அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2747

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏

‏لَاعَنَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ رَجُلٍ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏وَامْرَأَتِهِ وَفَرَّقَ بَيْنَهُمَا ‏


و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்ஸாரிகளில் ஒருவரையும் அவருடைய மனைவியையும் சுய சாபம் (லிஆன்) வேண்டவைத்தார்கள். பின்னர் அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2746

‏و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِمَالِكٍ ‏ ‏حَدَّثَكَ ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏

‏أَنَّ رَجُلًا ‏ ‏لَاعَنَ ‏ ‏امْرَأَتَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَفَرَّقَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَهُمَا وَأَلْحَقَ الْوَلَدَ بِأُمِّهِ قَالَ نَعَمْ

நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் ‘ஒருவர் தம் மனைவியிடம் சுய சாபம் (லிஆன்) வேண்டினார். பின்னர் அவ்விருவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரித்துவைத்தார்கள்; மேலும், குழந்தையைத் தாயிடம் சேர்த்தார்கள்’ என இப்னு உமர் (ரலி) கூறினார்கள் என்று நாஃபிஉ (ரஹ்) தங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு மாலிக் (ரஹ்) “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக யஹ்யா பின் யஹ்யா (ரஹ்)

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2745

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِلْمِسْمَعِيِّ ‏ ‏وَابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ وَهُوَ ابْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَزْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏قَالَ: ‏

‏لَمْ يُفَرِّقْ ‏ ‏الْمُصْعَبُ ‏ ‏بَيْنَ الْمُتَلَاعِنَيْنِ قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏فَذُكِرَ ذَلِكَ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏فَرَّقَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ ‏ ‏أَخَوَيْ ‏ ‏بَنِي الْعَجْلَانِ

முஸ்அப் பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்ட தம்பதியரைப் பிரித்துவைக்கவில்லை. ஆகவே, இது குறித்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நபி (ஸல்) பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியர்) இருவரை (லிஆனுக்குப் பின்னர்) பிரித்துவைத்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2744

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏

‏فَرَّقَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ أَخَوَيْ ‏ ‏بَنِي الْعَجْلَانِ ‏ ‏وَقَالَ ‏ ‏اللَّهُ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ فَهَلْ مِنْكُمَا تَائِبٌ ‏


و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏سَمِعَ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏عَنْ اللِّعَانِ فَذَكَرَ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை (லிஆனுக்குப் பின்னர்) பிரித்துவைத்தார்கள். பிறகு, “உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோருபவர் உண்டா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) கூறினார்கள்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சுய சாபம் (லிஆன்) வேண்டுதல் பற்றிக் கேட்டேன். அப்போது நபி (ஸல்) கூறினார்கள் …“ என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2743

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِلْمُتَلَاعِنَيْنِ ‏ ‏حِسَابُكُمَا عَلَى اللَّهِ أَحَدُكُمَا كَاذِبٌ لَا ‏ ‏سَبِيلَ ‏ ‏لَكَ عَلَيْهَا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَالِي قَالَ لَا مَالَ لَكَ إِنْ كُنْتَ صَدَقْتَ عَلَيْهَا فَهُوَ بِمَا اسْتَحْلَلْتَ مِنْ فَرْجِهَا وَإِنْ كُنْتَ كَذَبْتَ عَلَيْهَا فَذَاكَ أَبْعَدُ لَكَ مِنْهَا ‏


قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏فِي رِوَايَتِهِ حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏سَمِعَ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்ட தம்பதியரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். (இனி) அவள்மீது (கணவராகிய) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று சொன்னார்கள். உடனே அவர், “அல்லாஹ்வின் தூதரே! (நான் இவளுக்கு மணக்கொடையாக அளித்த) எனது பொருள்? (அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாமா)?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உமக்கு(அந்த)ப் பொருள் கிடைக்காது. நீ அவள் விஷயத்தில் (சொன்ன குற்றச்சாட்டில்) உண்மையாளராய் இருந்தால், அவளது கற்பை அனுபவித்துக்கொள்வதற்காக நீ பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். அவள்மீது நீ பொய் சொல்லியிருந்தால் (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அப்பொருளுக்கும் உமக்கும் வெகு தூரமாகிவிடும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2742

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏قَالَ: ‏

‏سُئِلْتُ عَنْ ‏ ‏الْمُتَلَاعِنَيْنِ ‏ ‏فِي ‏ ‏إِمْرَةِ ‏ ‏مُصْعَبٍ ‏ ‏أَيُفَرَّقُ بَيْنَهُمَا قَالَ فَمَا دَرَيْتُ مَا أَقُولُ فَمَضَيْتُ إِلَى مَنْزِلِ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏فَقُلْتُ لِلْغُلَامِ اسْتَأْذِنْ لِي قَالَ إِنَّهُ ‏ ‏قَائِلٌ ‏ ‏فَسَمِعَ صَوْتِي قَالَ ‏ ‏ابْنُ جُبَيْرٍ ‏ ‏قُلْتُ نَعَمْ قَالَ ادْخُلْ فَوَاللَّهِ مَا جَاءَ بِكَ هَذِهِ السَّاعَةَ إِلَّا حَاجَةٌ فَدَخَلْتُ فَإِذَا هُوَ مُفْتَرِشٌ ‏ ‏بَرْذَعَةً ‏ ‏مُتَوَسِّدٌ وِسَادَةً حَشْوُهَا لِيفٌ قُلْتُ ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏الْمُتَلَاعِنَانِ ‏ ‏أَيُفَرَّقُ بَيْنَهُمَا قَالَ سُبْحَانَ اللَّهِ نَعَمْ إِنَّ أَوَّلَ مَنْ سَأَلَ عَنْ ذَلِكَ فُلَانُ بْنُ فُلَانٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏أَرَأَيْتَ أَنْ لَوْ وَجَدَ أَحَدُنَا امْرَأَتَهُ عَلَى فَاحِشَةٍ كَيْفَ يَصْنَعُ إِنْ تَكَلَّمَ تَكَلَّمَ بِأَمْرٍ عَظِيمٍ وَإِنْ سَكَتَ سَكَتَ عَلَى مِثْلِ ذَلِكَ قَالَ فَسَكَتَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمْ يُجِبْهُ فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ أَتَاهُ فَقَالَ إِنَّ الَّذِي سَأَلْتُكَ عَنْهُ قَدْ ابْتُلِيتُ بِهِ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَؤُلَاءِ الْآيَاتِ فِي سُورَةِ ‏ ‏النُّورِ”وَالَّذِينَ يَرْمُونَ أَزْوَاجَهُمْ“ ‏

‏فَتَلَاهُنَّ عَلَيْهِ وَوَعَظَهُ وَذَكَّرَهُ وَأَخْبَرَهُ أَنَّ عَذَابَ الدُّنْيَا أَهْوَنُ مِنْ عَذَابِ الْآخِرَةِ قَالَ لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا كَذَبْتُ عَلَيْهَا ثُمَّ دَعَاهَا فَوَعَظَهَا وَذَكَّرَهَا وَأَخْبَرَهَا أَنَّ عَذَابَ الدُّنْيَا أَهْوَنُ مِنْ عَذَابِ الْآخِرَةِ قَالَتْ لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ إِنَّهُ لَكَاذِبٌ فَبَدَأَ بِالرَّجُلِ فَشَهِدَ أَرْبَعَ شَهَادَاتٍ بِاللَّهِ إِنَّهُ لَمِنْ الصَّادِقِينَ وَالْخَامِسَةُ أَنَّ لَعْنَةَ اللَّهِ عَلَيْهِ إِنْ كَانَ مِنْ الْكَاذِبِينَ ثُمَّ ثَنَّى بِالْمَرْأَةِ فَشَهِدَتْ أَرْبَعَ شَهَادَاتٍ بِاللَّهِ إِنَّهُ لَمِنْ الْكَاذِبِينَ وَالْخَامِسَةُ أَنَّ غَضَبَ اللَّهِ عَلَيْهَا إِنْ كَانَ مِنْ الصَّادِقِينَ ثُمَّ فَرَّقَ بَيْنَهُمَا ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏سُئِلْتُ عَنْ ‏ ‏الْمُتَلَاعِنَيْنِ ‏ ‏زَمَنَ ‏ ‏مُصْعَبِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏فَلَمْ أَدْرِ مَا أَقُولُ فَأَتَيْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏فَقُلْتُ أَرَأَيْتَ الْمُتَلَاعِنَيْنِ أَيُفَرَّقُ بَيْنَهُمَا ثُمَّ ذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ

முஸ்அப் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) ஆட்சிக் காலத்தில் என்னிடம் “சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்ட தம்பதியர் பிரித்துவைக்கப்படுவார்களா? (அல்லது லிஆன் பிரமாணத்தை மொழிந்ததும் தானாக மணவிலக்கு ஏற்பட்டுவிடுமா?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, நான் (கூஃபாவிலிருந்து) புறப்பட்டு மக்காவிலிருந்த இப்னு உமர் (ரலி) இல்லத்திற்குச் சென்றேன். அவர்களுடைய பணியாளிடம், “எனக்காக (உள்ளே வர) அனுமதி கேள்” என்றேன். “அவர்கள் மதிய ஓய்வில் இருக்கிறார்கள்” என அவர் பதிலளித்தார். எனது குரலைச் செவியுற்ற இப்னு உமர் (ரலி), “இப்னு ஜுபைரா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முக்கியத் தேவையொன்றுதான் உங்களை இந்த நேரத்தில் (என்னிடம்) கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும்” என்று கூறினார்கள்.

நான் உள்ளே சென்றேன். அப்போது அவர்கள் ஒட்டகத்தின் மேல் விரிக்கப்படும் விரிப்பொன்றை விரித்து, பேரீச்ச நார் நிரப்பப்பட்ட ஒரு தலையணையில் சாய்ந்திருந்தார்கள். நான், “அபூஅப்திர் ரஹ்மான்! பரஸ்பரம் சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்ட தம்பதியர் பிரித்து வைக்கப்படுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) பின்வருமாறு கூறினார்கள்: ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! ஆம் (அவர்கள் லிஆன் செய்த பிறகு பிரித்துவைக்கப்படுவார்கள்); இதைப் பற்றி (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) முதன் முதலில் கேட்டவர் இன்னாரின் மகன் இன்னார் ஆவார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவி (அந்நிய ஆடவனுடன்) மானக்கேடான செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? (அதை) அவர் (வெளியே) சொன்னால், பாரதூரமான ஒன்றை வெளிப்படுத்தியவர் ஆகிவிடுவார். மௌனமாக இருந்தாலோ, பாரதூரமான ஒன்றில் மௌனம் காத்தவராகிவிடுவாரே?” என்று கேட்டார். அதற்குப் பதிலேதும் சொல்லாமல் நபி (ஸல்) அமைதியாக இருந்தார்கள். அதன் பின்னர் அவர் கேட்டது (போன்றே ஒரு நிகழ்ச்சி) நடந்தபோது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் எதைப் பற்றித் தங்களிடம் கேட்டேனோ அதன் மூலம் நானே சோதிக்கப்பட்டுள்ளேன்” என்று கூறினார். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “தம்மைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தம் மனைவியர்மீது பழி சுமத்துவோர், தாம் உண்மையாளர் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்” என்று தொடங்கி, “தன்மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாகவும் (கூறவேண்டும்)” (24:6-9) என்பது வரையிலான வசனங்களை அருளினான்.

அவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கு ஓதிக் காட்டி அறிவுரை கூறினார்கள்; (அல்லாஹ்வின் தண்டனைகளை) நினைவூட்டினார்கள்; “இம்மையின் தண்டனை, மறுமையின் தண்டனையைவிட மிக எளிதானதாகும்” என்றும் தெரிவித்தார்கள். அதற்கு அவர் “இல்லை; தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் அவள்மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லவில்லை” என்றார்.

பிறகு நபி (ஸல்) அப்பெண்ணை அழைத்து அவளுக்கு அறிவுரை கூறினார்கள்; (அல்லாஹ்வின் தண்டனையை) நினைவூட்டினார்கள்; “இம்மையின் தண்டனை, மறுமையின் தண்டனையைவிட மிக எளிதானதாகும்” என்றும் தெரிவித்தார்கள். அதற்கு அப்பெண், “தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் பொய்யர்” என்று கூறினாள். எனவே, முதலில் அந்த ஆணிடமிருந்து (சுய சாபம் வேண்டும் பிரமாணத்தை) நபியவர்கள் ஆரம்பித்தார்கள். அவர் (தமது குற்றச்சாட்டில்) தாம் உண்மையாளர் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு நான்கு முறை உறுதிமொழிந்தார். ஐந்தாவது முறையில், (தனது குற்றச்சாட்டில்) தான் பொய்யராக இருந்தால் “அல்லாஹ்வின் சாபம் என்மீது உண்டாகட்டும்” என்று கூறினார்.

இரண்டாவதாக அந்தப் பெண்ணை அழைத்தார்கள். அவள் (தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் வகையில்) “அவர் பொய்யர் ஆவார்” என நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு உறுதிமொழிந்தாள். ஐந்தாவதாக “அவர் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளராக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்” என்று கூறினாள். பிறகு இருவரையும் நபி (ஸல்) பிரித்துவைத்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)


குறிப்பு :

ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில்,  “பரஸ்பரம் சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்ட தம்பதியர் பற்றி முஸ்அப் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) (ஆட்சிக்) காலத்தில் என்னிடம் வினவப்பட்டது. அதற்கு என்ன பதிலளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை …” என ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2741

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ ‏ ‏أَخْبَرَهُ ‏

‏أَنَّ ‏ ‏عُوَيْمِرًا الْعَجْلَانِيَّ ‏ ‏جَاءَ إِلَى ‏ ‏عَاصِمِ بْنِ عَدِيٍّ الْأَنْصَارِيِّ ‏ ‏فَقَالَ لَهُ أَرَأَيْتَ يَا ‏ ‏عَاصِمُ ‏ ‏لَوْ أَنَّ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَسَلْ لِي عَنْ ذَلِكَ يَا ‏ ‏عَاصِمُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَ ‏ ‏عَاصِمٌ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَكَرِهَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَسَائِلَ وَعَابَهَا حَتَّى ‏ ‏كَبُرَ ‏ ‏عَلَى ‏ ‏عَاصِمٍ ‏ ‏مَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا رَجَعَ ‏ ‏عَاصِمٌ ‏ ‏إِلَى أَهْلِهِ جَاءَهُ ‏ ‏عُوَيْمِرٌ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏عَاصِمُ ‏ ‏مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏عَاصِمٌ ‏ ‏لِعُوَيْمِرٍ ‏ ‏لَمْ تَأْتِنِي بِخَيْرٍ قَدْ كَرِهَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتُهُ عَنْهَا قَالَ ‏ ‏عُوَيْمِرٌ ‏ ‏وَاللَّهِ لَا أَنْتَهِي حَتَّى أَسْأَلَهُ عَنْهَا فَأَقْبَلَ ‏ ‏عُوَيْمِرٌ ‏ ‏حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَطَ النَّاسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ نَزَلَ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَاذْهَبْ فَأْتِ بِهَا قَالَ ‏ ‏سَهْلٌ ‏ ‏فَتَلَاعَنَا ‏ ‏وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا فَرَغَا قَالَ ‏ ‏عُوَيْمِرٌ ‏ ‏كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا فَطَلَّقَهَا ثَلَاثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏فَكَانَتْ سُنَّةَ ‏ ‏الْمُتَلَاعِنَيْنِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَهْلُ بْنُ سَعْدٍ الْأَنْصَارِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏عُوَيْمِرًا الْأَنْصَارِيَّ ‏ ‏مِنْ ‏ ‏بَنِي الْعَجْلَانِ ‏ ‏أَتَى ‏ ‏عَاصِمَ بْنَ عَدِيٍّ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَأَدْرَجَ فِي الْحَدِيثِ قَوْلَهُ ‏ ‏وَكَانَ فِرَاقُهُ إِيَّاهَا بَعْدُ سُنَّةً فِي ‏ ‏الْمُتَلَاعِنَيْنِ ‏ ‏وَزَادَ فِيهِ قَالَ ‏ ‏سَهْلٌ ‏ ‏فَكَانَتْ حَامِلًا فَكَانَ ابْنُهَا ‏ ‏يُدْعَى ‏ ‏إِلَى أُمِّهِ ثُمَّ جَرَتْ السُّنَّةُ أَنَّهُ يَرِثُهَا وَتَرِثُ مِنْهُ مَا فَرَضَ اللَّهُ لَهَا ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُتَلَاعِنَيْنِ ‏ ‏وَعَنْ السُّنَّةِ فِيهِمَا ‏ ‏عَنْ حَدِيثِ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏أَخِي ‏ ‏بَنِي سَاعِدَةَ ‏ ‏أَنَّ رَجُلًا مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏جَاءَ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا وَذَكَرَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَزَادَ فِيهِ ‏ ‏فَتَلَاعَنَا ‏ ‏فِي الْمَسْجِدِ وَأَنَا شَاهِدٌ وَقَالَ فِي الْحَدِيثِ فَطَلَّقَهَا ثَلَاثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَفَارَقَهَا عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاكُمْ التَّفْرِيقُ بَيْنَ كُلِّ ‏ ‏مُتَلَاعِنَيْنِ

உவைமிர் அல்அஜ்லானீ (ரலி), ஆஸிம் பின் அதீ அல்அன்ஸாரி (ரலி) அவர்களிடம் வந்து, “ஆஸிமே! ஒருவன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்டபடி) இருப்பதைக் கண்டால், அந்த ஆடவனைக் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், பழிவாங்கும் சட்டப்படி (கொலை செய்த) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்? ஆஸிமே! எனக்காக இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்றார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) (இது குறித்து)  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இத்தகைய) கேள்விகளை விரும்பாமல் அவற்றை அருவருப்பாகக் கருதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வந்த (கண்டன) வார்த்தைகள் ஆஸிம் (ரலி) அவர்களுக்குப் பெருத்த மனவேதனை அளித்தன.

ஆஸிம் (ரலி) தம் வீட்டாரிடம் திரும்பிவந்தபோது, அவர்களிடம் உவைமிர் (ரலி) வந்து, “ஆஸிமே! உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம் (ரலி) உவைமிரை நோக்கி, “நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (என்னைச் சிக்கலில் மாட்டிவிட்டாய்;) நான் கேட்ட கேள்விகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்கவில்லை” என்றார்கள். அதற்கு உவைமிர் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! இது குறித்து நானே (நேரடியாக) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்” என்று கூறிவிட்டு, மக்களுக்கு மத்தியில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்று,  “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்றுவிடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிவாங்கும் சட்டப்படி) நீங்கள் (கொலை செய்த) அவனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் (வசனம்) அருளப்பெற்றுவிட்டது. ஆகவே, நீர் சென்று உம்முடைய மனைவியை அழைத்துவாரும்” என்றார்கள்.

நான் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருகில் இருந்தபோது (அவர்கள் வந்து), இருவரும் பரஸ்பரம் சுய சாபம் (லிஆன்) வேண்டினர். அவர்கள் லிஆன் செய்து முடித்தபோது, உவைமிர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால், இவள் மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) சொன்னவனாக ஆகிவிடுவேன்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை மூன்று தலாக் சொல்லிவிட்டார்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் அஸ்ஸாயிதீ (ரலி)


குறிப்புகள் :

இஸ்லாமியக் குற்றவியல் சட்டப்படி, விசாரணையின்போது ஏனைய குற்ற நிகழ்வைக் கண்ணால் கண்ட சாட்சிகள் இருவர் மட்டும் போதும். ஆனால், விபச்சாரக் குற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு வாய்மையுடைய நான்கு சாட்சிகள் கட்டாயம் வேண்டும். கண்ணியமான ஒரு பத்தினிப் பெண்ணை, இழிவுபடுத்தும் நோக்கத்துடன் உரிய சாட்சிகள் இல்லாமல் பொய்யாக அவதூறு கூறுபவனுக்குத் தண்டனையாக எண்பது கசையடிகள் கொடுக்கப்படவேண்டும் (அல் குர்ஆன் 24:4).

திருமணமான பெண்ணொருத்தியைப் பிறனொருவருவனுடன் உடலுறவு கொள்வதைக் கண்ணால் காணும் அவளின் கணவன், அக் காட்சிக்குச் சாட்சியாக நான்கு பேரை அழைத்துவந்து காட்டமாட்டான். மாறாக, வழக்கின்போது அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, “நான் இந்தப் பெண்ணின் மீது கூறும் விபச்சாரக் குற்றச்சாட்டு, பொய்யாக இருந்தால், என் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும்” என்று நான்கு சாட்சிகளுக்காக நான்கு தடவையும், தனக்காக ஒரு தடவையுமாக மொத்தம் ஐந்து தடவைகள் சுய சாபம் வேண்டுவான்.

குற்றம் சுமத்தப்பட்ட பெண், தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தால், அவள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, “என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், என் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும்” என்று நான்கு சாட்சிகளுக்காக நான்கு தடவையும் தனக்காக ஒரு தடவையுமாக மொத்தம் ஐந்து தடவைகள் சுய சாபம் வேண்டுவாள். இவ்வாறு இருவரும் வேண்டுகின்ற சுய சாபம், ‘லிஆன்’ எனப்படும். அத்துடன் இருவருக்குமான கணவன் – மனைவி உறவு முற்றாக அறுந்துவிடும் (அல் குர்ஆன் 24:5-9).

“இந்நிகழ்வே சுய சாபம் (லிஆன்) வேண்டும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆனது” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.

யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த உவைமிர் அல்அன்ஸாரி (ரலி),  ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்களிடம் வந்தார் …” என ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

மேலும், அதில் “உவைமிர் (ரலி) தம் மனைவியைவிட்டுப் பிரிந்துகொண்ட நிகழ்வு, அதன்பிறகு பரஸ்பரம் சுய சாபம் (லிஆன்) வேண்டுகின்ற தம்பதியருக்கு முன்மாதிரி ஆயிற்று” என்பது விளக்க இடைச் சேர்ப்பாக இடம்பெற்றுள்ளது. மேலும், “லிஆன் நடந்தபோது அப்பெண் கர்ப்பமுற்றிருந்தார். அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை அதன் தாயோடு இணைத்துத்தான் (இன்ன பெண்ணின் மகன் என்று) அழைக்கப்படலாயிற்று. பின்னர் அப்பெண்ணிடமிருந்து மகனும் மகனிடமிருந்து அப்பெண்ணும் அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த முறையில் வாரிசாவார்கள் என்ற நடைமுறையும் வந்தது” என்று அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது.

மேற்கண்ட ஹதீஸ் பனூ ஸாயிதா குலத்தவரான ஸஹ்லு பின் ஸஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “அன்ஸாரிகளில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் மனைவியுடன் வேறோர் ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால்…’  என்று கேட்டார்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே தொடருகின்றன.

இந்த அறிவிப்பில், “ … எனவே, அவர்கள் இருவரும் பள்ளிவாசலில் வைத்து சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்டனர். அப்போது அங்கு நானும் இருந்தேன்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மேலும், “(லிஆன் வேண்டுதல் முடிந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிடுவதற்கு முன்பே அவளை அவர் மூன்று தலாக் சொல்லிவிட்டார். நபி (ஸல்) முன்னிலையிலேயே அவளை விட்டும் அவர் பிரிந்துகொண்டார். அப்போது நபி (ஸல்) ‘இதுவே லிஆன் செய்யும் ஒவ்வொரு தம்பதியரைப் பிரித்துவைக்கும் வழிமுறையாகும்’ என்று கூறினார்கள்” என்பதும் இடம்பெற்றுள்ளது.