் தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்கு முழுமையாக அறிவித்தார்கள் எனக் குறிப்பிடுகிறார்.