அத்தியாயம்: 13, பாடம்: 07, ஹதீஸ் எண்: 1823

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ بْنِ سُوَيْدٍ ‏ ‏وَخَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرَةَ : ‏

‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ ‏


‏فِي حَدِيثِ ‏ ‏خَالِدٍ ‏ ‏شَهْرَا عِيدٍ رَمَضَانُ وَذُو الْحِجَّةِ

“இரு பெருநாட்களின் மாதங்களும் குறைவாக அமையாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூபக்ரா (ரலி)


குறிப்பு :

காலித் பின் மஹ்ரான் (ரஹ்) வழி அறிவிப்பில், “இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது” என்று காணப்படுகிறது.

அத்தியாயம்: 13, பாடம்: 07, ஹதீஸ் எண்: 1822

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ رَمَضَانُ وَذُو الْحِجَّةِ

“இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறைவாக அமையாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூபக்ரா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1821

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا الْبَخْتَرِيِّ ‏ ‏قَالَ : ‏

‏أَهْلَلْنَا ‏ ‏رَمَضَانَ وَنَحْنُ ‏ ‏بِذَاتِ عِرْقٍ ‏ ‏فَأَرْسَلْنَا رَجُلًا إِلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَسْأَلُهُ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ قَدْ أَمَدَّهُ لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ

நாங்கள் ‘தாத்து இர்க்’ எனும் இடத்தில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறையைக் கண்டோம். அதைப் பற்றிக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவரை அனுப்பினோம். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), “பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிது நேரம் தென்படச் செய்கின்றான். உங்களுக்கு (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்களின்) எண்ணிக்கையை (முப்பதாக) முழுமையாக்கிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அபுல் பக்தரீ ஸயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1820

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْبَخْتَرِيِّ ‏ ‏قَالَ : ‏

‏خَرَجْنَا لِلْعُمْرَةِ فَلَمَّا نَزَلْنَا ‏ ‏بِبَطْنِ نَخْلَةَ ‏ ‏قَالَ تَرَاءَيْنَا الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ قَالَ فَلَقِينَا ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَقُلْنَا إِنَّا رَأَيْنَا الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ فَقَالَ أَيَّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ قَالَ فَقُلْنَا لَيْلَةَ كَذَا وَكَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ فَهُوَ لِلَيْلَةٍ رَأَيْتُمُوهُ

நாங்கள் உம்ராவிற்காகப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் ‘பத்னு நக்லா’ எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, பிறையைப் பார்ப்பதற்காக ஒன்றுகூடினோம். அப்போது (பிறையைப் பார்த்த) மக்களில் சிலர், “அது மூன்றாம் பிறை”’ என்று கூறினர். வேறுசிலர், “(அல்ல) அது இரண்டாம் பிறை” என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, “நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர், ‘அது மூன்றாம் பிறை’ என்றனர். வேறுசிலர், ‘அது இரண்டாம் பிறை’ என்று கூறினர்” என்று சொன்னோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்” என்று பதிலளித்தோம். அப்போது, “மக்கள் பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிது நேரம் தென்படச் செய்கின்றான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அபுல் பக்தரீ ஸயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1819

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ وَهُوَ ابْنُ أَبِي حَرْمَلَةَ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏أَنَّ ‏ ‏أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ ‏ ‏بَعَثَتْهُ إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏بِالشَّامِ ‏ ‏قَال :لَ

فَقَدِمْتُ ‏ ‏الشَّامَ ‏ ‏فَقَضَيْتُ حَاجَتَهَا ‏ ‏وَاسْتُهِلَّ ‏ ‏عَلَيَّ رَمَضَانُ وَأَنَا ‏ ‏بِالشَّامِ ‏ ‏فَرَأَيْتُ الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ مَتَى رَأَيْتُمْ الْهِلَالَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏فَقَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ أَوْ ‏ ‏نَرَاهُ فَقُلْتُ ‏ ‏أَوَ لَا ‏ ‏تَكْتَفِي بِرُؤْيَةِ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏وَصِيَامِهِ فَقَالَ ‏‏لَا ‏ ‏هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


‏وَشَكَّ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏فِي ‏ ‏نَكْتَفِي أَوْ ‏ ‏تَكْتَفِي

உம்முல் ஃபள்லு பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி) (ஒரு வேலைக்காக) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவர் அனுப்பிய பணியை நிறைவு செய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.

பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனாவுக்கு வந்து சேர்ந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது “நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்” என்று பதிலளித்தேன். அவர்கள், “பிறையை நீ கண்டாயா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), “ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும்வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்” என்று சொன்னார்கள். அதற்கு நான், “முஆவியா (ரலி) (முதல் பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் பொருந்தாதா?” என்று கேட்டேன். அதற்கு, “இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1818

و حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ :‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا عَشْرًا وَعَشْرًا وَتِسْعًا مَرَّةً ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ ‏ ‏وَسَلَمَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ يَعْنِي ابْنَ الْمُبَارَكِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِهِمَا

நபி (ஸல்), “மாதம் என்பது இப்படி, இப்படி, இப்படி இருக்கும்” என்று கூறி (தம் கை விரல்களை முதலிரு முறை) பத்து, பத்து என்றும், (மூன்றாவதாக) ஒரு முறை ஒன்பது என்றும் சைகை செய்து காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1817

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ :‏

‏ضَرَبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِهِ عَلَى الْأُخْرَى فَقَالَ ‏ ‏الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا ثُمَّ نَقَصَ فِي الثَّالِثَةِ إِصْبَعًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஒரு கையை மற்றொரு கையில் (மூன்று தடவைகள்) அடித்து, “மாதம் என்பது இப்படியும் இப்படியும் இருக்கும்” என்று சொன்னார்கள். மூன்றாவது தடவையில் ஒரு விரலை மடக்கிக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1816

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ ‏ ‏أَنَّ ‏ ‏عِكْرِمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏أُمَّ سَلَمَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَخْبَرَتْهُ :‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَلَفَ أَنْ لَا يَدْخُلَ عَلَى بَعْضِ أَهْلِهِ شَهْرًا فَلَمَّا مَضَى تِسْعَةٌ وَعِشْرُونَ يَوْمًا غَدَا عَلَيْهِمْ ‏ ‏أَوْ رَاحَ ‏ ‏فَقِيلَ لَهُ حَلَفْتَ يَا نَبِيَّ اللَّهِ أَنْ لَا تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا قَالَ ‏ ‏إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعَةً وَعِشْرِينَ يَوْمًا ‏


‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ يَعْنِي أَبَا عَاصِمٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

நபி (ஸல்) தம் மனைவியருள் சிலரிடம் ஒரு மாத காலம் செல்லப்போவதில்லை எனச் சத்தியம் செய்து (விலகி) இருந்தார்கள். பின்னர் இருபத்தொன்பது நாட்கள் முடிந்ததும் அன்று காலையில் அல்லது மாலையில் அவர்களிடம் சென்றார்கள். அப்போது, “இறைவனின் தூதரே! எங்களிடம் ஒரு மாத காலம் வர மாட்டீர்கள் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1815

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُ : ‏

‏اعْتَزَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نِسَاءَهُ شَهْرًا فَخَرَجَ إِلَيْنَا صَبَاحَ تِسْعٍ وَعِشْرِينَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا أَصْبَحْنَا لِتِسْعٍ وَعِشْرِينَ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ ثُمَّ طَبَّقَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدَيْهِ ثَلَاثًا مَرَّتَيْنِ بِأَصَابِعِ يَدَيْهِ كُلِّهَا وَالثَّالِثَةَ بِتِسْعٍ مِنْهَا

நபி (ஸல்) தம் மனைவியரிடமிருந்து ஒரு மாத காலம் விலகியிரு(க்கப் போவதாகக் கூறியிரு)ந்தார்கள். பின்னர் இருபத்தொன்பதாம் நாள் காலையிலேயே புறப்பட்டு எங்களிடம் வந்தார்கள். அப்போது சிலர், “அல்லாஹ்வின் தூதரே! (இன்று) இருபத்தொன்பதாம் நாள் காலைதான்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்), “மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) தம் கை விரல்களை (விரித்து) மூன்று முறை சேர்த்துக் காட்டினார்கள். இரண்டு தடவை எல்லா விரல்களையும் விரித்தார்கள்; மூன்றாவது தடவை ஒன்பது விரல்களை மட்டுமே விரித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1814

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَّهُ قَالَ : ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اعْتَزَلَ نِسَاءَهُ شَهْرًا فَخَرَجَ إِلَيْنَا فِي تِسْعٍ وَعِشْرِينَ فَقُلْنَا إِنَّمَا الْيَوْمُ تِسْعٌ وَعِشْرُونَ فَقَالَ ‏ ‏إِنَّمَا الشَّهْرُ وَصَفَّقَ بِيَدَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ وَحَبَسَ إِصْبَعًا وَاحِدَةً فِي الْآخِرَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தம் மனைவியரிடமிருந்து ஒரு மாத காலம் விலகியிரு(க்கப்போவதாகக் கூறியிரு)ந்தார்கள். பின்னர் இருபத்தொன்பதாம் நாள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள், “இன்று இருபத்தொன்பதாவது நாள்தான்” என்று சொன்னோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று தடவை கைகளைத் தட்டி, இறுதியில் ஒரு விரலை மட்டும் விரிக்காமல் மடக்கி வைத்திருந்துவிட்டு, “மாதம் என்பது இப்படி(யும் இருபத்தொன்பது நாட்களாக) இருக்கும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)