அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2053

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ وَهُوَ السَّلُولِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ وَهُوَ ابْنُ إِسْحَقَ بْنِ أَبِي إِسْحَقَ السَّبِيعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏سَمِعَ ‏ ‏ابْنَ الْأَسْوَدِ ‏ ‏يَذْكُرُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَرَادَ أَنْ يُحْرِمَ يَتَطَيَّبُ بِأَطْيَبِ مَا يَجِدُ ثُمَّ أَرَى ‏ ‏وَبِيصَ ‏ ‏الدُّهْنِ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ بَعْدَ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண நாடும்போது தம்மிடம் இருப்பவற்றிலேயே மிக நல்ல மணமுடைய வாசனை(எண்ணெ)யைப் பூசிக்கொள்வார்கள். பின்னர் அவர்களின் தலையிலும் தாடியிலும் அந்த எண்ணெய் ஒளிர்வதை நான் காண்பேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2052

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكُ بْنُ مِغْوَلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏إِنْ كُنْتُ لَأَنْظُرُ إِلَى ‏ ‏وَبِيصِ ‏ ‏الطِّيبِ فِي مَفَارِقِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இஹ்ராமின்போது, அவர்களது தலை வகிட்டில் பூசியிருந்த நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2051

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنَ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏يُحَدِّثُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ :‏

‏كَأَنَّمَا أَنْظُرُ إِلَى ‏ ‏وَبِيصِ ‏ ‏الطِّيبِ فِي مَفَارِقِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இஹ்ராமின்போது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் என் மனக்கண்ணால் காண்கின்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2050

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الضُّحَى ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏وَبِيصِ ‏ ‏الطِّيبِ فِي مَفَارِقِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ يُلَبِّي ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏وَعَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏ ‏لَكَأَنِّي أَنْظُرُ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏وَكِيعٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தல்பியா கூறியபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் என் மனக்கண்ணால் காண்கின்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2049

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏لَكَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏وَبِيصِ ‏ ‏الطِّيبِ فِي مَفَارِقِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏يُهِلُّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (முஹ்ரிமாகி) தல்பியா கூறியபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் என் மனக்கண்ணால் காண்கின்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2048

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو الرَّبِيعِ ‏ ‏وَخَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏وَبِيصِ ‏ ‏الطِّيبِ فِي مَفْرِقِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ وَلَمْ يَقُلْ خَلَفٌ وَهُوَ مُحْرِمٌ وَلَكِنَّهُ قَالَ وَذَاكَ طِيبُ إِحْرَامِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டிருந்தபோது அவர்களது தலைமுடி வகிட்டில் நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் என் மனக்கண்ணால் காண்கின்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அறிவிப்பில், “அவர்கள் இஹ்ராம் பூண்டிருந்தபோது …” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. அதற்குப் பகரமாக “அது அவர்கள் இஹ்ராம் பூண்டபோது பூசிய நறுமணமாகும்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2047

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الرِّجَالِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ : ‏

‏طَيَّبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِحُرْمِهِ حِينَ أَحْرَمَ ‏ ‏وَلِحِلِّهِ ‏ ‏قَبْلَ أَنْ ‏ ‏يُفِيضَ ‏ ‏بِأَطْيَبِ مَا وَجَدْتُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டபோதும் தவாஃபுல் இஃபாளா செய்வதற்கு முன்பு இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் எனக்குக் கிடைத்தவற்றில் மிக நல்ல நறுமணத்தை அவர்களுக்குப் பூசிவிட்டேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2046

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عُرْوَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُرْوَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ : ‏

‏كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِأَطْيَبِ مَا أَقْدِرُ عَلَيْهِ قَبْلَ أَنْ يُحْرِمَ ثُمَّ يُحْرِمُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூணுவதற்கு முன் என்னால் இயன்றளவு மிக நல்ல வாசனைப் பொருளை(த் தேர்ந்து) அவர்களுக்குப் பூசுவேன். அதற்குப் பின்னரே அவர்கள் இஹ்ராம் பூணுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2045

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏

‏سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏بِأَيِّ شَيْءٍ طَيَّبْتِ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَ حُرْمِهِ قَالَتْ بِأَطْيَبِ الطِّيبِ

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டபோது எதனால் அவர்களுக்கு நறுமணம் பூசினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆகச் சிறந்த வாசனைப் பொருளால் (நறுமணம் பூசிவிட்டேன்)” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக, உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2044

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُرْوَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عُرْوَةَ ‏ ‏وَالْقَاسِمَ ‏ ‏يُخْبِرَانِ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏طَيَّبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِي ‏ ‏بِذَرِيرَةٍ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ لِلْحِلِّ وَالْإِحْرَامِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘விடைபெறும் ஹஜ்’ஜிற்காக இஹ்ராம் பூண்டபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் எனது கையால் அவர்களுக்கு தரீரா (எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)