அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2063

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏فِيمَا قُرِئَ عَلَيْهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ :‏

‏أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ ‏ ‏مَكَّةَ ‏ ‏تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ فَسَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا عَلَيْهِ فَسَأَلَهُمْ رُمْحَهُ فَأَبَوْا عَلَيْهِ فَأَخَذَهُ ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَهُ فَأَكَلَ مِنْهُ بَعْضُ ‏ ‏أَصْحَابِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبَى بَعْضُهُمْ فَأَدْرَكُوا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ ‏ ‏إِنَّمَا هِيَ ‏ ‏طُعْمَةٌ ‏ ‏أَطْعَمَكُمُوهَا اللَّهُ


‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فِي حِمَارِ الْوَحْشِ مِثْلَ حَدِيثِ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ هَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَيْءٌ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். மக்கா செல்லும் சாலை ஒன்றில் நான் இருந்தபோது, இஹ்ராம் பூண்டிருந்த என் தோழர்கள் சிலருடன் பின்தங்கிவிட்டேன். அப்போது நான் இஹ்ராம் பூண்டிருக்கவில்லை. இந்நிலையில் நான் (வழியில்) காட்டுக் கழுதையொன்றைக் கண்டு, எனது குதிரைமேல் அமர்ந்தேன். அப்போது என் தோழர்களிடம் என் சாட்டையை எடுத்துத் தரும்படிக் கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் பூண்டிருந்ததால் அதை எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எனது ஈட்டியை எடுத்துத் தரும்படிக் கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, நானே (இறங்கி) அதையெடுத்து அந்தக் கழுதையைத் தாக்கிக் கொன்றேன். நபித்தோழர்களில் சிலர் அதிலிருந்து உண்டார்கள். வேறுசிலர் (உண்ண) மறுத்துவிட்டனர். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தபோது, அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதுவெல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உண்ணக் கொடுத்த உணவாகும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)


குறிப்பு :

ஸைதிப்னு அஸ்லம் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களிடம் அதன் இறைச்சியிலிருந்து ஏதேனும் (எனக்கு எஞ்சி) உள்ளதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2062

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ كَيْسَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏صَالِحُ بْنُ كَيْسَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا مُحَمَّدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا قَتَادَةَ ‏ ‏يَقُولُ : ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى إِذَا كُنَّا ‏ ‏بِالْقَاحَةِ ‏ ‏فَمِنَّا الْمُحْرِمُ وَمِنَّا غَيْرُ الْمُحْرِمِ إِذْ بَصُرْتُ بِأَصْحَابِي يَتَرَاءَوْنَ شَيْئًا فَنَظَرْتُ فَإِذَا حِمَارُ وَحْشٍ فَأَسْرَجْتُ فَرَسِي وَأَخَذْتُ رُمْحِي ثُمَّ رَكِبْتُ فَسَقَطَ مِنِّي سَوْطِي فَقُلْتُ لِأَصْحَابِي وَكَانُوا مُحْرِمِينَ نَاوِلُونِي السَّوْطَ فَقَالُوا وَاللَّهِ لَا نُعِينُكَ عَلَيْهِ بِشَيْءٍ فَنَزَلْتُ فَتَنَاوَلْتُهُ ثُمَّ رَكِبْتُ فَأَدْرَكْتُ الْحِمَارَ مِنْ خَلْفِهِ وَهُوَ وَرَاءَ ‏ ‏أَكَمَةٍ ‏ ‏فَطَعَنْتُهُ بِرُمْحِي ‏ ‏فَعَقَرْتُهُ ‏ ‏فَأَتَيْتُ بِهِ أَصْحَابِي فَقَالَ بَعْضُهُمْ كُلُوهُ وَقَالَ بَعْضُهُمْ لَا تَأْكُلُوهُ وَكَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَامَنَا فَحَرَّكْتُ فَرَسِي فَأَدْرَكْتُهُ فَقَالَ ‏ ‏هُوَ حَلَالٌ فَكُلُوهُ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டுச் சென்றோம். எங்களில் இஹ்ராம் பூண்டவர்களும் இஹ்ராம் பூணாதவர்களும் இருந்தனர். (நான் இஹ்ராம் பூண்டிருக்கவில்லை.) நாங்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘அல்காஹா’ எனுமிடத்தில் இருந்தபோது, என் தோழர்கள் எதையோ உன்னிப்பாகக் கவனிப்பதைக் கண்டேன். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. உடனே நான் என் குதிரையின் சேணத்தைப் பூட்டி, எனது ஈட்டியை எடுத்துக்கொண்டு (குதிரையில்) ஏறினேன். அப்போது என் (கையிலிருந்து) சாட்டை கீழே விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் கேட்டேன். அவர்கள் இஹ்ராம் பூண்டிருப்பதால், “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம்” என்று கூறிவிட்டார்கள். எனவே, நானே இறங்கி அதை எடுத்துக்கொண்டு (குதிரையில்) ஏறி, மணல் மேட்டுக்கு அப்பாலிருந்த அந்தக் கழுதைக்குப் பின்னால் (மறைந்து) சென்று, அதை நோக்கி என் ஈட்டியை எறிந்தேன். பிறகு அதை அறுத்து என் தோழர்களிடம் கொண்டுவந்தேன். அப்போது அவர்களில் சிலர் “உண்ணுங்கள்” என்றனர். வேறு சிலர் “உண்ணாதீர்கள்” என்றனர். அப்போது நபி (ஸல்) எங்களுக்கு முன்னால் (சென்று ஓரிடத்தில் தங்கி) இருந்தார்கள். ஆகவே, நான் எனது குதிரையை முடுக்கி, அவர்களிடம் போ(ய் அதை இஹ்ராம் பூண்டவர்கள் உண்பதைப் பற்றி வினவி)னேன். அதற்கு நபி (ஸல்), “அது அனுமதிக்கப்பெற்றதுதான். எனவே, அதை உண்ணுங்கள்” என்று அனுமதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2061

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ :‏

‏قَدِمَ ‏ ‏زَيْدُ بْنُ أَرْقَمَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏يَسْتَذْكِرُهُ كَيْفَ أَخْبَرْتَنِي عَنْ لَحْمِ صَيْدٍ أُهْدِيَ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ حَرَامٌ قَالَ قَالَ أُهْدِيَ لَهُ عُضْوٌ مِنْ لَحْمِ صَيْدٍ فَرَدَّهُ فَقَالَ ‏ ‏إِنَّا لَا نَأْكُلُهُ إِنَّا ‏ ‏حُرُمٌ

ஸைத் பின் அர்கம் (ரலி) (என்னிடம்) வந்தபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டிருந்த வேளையில், அவர்களுக்கு வேட்டைப் பிராணியின் இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது குறித்து எனக்கு நீங்கள் எவ்வாறு அறிவித்தீர்கள்?” என நினைவுபடுத்துமாறு கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேட்டைப் பிராணியின் இறைச்சியில் ஒரு பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)“நாம் இதை உண்ணமாட்டோம். (ஏனெனில்) நாம் இஹ்ராம் பூண்டிருக்கின்றோம்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2060

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ : ‏

‏أَهْدَى ‏ ‏الصَّعْبُ بْنُ جَثَّامَةَ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِمَارَ وَحْشٍ وَهُوَ مُحْرِمٌ فَرَدَّهُ عَلَيْهِ وَقَالَ ‏ ‏لَوْلَا أَنَّا مُحْرِمُونَ لَقَبِلْنَاهُ مِنْكَ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مَنْصُورًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏أَهْدَى ‏ ‏الصَّعْبُ بْنُ جَثَّامَةَ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رِجْلَ حِمَارِ وَحْشٍ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَجُزَ ‏ ‏حِمَارِ وَحْشٍ يَقْطُرُ دَمًا ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ ‏ ‏أُهْدِيَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شِقُّ ‏ ‏حِمَارِ وَحْشٍ فَرَدَّهُ

நபி (ஸல்) இஹ்ராம் பூண்டிருந்தபோது, அவர்களுக்கு ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினார்கள். நபியவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். மேலும், “நாம் இஹ்ராம் பூண்டிருக்காவிட்டால், அதை உம்மிடமிருந்து ஏற்றிருப்போம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

மன்ஸூர் பின் அல்முஅதமிர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களுக்கு ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி), காட்டுக் கழுதையின் ஒரு காலை அன்பளிப்பாக வழங்கினார்கள்” என்று காணப்படுகிறது. ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில் “ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த காட்டுக் கழுதையின் பின் சப்பையை … ” என்று இடம் பெற்றுள்ளது. அல் ஹகம் (ரஹ்) வழி அறிவிப்பில் “நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் விலாப் பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2059

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏الصَّعْبِ بْنِ جَثَّامَةَ اللَّيْثِيِّ :‏

‏أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِمَارًا وَحْشِيًّا وَهُوَ ‏ ‏بِالْأَبْوَاءِ ‏ ‏أَوْ ‏ ‏بِوَدَّانَ ‏ ‏فَرَدَّهُ عَلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَلَمَّا أَنْ رَأَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا فِي وَجْهِي قَالَ ‏ ‏إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلَّا أَنَّا ‏ ‏حُرُمٌ ‏


‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَهْدَيْتُ لَهُ حِمَارَ وَحْشٍ كَمَا قَالَ ‏ ‏مَالِكٌ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏وَصَالِحٍ ‏ ‏أَنَّ ‏ ‏الصَّعْبَ بْنَ جَثَّامَةَ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏أَهْدَيْتُ لَهُ مِنْ لَحْمِ حِمَارِ وَحْشٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலுள்ள) ‘அல்அப்வா’ அல்லது ‘வத்தான்’ எனுமிடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். எனது முகத்தில் ஏற்பட்ட(மாற்றத்)தை அவர்கள் கண்டுவிட்டு, “நாம் இஹ்ராம் பூண்டிருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸஅப் பின் ஜஸ்ஸாமா அல்லைஸீ (ரலி)


குறிப்பு :

ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் இறைச்சியை அன்பளிப்பாக வழங்கினேன்” என ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2058

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏وَسُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏ ‏لَأَنْ أُصْبِحَ ‏ ‏مُطَّلِيًا ‏ ‏بِقَطِرَانٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أُصْبِحَ مُحْرِمًا ‏ ‏أَنْضَخُ ‏ ‏طِيبًا : ‏

‏قَالَ فَدَخَلْتُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَأَخْبَرْتُهَا بِقَوْلِهِ فَقَالَتْ ‏ ‏طَيَّبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَطَافَ فِي نِسَائِهِ ثُمَّ أَصْبَحَ مُحْرِمًا

இப்னு உமர் (ரலி), “நான் இஹ்ராம் பூண்டவனாக நறுமணத்தோடு இருப்பதைவிட, தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறியதைச் செவியுற்றேன். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, இப்னு உமர் (ரலி) கூறியதை அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு ஆயிஷா (ரலி), “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசிவிட்டேன். அவர்கள் தம் துணைவியரிடையே வலம் வந்தார்கள். பின்னர் இஹ்ராம் பூண்டவர்களாகவே இருந்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஹம்மது பின் அல்முன்தஷிர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2057

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ :‏

‏كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ يَطُوفُ عَلَى نِسَائِهِ ثُمَّ يُصْبِحُ مُحْرِمًا ‏ ‏يَنْضَخُ ‏ ‏طِيبًا

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசிவிடுவேன். அவர்கள் தம் துணைவியரிடையே வலம் வருவார்கள். பின்னர் நறுமணம் கமழ இஹ்ராம் பூண்டிருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2056

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ  :‏

سَأَلْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ الرَّجُلِ يَتَطَيَّبُ ثُمَّ يُصْبِحُ مُحْرِمًا فَقَالَ مَا أُحِبُّ أَنْ أُصْبِحَ مُحْرِمًا ‏ ‏أَنْضَخُ طِيبًا ‏ ‏لَأَنْ ‏ ‏أَطَّلِيَ ‏ ‏بِقَطِرَانٍ ‏ ‏أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَفْعَلَ ذَلِكَ ‏‏فَدَخَلْتُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَأَخْبَرْتُهَا أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ مَا أُحِبُّ أَنْ أُصْبِحَ مُحْرِمًا أَنْضَخُ طِيبًا لَأَنْ أَطَّلِيَ بِقَطِرَانٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَفْعَلَ ذَلِكَ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَنَا طَيَّبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَ إِحْرَامِهِ ثُمَّ طَافَ فِي نِسَائِهِ ثُمَّ أَصْبَحَ مُحْرِمًا

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் நறுமணப் பொருளைப் பூசிய பின்னர் இஹ்ராமுடன் இருப்பதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் நறுமணம் கமழ இஹ்ராமுடன் இருப்பதை விரும்பவில்லை. அவ்வாறு செய்வதைவிட, தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்’ என்று கூறினார்கள். பின்னர் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று இப்னு உமர் (ரலி) ‘நான் நறுமணம் கமழ இஹ்ராமுடன் இருப்பதை விரும்பவில்லை. அவ்வாறு செய்வதைவிட, தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்’ எனக் கூறினார்கள் என்று தெரிவித்தேன். அதற்கு ஆயிஷா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இஹ்ராமின்போது அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். பின்னர் அவர்கள் தம் துணைவியரிடையே வலம் வந்தார்கள். பின்னர் இஹ்ராமுடனே இருந்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஹம்மது பின் அல்முன்தஷிர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2055

و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ مَنِيعٍ ‏ ‏وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَنْصُورٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَبْلَ أَنْ يُحْرِمَ ‏ ‏وَيَوْمَ النَّحْرِ ‏ ‏قَبْلَ أَنْ ‏ ‏يَطُوفَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏بِطِيبٍ فِيهِ مِسْكٌ

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் பூணுவதற்கு முன்பும், துல்ஹஜ் பத்தாம் நாளில் அவர்கள் கஅபாவைச் சுற்றுவதற்கு (தவாஃபுல் இஃபாளா செய்வதற்கு) முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணப் பொருளை அவர்களுக்கு நான் பூசினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2054

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏قَالَ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا : ‏

‏كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏وَبِيصِ ‏ ‏الْمِسْكِ فِي مَفْرِقِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ أَبُو عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டிருந்தபோது, அவர்களது தலை வகிட்டில் பூசியிருந்த கஸ்தூரியின் ஒளியை இப்போதும் என் மனக்கண்ணால் காண்கின்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)