அத்தியாயம்: 13, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1843

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏وَعَبَّادُ بْنُ الْعَوَّامِ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي أَوْفَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ : ‏

‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فَلَمَّا غَابَتْ الشَّمْسُ قَالَ ‏ ‏لِرَجُلٍ ‏ ‏انْزِلْ ‏ ‏فَاجْدَحْ ‏ ‏لَنَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوْ أَمْسَيْتَ قَالَ انْزِلْ ‏ ‏فَاجْدَحْ ‏ ‏لَنَا قَالَ إِنَّ عَلَيْنَا نَهَارًا فَنَزَلَ ‏ ‏فَجَدَحَ ‏ ‏لَهُ فَشَرِبَ ثُمَّ قَالَ ‏ ‏إِذَا رَأَيْتُمْ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَا هُنَا وَأَشَارَ بِيَدِهِ نَحْوَ الْمَشْرِقِ فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُا ‏ ‏سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ صَائِمٌ فَلَمَّا غَرَبَتْ الشَّمْسُ قَالَ يَا فُلَانُ انْزِلْ ‏ ‏فَاجْدَحْ ‏ ‏لَنَا مِثْلَ حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ ‏ ‏وَعَبَّادِ بْنِ الْعَوَّامِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي أَوْفَى ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي أَوْفَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ ‏ ‏وَعَبَّادٍ ‏ ‏وَعَبْدِ الْوَاحِدِ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِ أَحَدٍ مِنْهُمْ فِي شَهْرِ رَمَضَانَ وَلَا قَوْلُهُ وَجَاءَ اللَّيْلُ مِنْ هَا هُنَا إِلَّا فِي رِوَايَةِ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏وَحْدَهُ

நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம், “(வாகனத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக” என்று சொன்னார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே, மாலை நேரம் ஆகட்டுமே!” என்று சொன்னார். “இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக” என்று (மீண்டும்) சொன்னார்கள். அவர், “இன்னும் பகல் இருக்கிறதே!” என்று சொல்லிவிட்டு, இறங்கி நபி அவர்களுக்காக மாவு கரைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதை அருந்தினார்கள். பின்னர், கீழ்த் திசையை நோக்கி சைகை செய்து, “இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்துவிட்டதை நீங்கள் காணும்போது நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)


குறிப்புகள் :

அப்துல் வாஹித் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) சென்றோம். அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும், “இன்னவரே, இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக என்று கூறினார்கள்” என அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அறிவித்ததாகத் தொடங்குகிறது.

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில் “ரமளான் மாதத்தில்” எனும் குறிப்போ, “இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்துவிட்டால் …” எனும் சொற்றொடரோ காணப்படவில்லை. ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அறிவிப்பில் மட்டுமே இவ் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 13, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1842

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ : ‏

‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فِي شَهْرِ رَمَضَانَ فَلَمَّا غَابَتْ الشَّمْسُ قَالَ يَا ‏ ‏فُلَانُ ‏ ‏انْزِلْ فَاجْدَحْ لَنَا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عَلَيْكَ نَهَارًا قَالَ انْزِلْ ‏ ‏فَاجْدَحْ ‏ ‏لَنَا قَالَ فَنَزَلَ ‏ ‏فَجَدَحَ ‏ ‏فَأَتَاهُ بِهِ فَشَرِبَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قَالَ بِيَدِهِ ‏ ‏إِذَا غَابَتْ الشَّمْسُ مِنْ هَا هُنَا وَجَاءَ اللَّيْلُ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ

நாங்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம், “இன்னவரே, (வாகனத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! பகல் இன்னும் எஞ்சியுள்ளதே?” என்று சொன்னார். “இன்னவரே, (வாகனத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள். எனவே, அவர் இறங்கிவந்து, மாவு கரைத்துக் கொண்டுவந்தார். நபி (ஸல்) அதை அருந்திவிட்டு, “சூரியன் இங்கிருந்து மறைந்து, இரவு அங்கிருந்து வந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று கையால் சைகை செய்து கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1841

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَاتَّفَقُوا فِي اللَّفْظِ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَقْبَلَ اللَّيْلُ وَأَدْبَرَ النَّهَارُ وَغَابَتْ الشَّمْسُ فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ ‏
‏لَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فَقَدْ

“பகல் போய், சூரியன் மறைந்து, இரவு வந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1840

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَطِيَّةَ ‏ ‏قَالَ :‏

‏دَخَلْتُ أَنَا ‏ ‏وَمَسْرُوقٌ ‏ ‏عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَقَالَ لَهَا ‏ ‏مَسْرُوقٌ ‏ ‏رَجُلَانِ مِنْ أَصْحَابِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كِلَاهُمَا لَا ‏ ‏يَأْلُو ‏ ‏عَنْ الْخَيْرِ أَحَدُهُمَا يُعَجِّلُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ وَالْآخَرُ يُؤَخِّرُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ فَقَالَتْ مَنْ يُعَجِّلُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏فَقَالَتْ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْنَعُ

நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது மஸ்ரூக், ஆயிஷா (ரலி) அவர்களிடம், “முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களில் நன்மையில் குறைவைக்காத இருவர் உள்ளனர். அவ்விருவரில் ஒருவர் மஃக்ரிப் தொழுகையையும் நோன்பு துறப்பதையும் விரைவாகவே செய்கின்றார். மற்றொருவர் அவ்விரண்டையுமே தாமதப்படுத்துகிறார்” என்று கூறினார். அப்போது, “நோன்பு துறப்பதையும் மஃக்ரிபையும் விரைவு படுத்துபவர் யார்?” என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு, “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்” என்றார் மஸ்ரூக். ஆயிஷா (ரலி), “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்வார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1839

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَطِيَّةَ ‏ ‏قَالَ :‏

‏دَخَلْتُ أَنَا ‏ ‏وَمَسْرُوقٌ ‏ ‏عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقُلْنَا يَا أُمَّ الْمُؤْمِنِينَ رَجُلَانِ مِنْ أَصْحَابِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَدُهُمَا يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلَاةَ وَالْآخَرُ يُؤَخِّرُ الْإِفْطَارَ وَيُؤَخِّرُ الصَّلَاةَ قَالَتْ أَيُّهُمَا الَّذِي يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلَاةَ قَالَ قُلْنَا ‏ ‏عَبْدُ اللَّهِ يَعْنِي ابْنَ مَسْعُودٍ ‏ ‏قَالَتْ كَذَلِكَ كَانَ يَصْنَعُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


‏زَادَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَالْآخَرُ ‏ ‏أَبُو مُوسَى

நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்களின் இரு தோழர்களில் ஒருவர் (நேரம் வந்தவுடன்) தாமதிக்காமல் விரைந்து நோன்பு துறக்கின்றார்; (மஃக்ரிப் தொழுகையை) விரைந்து தொழுகின்றார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகின்றார்; தொழுகையையும் தாமதப்படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)” என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி), “விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்” என்றோம். அதற்கு, “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்வார்கள்” என்று ஆயிஷா (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்)


குறிப்பு :

அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “இன்னொரு நபித்தோழர் அபூமூஸா (ரலி) ஆவார்” என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1838

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

“நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1837

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ ثَابِتٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ : ‏

‏تَسَحَّرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قُمْنَا إِلَى الصَّلَاةِ قُلْتُ كَمْ كَانَ قَدْرُ مَا بَيْنَهُمَا قَالَ خَمْسِينَ آيَةً ‏


‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَالِمُ بْنُ نُوحٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ عَامِرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு ஸஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ருத்) தொழுகைக்குத் தயாராவோம்” என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறியபோது நான், “ஸஹருக்கும் (ஃபஜ்ருத்) தொழுகைக்குமிடையே நேர இடைவெளி எவ்வளவு இருக்கும்?” என்று கேட்டேன். அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரலி), “(குர்ஆனில்) ஐம்பது வசனங்கள் (ஓதும் நேரம்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1836

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُلَيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَيْسٍ ‏ ‏مَوْلَى ‏ ‏عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْعَاصِ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏فَصْلُ ‏ ‏مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏أَكْلَةُ السَّحَرِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُلَيٍّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் நோன்பிற்கும் இடையில் உள்ள வேறுபாடு ஸஹர் நேரத்தில் உண்பதுதான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1835

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏وَعَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَسَحَّرُوا فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً

“ஸஹர் செய்யுங்கள். ஏனெனில், ஸஹர் செய்வதில் அருள் வளம் (பரக்கத்) உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1834

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَوَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَمُرَةَ بْنَ جُنْدُبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏وَهُوَ يَخْطُبُ ‏ ‏يُحَدِّثُ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏لَا يَغُرَّنَّكُمْ نِدَاءُ ‏ ‏بِلَالٍ ‏ ‏وَلَا هَذَا الْبَيَاضُ حَتَّى يَبْدُوَ الْفَجْرُ ‏ ‏أَوْ قَالَ حَتَّى يَنْفَجِرَ الْفَجْرُ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَوَادَةُ بْنُ حَنْظَلَةَ الْقُشَيْرِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَمُرَةَ بْنَ جُنْدُبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ هَذَا

“உங்களை (ஸஹர் செய்வதிலிருந்து) பிலாலின் தொழுகை அறிவிப்பு ஏமாற்றிவிட வேண்டாம். (அடிவானில் நீளவாக்கில் தென்படும் விடியலின்) வெண்மை – வைகறை வெளிப்படும்வரை அல்லது தோன்றும்வரை – ஏமாற்றி(தடுத்து)விட வேண்டாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை, அறிவிப்பாளர் ஸமுரா பின் ஜுன்துப் (ரலி), தம் உரையின்போது குறிப்பிட்டார்கள்.