அத்தியாயம்: 56, பாடம்: 6, ஹதீஸ் எண்: 5332

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، حَدَّثَنَا أَبُو حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏ ‏

سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ أَمَّا بَعْدُ أَيُّهَا النَّاسُ فَإِنَّهُ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ وَهْىَ مِنْ خَمْسَةٍ مِنَ الْعِنَبِ وَالتَّمْرِ وَالْعَسَلِ وَالْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ وَثَلاَثٌ أَيُّهَا النَّاسُ وَدِدْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عَهِدَ إِلَيْنَا فِيهِنَّ عَهْدًا نَنْتَهِي إِلَيْهِ الْجَدُّ وَالْكَلاَلَةُ وَأَبْوَابٌ مِنْ أَبْوَابِ الرِّبَا ‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كِلاَهُمَا عَنْ أَبِي حَيَّانَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ بِمِثْلِ حَدِيثِهِمَا غَيْرَ أَنَّ ابْنَ عُلَيَّةَ فِي حَدِيثِهِ الْعِنَبِ ‏.‏ كَمَا قَالَ ابْنُ إِدْرِيسَ وَفِي حَدِيثِ عِيسَى الزَّبِيبِ ‏.‏ كَمَا قَالَ ابْنُ مُسْهِرٍ ‏

(என் தந்தை, கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மிம்பர் மீதிருந்தபடி பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன்:

இறைவாழ்த்துக்குப்பின்! மக்களே! மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுபானத் தடை(ச் சட்டம் நடைமுறைக்கு) வந்தது. திராட்சைப் பழம், பேரீச்சம் பழம், தேன், தொலி நீக்கப்பட்ட கோதுமை (பார்லி), தொலி நீக்கப்படாத கோதுமை ஆகியவையே அப்பொருட்களாகும். (இவையன்றி) அறிவுக்குத் திரையிடக்கூடிய அனைத்தும் மதுவாகும்.

மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்திருந்தால், நாம் தெளிவு பெற்றிருப்போம் என்று நான் விரும்பியதுண்டு. அவை:

  1. பாட்டனார். (அதாவது ஒருவருடைய சொத்தில் அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு?)
  2. ’கலாலா’ (என்றால் என்ன?)
  3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்

அறிவிப்பாளர் : – அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) வழி அறிவிப்பில், மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று (மது தயாரிக்கப்படும் பொருட்களில் ஒன்றாக) ’திராட்சை’ என்பது இடம்பெற்றுள்ளது;.

ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில் வேறொரு ஹதீஸில் இடம்பெற்றுள்ளதைப் போன்று ’உலர்ந்த திராட்சை’ என்று காணப்படுகிறது.

அத்தியாயம்: 56, பாடம்: 6, ஹதீஸ் எண்: 5331

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَبِي حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏ ‏

خَطَبَ عُمَرُ عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ أَلاَ وَإِنَّ الْخَمْرَ نَزَلَ تَحْرِيمُهَا يَوْمَ نَزَلَ وَهْىَ مِنْ خَمْسَةِ أَشْيَاءَ مِنَ الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالتَّمْرِ وَالزَّبِيبِ وَالْعَسَلِ ‏.‏ وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ وَثَلاَثَةُ أَشْيَاءَ وَدِدْتُ أَيُّهَا النَّاسُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عَهِدَ إِلَيْنَا فِيهَا الْجَدُّ وَالْكَلاَلَةُ وَأَبْوَابٌ مِنْ أَبْوَابِ الرِّبَا ‏

(என் தந்தை, கலீஃபா) உமர் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மிம்பர் மீதிருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

இறைவாழ்த்துக்குப்பின்! கவனத்தில் கொள்ளுங்கள்! மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுபானத் தடை(ச் சட்டம் நடைமுறைக்கு) வந்தது.

  1. தொலி நீக்கப்பட்ட கோதுமை (பார்லி),
  2. தொலி நீக்கப்படாத கோதுமை,
  3. பேரீச்சம் பழம்,
  4. உலர்ந்த திராட்சை,
  5. தேன் ஆகியவையே அந்த(ஐந்து)ப் பொருட்கள் ஆகும். (இவையன்றி,) அறிவுக்குத் திரையிடக்கூடிய அனைத்தும் மதுவாகும்.

மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:

  1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரனும் பாட்டனும் இருக்கும்போது) அவருடைய பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?*
  2. ’கலாலா’ என்றால் என்ன?#
  3. சில வகை வட்டிகள் குறித்த சட்டம்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

*  இறந்துபோனவருக்குத் தந்தையும், தந்தையின் தந்தையான பாட்டனும் உயிருடனிருந்தால் இறந்தவரின் பாட்டனுக்குப் பங்கு கிடைக்காது. இறந்தவரின் தந்தை இறந்து, இறந்தவருக்குப் பிள்ளைகளும் பாட்டனும் உயிருடனிருந்தால் இறந்தவரின் சொத்தில் பாட்டனுக்கு 1/6 பங்கு உண்டு.

இறந்துபோனவருக்குப் பிள்ளைகள் இல்லையென்றால், இறந்தவரின் தாய்க்கு 1/3 பங்கும், மீதி பாட்டனுக்கும் கிடைக்கும்.

இறந்துபோனவருக்கு உடன்பிறந்த சகோதர்கள் இருந்தால், பெற்ற தாய்க்கு 1/6 பங்கும், மீதி பாட்டனுக்கும் கிடைக்கும்.

# கலாலா : முன்னுரிமை வாரிசுகளான தகப்பனும் பாட்டனும் பின்னுரிமை வாரிசுகளான பிள்ளைகளும் பேரன்களும் இல்லாமல் இறந்துபோனவருடைய சொத்துகள் ‘கலாலா’ எனப்படும். இறந்துபோனவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்து, அவரது சொத்து ‘கலாலா’வாக இருப்பின், அதிலிருந்து இறந்தவருடைய கடன்கள் கொடுத்துத் தீர்க்கப்பட்டு, வஸியத் எனும் மரண சாசனம் நிறைவேற்றிய பின்னர் எஞ்சியுள்ளதில் இறந்துபோனவருக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் மட்டுமிருந்தால் ஆளுக்கு 1/6 பங்கு கிடைக்கும். அதிகமான சகோதர-சகோதரிகளிருந்தால், 1/3 பங்கை, சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 4:12).

இறந்துபோனவருக்குப் பிள்ளைகள் இல்லாமல், ஒரு சகோதரி மட்டுமிருந்தால் இறந்தவருடைய கடன்கள் கொடுத்துத் தீர்க்கப்பட்டு, வஸியத் எனும் மரண சாசனம் நிறைவேற்றிய பின்னர் எஞ்சியுள்ளதில், இறந்துபோனவரின் சகோதரிக்கு ½ பங்கு உண்டு.

இறந்துபோனவர் பிள்ளைகளில்லாத பெண்ணாக இருந்து, அவளுடைய கடன்கள் கொடுத்துத் தீர்க்கப்பட்டு, வஸியத் எனும் மரண சாசனம் நிறைவேற்றிய பின்னர் எஞ்சியுள்ள மொத்தச் சொத்துக்கும் இறந்துபோனவளின் சகோதரன் வாரிசாவான் (அல்குர்ஆன் 4:176).