அத்தியாயம்: 13, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1873

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ :‏

‏جَاءَ ‏ ‏رَجُلٌ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ احْتَرَقْتُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِمَ قَالَ وَطِئْتُ امْرَأَتِي فِي رَمَضَانَ نَهَارًا قَالَ ‏ ‏تَصَدَّقْ تَصَدَّقْ قَالَ مَا عِنْدِي شَيْءٌ فَأَمَرَهُ أَنْ يَجْلِسَ فَجَاءَهُ عَرَقَانِ فِيهِمَا طَعَامٌ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَتَصَدَّقَ بِهِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ ‏ ‏أَنَّ ‏ ‏مُحَمَّدَ بْنَ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عَبَّادَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏تَقُولُ ‏ ‏أَتَى ‏ ‏رَجُلٌ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ الْحَدِيثَ وَلَيْسَ فِي أَوَّلِ الْحَدِيثِ تَصَدَّقْ تَصَدَّقْ وَلَا قَوْلُهُ نَهَارًا

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் கரிந்துபோனேன்” என்றார். “ஏன் (உமக்கு என்ன நேர்ந்தது)?” என்று கேட்டார்கள். அவர், “நான் ரமளானில் பகலில் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தர்மம் செய்வீராக, தர்மம் செய்வீராக!” என்று சொன்னார்கள். அவர், “என்னிடம் ஏதும் இல்லையே?” என்றார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அங்கேயே) அமர்ந்திருக்குமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் உணவுப் பொருட்கள் உள்ள இரண்டு பெரிய கூடைகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தன. அதை(ப் பெற்று) தர்மம் செய்யுமாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார் …” எனத் தொடங்குகிறது. ஹதீஸின் ஆரம்பத்தில் “தர்மம் செய்வீராக, தர்மம் செய்வீராக!” என்பதும் ‘பகலில்’ எனும் சொல்லும் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 13, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1872

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُ : ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَ ‏ ‏رَجُلًا ‏ ‏أَفْطَرَ فِي رَمَضَانَ ‏ ‏أَنْ يُعْتِقَ رَقَبَةً أَوْ يَصُومَ شَهْرَيْنِ أَوْ يُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا ‏


‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ

ஒருவர் ரமளானில் (பகலில் உடலுறவு கொண்டு) நோன்பை முறித்து விட்டார். “ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அல்லது (தொடர்ந்து) இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும்; அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1871

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ : ‏

‏أَنَّ ‏ ‏رَجُلًا ‏ ‏وَقَعَ بِامْرَأَتِهِ فِي رَمَضَانَ فَاسْتَفْتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَقَالَ ‏ ‏هَلْ تَجِدُ رَقَبَةً قَالَ لَا قَالَ وَهَلْ تَسْتَطِيعُ صِيَامَ شَهْرَيْنِ قَالَ لَا قَالَ فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ عِيسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ أَنَّ ‏ ‏رَجُلًا ‏ ‏أَفْطَرَ فِي رَمَضَانَ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُكَفِّرَ بِعِتْقِ رَقَبَةٍ ثُمَّ ذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ

ஒருவர் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டு) தம் மனைவியுடன் (பகலில்) உடலுறவில் ஈடுபட்டுவிட்டார். (எனவே), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அது குறித்துத் தீர்ப்புக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஓர் அடிமையை (விடுதலை செய்ய) நீர் பெற்றுள்ளீரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “இரு மாதங்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்க உம்மால் முடியுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அவர் “இயலாது” என்றார். “அவ்வாறாயின், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இஸ்ஹாக் பின் ஈஸா (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் ரமளானில் (பகலில் உடலுறவுகொண்டு) நோன்பை முறித்துவிட்டார். அவரிடம், ஓர் அடிமையை விடுதலை செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள்” என தொடங்குகின்றது.

அத்தியாயம்: 13, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1870

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ : ‏

‏جَاءَ ‏ ‏رَجُلٌ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ هَلَكْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ ‏وَمَا أَهْلَكَكَ قَالَ ‏ ‏وَقَعْتُ عَلَى امْرَأَتِي ‏ ‏فِي رَمَضَانَ قَالَ هَلْ تَجِدُ مَا تُعْتِقُ رَقَبَةً قَالَ لَا قَالَ فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ لَا قَالَ فَهَلْ تَجِدُ مَا تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا قَالَ لَا قَالَ ثُمَّ جَلَسَ فَأُتِيَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِعَرَقٍ ‏ ‏فِيهِ تَمْرٌ فَقَالَ تَصَدَّقْ بِهَذَا قَالَ أَفْقَرَ مِنَّا فَمَا بَيْنَ ‏ ‏لَابَتَيْهَا ‏ ‏أَهْلُ بَيْتٍ أَحْوَجُ إِلَيْهِ مِنَّا فَضَحِكَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ ‏


‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ رِوَايَةِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏وَقَالَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ وَهُوَ الزِّنْبِيلُ وَلَمْ يَذْكُرْ فَضَحِكَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى بَدَتْ أَنْيَابُهُ

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் அழிந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்), “உமது அழிவுக்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். “நான் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டே) என் மனைவியுடன் (பகலில்) உடலுறவு கொண்டு விட்டேன்” என்று அவர் சொன்னார். நபி (ஸல்), “(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டார்கள். அவர், “இயலாது” என்றார். “தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். அவர் “முடியாது” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா?” என்று நபி (ஸல்) கேட்க, அவர் “இயலாது” என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் உள்ள ஒரு கூடை கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவரிடம், “இதை(ப் பெற்று) தர்மம் செய்வீராக!” என்று கூறினார்கள். அவர், “எங்களைவிட ஏழையாக இருப்போருக்கா? இந்நகரத்தின் இரு மலைகளுக்கு இடையே எங்களைவிட மிக வறிய நிலையில் எந்த வீட்டாரும் இல்லை” என்றார். நபி (ஸல்) தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு, “நீர் (இதைப் பெற்றுச்) சென்று, உம் வீட்டாருக்கே உண்ணக் கொடுப்பீராக!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் முஸ்லிம் அல் ஸுஹ்ரி (ரஹ்) வழி அறிவிப்பில், “கூடை என்பது ஸன்பீல் (பெரிய கூடை) ஆகும்” என இடம் பெற்றுள்ளது.

மேலும், “நபி (ஸல்) தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள்” எனும் குறிப்பு அதில் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 13, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1869

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ يُوسُفَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ يَسَارٍ : ‏

‏أَنَّهُ سَأَلَ ‏ ‏أُمَّ سَلَمَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏عَنْ الرَّجُلِ يُصْبِحُ جُنُبًا أَيَصُومُ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصْبِحُ جُنُبًا مِنْ غَيْرِ احْتِلَامٍ ثُمَّ يَصُومُ

நான் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம், “பெருந்துடக்குடன் காலை (சுப்ஹு) நேரத்தை அடைந்த ஒருவர் நோன்பைத் தொடரலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (உறக்கத்தில்) ஸ்கலிதம் ஏற்பட்டதால் அல்லாமல் (தாம்பத்திய உறவில் ஈடுபட்டு), பெருந் துடக்குடையவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள்; பின்னர் நோன்பைத் தொடருவார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி) வழியாக ஸுலைமான் பின் யஸார் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1868

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَهُوَ ابْنُ مَعْمَرِ بْنِ حَزْمٍ الْأَنْصَارِيُّ أَبُو طُوَالَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا يُونُسَ ‏ ‏مَوْلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَهُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا : ‏

‏أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْتَفْتِيهِ وَهِيَ تَسْمَعُ مِنْ وَرَاءِ الْبَابِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تُدْرِكُنِي الصَّلَاةُ وَأَنَا جُنُبٌ أَفَأَصُومُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا تُدْرِكُنِي الصَّلَاةُ وَأَنَا جُنُبٌ فَأَصُومُ فَقَالَ لَسْتَ مِثْلَنَا يَا رَسُولَ اللَّهِ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ فَقَالَ وَاللَّهِ ‏ ‏إِنِّي لَأَرْجُو أَنْ أَكُونَ ‏ ‏أَخْشَاكُمْ لِلَّهِ وَأَعْلَمَكُمْ بِمَا ‏ ‏أَتَّقِي

ஒருவர் (ஒரு விஷயத்தில்) தீர்ப்புக் கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நான் கதவுக்குப் பின்னாலிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் (ஃபஜ்ருத்) தொழுகையின் நேரம் என்னை வந்தடைந்தால், அப்போதும் நான் நோன்பு நோற்க வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் (ஃபஜ்ருத்) தொழுகை நேரம் என்னை வந்தடைகிறபோதும் நான் நோன்பைத் தொடர்கின்றேன்” என்று விடையளித்தார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களைப் போன்றவர்கள் அல்லர். அல்லாஹ் உங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டானே?” என்று சொன்னார். அதற்கு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவும், எவற்றிலிருந்து நான் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை உங்களைவிட அதிகமாக அறிந்தவனாகவும் இருக்கவே நான் விரும்புகின்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1867

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏وَأُمِّ سَلَمَةَ ‏ ‏زَوْجَيْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُمَا قَالَتَا: ‏

‏إِنْ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيُصْبِحُ جُنُبًا مِنْ جِمَاعٍ غَيْرِ احْتِلَامٍ فِي رَمَضَانَ ثُمَّ يَصُومُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் மாதத்தில் (இரவில்) ஸ்கலிதம் ஏற்பட்டதால் அல்லாமல் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, பெருந்துடக்குடையவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். பின்னர் நோன்பைத் தொடருவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னையர் ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு ஸலமா (ரலி) வழியாக அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1866

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ رَبِّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ الْحِمْيَرِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏حَدَّثَهُ : ‏

‏أَنَّ ‏ ‏مَرْوَانَ ‏ ‏أَرْسَلَهُ إِلَى ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏يَسْأَلُ عَنْ الرَّجُلِ يُصْبِحُ جُنُبًا أَيَصُومُ فَقَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصْبِحُ جُنُبًا مِنْ جِمَاعٍ لَا مِنْ حُلُمٍ ثُمَّ لَا يُفْطِرُ وَلَا يَقْضِي

மர்வான் பின் அல்ஹகம், ‘பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவர் நோன்பு நோற்கலாமா?’ என்பது குறித்துக் கேட்பதற்காக என்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் அனுப்பினார். (அது பற்றி நான் கேட்டேன்) “நபி (ஸல்) (இரவில்) உறக்க ஸ்கலிதத்தால் அல்லாமல் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பை(த் தொடர்வார்களே தவிர) விட்டுவிடமாட்டார்கள்; (பின்னாளில் களா வாகத்) திரும்ப நோற்கவுமாட்டார்கள்” என உம்மு ஸலமா (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா வழியாக அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1865

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏وَأَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ : ‏

‏قَدْ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُدْرِكُهُ الْفَجْرُ فِي رَمَضَانَ وَهُوَ جُنُبٌ مِنْ غَيْرِ ‏ ‏حُلُمٍ ‏ ‏فَيَغْتَسِلُ وَيَصُومُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் மாதத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டதால் அல்லாமல் (தாம்பத்திய உறவில் ஈடுபட்டதால்) பெருந்துடக்குடையவர்களாக வைகறை (ஃபஜ்ரு) நேரத்தை அடைவார்கள். பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடருவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1864

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ بْنُ هَمَّامٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُصُّ يَقُولُ ‏ ‏فِي قَصَصِهِ مَنْ أَدْرَكَهُ الْفَجْرُ جُنُبًا فَلَا يَصُمْ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ ‏ ‏لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ ‏ ‏لِأَبِيهِ فَأَنْكَرَ ذَلِكَ فَانْطَلَقَ ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏وَانْطَلَقْتُ مَعَهُ حَتَّى دَخَلْنَا عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏وَأُمِّ سَلَمَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏فَسَأَلَهُمَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ذَلِكَ قَالَ فَكِلْتَاهُمَا قَالَتْ : ‏

‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصْبِحُ جُنُبًا مِنْ غَيْرِ ‏ ‏حُلُمٍ ‏ ‏ثُمَّ يَصُومُ ‏

‏قَالَ فَانْطَلَقْنَا حَتَّى دَخَلْنَا عَلَى ‏ ‏مَرْوَانَ ‏ ‏فَذَكَرَ ذَلِكَ لَهُ ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏فَقَالَ ‏ ‏مَرْوَانُ ‏ ‏عَزَمْتُ عَلَيْكَ إِلَّا مَا ذَهَبْتَ إِلَى ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏فَرَدَدْتَ عَلَيْهِ مَا يَقُولُ قَالَ فَجِئْنَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏حَاضِرُ ذَلِكَ كُلِّهِ قَالَ فَذَكَرَ لَهُ ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَهُمَا قَالَتَاهُ لَكَ قَالَ نَعَمْ قَالَ هُمَا أَعْلَمُ ثُمَّ رَدَّ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏مَا كَانَ يَقُولُ فِي ذَلِكَ إِلَى ‏ ‏الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏سَمِعْتُ ذَلِكَ مِنْ ‏ ‏الْفَضْلِ ‏ ‏وَلَمْ أَسْمَعْهُ مِنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَرَجَعَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَمَّا كَانَ يَقُولُ فِي ذَلِكَ


قُلْتُ ‏ ‏لِعَبْدِ الْمَلِكِ ‏ ‏أَقَالَتَا فِي رَمَضَانَ قَالَ كَذَلِكَ كَانَ يُصْبِحُ جُنُبًا مِنْ غَيْرِ ‏ ‏حُلُمٍ ‏ ‏ثُمَّ يَصُومُ

அபூஹுரைரா (ரலி), “பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவருக்கு நோன்பு இல்லை (அது செல்லாது)” என்று அறிவிப்பதை நான் செவியுற்றேன். இதை (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் அவர்களிடம் சொன்னேன். அதை அவர்கள் மறுத்தார்கள். பின்னர் (நபியவர்களின் மனைவியரான) ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு ஸலமா (ரலி) ஆகியோரின் இல்லம் நோக்கி நடந்தார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன். அவ்விருவரிடம் நாங்கள் போய்ச் சேர்ந்தோம். அதைப் பற்றி அவர்களிடம் என் தந்தை கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், “நபி (ஸல்) உறக்க ஸ்கலிதத்தினால் அல்லாமல் (இரவில் தாம்பத்திய உறவு கொண்டு) குளிப்புக் கடமையான நிலையில் வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பு நோற்பார்கள்” என்று கூறினர்.

எனவே, நாங்கள் இருவரும் (மதீனாவின் ஆட்சியராயிருந்த) மர்வான் பின் அல்ஹகமிடம் சென்றோம். அபூஹுரைரா (ரலி) அறிவித்துவந்த விஷயத்தையும் அதற்கு மாறாக ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் கூறியதையும் (என் தந்தை) அப்துர் ரஹ்மான், மர்வான் பின் அல்ஹகமிடம் எடுத்துரைத்தார்கள். உடனே மர்வான், “நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்று, அவர் அறிவித்துவருவதற்கு மறுப்புத் தெரிவித்துத்தான் ஆகவேண்டும்” என்று கூறினார். அவ்வாறே நாங்கள் இருவரும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்றோம். இந்த நிகழ்ச்சி முழுவதிலும் நானும் அங்கிருந்தேன். நடந்தவற்றை அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் கூறினார்கள். இதைக் கேட்ட அபூஹுரைரா (ரலி), “(ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு ஸலமா (ரலி) ஆகிய) அவ்விருவருமா உம்மிடம் இவ்வாறு கூறினார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு (என் தந்தை) அப்துர் ரஹ்மான், “ஆம்” என்றார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி), “அவர்கள் இருவரும் (இது குறித்து என்னைவிட) நன்கறிந்தவர்கள்” என்று சொன்னார்கள்.

பின்னர் அபூஹுரைரா (ரலி), தாம் இதுவரை ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) கூறியதையே அறிவித்துவந்ததாகக் கூறிவிட்டு, “இதை நான் ஃபள்லிடமிருந்தே செவியுற்றேன்; (நேரடியாக) நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறவில்லை” என்று சொன்னார்கள். பின்னர் இது தொடர்பாகத் தாம் கூறிவந்த கருத்தை அபூஹுரைரா (ரலி) திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்)


குறிப்பு :

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அப்துல் மலிக் பின் அபீபக்ரு (ரஹ்) அவர்களிடம், “ரமளான் மாதத்தில் (நபி (ஸல்) அவ்வாறு செய்ததாக) ஆயிஷாவும் உம்மு ஸலமாவும் கூறினார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(ஆம்) அவ்வாறுதான். நபி (ஸல்) உறக்க ஸ்கலிதத்தினால் அல்லாமல் குளிப்புக் கடமையான நிலையில் வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பைத் தொடருவார்கள் என்று கூறினர்” என்றார்கள் என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) கூறுகின்றார்.