و حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ جَمِيعًا عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ قَالَ أَبُو الرَّبِيعِ حَدَّثَنَا حَمَّادٌ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيهِ قَالَ:
سُئِلَ أُسَامَةُ وَأَنَا شَاهِدٌ أَوْ قَالَ سَأَلْتُ أُسَامَةَ بْنَ زَيْدٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْدَفَهُ مِنْ عَرَفَاتٍ قُلْتُ كَيْفَ كَانَ يَسِيرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَفَاضَ مِنْ عَرَفَةَ قَالَ كَانَ يَسِيرُ الْعَنَقَ فَإِذَا وَجَدَ فَجْوَةً نَصَّ
و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ وَحُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ بِهَذَا الْإِسْنَادِ وَزَادَ فِي حَدِيثِ حُمَيْدٍ قَالَ هِشَامٌ وَالنَّصُّ فَوْقَ الْعَنَقِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பும்போது அவர்களின் பின்னால் (வாகனத்தில்) அமரவைத்திருந்த உஸாமா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து திரும்பியபோது எவ்வாறு பயணித்தார்கள்?” என்று வினவப்பட்டது. அப்போது அவர்களுடன் நான் இருந்தேன். அல்லது உஸாமா (ரலி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு உஸாமா (ரலி), “நபியவர்கள் மிதமான வேகத்தில் பயணித்தார்கள். (கூட்ட நெரிசல் காணப்படாத) விசாலமான இடத்தை அடைந்தால் அவர்கள் விரைவாகச் சென்றார்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)
குறிப்பு :
ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) வழி அறிவிப்பில், “மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘அந்நஸ்’ (விரைவு) என்பது, ‘அல் அனக்’ (மிதவேகம்) என்பதைவிடக் கூடுதல் வேகமாகும்” என்று ஹிஷாம் (ரஹ்) விளக்கம் கூறியதாக இடம்பெற்றுள்ளது.