அத்தியாயம்: 11, பாடம்: 33, ஹதீஸ் எண்: 1613

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جَابِرٍ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏وَاثِلَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَجْلِسُوا عَلَى الْقُبُورِ وَلَا تُصَلُّوا إِلَيْهَا

“கபுறுகளின் மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமர்ஸத் கன்னாஸ் அல்ஃகனவீ (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 33, ஹதீஸ் எண்: 1612

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ ‏ ‏فَتَخْلُصَ ‏ ‏إِلَى جِلْدِهِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ ‏


و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

“உங்களில் ஒருவர், ஒரு கப்றின் மீது உட்கார்வது என்பது, அவர் ஒரு நெருப்புக் கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து, அவரது தோலையும் பொசுக்குவதைவிட அவருக்குத் தீமை பயப்பதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1611

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ :‏‏

‏نُهِيَ عَنْ ‏ ‏تَقْصِيصِ ‏ ‏الْقُبُورِ

கப்றுகள் காரையால் பூசப்படுவது தடை செய்யப்பட்டது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1610

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ :‏

‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏يُجَصَّصَ ‏ ‏الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ ‏ ‏يُبْنَى عَلَيْهِ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏ ‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 31, ஹதீஸ் எண்: 1609

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ ‏ ‏قَالَ :‏

‏قَالَ لِي ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏ ‏أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا ‏ ‏طَمَسْتَهُ ‏ ‏وَلَا قَبْرًا ‏ ‏مُشْرِفًا ‏ ‏إِلَّا سَوَّيْتَهُ ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَبِيبٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏وَلَا صُورَةً إِلَّا ‏ ‏طَمَسْتَهَا

அலீ பின் அபீதாலிப் (ரலி) என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகின்றேன். (என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ (ரஹ்


குறிப்பு :

அபூபக்ரு பின் கல்லாத் அல் பாஹிலீ (ரஹ்) வழி அறிவிப்பில், “எந்த உருவப் படங்களையும் நீர் அழிக்காமல் விடாதீர்!” என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 11, பாடம்: 31, ஹதீஸ் எண்: 1608

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏أَبِي الطَّاهِرِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا عَلِيٍّ الْهَمْدَانِيَّ ‏ ‏حَدَّثَهُ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏هَارُونَ ‏ ‏أَنَّ ‏ ‏ثُمَامَةَ بْنَ شُفَيٍّ ‏ ‏حَدَّثَهُ قَالَ :‏

‏كُنَّا مَعَ ‏ ‏فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ‏ ‏بِأَرْضِ ‏ ‏الرُّومِ ‏ ‏بِرُودِسَ ‏ ‏فَتُوُفِّيَ صَاحِبٌ لَنَا فَأَمَرَ ‏ ‏فَضَالَةُ بْنُ عُبَيْدٍ ‏ ‏بِقَبْرِهِ فَسُوِّيَ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَأْمُرُ بِتَسْوِيَتِهَا

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள ‘ரூதிஸ்’ தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி), அவரது கப்றைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் “கப்றைத் தரை மட்டமாக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஃபளாலா பின் உபைத் (ரலி) வழியாக ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 30, ஹதீஸ் எண்: 1607

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو جَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏

‏جُعِلَ فِي قَبْرِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَطِيفَةٌ ‏ ‏حَمْرَاءُ ‏


‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏أَبُو جَمْرَةَ ‏ ‏اسْمُهُ ‏ ‏نَصْرُ بْنُ عِمْرَانَ ‏ ‏وَأَبُو التَّيَّاحِ ‏ ‏وَاسْمَهْ ‏ ‏يَزِيدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏مَاتَا ‏ ‏بِسَرَخْسَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கப்றுக்குள் சிவப்புப் போர்வை ஒன்று விரிக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள அபூஜம்ரா என்பவரின் பெயர் நஸ்ரு பின் இம்ரான் என்பதாகும். (இங்கு இடம்பெறாத மற்றொருவரான) அபுத்தய்யாஹ் என்பாரின் பெயர் யஸீத் பின் ஹுமைத் ஆகும். இவர்கள் இருவரும் (குராஸான் நாட்டிலுள்ள) ‘ஸரக்ஸ்’ எனும் ஊரில் இறந்தனர் என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 11, பாடம்: 29, ஹதீஸ் எண்: 1606

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الْمِسْوَرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ :‏

‏أَنَّ ‏ ‏سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ ‏ ‏قَالَ فِي مَرَضِهِ الَّذِي هَلَكَ فِيهِ ‏ ‏الْحَدُوا لِي لَحْدًا وَانْصِبُوا عَلَيَّ اللَّبِنَ نَصْبًا كَمَا صُنِعَ بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

(என் தந்தை) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) இறந்துபோகுமுன் நோயில் இருந்தபோது, “(நான் இறந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்யப்பட்டதைப் போன்று, (குழியினுள்) எனக்காக உட்குழியொன்றை வெட்டுங்கள்; என்(உடல்)மேல் செங்கற்களைச் சீராக அடுக்குங்கள்!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அவருடய மகன் ஆமிர் (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 28, ஹதீஸ் எண்: 1605

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكِ بْنِ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏قَالَ : ‏

‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏ابْنِ الدَّحْدَاحِ ‏ ‏ثُمَّ أُتِيَ بِفَرَسٍ ‏ ‏عُرْيٍ ‏ ‏فَعَقَلَهُ ‏ ‏رَجُلٌ فَرَكِبَهُ فَجَعَلَ ‏ ‏يَتَوَقَّصُ ‏ ‏بِهِ وَنَحْنُ نَتَّبِعُهُ ‏ ‏نَسْعَى خَلْفَهُ قَالَ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏كَمْ مِنْ ‏ ‏عِذْقٍ ‏ ‏مُعَلَّقٍ أَوْ مُدَلًّى فِي الْجَنَّةِ ‏ ‏لِابْنِ الدَّحْدَاحِ ‏


‏أَوْ قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏لِأَبِي الدَّحْدَاحِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இப்னுத் தஹ்தாஹ் (ரலி) அவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை தொழுவித்த பிறகு அவர்களிடம் சேணம் பூட்டப்படாத குதிரையொன்று கொண்டுவரப்பட்டது. அதை ஒருவர் பிடித்துக்கொள்ள அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏறிக்கொண்டார்கள். அது சீராக ஓடலாயிற்று. நாங்கள் அதைப் பின்தொடர்ந்து விரைந்து நடக்கலானோம். அப்போது அங்கிருந்தவர்களுள் ஒருவர், “இப்னுத் தஹ்தாஹ் (அல்லது அபுத்தஹ்தாஹ் என்பது ஷுஅபாவிடமிருந்து அறிவிப்பவரின் ஐயம்) அவர்களுக்காக சொர்க்கத்தில் எத்தனையோ பேரீச்சங்குலைகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன என நபி (ஸல்) கூறினார்கள்” என்றார்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 28, ஹதீஸ் எண்: 1604

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ مِغْوَلٍ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكِ بْنِ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏قَالَ :‏

‏أُتِيَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِفَرَسٍ ‏ ‏مُعْرَوْرًى ‏ ‏فَرَكِبَهُ حِينَ انْصَرَفَ مِنْ جَنَازَةِ ‏ ‏ابْنِ الدَّحْدَاحِ ‏ ‏وَنَحْنُ نَمْشِي حَوْلَهُ

நபி (ஸல்) இப்னுத் தஹ்தாஹ் (ரலி) அவர்களது நல்லடக்கத்தை முடித்தபோது அவர்களிடம் சேணம் பூட்டப்படாத குதிரையொன்று கொண்டுவரப்பட்டது. அதிலேறி அவர்கள் திரும்பினார்கள். நாங்கள் நபியவர்களைச் சுற்றிலும் நடந்துவந்தோம்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)