அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 437

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ جَوَّاسٍ الْحَنَفِيُّ أَبُو عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏شَبِيبِ بْنِ غَرْقَدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شِهَابٍ الْخَوْلَانِيِّ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ نَازِلًا عَلَى ‏ ‏عَائِشَةَ ‏
‏فَاحْتَلَمْتُ فِي ثَوْبَيَّ فَغَمَسْتُهُمَا فِي الْمَاءِ فَرَأَتْنِي جَارِيَةٌ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏فَأَخْبَرَتْهَا فَبَعَثَتْ إِلَيَّ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقَالَتْ ‏ ‏مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ بِثَوْبَيْكَ قَالَ قُلْتُ رَأَيْتُ مَا يَرَى النَّائِمُ فِي مَنَامِهِ قَالَتْ هَلْ رَأَيْتَ فِيهِمَا شَيْئًا قُلْتُ لَا قَالَتْ فَلَوْ رَأَيْتَ شَيْئًا غَسَلْتَهُ لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَحُكُّهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَابِسًا بِظُفُرِي ‏

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஒருநாள் விருந்தினராகத்) தங்கியிருந்தேன். இரு ஆடைகளில் (உறங்கிய) எனக்கு, உறக்கத்தில் விந்து வெளியாகி விட்டது. எனவே, அவ்விரு ஆடைகளையும் (கழுவுவதற்காகத்) தண்ணீரில் ஊற வைத்தேன். அதை ஆயிஷா (ரலி) அவர்களின் பணிப்பெண் பார்த்து விட்டு(ப் போய்) ஆயிஷாவிடம் தெரிவித்து விட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை வரச்சொல்லி ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்). அப்போது அவர்கள், “உங்கள் இரு ஆடைகளையும் அவ்வாறு செய்யக் காரணமென்ன?” என்று கேட்டார்கள். நான், “தூங்கக் கூடிய(ஓர் ஆணான)வர் கனவில் காண்பதை நான் கண்டு விட்டேன்” என்று கூறினேன். “அந்த இரு ஆடைகளில் (விந்து) எதையும் கண்டீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். “அப்படியே எதையேனும் நீங்கள் கண்டிருந்தாலும் ஆடைகளைக் கழுவத் தேவையில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் விந்து பட்டுக் காய்ந்து போயிருக்கும் பகுதியை நான் என் நகத்தால் சுரண்டித்தான் விடுவேன் (கழுவ மாட்டேன்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷிஹாப் அல்-கவ்லானீ (ரஹ்).

அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 436

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏سُلَيْمَانَ بْنَ يَسَارٍ ‏ ‏عَنْ الْمَنِيِّ يُصِيبُ ثَوْبَ الرَّجُلِ أَيَغْسِلُهُ أَمْ يَغْسِلُ الثَّوْبَ ‏ ‏فَقَالَ أَخْبَرَتْنِي ‏ ‏عَائِشَةُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَغْسِلُ الْمَنِيَّ ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلَاةِ فِي ذَلِكَ الثَّوْبِ وَأَنَا أَنْظُرُ إِلَى أَثَرِ الْغَسْلِ فِيهِ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏وَابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏فَحَدِيثُهُ كَمَا قَالَ ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَغْسِلُ الْمَنِيَّ ‏ ‏وَأَمَّا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏وَعَبْدُ الْوَاحِدِ ‏ ‏فَفِي حَدِيثِهِمَا قَالَتْ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆடையில்) விந்து பட்ட இடத்தை (மட்டும்) கழுவிவிட்டு அதே ஆடையில் தொழுகைக்காகப் புறப்பட்டுச் செல்வார்கள். அந்த ஆடையில் கழுவியதற்குரிய (ஈர) அடையாளத்தை நான் கண்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக ஸுலைமான் பின் யஸார் (ரஹ்).

குறிப்பு:

ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) அவர்களிடம், “ஒருவரது ஆடையில் விந்து பட்ட இடத்தை மட்டும் கழுவ வேண்டுமா? அந்த ஆடையைக் கழுவ வேண்டுமா?” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான அம்ரு பின் மைமூன் (ரஹ்) கேட்டபோது, அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் மேற்கண்டவாறு செய்யுற்றதாக ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) கூறினார்.

இப்னு அபீஸாயிதா (ரஹ்) வழி அறிவிப்பில், “விந்து பட்ட இடத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுவுவார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

இப்னுல் முபாரக் (ரஹ்), அப்துல் வாஹித் பின் ஸியாத் (ரஹ்) ஆகிய இருவரது அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடை(யில் விந்து பட்டிருக்கும்) பகுதியை நான் கழுவுவேன்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 435

و حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏وَهَمَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏
‏فِي الْمَنِيِّ قَالَتْ ‏ ‏كُنْتُ أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ حَسَّانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْشَرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏مُغِيرَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏مَهْدِيِّ بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏وَاصِلٍ الْأَحْدَبِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْرَائِيلُ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏وَمُغِيرَةَ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فِي حَتِّ الْمَنِيِّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْشَرٍ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ ‏

ஆயிஷா (ரலி) அவர்கள், விந்து பற்றிக் கூறுகையில், “அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து சுரண்டி விடுவது வழக்கம்” என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக அல்-அஸ்வது (ரஹ்), ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்).

அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 434

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْشَرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏وَالْأَسْوَدِ ‏ ‏أَنَّ ‏ ‏رَجُلًا ‏ ‏نَزَلَ ‏ ‏بِعَائِشَةَ ‏
‏فَأَصْبَحَ يَغْسِلُ ثَوْبَهُ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ فَإِنْ لَمْ تَرَ ‏ ‏نَضَحْتَ ‏ ‏حَوْلَهُ وَلَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرْكًا فَيُصَلِّي فِيهِ ‏

ஒருவர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவிக் கொண்டிருந்தார். (அதைக் கண்ட அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், “அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்து விடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்டிருப்பதை நன்கு சுரண்டி விடுவேன். அந்த ஆடையை அணிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக அல்கமா (ரஹ்), அல்-அஸ்வத் (ரஹ்).

குறிப்பு:

இந்த ஹதீஸ் பற்றிய கூடுதல் தகவல்கள் ஹதீஸ் எண் 437இல் பதிவாகியுள்ளன. தூக்கத்தில் விந்து வெளியானால் குளிக்காமல் தொழக் கூடாது. எனினும் விந்து, சிறுநீரைப் போன்று அசுத்தமானதன்று. ஆடையில் விந்து பரவிய இடத்தில் தண்ணீர் தெளித்தோ சுரண்டி விட்டோ அதே ஆடையோடு தொழுவதற்குத் தடையில்லை.