அத்தியாயம்: 11, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1553

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَسْبَاطٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ :‏‏

‏أَخَذَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْبَيْعَةِ أَلَّا ‏ ‏تَنُحْنَ ‏ ‏فَمَا وَفَتْ مِنَّا غَيْرُ خَمْسٍ مِنْهُنَّ ‏ ‏أُمُّ سُلَيْمٍ

“ஒப்பாரி வைக்கக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும், இந்த வாக்குறுதியை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறெவரும் நிறைவேற்றவில்லை. அவர்களில் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களும் ஒருவராவார்.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி) வழியாக ஹஃப்ஸா பின்த்தி ஸீரீன் (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1552

حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ :‏‏

‏أَخَذَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَعَ الْبَيْعَةِ أَلَّا ‏ ‏نَنُوحَ ‏ ‏فَمَا وَفَتْ مِنَّا امْرَأَةٌ إِلَّا خَمْسٌ ‏ ‏أُمُّ سُلَيْمٍ ‏ ‏وَأُمُّ الْعَلَاءِ ‏ ‏وَابْنَةُ أَبِي سَبْرَةَ ‏ ‏امْرَأَةُ ‏ ‏مُعَاذٍ ‏ ‏أَوْ ابْنَةُ ‏ ‏أَبِي سَبْرَةَ ‏ ‏وَامْرَأَةُ ‏ ‏مُعَاذٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் (இறைநம்பிக்கைக்கான) உறுதி மொழி வாங்கியபோது, ’ஒப்பாரிவைக்கக் கூடாது’ என்றும் உறுதிமொழியை வாங்கினார்கள். எனினும், இந்த வாக்குறுதியை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறெவரும் நிறைவேற்றவில்லை. அப்பெண்கள்: உம்மு ஸுலைம் (ரலி), உம்முல் அலா (ரலி), முஆத் (ரலி) அவர்களின் துணைவியான அபூஸப்ராவின் மகள், மற்றும் முஆத் (ரலி) அவர்களின் துணைவி ஆகியோராவர்.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி) வழியாக முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1551

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏يَقُولُ أَخْبَرَتْنِي ‏ ‏عَمْرَةُ ‏ ‏أَنَّهَا سَمِعَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏تَقُولُ :‏‏

‏لَمَّا جَاءَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَتْلُ ‏ ‏ابْنِ حَارِثَةَ ‏ ‏وَجَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ ‏ ‏وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ ‏ ‏جَلَسَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُعْرَفُ فِيهِ الْحُزْنُ قَالَتْ وَأَنَا أَنْظُرُ مِنْ ‏ ‏صَائِرِ ‏ ‏الْبَابِ شَقِّ الْبَابِ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ أَنْ يَذْهَبَ ‏ ‏فَيَنْهَاهُنَّ فَذَهَبَ فَأَتَاهُ فَذَكَرَ أَنَّهُنَّ لَمْ يُطِعْنَهُ فَأَمَرَهُ الثَّانِيَةَ أَنْ يَذْهَبَ ‏ ‏فَيَنْهَاهُنَّ فَذَهَبَ ثُمَّ أَتَاهُ فَقَالَ وَاللَّهِ لَقَدْ ‏ ‏غَلَبْنَنَا ‏ ‏يَا رَسُولَ اللَّهِ قَالَتْ فَزَعَمَتْ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏اذْهَبْ ‏ ‏فَاحْثُ ‏ ‏فِي أَفْوَاهِهِنَّ مِنْ التُّرَابِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقُلْتُ ‏ ‏أَرْغَمَ اللَّهُ أَنْفَكَ ‏ ‏وَاللَّهِ مَا تَفْعَلُ مَا أَمَرَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَمَا تَرَكْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الْعَنَاءِ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُسْلِمٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏وَمَا تَرَكْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏الْعِيِّ

ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் (மூத்தாப் போரில்) கொல்லப்பட்ட செய்தி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். நான் கதவிடுக்கில் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் வந்து “அல்லாஹ்வின் தூதரே, ஜஅஃபர் (ரலி) அவர்களின் குடும்பப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுகின்றனர்” எனக் கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்றுவிட்டுத் திரும்பிவந்து “அவர்கள் எனது சொல்லுக்குக் கட்டுப்படவில்லை” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “நீர் சென்று அவர்களைத் தடுத்து நிறுத்துவீராக!” என இரண்டாவது முறையும் கட்டளையிட்டார்கள். அவர் சென்றுவிட்டு (மூன்றாவது முறையாக) வந்து “அல்லாஹ்வின் மீதாணையாக, எம்மை அப்பெண்கள் மிகைத்து விட்டனர் (அவர்களை எங்களால் அமைதிப்படுத்த முடியவில்லை), அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் சென்று, அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப் போடும்” எனக் (கடிந்து) கூறினார்கள் என நான் நினைக்கிறேன். நான் (அவரை நோக்கி), “அல்லாஹ் உமது மூக்கை மண்ணைக் கவ்வச் செய்வானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை; இன்னும் அவர்களைத் துன்பத்துக்கு உள்ளாக்குவதையும் நீர் நிறுத்தவில்லை” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்துல் அஸீஸ் பின் முஸ்லிம் (ரஹ்) அறிவிப்பில், (துன்பத்துக்குள்ளாக்குவது என்பதைக் குறிக்க ‘அல்அநாஉ’ எனும் சொல்லுக்கு பதிலாக) ‘அல்இய்யு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.

அத்தியாயம்: 11, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1550

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبَانُ بْنُ يَزِيدَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَبَّانُ بْنُ هِلَالٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا سَلَّامٍ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا مَالِكٍ الْأَشْعَرِيَّ ‏ ‏حَدَّثَهُ ‏:‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَرْبَعٌ فِي أُمَّتِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ لَا يَتْرُكُونَهُنَّ الْفَخْرُ فِي الْأَحْسَابِ وَالطَّعْنُ فِي الْأَنْسَابِ وَالْاسْتِسْقَاءُ بِالنُّجُومِ ‏ ‏وَالنِّيَاحَةُ ‏ ‏وَقَالَ النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِهَا تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا ‏ ‏سِرْبَالٌ ‏ ‏مِنْ ‏ ‏قَطِرَانٍ ‏ ‏وَدِرْعٌ مِنْ جَرَبٍ

“என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றை (இலேசில்) கைவிடமாட்டார்கள். (அவை:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரக(மாற்ற)ங்களால் மழை பொழியும் என எதிர் பார்ப்பது மற்றும் ஒப்பாரி வைத்து அழுவது.

ஒப்பாரி வைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தார்-ஆல் ஆன நீளமான அங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1549

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ عُبَيْدٍ الطَّائِيِّ ‏ ‏وَمُحَمَّدِ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ رَبِيعَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَوَّلُ مَنْ ‏ ‏نِيحَ ‏ ‏عَلَيْهِ ‏ ‏بِالْكُوفَةِ ‏ ‏قَرَظَةُ بْنُ كَعْبٍ ‏ ‏فَقَالَ ‏ ‏الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ ‏:‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ ‏ ‏نِيحَ ‏ ‏عَلَيْهِ فَإِنَّهُ يُعَذَّبُ بِمَا ‏ ‏نِيحَ ‏ ‏عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ قَيْسٍ الْأَسْدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ رَبِيعَةَ الْأَسْدِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ يَعْنِي الْفَزَارِيَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عُبَيْدٍ الطَّائِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ

கூஃபாவில் கரளா பின் கஅப் (ரலி) இறந்ததற்காகவே முதன்முதலில் ஒப்பாரி வைக்கப்பட்டது. அப்போது (கூஃபாவின் ஆட்சியாளராயிருந்த) முஃகீரா பின் ஷுஅபா (ரலி), “யாருக்காக ஒப்பாரி வைக்கப்படுகிறதோ அவர் அதனால் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா (ரலி) வழியாக அலீ பின் ரபீஆ அல்அஸ்தீ (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1548

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا سَمِعَتْ ‏ ‏عَائِشَةَ:‏

‏وَذُكِرَ لَهَا أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏يَقُولُ إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏يَغْفِرُ اللَّهُ ‏ ‏لِأَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَمَا إِنَّهُ لَمْ يَكْذِبْ وَلَكِنَّهُ نَسِيَ أَوْ أَخْطَأَ إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى يَهُودِيَّةٍ ‏ ‏يُبْكَى عَلَيْهَا فَقَالَ ‏ ‏إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا

“உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி), “அல்லாஹ். அபூஅப்திர் ரஹ்மானை மன்னிப்பானாக! அவர் நிச்சயமாக பொய்யுரைக்கவில்லை; எனினும். அவர் மறந்திருக்கலாம். அல்லது தவறாக விளங்கியிருக்கலாம்; (நடந்தது யாதெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு யூதப் பெண்ணின் பிரேதத்தைக் கடந்துசென்றார்கள். அவளுக்காகச் சிலர் அழுதுகொண்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘இவர்கள் அவளுக்காக அழுகின்றனர். அவளோ தனது சவக் குழியில் வேதனை செய்யப்படுகின்றாள்’ என்றுதான் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அம்ரா பின்த்தி அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1547

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏:‏

‏ذُكِرَ عِنْدَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَرْفَعُ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ فَقَالَتْ ‏ ‏وَهِلَ ‏ ‏إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّهُ لَيُعَذَّبُ بِخَطِيئَتِهِ ‏ ‏أَوْ بِذَنْبِهِ ‏ ‏وَإِنَّ أَهْلَهُ لَيَبْكُونَ عَلَيْهِ الْآنَ وَذَاكَ مِثْلُ قَوْلِهِ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ عَلَى ‏ ‏الْقَلِيبِ ‏ ‏يَوْمَ ‏ ‏بَدْرٍ ‏ ‏وَفِيهِ قَتْلَى ‏ ‏بَدْرٍ ‏ ‏مِنْ الْمُشْرِكِينَ فَقَالَ لَهُمْ مَا قَالَ إِنَّهُمْ لَيَسْمَعُونَ مَا أَقُولُ وَقَدْ ‏ ‏وَهِلَ ‏ ‏إِنَّمَا قَالَ إِنَّهُمْ لَيَعْلَمُونَ أَنَّ مَا كُنْتُ أَقُولُ لَهُمْ حَقٌّ ثُمَّ قَرَأَتْ ‏”‏إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى” “‏وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ“ ‏ يَقُولُ حِينَ ‏ ‏تَبَوَّءُوا ‏ ‏مَقَاعِدَهُمْ مِنْ النَّارِ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏وَحَدِيثُ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏أَتَمُّ

“இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகின்றார்” என்று நபி (ஸல்) சொன்னதாக இப்னு உமர் (ரலி) கூறுகின்றார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆயிஷா (ரலி), “இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அப்படிச் சொல்லவில்லை.) “இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகின்றார். அவருடைய குடும்பத்தாரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்” என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால், (குறைஷித் தலைவர்களான) இணைவைப்பாளர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதோ பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “உயிரற்ற சடலங்களிடமா பேசுகின்றீர்கள்?” என்று உமர் (ரலி) கேட்க, “நான் கூறுவதை அவர்கள் செவியுறுகின்றார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளித்ததாக இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார்.

“நான் அவர்களுக்குச் சொல்லிவந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகின்றார்கள்” என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (“இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகின்றார்கள்” என்று சொல்லவில்லை). பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்:

(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80).
(நபியே!) மண்ணறைகளில் (கப்று) இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது (35:22).
“நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)” என ஆயிஷா (ரலி) (விளக்கம்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1546

و حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادٍ ‏ ‏قَالَ ‏ ‏خَلَفٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏‏

‏ذُكِرَ عِنْدَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَوْلُ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ فَقَالَتْ رَحِمَ اللَّهُ ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏سَمِعَ شَيْئًا فَلَمْ يَحْفَظْهُ إِنَّمَا مَرَّتْ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَنَازَةُ يَهُودِيٍّ وَهُمْ يَبْكُونَ عَلَيْهِ فَقَالَ ‏ ‏أَنْتُمْ تَبْكُونَ وَإِنَّهُ لَيُعَذَّبُ

“இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்” என இப்னு உமர் (ரலி) கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி), “அல்லாஹ் அபூஅப்திர் ரஹ்மானுக்கு அருள்புரிவானாக! அவர் ஒரு ஹதீஸைச் செவியுற்றார்; ஆனால், அதை அவர் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. (உண்மையில் என்ன நடந்தது என்றால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு யூதரின் பிரேதம் சென்றது. அவருக்காக யூதர்கள் அழுதுகொண்டிருந்தனர். அப்போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் அழுதுகொண்டிருக்கின்றீர்கள். ஆனால், அதுவோ வேதனை செய்யப்படுகின்றது” என்று கூறினார்கள். (இறைநம்பிக்கையாளர்கள் விஷயத்தில் அல்ல).

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1545

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُمَرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏أَنَّ ‏ ‏سَالِمًا ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ

“உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1544

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ ‏ ‏قَالَ :‏‏

‏تُوُفِّيَتْ ‏ ‏ابْنَةٌ ‏ ‏لِعُثْمَانَ بْنِ عَفَّانَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏قَالَ فَجِئْنَا لِنَشْهَدَهَا قَالَ فَحَضَرَهَا ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏وَابْنُ عَبَّاسٍ ‏ ‏قَالَ وَإِنِّي لَجَالِسٌ بَيْنَهُمَا قَالَ جَلَسْتُ إِلَى أَحَدِهِمَا ثُمَّ جَاءَ الْآخَرُ فَجَلَسَ إِلَى جَنْبِي فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏لِعَمْرِو بْنِ عُثْمَانَ ‏ ‏وَهُوَ مُوَاجِهُهُ أَلَا ‏ ‏تَنْهَى عَنْ الْبُكَاءِ فَإِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏قَدْ كَانَ ‏ ‏عُمَرُ ‏ ‏يَقُولُ بَعْضَ ذَلِكَ ثُمَّ حَدَّثَ فَقَالَ ‏ ‏صَدَرْتُ ‏ ‏مَعَ ‏ ‏عُمَرَ ‏ ‏مِنْ ‏ ‏مَكَّةَ ‏ ‏حَتَّى إِذَا كُنَّا ‏ ‏بِالْبَيْدَاءِ ‏ ‏إِذَا هُوَ بِرَكْبٍ تَحْتَ ظِلِّ شَجَرَةٍ فَقَالَ اذْهَبْ فَانْظُرْ مَنْ هَؤُلَاءِ الرَّكْبُ فَنَظَرْتُ فَإِذَا هُوَ ‏ ‏صُهَيْبٌ ‏ ‏قَالَ فَأَخْبَرْتُهُ فَقَالَ ادْعُهُ لِي قَالَ فَرَجَعْتُ إِلَى ‏ ‏صُهَيْبٍ ‏ ‏فَقُلْتُ ‏ ‏ارْتَحِلْ ‏ ‏فَالْحَقْ أَمِيرَ الْمُؤْمِنِينَ فَلَمَّا أَنْ أُصِيبَ ‏ ‏عُمَرُ ‏ ‏دَخَلَ ‏ ‏صُهَيْبٌ ‏ ‏يَبْكِي يَقُولُ وَا ‏ ‏أَخَاهْ وَا ‏ ‏صَاحِبَاهْ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏يَا ‏ ‏صُهَيْبُ ‏ ‏أَتَبْكِي عَلَيَّ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبَعْضِ بُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏فَلَمَّا مَاتَ ‏ ‏عُمَرُ ‏ ‏ذَكَرْتُ ذَلِكَ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏فَقَالَتْ يَرْحَمُ اللَّهُ ‏ ‏عُمَرَ ‏ ‏لَا وَاللَّهِ مَا حَدَّثَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ يُعَذِّبُ الْمُؤْمِنَ بِبُكَاءِ أَحَدٍ وَلَكِنْ قَالَ ‏ ‏إِنَّ اللَّهَ يَزِيدُ الْكَافِرَ عَذَابًا بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ‏


‏قَالَ وَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏حَسْبُكُمْ الْقُرْآنُ ” ‏‏وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى“ ‏ ‏قَالَ وَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏عِنْدَ ذَلِكَ ”‏ وَاللَّهُ ‏أَضْحَكَ وَأَبْكَى“ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي مُلَيْكَةَ ‏ ‏فَوَاللَّهِ مَا قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏مِنْ شَيْءٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي مُلَيْكَةَ ‏ ‏كُنَّا فِي جَنَازَةِ ‏ ‏أُمِّ أَبَانَ بِنْتِ عُثْمَانَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ وَلَمْ يَنُصَّ رَفْعَ الْحَدِيثِ عَنْ ‏ ‏عُمَرَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا نَصَّهُ ‏ ‏أَيُّوبُ ‏ ‏وَابْنُ جُرَيْجٍ ‏ ‏وَحَدِيثُهُمَا أَتَمُّ مِنْ حَدِيثِ ‏ ‏عَمْرٍو

மக்காவில் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய மகள் இறந்தபோது, நாங்கள் ஜனாஸாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றோம். அங்கு இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் வந்திருந்தனர். நான் அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தேன். (முதலில்) அவர்களில் ஒருவருக்கு அருகில் நான் அமர்ந்தேன். பிறகு மற்றொருவர் வந்து எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். அப்போது இப்னு உமர் (ரலி) தமக்கு எதிரே அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களுடைய மகன் அம்ரு அவர்களிடம் “நீங்கள் (சப்தமிட்டு) அழுபவர்களைத் தடுக்கக் கூடாதா? இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்றார்.

உடனே இப்னு அப்பாஸ் (ரலி), “உமர் (ரலி) இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறியிருக்கிறார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். நாங்கள் ‘பைதாஉ’ எனும் இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டத்தைக் கண்டோம். அப்போது, ‘நீங்கள் சென்று அந்த வாகனக் கூட்டத்தார் யார் எனப் பார்த்து வாருங்கள்!’ என உமர் (ரலி) கூறி(என்னை அனுப்பி)னார்கள். நான் (அங்குச் சென்று) பார்த்தபோது அங்கே ஸுஹைப் (ரலி) இருந்தார்கள். நான் திரும்பி வந்து உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். ‘அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என உமர் (ரலி) கூறினார்கள். நான் மீண்டும் ஸுஹைப் (ரலி) அவர்களிடம் சென்று, நீங்கள் புறப்படுங்கள்; இறைநம்பிக்கையாளர்களின் தலைவருடன் சேர்ந்துகொள்ளுங்கள்” என்று கூறினேன்.

பின்னர் (சிறிது நாட்களுக்குப் பின்) உமர் (ரலி) (கத்தியால்) குத்தப்பட்டபோது அவர்களிடம் “சகோதரரே! நண்பரே!” எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி), நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி), “ஸுஹைபே! எனக்காகவா நீங்கள் அழுகின்றீர்கள்? ‘இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள் அல்லவா?” என்றார்கள்.

உமர் (ரலி) இறந்தபோது, (இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி), “அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள்புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! ‘(எவரோ) ஒருவர் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறவில்லை. மாறாக, ‘குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தால் இறைமறுப்பாளருக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான்’ என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்று சொல்லி விட்டு, “ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ எனும் (35:18ஆவது) இறை வசனமே உங்களுக்கு (சான்றுக்கு)ப் போதும்” என்றார்கள்.

இதைக் கூறி முடித்தபோது “அல்லாஹ்வே சிரிக்க வைக்கின்றான்; அழவும் வைக்கின்றான்” (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்).


குறிப்புகள் :

“அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு அப்பாஸ் (ரலி) அவ்வாறு கூறியதற்கு இப்னு உமர் (ரலி) (ஆட்சேபணை) எதுவும் தெரிவிக்கவில்லை” என அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) கூறினார் என்று .அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) கூறினார்.

அப்துர்ரஹ்மான் பின் பிஷ்ரு (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய மகள் உம்மு அபான் அவர்களின் ஜனாஸாவில் இருந்தோம் …” என்று  தொடங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.

இந்த அறிவிப்பு, அய்யூப் பின் அபீ தமீமா (ரஹ்) மற்றும் இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் (முந்தைய) ஹதீஸ்களில் உள்ளதைப் போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து உமர் (ரலி) கூறியதாக நிறுவப்படவில்லை. ஆயினும், அவ்விருவரின் ஹதீஸே முழுமையானதாகும்.