அத்தியாயம்: 37, பாடம்: 17, ஹதீஸ் எண்: 3903

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنِ ابْنِ إِدْرِيسَ، – وَاللَّفْظُ لأَبِي كُرَيْبٍ – حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ سَمِعْتُ عَاصِمَ بْنَ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ عَلِيٍّ قَالَ :‏

نَهَانِي – يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم – أَنْ أَجْعَلَ خَاتَمِي فِي هَذِهِ أَوِ الَّتِي تَلِيهَا – لَمْ يَدْرِ عَاصِمٌ فِي أَىِّ الثِّنْتَيْنِ – وَنَهَانِي عَنْ لُبْسِ الْقَسِّيِّ وَعَنْ جُلُوسٍ عَلَى الْمَيَاثِرِ ‏.‏ قَالَ فَأَمَّا الْقَسِّيُّ فَثِيَابٌ مُضَلَّعَةٌ يُؤْتَى بِهَا مِنْ مِصْرَ وَالشَّامِ فِيهَا شِبْهُ كَذَا وَأَمَّا الْمَيَاثِرُ فَشَىْءٌ كَانَتْ تَجْعَلُهُ النِّسَاءُ لِبُعُولَتِهِنَّ عَلَى الرَّحْلِ كَالْقَطَائِفِ الأُرْجُوَانِ


وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنِ ابْنٍ لأَبِي مُوسَى قَالَ سَمِعْتُ عَلِيًّا، ‏.‏ فَذَكَرَ هَذَا الْحَدِيثَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِهِ

وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ، قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، قَالَ نَهَى أَوْ نَهَانِي يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ نَحْوَهُ ‏‏

“நபி (ஸல்) இந்த விரலில் அல்லது அதற்கடுத்த விரலில் மோதிரம் அணிய வேண்டாம் என என்னைத் தடை செய்தார்கள்” என்று அலீ (ரலி)  கூறினார்கள்.*

மேலும், ‘கஸ்’ **வகைத் துணியை அணிய வேண்டாம் என்றும் மென்பட்டு மீஸரா*** விரிப்புகளில் அமர வேண்டாமென்றும் என்னைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக அபூபுர்தா ஆமிர் பின் அப்தில்லாஹ் (ரஹ்)****


குறிப்புகள் :

* அது எந்த இரு விரல்கள் என அறிவிப்பாளர் ஆஸிம் பின் குலைப் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை.

**‘கஸ்’ வகைத் துணி என்பது, எகிப்து அல்லது சிரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகைத் துணியாகும். அதில் விலா எலும்புகளைப் போல வரிவரியாகக் கோடுகள் இருக்கும். இன்னவற்றுக்கு அது ஒப்பாயிருக்கும்.

***‘மீஸரா’ என்பது, பெண்கள் தம் கணவர்களுக்காக ஒட்டகச் சேணத்தில் அமைக்கும் சிவப்பு நிற மென்பட்டுத் திண்டுகளைப் போன்ற விரிப்புகளாகும்.

****ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில்,  “அபூமூசாவின் புதல்வர் (அபூபுர்தா) கூறினார்” என அறிவிப்பாளர்தொடரில் இடம் பெற்றுள்ளது.

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) தடை செய்தார்கள். அல்லது நபி (ஸல்) என்னைத் தடை செய்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 37, பாடம்: 16, ஹதீஸ் எண்: 3902

وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ :‏

كَانَ خَاتِمُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذِهِ ‏.‏ وَأَشَارَ إِلَى الْخِنْصَرِ مِنْ يَدِهِ الْيُسْرَى

“நபி (ஸல்) இந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தார்கள்” என்று அனஸ் (ரலி), கூறி, தமது இடக் கையின் சுண்டுவிரலை நோக்கி சைகை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஸாபித் அல்புனானீ (ரஹ்

அத்தியாயம்: 37, பாடம்: 15, ஹதீஸ் எண்: 3901

وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبَّادُ بْنُ مُوسَى، قَالاَ حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى،  – وَهُوَ الأَنْصَارِيُّ ثُمَّ الزُّرَقِيُّ – عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَبِسَ خَاتَمَ فِضَّةٍ فِي يَمِينِهِ فِيهِ فَصٌّ حَبَشِيٌّ كَانَ يَجْعَلُ فَصَّهُ مِمَّا يَلِي كَفَّهُ


وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَ حَدِيثِ طَلْحَةَ بْنِ يَحْيَى ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வலக் கரத்தில் வெள்ளி மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். அதன் குமிழ் அபிசீனியாவைச் சேர்ந்ததாயிருந்தது. அதன் குமிழ் பகுதியைத் தமது உள்ளங்கை பக்கம் அமையும்படி அணிந்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 15, ஹதீஸ் எண்: 3900

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ الْمِصْرِيُّ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ :‏

كَانَ خَاتِمُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ وَرِقٍ وَكَانَ فَصُّهُ حَبَشِيًّا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வெள்ளி மோதிரம் அபிசீனியக் குமிழ் (கறுப்புக் கல்) உள்ளதாக இருந்தது.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 14, ஹதீஸ் எண்: 3899

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا رَوْحٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي زِيَادٌ، أَنَّ ابْنَ شِهَابٍ، أَخْبَرَهُ أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ أَخْبَرَهُ :‏

أَنَّهُ رَأَى فِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا ثُمَّ إِنَّ النَّاسَ اضْطَرَبُوا الْخَوَاتِمَ مِنْ وَرِقٍ فَلَبِسُوهَا فَطَرَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمَهُ فَطَرَحَ النَّاسُ خَوَاتِمَهُمْ ‏


حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ

ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் வெள்ளி மோதிரத்தைக் கண்டேன். பிறகு மக்களும் வெள்ளி மோதிரங்களை வார்த்து, அவற்றை அணிந்துகொண்டனர். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (முன்பு அணிந்திருந்த) தமது (தங்க) மோதிரத்தை எறிந்துவிட்டார்கள். எனவே, மக்களும் தம் (தங்க) மோதிரங்களை எறிந்துவிட்டனர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 14, ஹதீஸ் எண்: 3898

حَدَّثَنِي أَبُو عِمْرَانَ مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ أَخْبَرَنَا إِبْرَاهِيمُ، – يَعْنِي ابْنَ سَعْدٍ  – عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّهُ أَبْصَرَ فِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا – قَالَ – فَصَنَعَ النَّاسُ الْخَوَاتِمَ مِنْ وَرِقٍ فَلَبِسُوهُ فَطَرَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمَهُ فَطَرَحَ النَّاسُ خَوَاتِمَهُمْ ‏

ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வெள்ளி மோதிரம் ஒன்றைக் கண்டேன். (அதைக் கண்ட) மக்களும் வெள்ளி மோதிரங்களைச் செய்து அணிந்துகொண்டனர். ஆகவே, நபி (ஸல்) (முன்பு அணிந்திருந்த) தமது (பொன்) மோதிரத்தை (கழற்றி) எறிந்துவிடவே, மக்களும் தம் (பொன்) மோதிரங்களை (கழற்றி) எறிந்துவிட்டனர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 13, ஹதீஸ் எண்: 3897

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ، عَنْ أَخِيهِ خَالِدِ بْنِ قَيْسٍ عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرَادَ أَنْ يَكْتُبَ إِلَى كِسْرَى وَقَيْصَرَ وَالنَّجَاشِيِّ ‏.‏ فَقِيلَ إِنَّهُمْ لاَ يَقْبَلُونَ كِتَابًا إِلاَّ بِخَاتِمٍ ‏.‏ فَصَاغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا حَلَقَةً فِضَّةً وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏

ஸீசர், குஸ்ரூ, நீகஸ் (கிஸ்ரா, கைஸர், நஜாஷீ) ஆகிய மன்னர்களுக்கு நபி (ஸல்) கடிதம் எழுத விரும்பியபோது, “அ(ம்மன்ன)வர்கள் முத்திரை இல்லாத எந்தக் கடிதத்தையும் ஏற்கமாட்டார்கள்” என்று கூறப்பட்டது. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெள்ளி வளைய மோதிரம் ஒன்றை வார்த்து அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறித்துக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 13, ஹதீஸ் எண்: 3896

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ أَرَادَ أَنْ يَكْتُبَ إِلَى الْعَجَمِ فَقِيلَ لَهُ إِنَّ الْعَجَمَ لاَ يَقْبَلُونَ إِلاَّ كِتَابًا عَلَيْهِ خَاتِمٌ ‏.‏ فَاصْطَنَعَ خَاتَمًا مِنْ فِضَّةٍ ‏.‏ قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அரபியர் அல்லாதோருக்குக் கடிதம் எழுத விரும்பியபோது, “அரபியர் அல்லாதோர் முத்திரை இல்லாத கடிதம் எதையும் ஏற்கமாட்டார்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டது, எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்துகொண்டார்கள்.

அவர்களது கையில் (ஒளிர்ந்த) அந்த மோதிரத்தின் வெண்மையை இப்போதும் நான் மனக் கண்ணால் காண்கின்றேன்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 13, ஹதீஸ் எண்: 3895

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

لَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ – قَالَ – قَالُوا إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلاَّ مَخْتُومًا ‏.‏ قَالَ فَاتَّخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ فِضَّةٍ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரோமர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது மக்கள், “ரோமர்கள் முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் வாசிக்கமாட்டார்கள்” என்று கூறினர்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெள்ளியாலான (முத்திரை) மோதிரம் ஒன்றைச் செய்துகொண்டார்கள். ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினையோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் (ஒளிர்ந்த) அந்த மோதிரத்தின் வெண்மையை இப்போதும் நான் மனக் கண்ணால் காண்கின்றேன்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 12, ஹதீஸ் எண்: 3894

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ، وَابْنُ أَبِي عُمَرَ،  – وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ – قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

اتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ ذَهَبٍ ثُمَّ أَلْقَاهُ ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ وَرِقٍ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏.‏ وَقَالَ ‏ “‏ لاَ يَنْقُشْ أَحَدٌ عَلَى نَقْشِ خَاتَمِي هَذَا ‏”‏ ‏.‏ وَكَانَ إِذَا لَبِسَهُ جَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَهُوَ الَّذِي سَقَطَ مِنْ مُعَيْقِيبٍ فِي بِئْرِ أَرِيسٍ ‏


حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَخَلَفُ بْنُ هِشَامٍ، وَأَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، كُلُّهُمْ عَنْ حَمَّادٍ،  – قَالَ يَحْيَى أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، – عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏.‏ وَقَالَ لِلنَّاسِ ‏ “‏ إِنِّي اتَّخَذْتُ خَاتَمًا مِنْ فِضَّةٍ وَنَقَشْتُ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏.‏ فَلاَ يَنْقُشْ أَحَدٌ عَلَى نَقْشِهِ ‏”‏ ‏

وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنُونَ ابْنَ عُلَيَّةَ – عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا وَلَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ

நபி (ஸல்) தங்க மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டர்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) அதில், ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறித்து அணிந்துகொண்டார்கள். மேலும், “எனது மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருப்பதைப் போன்று வேறு யாரும் (அரசு) இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.

அவர்கள் அதை அணியும்போது அதன் குமிழ்ப் பகுதி உள்ளங்கை பக்கமாக அமையும்படி அணிவார்கள். அந்த மோதிரம், முஐகீப் (ரலி) அவர்களிடமிருந்து ‘அரீஸ்’ எனும் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்புகள் :

அனஸ் (ரலி) வழியாக ஹம்மாது (ரஹ்) அறிவிப்பதில், நபி (ஸல்) வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறித்தார்கள். மேலும், மக்களிடம் “நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறித்துள்ளேன். ஆகவே, வேறு யாரும் அதைப் போன்று (அரசு) இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள் என இடம்பெற்றுள்ளது.

அனஸ் (ரலி) வழியாக இஸ்மாயீல் யஅனூன் பின் உலைய்யா (ரஹ்) அறிவிப்பதில், ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (எனும் இலச்சினை அமைந்திருந்தது) எனும் குறிப்பு இடம்பெறவில்லை.