அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1993

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرٌ وَهُوَ ابْنُ مُضَرَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ :‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُجَاوِرُ ‏ ‏فِي الْعَشْرِ الَّتِي فِي وَسَطِ الشَّهْرِ فَإِذَا كَانَ مِنْ حِينِ تَمْضِي عِشْرُونَ لَيْلَةً وَيَسْتَقْبِلُ إِحْدَى وَعِشْرِينَ يَرْجِعُ إِلَى مَسْكَنِهِ وَرَجَعَ مَنْ كَانَ ‏ ‏يُجَاوِرُ ‏ ‏مَعَهُ ثُمَّ إِنَّهُ أَقَامَ فِي شَهْرٍ ‏ ‏جَاوَرَ ‏ ‏فِيهِ تِلْكَ اللَّيْلَةَ الَّتِي كَانَ يَرْجِعُ فِيهَا فَخَطَبَ النَّاسَ فَأَمَرَهُمْ بِمَا شَاءَ اللَّهُ ثُمَّ قَالَ ‏ ‏إِنِّي كُنْتُ ‏ ‏أُجَاوِرُ ‏ ‏هَذِهِ الْعَشْرَ ثُمَّ بَدَا لِي أَنْ أُجَاوِرَ هَذِهِ الْعَشْرَ الْأَوَاخِرَ فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعِي فَلْيَبِتْ فِي مُعْتَكَفِهِ وَقَدْ رَأَيْتُ هَذِهِ اللَّيْلَةَ فَأُنْسِيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي كُلِّ ‏ ‏وِتْرٍ ‏ ‏وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏ ‏مُطِرْنَا لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ ‏ ‏فَوَكَفَ ‏ ‏الْمَسْجِدُ فِي مُصَلَّى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَنَظَرْتُ إِلَيْهِ وَقَدْ انْصَرَفَ مِنْ صَلَاةِ الصُّبْحِ وَوَجْهُهُ مُبْتَلٌّ طِينًا وَمَاءً ‏


‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُجَاوِرُ ‏ ‏فِي رَمَضَانَ الْعَشْرَ الَّتِي فِي وَسَطِ الشَّهْرِ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ فَلْيَثْبُتْ فِي مُعْتَكَفِهِ وَقَالَ وَجَبِينُهُ مُمْتَلِئًا طِينًا وَمَاءً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த (ரமளான்) மாதத்தின் நடுப் பத்து நாட்களில் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃப் வழிபாட்டில்) இருப்பார்கள். இருபதாவது இரவு முடிந்து இருபத்தொன்றாவது இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருப்பவர்களும் திரும்புவார்கள்.

இவ்வழக்கப்படி, ஒரு ரமளானில் இஃதிகாஃப் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தாம் வழக்கமாக இல்லம் திரும்பும் இரவில் (பள்ளிவாசலிலேயே) தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடியவற்றை அவர்களுக்குக் கட்டளை இட்டார்கள்.

பின்னர் “நான் இந்த(நடு)ப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தேன். பிறகு இறுதிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. ஆகவே, என்னுடன் இந்த(நடு)ப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தவர் அதே இடத்திலேயே தங்கி (இஃதிகாஃப்) இருக்கட்டும். இந்த (லைலத்துல் கத்ரு) இரவை (எதுவெனக் கனவில்) கண்டேன். பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டது. எனவே, (ரமளானின்) இறுதிப் பத்தில் ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடிக்கொள்ளுங்கள். நான் (லைலத்துல் கத்ரு இரவில்) ஈரச் சேற்றில் ஸஜ்தாச் செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்” என்று கூறினார்கள்.

இருபத்தொன்றாவது நாள் இரவில் எங்களுக்கு மழை பெய்தது. பள்ளிவாசல் கூரையிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழும் இடத்தில் மழை நீர் சொட்டியது. அன்று காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸுப்ஹுத் தொழுதுவிட்டுத் திரும்பும்போது அவர்களை நான் கண்டேன். அவர்களது முகத்தில் ஈரமான சேறு படிந்திருந்தது.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)


குறிப்பு :

அப்துல் அஜீஸ் அத்தராவர்தீ (ரஹ்) வழி அறிவிப்பும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் மாதத்தின் நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள் …” என்றே தொடங்குகிறது. (ஆனால்,) “ஈரமான சேறு, அவர்களது நெற்றியில்” என்று காணப்படுகிறது.

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1992

حَدَّثَنَا ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ أَيْقَظَنِي بَعْضُ أَهْلِي فَنُسِّيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ ‏ ‏الْغَوَابِرِ ‏


‏و قَالَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏فَنَسِيتُهَا

“லைலத்துல் கத்ரு, (எந்த இரவென) எனக்குக் (கனவில்) காட்டப்பெற்றது. பின்னர் என் வீட்டாரில் ஒருவர் என்னை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தபோது, அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஹர்மலா பின் யஹ்யா (ரஹ்) அறிவிப்பில், “அதை நான் மறந்துவிட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1991

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏جَبَلَةَ ‏ ‏وَمُحَارِبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَحَيَّنُوا ‏ ‏لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ أَوْ قَالَ فِي التِّسْعِ الْأَوَاخِرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் லைலத்துல் கத்ரு இரவைத் தேடிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1990

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏جَبَلَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يُحَدِّثُ :‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏مَنْ كَانَ مُلْتَمِسَهَا فَلْيَلْتَمِسْهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ

“அந்த (லைலத்துல் கத்ரு) இரவைத் தேடுபவர் ரமளானின் இறுதிப் பத்து இரவுகளில் தேடிக்கொள்ளட்டும்!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1989

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عُقْبَةَ وَهُوَ ابْنُ حُرَيْثٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ ‏ ‏يَعْنِي لَيْلَةَ الْقَدْرِ ‏ ‏فَإِنْ ضَعُفَ أَحَدُكُمْ أَوْ عَجَزَ فَلَا يُغْلَبَنَّ عَلَى السَّبْعِ الْبَوَاقِي

“நீங்கள் அந்த (லைலத்துல் கத்ரு) இரவை (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்குப் பலவீனம், அல்லது இயலாமை ஏற்பட்டாலும் எஞ்சிய ஏழு இரவுகளில் (அதைத் தேடும் முயற்சியில்) தளர்ந்துவிட வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1988

و حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ أَبَاهُ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِلَيْلَةِ الْقَدْرِ إِنَّ نَاسًا مِنْكُمْ قَدْ أُرُوا أَنَّهَا فِي السَّبْعِ الْأُوَلِ وَأُرِيَ نَاسٌ مِنْكُمْ أَنَّهَا فِي السَّبْعِ الْغَوَابِرِ فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْغَوَابِرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லைலத்துல் கத்ரு இரவு தொடர்பாகக் கூறுகையில், “உங்களில் சிலர், ரமளானின் முந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாகக் (கனவில்) காட்டப் பெற்றனர்; உங்களில் வேறுசிலர் ரமளானின் பிந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாகக் (கனவில்) காட்டப்பெற்றனர். நீங்கள் ரமளானின் பிந்தைய பத்தில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1987

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ :‏

‏رَأَى رَجُلٌ أَنَّ لَيْلَةَ الْقَدْرِ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَى رُؤْيَاكُمْ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فَاطْلُبُوهَا فِي ‏ ‏الْوِتْرِ ‏ ‏مِنْهَا

ஒருவர் இருபத்தேழாவது இரவில் லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாக, (தமது கனவில்) கண்டார். அப்போது நபி (ஸல்), “ரமளானின் இறுதிப் பத்து இரவுகளில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதாகக் கருதுகின்றேன். எனவே, ரமளானின் இறுதிப் பத்தில் ஒற்றைப்படையான இரவுகளில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1986

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏تَحَرَّوْا ‏ ‏لَيْلَةَ الْقَدْرِ فِي السَّبْعِ الْأَوَاخِرِ

“லைலத்துல் கத்ரு இரவை (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் தேடிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1985

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا : ‏

‏أَنَّ رِجَالًا مِنْ ‏ ‏أَصْحَابِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ فِي السَّبْعِ الْأَوَاخِرِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَى رُؤْيَاكُمْ قَدْ ‏ ‏تَوَاطَأَتْ ‏ ‏فِي السَّبْعِ الْأَوَاخِرِ فَمَنْ كَانَ ‏ ‏مُتَحَرِّيَهَا ‏ ‏فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ

நபித்தோழர்களில் சிலர், (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் (ஒன்றில்) லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாகக் கனவில் காட்டப்பெற்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறுதி ஏழு இரவுகளில் (ஒன்று) என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதை நான் காண்கின்றேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் தேடிக்கொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 39, ஹதீஸ் எண்: 1984

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَّهُ حَدَّثَهُ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏أَخُو ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُمَرُ بْنُ ثَابِتٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ سَعِيدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُمَرَ بْنَ ثَابِتٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا أَيُّوبَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

“ரமளான் மாதம் நோன்பு நோற்று, அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி)