அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1086

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِأَنَسٍ ‏

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِأَنَسٍ ‏

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதினார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், கொஞ்ச காலம் ருகூஉவிற்குப் பின்பு ஓதினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக முஹம்மத்உ பின் ஸீரீன் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1085

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏

دَعَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الَّذِينَ قَتَلُوا أَصْحَابَ ‏ ‏بِئْرِ مَعُونَةَ ‏ ‏ثَلَاثِينَ صَبَاحًا يَدْعُو عَلَى ‏ ‏رِعْلٍ ‏ ‏وَذَكْوَانَ ‏ ‏وَلِحْيَانَ ‏ ‏وَعُصَيَّةَ ‏ ‏عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي الَّذِينَ قُتِلُوا ‏ ‏بِبِئْرِ مَعُونَةَ ‏ ‏قُرْآنًا قَرَأْنَاهُ حَتَّى ‏ ‏نُسِخَ ‏ ‏بَعْدُ أَنْ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘பிஃரு மஊனா’ (எனுமிடத்தில், இஸ்லாத்தைப் பயிற்றுவிக்கச் சென்ற தம்) தோழர்களைக் கொன்று, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா, ரிஃலு, தக்வான், லிஹ்யான் ஆகிய குலத்தாருக்கு எதிராக முப்பது வைகறை(த் தொழுகை) நேரங்களில் பிரார்த்தித்தார்கள். பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் அல்லாஹ் அருளிய, “நாங்கள் எங்கள் இறைவனிடம் வந்து சேர்ந்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” எனும் ஒரு வசனத்தை (அவனால் அது) மாற்றப்படும்வரை நாங்கள் ஓதிக்கொண்டிருந்தோம்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

குறிப்பு :

“ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினாலோ மறக்கடித்தாலோ, அதற்கொப்பானதையோ அதைவிடச் சிறந்ததையோ நாம் தருவோம். திண்ணமாக அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆதிக்கப் பேராற்றல் உடையவன் என்பது (நபியே!) உமக்குத் தெரியுமன்றோ?” எனும் (2:106) வசனத்திற்கு ஒப்ப, மாற்றப்பட்ட/மறக்கடிக்கப்பட்ட இறைவசனத்திற்குப் பகரமாக அருளப்பட்ட இறைவசனத்தை அறியும்வரை, இறைவசனம் ஒன்று மாற்றப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று இமாம் ஷாஃபியீ (ரஹ்), தமது ஆய்வு நூலான ‘அர்ரிஸாலா’வில் குறிப்பிடுகின்றார்.

மேற்காணும் ஹதீஸுக்கு விளக்கமாக, இமாம் இபுனு ஹஜர் அல்அஸ்கலானீ (ரஹ்), ஸஹீஹுல் புகாரீக்கான தமது விரிவுரையான ‘ஃபத்ஹுல் பாரீ’யில், “நாங்கள் எங்கள் இறைவனிடம் வந்து சேர்ந்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” எனும் இறைவசனம், “அல்லாஹ்வின் அறவழியில் கொல்லப்பட்டோரை இறந்தவர்கள் எனக் கொள்ளாதீர்கள். அவர்கள் திண்ணமாகத் தம் இறைவனிடத்தில் உயிர் வாழ்பவர்கள்; உணவளிக்கப்படுபவர்கள்” எனும் (3:169) இறைவசனத்தால் மாற்றப்பட்டது என்பதை இஸ்ஹாக் பின் அபீதல்ஹா (ரஹ்) வழியாக உமர் பின் யூனுஸ் அறிவிப்பதாகப் பதிவு செய்திருக்கிறார். இமாம் இபுனு கஸீர் (ரஹ்), தம் இறைமறையின் விரிவுரையில் அதை உறுதி செய்திருக்கிறார்.

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1084

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا

وَاللَّهِ لَأُقَرِّبَنَّ بِكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَكَانَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏يَقْنُتُ ‏ ‏فِي الظُّهْرِ وَالْعِشَاءِ الْآخِرَةِ وَصَلَاةِ الصُّبْحِ وَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكُفَّارَ

அபூஹுரைரா (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகைக்கு வெகுநெருக்கமாக நான் உங்களுக்குக் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். லுஹ்ரு, இஷா, சுப்ஹு ஆகியத் தொழுகைகளில் குனூத் ஓதுவார்கள். அதில் இறைநம்பிக்கையாளர்களுக்குச் சார்பாகவும் (கொடுஞ் செயல்புரிந்த) இறைமறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பவர்களாக அபூஹுரைரா (ரலி) இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1083

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُمْ ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَنَتَ ‏ ‏بَعْدَ الرَّكْعَةِ فِي صَلَاةٍ شَهْرًا إِذَا قَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ يَقُولُ فِي ‏ ‏قُنُوتِهِ ‏ ‏اللَّهُمَّ أَنْجِ ‏ ‏الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ ‏ ‏اللَّهُمَّ نَجِّ ‏ ‏سَلَمَةَ بْنَ هِشَامٍ ‏ ‏اللَّهُمَّ نَجِّ ‏ ‏عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ ‏ ‏اللَّهُمَّ نَجِّ الْمُسْتَضْعَفِينَ مِنْ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ ‏ ‏وَطْأَتَكَ ‏ ‏عَلَى ‏ ‏مُضَرَ ‏ ‏اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي ‏ ‏يُوسُفَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَرَكَ الدُّعَاءَ بَعْدُ فَقُلْتُ أُرَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ تَرَكَ الدُّعَاءَ لَهُمْ قَالَ فَقِيلَ وَمَا ‏ ‏تُرَاهُمْ قَدْ قَدِمُوا ‏

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَمَا هُوَ ‏ ‏يُصَلِّي الْعِشَاءَ إِذْ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ثُمَّ قَالَ قَبْلَ أَنْ يَسْجُدَ اللَّهُمَّ نَجِّ ‏ ‏عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ ‏ ‏ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏إِلَى قَوْلِهِ كَسِنِي ‏ ‏يُوسُفَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ

நபி (ஸல்), தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் பேரிடர்க்காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அவர்கள் “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறியதும்,

“இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! ஸலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக!
இறைவா! முளர் குலத்தாரின்மீது உனது பிடியை இறுக்குவாயாக!
இறைவா! (உன் தூதர்) யூஸுஃபின் (காலத்துப் பஞ்ச) ஆண்டுகளைகளைப்போல் அவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக!” எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.

அதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்துவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதைக் கைவிட்டு விட்டார்கள் எனக் கருதுகிறேன்” என்றேன். அப்போது, “(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் காணவில்லையா?” என்று கேட்கப்பட்டது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

ஷைபான் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இஷாத் தொழுகையில் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று சொல்லிவிட்டு, பிறகு சஜ்தாச் செய்வதற்கு முன்பாக, ‘இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீரபிஆவைக் காப்பாற்றுவாயாக…!’ என்று தொடங்கி, … ‘(உன் தூதர்) யூஸுஃபின் (காலத்துப் பஞ்ச) ஆண்டுகளைகளைப்போல் அவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக!’ என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1082

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏أَنَّهُمَا سَمِعَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ حِينَ يَفْرُغُ مِنْ صَلَاةِ الْفَجْرِ مِنْ الْقِرَاءَةِ وَيُكَبِّرُ وَيَرْفَعُ رَأْسَهُ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ اللَّهُمَّ أَنْجِ ‏ ‏الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ ‏ ‏وَسَلَمَةَ بْنَ هِشَامٍ ‏ ‏وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ ‏ ‏وَالْمُسْتَضْعَفِينَ مِنْ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ ‏ ‏وَطْأَتَكَ ‏ ‏عَلَى ‏ ‏مُضَرَ ‏ ‏وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي ‏ ‏يُوسُفَ ‏ ‏اللَّهُمَّ الْعَنْ ‏ ‏لِحْيَانَ ‏ ‏وَرِعْلًا ‏ ‏وَذَكْوَانَ ‏ ‏وَعُصَيَّةَ ‏ ‏عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ ثُمَّ بَلَغَنَا أَنَّهُ تَرَكَ ذَلِكَ لَمَّا أُنْزِلَ ‏‏لَيْسَ لَكَ مِنْ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ ‏

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏إِلَى قَوْلِهِ وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي ‏ ‏يُوسُفَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஃபஜ்ருத் தொழும்போது (முதல் ரக்அத்தின் நிலையில் இறைவசனங்களை) ஓதியபின் தக்பீர் சொல்(லி ருகூஉ செய்)வார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ ‘ரப்பனா வலக்கல் ஹம்து’ என்று கூறுவார்கள். பிறகு நின்றநிலையில்,
“இறைவா! வலீத் பின் அல்வலீத், ஸலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரையும் (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக!
இறைவா, முளர் குலத்தார்மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூஸுஃபின் (காலத்துப் பஞ்ச) ஆண்டுகளைகளைப்போல் அவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக!
இறைவா! லிஹ்யான், ரிஃல், தக்வான், உஸய்யா ஆகிய குலத்தாரை நீ உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! உஸய்யா குலத்தார் (பெயருக்கேற்ப) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். (ஒருநாள்),

“(நபியே! எவரையும் சபிக்கும்) இந்த விஷயத்தில் உமக்கு எவ்வித உரிமையும் இல்லை. அல்லாஹ் அவர்களை (இஸ்லாத்தில் புகுத்தி, அவர்களது பாவங்களை) மன்னித்துவிடலாம். அல்லாமல், அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவன் அவர்களை தண்டிக்கலாம்” எனும் (3:128ஆவது) இறைவசனம் அருளப்பெற்றவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டார்கள் என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

இபுனு உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில், “இறைவா! (உன் தூதர்) யூஸுஃபின் (காலத்துப் பஞ்ச) ஆண்டுகளைகளைப்போல் அவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக!” என்பதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.

பிஃரு மஊனாப் படுகொலை:

“எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பதற்கும் இஸ்லாத்தைக் கற்றுத் தருவதற்கும் ஒரு குழுவினரைத் தங்களோடு அனுப்பி வைக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு பனூ ஸுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய முக்குலத்தவர் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தனர். இது நிகழ்ந்தது ஹிஜ்ரீ நான்காம் ஆண்டில். பனூ ஸுலைம் கோத்திரத்தாரின் கோரிக்கையை ஏற்று, இறைமறையில் தேர்ச்சி மிக்க எழுபது நபித் தோழர்களை அவர்களோடு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். மதீனாவிலிருந்து நபித்தோழர்களோடு புறப்பட்ட பனூ ஸுலைமியர், ‘பிஃர் மஊனா’ எனுமிடத்தில் வாழ்ந்த தம் கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டு நிராயுதபாணிகளான அப்பாவி நபித்தோழர்களை நயவஞ்சகமாகக் கொலை செய்து, அவர்களது உடமைகளைக் கொள்ளையடித்தனர்.