அத்தியாயம்: 11, பாடம்: 36, ஹதீஸ் எண்: 1623

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏وَابْنِ نُمَيْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سِنَانٍ وَهُوَ ضِرَارُ بْنُ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَارِبِ بْنِ دِثَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثٍ فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ وَنَهَيْتُكُمْ عَنْ ‏ ‏النَّبِيذِ ‏ ‏إِلَّا فِي ‏ ‏سِقَاءٍ ‏ ‏فَاشْرَبُوا فِي ‏ ‏الْأَسْقِيَةِ ‏ ‏كُلِّهَا وَلَا تَشْرَبُوا مُسْكِرًا ‏


‏قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُبَيْدٍ الْيَامِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مُحَارِبِ بْنِ دِثَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بُرَيْدَةَ ‏ ‏أُرَاهُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏الشَّكُّ مِنْ ‏ ‏أَبِي خَيْثَمَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَبِيصَةُ بْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ الْخُرَاسَانِيِّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي سِنَانٍ

“நான் உங்களைக் கப்றுகளைக் காண்பதற்குச் செல்ல வேண்டாம் என்று (முன்னர்) தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் சென்று அவற்றைக் காணலாம். குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் காலம்வரை சேமித்துவைக்கலாம். ‘நபீத்’ எனும் மதுபானத்தை ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகலாம். ஆனால், போதையூட்டுகின்றவற்றை அருந்தாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 36, ஹதீஸ் எண்: 1622

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

‏زَارَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ ‏ ‏اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ

நபி (ஸல்), தம் தாயார் அடக்கப்பட்ட இடத்தைக் கண்டபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது, “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைக் காண்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, (நீங்களும்) கப்றுகளைச் சென்று காணுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!“ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 36, ஹதீஸ் எண்: 1621

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ يَعْنِي ابْنَ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اسْتَأْذَنْتُ رَبِّي أَنْ أَسْتَغْفِرَ لِأُمِّي فَلَمْ يَأْذَنْ لِي وَاسْتَأْذَنْتُهُ أَنْ أَزُورَ قَبْرَهَا فَأَذِنَ لِي

“நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது கப்றைக் காண்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 11, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1620

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَسَدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ فَكَانَ قَائِلُهُمْ يَقُولُ فِي رِوَايَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ وَفِي رِوَايَةِ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுக்கு, அவர்கள் அடக்கத் தலங்களுக்குச் செல்லும்போது கூற வேண்டியதைக் கற்றுக் கொடுத்துவந்தார்கள். அ(வ்வாறு கற்றுக் கொண்ட)வர்களுள் ஒருவர், “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு ல லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வ ல(க்)குமுல் ஆஃபிய்யா’ என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கற்றுக்கொடுத்ததாகக்) கூறினார்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள முஃமின்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! அல்லாஹ் நாடினால் நாம் (உங்களிடம்) வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். நான் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் விமோசனத்தை வேண்டுகிறேன்.)

அறிவிப்பாளர் : புரைதா பின் அல்ஹஸீப் அல்அஸ்லமீ (ரலி).


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பு, “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி …” என்றும் ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) வழி அறிவிப்பு, “அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி” என்றும் தொடங்குகிறது.

அத்தியாயம்: 11, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1619

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرِ بْنِ الْمُطَّلِبِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏مُحَمَّدَ بْنَ قَيْسٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏تُحَدِّثُ فَقَالَتْ ‏ ‏أَلَا أُحَدِّثُكُمْ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَنِّي قُلْنَا بَلَى ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مَنْ ‏ ‏سَمِعَ ‏ ‏حَجَّاجًا الْأَعْوَرَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏رَجُلٌ مِنْ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ قَيْسِ بْنِ مَخْرَمَةَ بْنِ الْمُطَّلِبِ ‏:‏

‏أَنَّهُ قَالَ يَوْمًا أَلَا أُحَدِّثُكُمْ عَنِّي وَعَنْ أُمِّي قَالَ فَظَنَنَّا أَنَّهُ يُرِيدُ أُمَّهُ الَّتِي وَلَدَتْهُ قَالَ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَلَا أُحَدِّثُكُمْ عَنِّي وَعَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُلْنَا بَلَى قَالَ قَالَتْ لَمَّا كَانَتْ لَيْلَتِي الَّتِي كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِيهَا عِنْدِي ‏ ‏انْقَلَبَ ‏ ‏فَوَضَعَ رِدَاءَهُ وَخَلَعَ نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عِنْدَ رِجْلَيْهِ وَبَسَطَ طَرَفَ إِزَارِهِ عَلَى فِرَاشِهِ فَاضْطَجَعَ فَلَمْ يَلْبَثْ إِلَّا ‏ ‏رَيْثَمَا ‏ ‏ظَنَّ أَنْ قَدْ رَقَدْتُ فَأَخَذَ رِدَاءَهُ رُوَيْدًا وَانْتَعَلَ رُوَيْدًا وَفَتَحَ الْبَابَ فَخَرَجَ ثُمَّ ‏ ‏أَجَافَهُ ‏ ‏رُوَيْدًا فَجَعَلْتُ دِرْعِي فِي رَأْسِي ‏ ‏وَاخْتَمَرْتُ ‏ ‏وَتَقَنَّعْتُ ‏ ‏إِزَارِي ثُمَّ انْطَلَقْتُ عَلَى إِثْرِهِ حَتَّى جَاءَ ‏ ‏الْبَقِيعَ ‏ ‏فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ انْحَرَفَ فَانْحَرَفْتُ فَأَسْرَعَ فَأَسْرَعْتُ فَهَرْوَلَ فَهَرْوَلْتُ ‏ ‏فَأَحْضَرَ ‏ ‏فَأَحْضَرْتُ ‏ ‏فَسَبَقْتُهُ فَدَخَلْتُ فَلَيْسَ إِلَّا أَنْ اضْطَجَعْتُ فَدَخَلَ فَقَالَ مَا لَكِ يَا ‏ ‏عَائِشُ ‏ ‏حَشْيَا ‏ ‏رَابِيَةً ‏ ‏قَالَتْ قُلْتُ لَا شَيْءَ قَالَ لَتُخْبِرِينِي أَوْ لَيُخْبِرَنِّي اللَّطِيفُ الْخَبِيرُ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي فَأَخْبَرْتُهُ قَالَ فَأَنْتِ ‏ ‏السَّوَادُ ‏ ‏الَّذِي رَأَيْتُ أَمَامِي قُلْتُ نَعَمْ ‏ ‏فَلَهَدَنِي ‏ ‏فِي صَدْرِي ‏ ‏لَهْدَةً ‏ ‏أَوْجَعَتْنِي ثُمَّ قَالَ أَظَنَنْتِ أَنْ ‏ ‏يَحِيفَ ‏ ‏اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قَالَتْ مَهْمَا ‏ ‏يَكْتُمِ ‏ ‏النَّاسُ يَعْلَمْهُ اللَّهُ نَعَمْ قَالَ ‏ ‏فَإِنَّ ‏ ‏جِبْرِيلَ ‏ ‏أَتَانِي حِينَ رَأَيْتِ فَنَادَانِي فَأَخْفَاهُ مِنْكِ فَأَجَبْتُهُ فَأَخْفَيْتُهُ مِنْكِ وَلَمْ يَكُنْ يَدْخُلُ عَلَيْكِ وَقَدْ وَضَعْتِ ثِيَابَكِ وَظَنَنْتُ أَنْ قَدْ رَقَدْتِ فَكَرِهْتُ أَنْ أُوقِظَكِ وَخَشِيتُ أَنْ تَسْتَوْحِشِي فَقَالَ إِنَّ رَبَّكَ يَأْمُرُكَ أَنْ تَأْتِيَ أَهْلَ ‏ ‏الْبَقِيعِ ‏ ‏فَتَسْتَغْفِرَ لَهُمْ قَالَتْ قُلْتُ كَيْفَ أَقُولُ لَهُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ قُولِي ‏ ‏السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ

ஒரு நாள் முஹம்மது பின் கைஸ் பின் மக்ரமா பின் அல்முத்தலிப் (ரஹ்), “நான் என்னைப் பற்றியும் என் அன்னையைப் பற்றியும் உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று கேட்டார். அவரை ஈன்றெடுத்த அன்னையைப் பற்றித்தான் அவர் குறிப்பிடுகின்றார் போலும் என்று நாங்கள் எண்ணினோம். (ஆனால்) பிறகு அவர் கூறினார்:

ஒரு நாள் அன்னை ஆயிஷா (ரலி), “நான் என்னைப் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றியும் உங்களுக்குச் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம் (சொல்லுங்கள்)” என்றோம். அப்போது அன்னை ஆயிஷா (ரலி) சொல்லத் தொடங்கினார்கள்:

“நபி (ஸல்) என்னுடன் தங்க வேண்டிய இரவில் (என்னிடம்) வந்தார்கள். தமது மேலாடையை (எடுத்துக் கீழே) வைத்தார்கள்; தம் காலணிகளைக் கழற்றித் தமது கால்மாட்டில் வைத்துவிட்டுத் தமது கீழாடையின் ஓரத்தைப் படுக்கையில் விரித்து அதில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். நான் கண்ணயர்ந்துவிட்டேன் என்று அவர்கள் எண்ணும் அளவு பொறுத்திருந்தார்கள். பின்னர், மெதுவாகத் தமது மேலாடையை எடுத்து (அணிந்து)கொண்டார்கள்; மெதுவாகக் காலணிகளை அணிந்தார்கள்; கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள்.

உடனே நான் எனது முக்காட்டுத் துணியை எடுத்து, தலையில் வைத்து (என்னை) மறைத்துக்கொண்டேன்; கீழாடையை அணிந்துகொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தேன். அவர்கள் பொது மையவாடியான ‘அல்பகீஉ’க்குச் சென்று நின்றார்கள்; அங்கு நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். பிறகு மூன்று முறை கைகளை உயர்த்தினார்கள். பிறகு (வீடு நோக்கித்) திரும்பினார்கள்; நானும் திரும்பினேன். அவர்கள் விரைவாக நடந்தபோது நானும் விரைவாக நடந்தேன். அவர்கள் ஓடிவந்தார்கள்; நானும் (அவ்வாறே விரைந்து) ஓடிவந்து, அவர்களுக்கு முன்னால் (வீட்டுக்கு) வந்து படுத்துக்கொண்டேன். நான் படுத்த சிறிது நேரத்தில் அவர்கள் (வீட்டுக்குள்) வந்து, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு ஏன் மூச்சு வாங்குகிறது?” என்று கேட்டார்கள். நான் ‘ஒன்றுமில்லை’ என்றேன். அதற்கு அவர்கள், “நீயாகச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் நுண்ணறிவாளனும் மென்மையானவனுமான அல்லாஹ் எனக்கு அறிவித்துவிடுவான்” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” என்று கூறிவிட்டு, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் “ஓ! நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்தக் கரிய உருவமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். உடனே அவர்கள் என் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளினார்கள். எனக்கு வலித்தது. பிறகு, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (உனக்கு) அநீதி இழைத்துவிடுவார்கள் என நீ எண்ணிக் கொண்டாயோ?“ என்று கேட்டார்கள். நான், “ஆம்! மனிதர்கள் என்னதான் மறைத்தாலும் அல்லாஹ் அதை அறிந்துவிடுவானே!” என்று கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ (இல்லத்தில்) என்னைக் கண்டபோது (வானவர்) ஜிப்ரீல் வந்து மறைவாக ஓரிடத்தில் நின்றுகொண்டு என்னை அழைத்தார். நானும் அவரது அழைப்பை ஏற்று உனக்குத் தெரியாமல் மறைவாக அவரிடம் சென்றேன். -(பொதுவாக) நீ உனது ஆடையைக் கழற்றிவைத்துவிட்ட நேரங்களில் அவர் நீ இருக்கும் இடத்திற்கு வரமாட்டார்- நான் நீ கண்ணயர்ந்துவிட்டதாக நினைத்தேன். தனியாக இருப்பதை நீ உணர்ந்தால் பயந்துவிடுவாய் என்று நான் எண்ணினேன். உன் உறக்கத்தைக் கலைக்கவும் நான் விரும்பவில்லை. அப்போது ஜிப்ரீல், “உம் இறைவன் உம்மை ‘பகீஉ’வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்’ என்று கூறினார்” என்றார்கள்.

தொடர்ந்து ஆயிஷா (ரலி) கூறினார்கள்:

நான் “அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,
‘அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்’ என்று சொல்” என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள முஃமின்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ் நாடி, நாங்கள் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்).

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் கஸீர் அல்முத்தலிப் (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1618

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏شَرِيكٍ وَهُوَ ابْنُ أَبِي نَمِرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏:‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى ‏ ‏الْبَقِيعِ ‏ ‏فَيَقُولُ ‏ ‏السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ اللَّهُمَّ اغْفِرْ لِأَهْلِ ‏ ‏بَقِيعِ الْغَرْقَدِ ‏


‏وَلَمْ يُقِمْ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏قَوْلَهُ وَأَتَاكُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) ‘பகீஉல் ஃகர்கத்’ பொது மையவாடிக்குச் சென்று,
“அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லிஅஹ்லி பகீஇல் ஃகர்கத்” என்று கூறுவார்கள்:

(பொருள்: இங்கு அடங்கியுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் (ஒரு)நாளைக்குச் சந்தித்தாக வேண்டும் என வாக்களிக்கப்பட்ட ஒன்று, அதன் தவணை முடிந்ததும் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடி, உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பளிப்பாயாக!)

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

குதைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களிடம் வந்துவிட்டது” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 11, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1617

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ يَعْنِي ابْنَ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ :‏‏

‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏لَمَّا تُوُفِّيَ ‏ ‏سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ‏ ‏قَالَتْ ادْخُلُوا بِهِ الْمَسْجِدَ حَتَّى أُصَلِّيَ عَلَيْهِ فَأُنْكِرَ ذَلِكَ عَلَيْهَا ‏فَقَالَتْ وَاللَّهِ لَقَدْ ‏ ‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ابْنَيْ ‏ ‏بَيْضَاءَ ‏ ‏فِي الْمَسْجِدِ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏وَأَخِيهِ ‏


‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏سُهَيْلُ بْنُ دَعْدٍ ‏ ‏وَهُوَ ابْنُ ‏ ‏الْبَيْضَاءِ ‏ ‏أُمُّهُ ‏ ‏بَيْضَاءُ

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) இறந்தபோது “அவரது மையித்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லுங்கள்; அவருக்காக நான் தொழப்போகிறேன்” என ஆயிஷா (ரலி) கூறினார்கள். அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டபோது, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பைளா (எனும் பெண்மணி) உடைய இரு மகன்களான ஸுஹைலுக்கும் அவருடைய சகோதரருக்கும் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்”’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)


குறிப்பு :

ஸுஹைல் (ரலி) உடைய தாயின் இயற் பெயர் ’தஅத்‘ என்பதாகும். ’தஅத்’தின் பிரபலமான (காரணப்) பெயர் ’பைளா’ என்பதாகும். எனவே, தாயின் பெயரோடு அறியப்படும் “ஸுஹைல் பின் ’தஅத்‘ என்பவரும் ஸுஹைல் பின் பைளா என்பவரும் ஒருவரே“ என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 11, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1616

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَاحِدِ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ :‏

 ‏أَنَّهَا لَمَّا تُوُفِّيَ ‏ ‏سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ‏ ‏أَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَمُرُّوا بِجَنَازَتِهِ فِي الْمَسْجِدِ فَيُصَلِّينَ عَلَيْهِ فَفَعَلُوا فَوُقِفَ بِهِ عَلَى حُجَرِهِنَّ يُصَلِّينَ عَلَيْهِ أُخْرِجَ بِهِ مِنْ بَابِ الْجَنَائِزِ الَّذِي كَانَ إِلَى الْمَقَاعِدِ فَبَلَغَهُنَّ أَنَّ النَّاسَ عَابُوا ذَلِكَ وَقَالُوا مَا كَانَتْ الْجَنَائِزُ يُدْخَلُ بِهَا الْمَسْجِدَ فَبَلَغَ ذَلِكَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقَالَتْ ‏‏مَا أَسْرَعَ النَّاسَ إِلَى أَنْ يَعِيبُوا مَا لَا عِلْمَ لَهُمْ بِهِ عَابُوا عَلَيْنَا أَنْ يُمَرَّ بِجَنَازَةٍ فِي الْمَسْجِدِ وَمَا صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏سُهَيْلِ بْنِ بَيْضَاءَ ‏ ‏إِلَّا فِي جَوْفِ الْمَسْجِدِ

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) இறந்தபோது அவரது மையித்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுவருமாறும், தாங்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழப்போவதாகவும் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் சொல்லி அனுப்பினார்கள். அவ்வாறே மக்களும் செய்தனர். அப்போது அவரது மையித் நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் அறைகளுக்கு அருகில் கொண்டுவந்து, அவர்கள் தொழுதுகொள்வதற்காக வைக்கப்பட்டது. பிறகு, ‘மகாஇத்’ எனும் இடம் நோக்கி இருந்த ‘பாபுல் ஜனாயிஸ்’ தலைவாயில் வழியாக வெளியே கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து மக்கள் குறை கூறுவதாகவும் “மையித்கள் பள்ளிவாசலுக்குள் கொண்டுசெல்லப்படாது” என்று அவர்கள் பேசிக்கொள்வதாகவும் நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்குச் செய்தி எட்டியது. அப்போது நான், “மக்கள் தங்களுக்குத் தெரியாத விஷயத்தில் ஏன் அவசரப்பட்டுக் குறை கூறுகின்றனர்? பள்ளிவாசலுக்குள் ஒரு மையித்தைக் கொண்டுசென்றதற்காக எங்களை அவர்கள் குறை சொல்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஸுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலின் நடுப் பகுதியில்தான் தொழுகை நடத்தினார்கள் என்று கூறினேன்”.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1615

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِإِسْحَقَ ‏ ‏قَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَاحِدِ بْنِ حَمْزَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ :‏‏

‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَمَرَتْ أَنْ يَمُرَّ بِجَنَازَةِ ‏ ‏سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏فِي الْمَسْجِدِ فَتُصَلِّيَ عَلَيْهِ فَأَنْكَرَ النَّاسُ ذَلِكَ عَلَيْهَا فَقَالَتْ ‏ ‏مَا أَسْرَعَ مَا نَسِيَ النَّاسُ مَا صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏سُهَيْلِ بْنِ الْبَيْضَاءِ ‏ ‏إِلَّا فِي الْمَسْجِدِ

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் மையித்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுசென்று தொழுகை நடத்துமாறு ஆயிஷா (ரலி) கூறினார்கள். மக்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது ஆயிஷா (ரலி), “மக்கள் எவ்வளவு விரைவாக மறந்துவிடுகின்றனர்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஸுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 33, ஹதீஸ் எண்: 1614

و حَدَّثَنَا ‏ ‏حَسَنُ بْنُ الرَّبِيعِ الْبَجَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ ‏ ‏قَالَ :‏‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا تُصَلُّوا إِلَى الْقُبُورِ وَلَا تَجْلِسُوا عَلَيْهَا

“கப்றுகளை நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீது உட்காராதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற நான் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : அபூமர்ஸத் கன்னாஸ் அல்ஃகனவீ (ரலி)