அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 409

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏أَنَّهُ وَضَّأَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقَالَ لَهُ فَقَالَ إِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ

நபி (ஸல்) அவர்கள் (உளூ) தூய்மை செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். (கைகளை ஈரப்படுத்தி) தம் காலுறைகள் மீது தடவி (மஸஹுச் செய்து) கொண்டார்கள். அப்போது நான் (காலுறைகளைக் கழற்ற வேண்டுமல்லவா என்பது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 408

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ لَيْلَةٍ فِي مَسِيرٍ فَقَالَ لِي ‏ ‏أَمَعَكَ مَاءٌ قُلْتُ نَعَمْ فَنَزَلَ عَنْ رَاحِلَتِهِ فَمَشَى حَتَّى ‏ ‏تَوَارَى ‏ ‏فِي سَوَادِ اللَّيْلِ ثُمَّ جَاءَ فَأَفْرَغْتُ عَلَيْهِ مِنْ ‏ ‏الْإِدَاوَةِ ‏ ‏فَغَسَلَ وَجْهَهُ وَعَلَيْهِ ‏ ‏جُبَّةٌ ‏ ‏مِنْ صُوفٍ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يُخْرِجَ ذِرَاعَيْهِ مِنْهَا حَتَّى أَخْرَجَهُمَا مِنْ أَسْفَلِ ‏ ‏الْجُبَّةِ ‏ ‏فَغَسَلَ ذِرَاعَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ ثُمَّ أَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ فَقَالَ دَعْهُمَا فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ وَمَسَحَ عَلَيْهِمَا ‏

நான் ஓர் இரவுப் பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், “உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்!(இருக்கிறது)” என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளையிலிருந்த நீரை அவர்கள் மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். அவர்கள் கம்பளி நீளங்கி அணிந்திருந்ததால் அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. ஆகவே, முழங்கைகளை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு (கைகளை ஈரப்படுத்தி) தமது தலையைத் தடவி மஸஹுச் செய்தார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், “அவற்றை விட்டு விடுவீராக! ஏனெனில் நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன்” என்று சொல்லி, (கைகளை ஈரப்படுத்தி) காலுறைகளைத் தடவி மஸஹுச் செய்து கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 407

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ يُونُسَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ ‏
‏خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِيَقْضِيَ حَاجَتَهُ فَلَمَّا رَجَعَ تَلَقَّيْتُهُ ‏ ‏بِالْإِدَاوَةِ ‏ ‏فَصَبَبْتُ عَلَيْهِ فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثُمَّ ذَهَبَ لِيَغْسِلَ ذِرَاعَيْهِ فَضَاقَتْ الْجُبَّةُ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ ‏ ‏الْجُبَّةِ ‏ ‏فَغَسَلَهُمَا وَمَسَحَ رَأْسَهُ ‏ ‏وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ صَلَّى بِنَا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக (ஒருமுறை) புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அவர்கள் திரும்பி வந்தபோது தண்ணீர் குவளையுடன் அவர்களை நான் எதிர் கொண்டேன். நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தம் (முன்)கைகளைக் கழுவி விட்டுப் பிறகு முகத்தைக் கழுவினார்கள். பிறகு தம் முழங்கைகளைக் கழுவ முயன்றபோது அவர்கள் அணிந்திருந்த நீளங்கி குறுகலானதாக இருந்ததால், தம் கைகளை நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள். மேலும், (கைகளை ஈரப்படுத்தி) தமது தலையைத் தடவி மஸஹுச் செய்தார்கள். தம் காலுரைகள் மீதும் (அவ்வாறே கைகளை ஈரப்படுத்தி) தடவி மஸஹுச் செய்தார்கள். பிறகு எங்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 406

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فَقَالَ يَا ‏ ‏مُغِيرَةُ ‏ ‏خُذْ ‏ ‏الْإِدَاوَةَ ‏ ‏فَأَخَذْتُهَا ثُمَّ خَرَجْتُ مَعَهُ فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى ‏ ‏تَوَارَى ‏ ‏عَنِّي فَقَضَى حَاجَتَهُ ثُمَّ جَاءَ وَعَلَيْهِ ‏ ‏جُبَّةٌ ‏ ‏شَامِيَّةٌ ضَيِّقَةُ الْكُمَّيْنِ فَذَهَبَ يُخْرِجُ يَدَهُ مِنْ كُمِّهَا فَضَاقَتْ عَلَيْهِ فَأَخْرَجَ يَدَهُ مِنْ أَسْفَلِهَا فَصَبَبْتُ عَلَيْهِ ‏ ‏فَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ مَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ صَلَّى ‏

நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்) பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள், “முஃகீரா! தண்ணீர் குவளையை எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார்கள். நான் (நீர் நிறைந்த குவளையை) எடுத்துக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நடந்து (என் கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச்) சென்று என்னை விட்டு மறைந்து, இயற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு (திரும்பி) வந்தார்கள். அவர்கள், கைப்பகுதி குறுகலான ஷாம் நாட்டு (இறுக்கமான) நீளங்கி அணிந்திருந்தார்கள். எனவே, தமது கையைச் சட்டையிலிருந்து வெளியே கழற்றி எடுக்க முயன்றார்கள். ஆனால், சட்டைக் கைகள் குறுகலாக இருக்கவே, தமது கையை அதன் கீழிலிருந்து வெளியே எடுத்தார்கள். நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு (இறுதியாக, கால்களைத் தண்ணீரால் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) தம் காலுறைகள் மீது தடவி மஸஹுச் செய்து விட்டுப் பின்னர் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 405

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ بْنِ هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ ‏
‏بَيْنَا أَنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ لَيْلَةٍ إِذْ نَزَلَ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ جَاءَ فَصَبَبْتُ عَلَيْهِ مِنْ ‏ ‏إِدَاوَةٍ ‏ ‏كَانَتْ مَعِي فَتَوَضَّأَ ‏ ‏وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் இரவுப் பயணத்தில் நான் இருந்தேன். அப்போது அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள். பிறகு (திரும்பி) வந்தார்கள். அப்போது நான் என்னிடமிருந்த குவளையிலிருந்து தண்ணீரை ஊற்ற, அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (இறுதியாக, கால்களைத் தண்ணீரால் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) தம் காலுறைகள் மீது தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 404

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏
‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ فَاتَّبَعَهُ ‏ ‏الْمُغِيرَةُ ‏ ‏بِإِدَاوَةٍ ‏ ‏فِيهَا مَاءٌ فَصَبَّ عَلَيْهِ حِينَ فَرَغَ مِنْ حَاجَتِهِ فَتَوَضَّأَ ‏ ‏وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ ‏
‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ رُمْحٍ ‏ ‏مَكَانَ حِينَ حَتَّى ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ ‏ ‏سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ ثُمَّ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டுச் சென்றபோது நான் தண்ணீர் குவளையுடன் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துத் திரும்பியபின் நான் தண்ணீரை ஊற்ற, அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (இறுதியாக, கால்களைத் தண்ணீரால் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) தம் காலுறைகள் மீது தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி).

குறிப்பு:

இந்த ஹதீஸின் முஹம்மதிப்னில் முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் (தண்ணீரால்) கழுவினார்கள். மேலும், (கைகளை ஈரப்படுத்தி) தமது தலையில் தடவி மஸஹுச் செய்தார்கள். பின்னர் தம் காலுறைகள் மீது மஸஹுச் செய்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 403

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏قَالَ ‏
‏كَانَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏يُشَدِّدُ فِي الْبَوْلِ وَيَبُولُ فِي قَارُورَةٍ وَيَقُولُ إِنَّ ‏ ‏بَنِي إِسْرَائِيلَ ‏ ‏كَانَ إِذَا أَصَابَ جِلْدَ أَحَدِهِمْ بَوْلٌ ‏ ‏قَرَضَهُ ‏ ‏بِالْمَقَارِيضِ ‏ ‏فَقَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏لَوَدِدْتُ أَنَّ صَاحِبَكُمْ لَا يُشَدِّدُ هَذَا التَّشْدِيدَ فَلَقَدْ رَأَيْتُنِي أَنَا وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَتَمَاشَى ‏ ‏فَأَتَى سُبَاطَةً خَلْفَ حَائِطٍ فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ فَبَالَ ‏ ‏فَانْتَبَذْتُ ‏ ‏مِنْهُ فَأَشَارَ إِلَيَّ فَجِئْتُ فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ ‏

சிறுநீர் (கழிக்கும்) விஷயத்தில் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார்கள். அவர்கள் கண்ணாடிக் குடுவையில் சிறுநீர் கழிப்பார்கள். மேலும், “சருமத்தில் சிறுநீர் பட்டு விட்டால் அந்த இடத்தைக் கத்தரிக்கோலால் கத்தரித்து விடக் கூடியவராக இஸ்ரவேலர்களில் ஒருவர் இருந்தார்” என்று கூறுவார்கள்.

ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி) அவர்கள் (இதைக் கேள்வியுற்றபோது), “உங்கள் தோழர் (அபூமூஸா) இந்த அளவு கண்டிப்பானவராய் இருக்க வேண்டியதில்லை என்றே நான் (கூற) விரும்புகிறேன். (ஒரு முறை) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த குப்பைக் குழிக்குச் சென்று உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று (சாதாரணமாக) நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆயத்தமானார்கள். நான் அவர்களை விட்டும் விலகிச் சென்றேன். அப்போது அவர்கள் என்னை நோக்கி (தம் அருகில் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் சென்று, அவர்களுக்குப் பின்பக்கம் நின்று, அவர்கள் தமது தேவையை முடித்துக் கொள்ளும்வரை அவர்களை மறைத்துக் கொண்டிருந்தேன்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி) வழியாக அபூ வாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்).

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 402

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَانْتَهَى إِلَى سُبَاطَةِ قَوْمٍ فَبَالَ قَائِمًا فَتَنَحَّيْتُ فَقَالَ ‏ ‏ادْنُهْ فَدَنَوْتُ حَتَّى قُمْتُ عِنْدَ عَقِبَيْهِ فَتَوَضَّأَ ‏ ‏فَمَسَحَ عَلَى خُفَّيْهِ ‏

நான் நபி (ஸல்) அவர்களுடன் (சென்று கொண்டு) இருந்த போது அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்குச் சென்று நின்றவாறு சிறுநீர் கழிக்க ஆயத்தமானார்கள். நான் அவர்களை விட்டு விலகலானேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(என்னை மறைத்துக் கொண்டு) பின்பக்கம் நில்” என்று கூறினார்கள். நான் அவர்களுக்குப் பின்பக்கம் நின்று (அவர்களை மறைத்துக்) கொண்டேன். பிறகு நபியவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது தம் (கால்களைக் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) காலுறைகள் மீது தடவி மஸஹு செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 401

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامٍ ‏ ‏قَالَ ‏
‏بَالَ ‏ ‏جَرِيرٌ ‏ ‏ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقِيلَ تَفْعَلُ هَذَا فَقَالَ نَعَمْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَالَ ثُمَّ تَوَضَّأَ ‏ ‏وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ‏
‏قَالَ ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏قَالَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏كَانَ يُعْجِبُهُمْ هَذَا الْحَدِيثُ لِأَنَّ إِسْلَامَ ‏ ‏جَرِيرٍ ‏ ‏كَانَ بَعْدَ نُزُولِ ‏ ‏الْمَائِدَةِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏عِيسَى ‏ ‏وَسُفْيَانَ ‏ ‏قَالَ فَكَانَ أَصْحَابُ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏يُعْجِبُهُمْ هَذَا الْحَدِيثُ لِأَنَّ إِسْلَامَ ‏ ‏جَرِيرٍ ‏ ‏كَانَ بَعْدَ نُزُولِ ‏ ‏الْمَائِدَةِ ‏

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்வதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்கள் தம் (காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) காலுறைகள் மீது தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்பு:

அறிவிப்பாளர் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (இறுதியில் கால்களைக் கழுவாமல்) தம் காலுறைகள் மீது (ஈரக் கைகளால்) தடவி மஸஹுச் செய்தார்கள். அவர்களிடம் (இது குறித்து), “இவ்வாறு செய்யலாமா?” என்று கேட்கப்பட்டபோது மேற்கண்டவாறு அறிவித்ததாக ஹம்மாம் பின் அல் ஹாரிஸ் (ரஹ்) கூறினார்.

“இந்த ஹதீஸ் மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே இருந்தது. ஏனெனில், ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) 5:6ஆவது இறைவசனம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள்” என்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) கூறினார்.

ஈசா பின் யூனுஸ் (ரஹ்) மற்றும் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய தோழர்களுக்கு இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளித்தது. ஏனெனில், ஜரீர் (ரலி), அல்மாயிதா எனும் (5ஆவது) அத்தியாயம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

5:6ஆவது இறைவசனம், மஸஹுச் செய்து கொள்ள அனுமதி அளிப்பதாகும்.