அத்தியாயம்: 37, பாடம்: 12, ஹதீஸ் எண்: 3893

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ :‏

اتَّخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ فَكَانَ فِي يَدِهِ ثُمَّ كَانَ فِي يَدِ أَبِي بَكْرٍ ثُمَّ كَانَ فِي يَدِ عُمَرَ ثُمَّ كَانَ فِي يَدِ عُثْمَانَ حَتَّى وَقَعَ مِنْهُ فِي بِئْرِ أَرِيسٍ نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏


قَالَ ابْنُ نُمَيْرٍ حَتَّى وَقَعَ فِي بِئْرِ ‏.‏ وَلَمْ يَقُلْ مِنْهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்துகொண்டிருந்தார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களது கையில் இருந்தது. பிறகு (முதலாவது கலீஃபா) அபூபக்ரு (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு (இரண்டாவது கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு (மூன்றாவது கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில், ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்து.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு

அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து“ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 37, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3892

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ فَكَانَ يَجْعَلُ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ إِذَا لَبِسَهُ فَصَنَعَ النَّاسُ ثُمَّ إِنَّهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَنَزَعَهُ فَقَالَ ‏”‏ إِنِّي كُنْتُ أَلْبَسُ هَذَا الْخَاتِمَ وَأَجْعَلُ فَصَّهُ مِنْ دَاخِلٍ ‏”‏ ‏‏ فَرَمَى بِهِ ثُمَّ قَالَ ‏”‏ وَاللَّهِ لاَ أَلْبَسُهُ أَبَدًا ‏”‏ ‏.‏ فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ ‏.‏ وَلَفْظُ الْحَدِيثِ لِيَحْيَى ‏


وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، ح وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، ح وَحَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، كُلُّهُمْ عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ فِي خَاتِمِ الذَّهَبِ وَزَادَ فِي حَدِيثِ عُقْبَةَ بْنِ خَالِدٍ وَجَعَلَهُ فِي يَدِهِ الْيُمْنَى ‏‏

وَحَدَّثَنِيهِ أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ حَدَّثَنَا أَنَسٌ، – يَعْنِي ابْنَ عِيَاضٍ – عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ حَدَّثَنَا حَاتِمٌ، ح وَحَدَّثَنَا هَارُونُ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، كُلُّهُمْ عَنْ أُسَامَةَ، جَمَاعَتُهُمْ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي خَاتِمِ الذَّهَبِ ‏.‏ نَحْوَ حَدِيثِ اللَّيْثِ ‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தார்கள். அதை அணியும்போது அதன் குமிழ்ப் பகுதி தமது உள்ளங்கை பக்கமாக அமையும்படி அணிவார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைச் செய்துகொண்டனர்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொற்பொழிவு மேடையில் அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழற்றிவிட்டு, “நான் இந்த மோதிரத்தை அதன் குமிழ்ப் பகுதி உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தே அணிந்துகொண்டிருந்தேன்” என்று கூறி, அதை எறிந்துவிட்டார்கள்.

பிறகு “அல்லாஹ்வின் மீதாணையாக! இதை இனி ஒருபோதும் நான் அணியமாட்டேன்” என்று சொன்னார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை (கழற்றி) எறிந்தனர்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

உக்பா பின் காலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “அ(ந்த மோதிரத்)தைத் தமது வலக் கையில் அணிந்திருந்தார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 37, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3891

وَفِي حَدِيثِ ابْنِ الْمُثَنَّى قَالَ سَمِعْتُ النَّضْرَ بْنَ أَنَسٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ:‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ فَنَزَعَهُ فَطَرَحَهُ وَقَالَ ‏ “‏ يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ ‏”‏ ‏.‏ فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَ مَا ذَهَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خُذْ خَاتَمَكَ انْتَفِعْ بِهِ ‏.‏ قَالَ لاَ وَاللَّهِ لاَ آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏

ஒருவர், தமது கையில் தங்க மோதிரம் அணிந்திருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டபோது, அதைக் கழற்றச் செய்து தூக்கியெறிந்தார்கள். பிறகு “உங்களில் ஒருவர் (நரக) நெருப்பின் கங்கை எடுத்து, அதைத் தமது கையில் வைத்துக்கொள்கிறார்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சென்ற பிறகு அவரிடம், “உமது மோதிரத்தை(க் கழற்றி) எடுத்து நீ (வேறு வகையில்) பயனடைந்துகொள்” என்று கூறப்பட்டது. அவர், “மாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வீசியெறிந்துவிட்டதை அல்லாஹ்வின் மீதாணையாக ஒருபோதும் நான் எடுக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டார்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3890

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ خَاتَمِ الذَّهَبِ


وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ

நபி (ஸல்), தங்க மோதிரம் அணிய வேண்டாமென(ஆண்களுக்கு)த் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3889

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، – يَعْنِي الْحِزَامِيَّ – عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ بَيْنَمَا رَجُلٌ يَتَبَخْتَرُ يَمْشِي فِي بُرْدَيْهِ قَدْ أَعْجَبَتْهُ نَفْسُهُ فَخَسَفَ اللَّهُ بِهِ الأَرْضَ فَهُوَ يَتَجَلْجَلُ فِيهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ ‏”‏


وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ بَيْنَمَا رَجُلٌ يَتَبَخْتَرُ فِي بُرْدَيْنِ ‏”‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ بِمِثْلِهِ ‏.‏

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ رَجُلاً مِمَّنْ كَانَ قَبْلَكُمْ يَتَبَخْتَرُ فِي حُلَّةٍ ‏”‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِهِمْ ‏.

“(முற்காலத்தில் வாழ்ந்த) ஒருவன் தற்பெருமை கொண்டவனாகத் தன் ஆடைகளை அணிந்து கொண்டு கர்வத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான்.  அவன் மறுமை நாள் நிகழும்வரை (அவ்வாறே) பூமிக்குள் குலுங்கியபடியே அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).


குறிப்புகள் :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார். அன்னாரின் வழி அறிவிப்பு, “ஒருவன் தன் இரு ஆடைகளையும் அணிந்து கர்வப்பட்டுக்கொண்டிருந்தபோது …” என்று ஆரம்பமாகிறது.

ஹம்மாது பின் ஸலமா (ரஹ்) வழி அறிவிப்பு, “உங்களுக்கு முன்வாழ்ந்த மக்களில் ஒருவன் தனது ஆடையை அணிந்து கர்வம் கொண்டான் …” என்று ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே முடிகிறது.

அத்தியாயம்: 37, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3888

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلاَّمٍ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الرَّبِيعُ، – يَعْنِي ابْنَ مُسْلِمٍ – عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي قَدْ أَعْجَبَتْهُ جُمَّتُهُ وَبُرْدَاهُ إِذْ خُسِفَ بِهِ الأَرْضُ فَهُوَ يَتَجَلْجَلُ فِي الأَرْضِ حَتَّى تَقُومَ السَّاعَةُ ‏”‏


وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، قَالُوا جَمِيعًا حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِ هَذَا ‏

“(முற்காலத்தில் வாழ்ந்த) ஒருவன் தோள்கள் வரை தொங்கும் தனது தலை முடியையும் தான் அணிந்திருந்த இரு ஆடைகளையும் எண்ணிப் பெருமிதத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பூமிக்குள் அவன் புதையுண்டுபோனான். அவன் மறுமை நாள் நிகழும்வரை பூமிக்குள் குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 37, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3887

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدٍ، – وَهُوَ ابْنُ زِيَادٍ  – قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، وَرَأَى، رَجُلاً يَجُرُّ إِزَارَهُ فَجَعَلَ يَضْرِبُ الأَرْضَ بِرِجْلِهِ وَهُوَ أَمِيرٌ عَلَى الْبَحْرَيْنِ وَهُوَ يَقُولُ :‏

جَاءَ الأَمِيرُ جَاءَ الأَمِيرُ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ اللَّهَ لاَ يَنْظُرُ إِلَى مَنْ يَجُرُّ إِزَارَهُ بَطَرًا ‏”‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَاهُ ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِ ابْنِ جَعْفَرٍ كَانَ مَرْوَانُ يَسْتَخْلِفُ أَبَا هُرَيْرَةَ ‏.‏ وَفِي حَدِيثِ ابْنِ الْمُثَنَّى كَانَ أَبُو هُرَيْرَةَ يُسْتَخْلَفُ عَلَى الْمَدِينَةِ‏

அபூஹுரைரா (ரலி), பஹ்ரைன் நாட்டின் (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக இருந்தபோது, ஒருவர் தமது கீழாடையைத் தரையில் படும்படி இழுத்துக்கொண்டு செல்வதைக் கண்டார்கள். அப்போது தமது காலால் பூமியில் தட்டியவாறு “தலைவர் வருகிறார். (பெரிய) தலைவர் வருகிறார்!” என்று (இடித்துக்) கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அகம்பாவத்துடன் தனது ஆடையை (தரையில் படும்படி) இழுத்து(க்கொண்டு நடந்து) செல்பவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக முஹம்மது பின் ஸியாத் (ரஹ்)


குறிப்பு :

முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில் “மர்வான் பின் அல்ஹகம், அபூஹுரைரா (ரலி) அவர்களை (இடைக்கால) ஆட்சியராக நியமித்திருந்தார்” என்று காணப்படுகிறது. முஹம்மது பின் அல்முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “அபூஹுரைரா (ரலி) மதீனாவின் (இடைக்கால) ஆட்சியராக நியமிக்கப்பட்டிருந்தார்கள்” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 37, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3886

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَاقِدٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

مَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَفِي إِزَارِي اسْتِرْخَاءٌ فَقَالَ ‏”‏ يَا عَبْدَ اللَّهِ ارْفَعْ إِزَارَكَ ‏”‏ ‏.‏ فَرَفَعْتُهُ ثُمَّ قَالَ ‏”‏ زِدْ ‏”‏ ‏.‏ فَزِدْتُ فَمَا زِلْتُ أَتَحَرَّاهَا بَعْدُ ‏.‏ فَقَالَ بَعْضُ الْقَوْمِ إِلَى أَيْنَ فَقَالَ أَنْصَافِ السَّاقَيْنِ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது எனது கீழாடை (கணுக்காலுக்குக்) கீழே இருந்தது. அப்போது அவர்கள், “அப்துல்லாஹ்! உனது கீழாடையை உயர்த்திக் கட்டு” என்றார்கள். நான் உயர்த்திக் கட்டினேன். பிறகு “இன்னும் சிறிது (உயர்த்து)” என்றார்கள். அவ்வாறே நான் இன்னும் சிறிது உயர்த்தினேன். பின்னர் அதையே நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

(இவ்வாறு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதைக் கேட்ட) மக்கள் சிலர், “எதுவரை உயர்த்த வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “கணுக்கால்களின் பாதியளவுக்கு” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3885

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَابْنُ أَبِي خَلَفٍ، وَأَلْفَاظُهُمْ، مُتَقَارِبَةٌ قَالُوا حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَبَّادِ بْنِ جَعْفَرٍ يَقُولُ :‏

أَمَرْتُ مُسْلِمَ بْنَ يَسَارٍ مَوْلَى نَافِعِ بْنِ عَبْدِ الْحَارِثِ أَنْ يَسْأَلَ ابْنَ عُمَرَ – قَالَ – وَأَنَا جَالِسٌ، بَيْنَهُمَا أَسَمِعْتَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الَّذِي يَجُرُّ إِزَارَهُ مِنَ الْخُيَلاَءِ شَيْئًا قَالَ سَمِعْتُهُ يَقُولُ ‏ “‏ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏

நான், நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையான முஸ்லிம் பின் யஸார் (ரஹ்) அவர்களுக்கும் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும் நடுவே அமர்ந்திருந்தபோது, முஸ்லிம் பின் யஸார் (ரஹ்) அவர்களிடம், “தற்பெருமையுடன் தனது ஆடையைத் தரையில் படும்படி இழுத்துக்கொண்டு (நடந்து) செல்பவன் குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் செவியுற்றீர்களா?” என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்கச் சொன்னேன். (அவ்வாறே அவர் கேட்டார்)

அப்போது இப்னு உமர் (ரலி), “அல்லாஹ் மறுமை நாளில் அவனை ஏறெடுத்துப் பார்க்கமாட்டான் என நபி (ஸல்) கூறியதை நான் கேட்டேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக முஹம்மது பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்)

அத்தியாயம்: 37, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3884

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ مُسْلِمَ بْنَ يَنَّاقَ يُحَدِّثُ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى رَجُلاً يَجُرُّ إِزَارَهُ فَقَالَ مِمَّنْ أَنْتَ فَانْتَسَبَ لَهُ فَإِذَا رَجُلٌ مِنْ بَنِي لَيْثٍ فَعَرَفَهُ ابْنُ عُمَرَ قَالَ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِأُذُنَىَّ هَاتَيْنِ يَقُولُ ‏ “‏ مَنْ جَرَّ إِزَارَهُ لاَ يُرِيدُ بِذَلِكَ إِلاَّ الْمَخِيلَةَ فَإِنَّ اللَّهَ لاَ يَنْظُرُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏


وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ،  – يَعْنِي ابْنَ أَبِي سُلَيْمَانَ – ح وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو يُونُسَ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ، – يَعْنِي ابْنَ نَافِعٍ – كُلُّهُمْ عَنْ مُسْلِمِ بْنِ يَنَّاقَ، عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ أَبِي يُونُسَ عَنْ مُسْلِمٍ أَبِي الْحَسَنِ وَفِي رِوَايَتِهِمْ جَمِيعًا ‏ “‏ مَنْ جَرَّ إِزَارَهُ ‏”‏ ‏.‏ وَلَمْ يَقُولُوا ثَوْبَهُ ‏

ஒருவர் தமது ஆடையைத் தரையில் இழுபடும்படி நடந்து செல்வதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கண்டார்கள். அப்போது, “நீ யார்?” என்று கேட்டார்கள். அவர் தமது குடும்பத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர் பனூ லைஸ் குலத்தைச் சேர்ந்தவராயிருந்தார். அவரை யாரென அறிந்து கொண்டபின், “தற்பெருமையடிக்கும் நோக்கத்துடன் தனது கீழாடையை (தரையில் படும்படி) இழுத்து(க்கொண்டு நடந்து) சென்றவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் இந்த என் இரு காதுகளால் செவியேற்றுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக முஸ்லிம் பின் யந்நாக் (ரஹ்)


குறிப்பு :

அபூயூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், தனது ‘ஆடையை’ என இல்லாமல் ‘கீழாடையை’ என்று இடம்பெற்றுள்ளது. மேலும், அறிவிப்பாளரை அவருடைய குன்யத் பெயரால் “முஸ்லிம் அபில்ஹசன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.