அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1543

حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ ‏ ‏قَالَ :‏‏

‏كُنْتُ جَالِسًا إِلَى جَنْبِ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏وَنَحْنُ نَنْتَظِرُ جَنَازَةَ ‏ ‏أُمِّ أَبَانَ بِنْتِ عُثْمَانَ ‏ ‏وَعِنْدَهُ ‏ ‏عَمْرُو بْنُ عُثْمَانَ ‏ ‏فَجَاءَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يَقُودُهُ قَائِدٌ فَأُرَاهُ أَخْبَرَهُ بِمَكَانِ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏فَجَاءَ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِي فَكُنْتُ بَيْنَهُمَا فَإِذَا صَوْتٌ مِنْ الدَّارِ فَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏كَأَنَّهُ يَعْرِضُ عَلَى ‏ ‏عَمْرٍو ‏ ‏أَنْ يَقُومَ ‏ ‏فَيَنْهَاهُمْ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ قَالَ فَأَرْسَلَهَا ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏مُرْسَلَةً ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏كُنَّا مَعَ أَمِيرِ الْمُؤْمِنِينَ ‏ ‏عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏حَتَّى إِذَا كُنَّا ‏ ‏بِالْبَيْدَاءِ ‏ ‏إِذَا هُوَ بِرَجُلٍ نَازِلٍ فِي ظِلِّ شَجَرَةٍ فَقَالَ لِي اذْهَبْ فَاعْلَمْ لِي مَنْ ذَاكَ الرَّجُلُ فَذَهَبْتُ فَإِذَا هُوَ ‏ ‏صُهَيْبٌ ‏ ‏فَرَجَعْتُ إِلَيْهِ فَقُلْتُ إِنَّكَ أَمَرْتَنِي أَنْ أَعْلَمَ لَكَ مَنْ ذَاكَ وَإِنَّهُ ‏ ‏صُهَيْبٌ ‏ ‏قَالَ مُرْهُ فَلْيَلْحَقْ بِنَا فَقُلْتُ إِنَّ مَعَهُ أَهْلَهُ قَالَ وَإِنْ كَانَ مَعَهُ أَهْلُهُ ‏ ‏وَرُبَّمَا قَالَ ‏ ‏أَيُّوبُ ‏ ‏مُرْهُ فَلْيَلْحَقْ بِنَا ‏ ‏فَلَمَّا قَدِمْنَا لَمْ يَلْبَثْ أَمِيرُ الْمُؤْمِنِينَ أَنْ أُصِيبَ فَجَاءَ ‏ ‏صُهَيْبٌ ‏ ‏يَقُولُ وَا ‏ ‏أَخَاهْ وَا ‏ ‏صَاحِبَاهْ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏أَلَمْ تَعْلَمْ ‏ ‏أَوَ لَمْ تَسْمَعْ ‏ ‏قَالَ ‏ ‏أَيُّوبُ ‏ ‏أَوْ قَالَ ‏ ‏أَوَ لَمْ تَعْلَمْ ‏ ‏أَوَ لَمْ تَسْمَعْ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبَعْضِ بُكَاءِ أَهْلِهِ ‏ ‏قَالَ فَأَمَّا ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏فَأَرْسَلَهَا ‏ ‏مُرْسَلَةً ‏ ‏وَأَمَّا ‏ ‏عُمَرُ ‏ ‏فَقَالَ بِبَعْضِ ‏ ‏فَقُمْتُ فَدَخَلْتُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَحَدَّثْتُهَا بِمَا قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَقَالَتْ لَا وَاللَّهِ مَا قَالَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَطُّ إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَحَدٍ وَلَكِنَّهُ قَالَ ‏ ‏إِنَّ الْكَافِرَ يَزِيدُهُ اللَّهُ بِبُكَاءِ أَهْلِهِ عَذَابًا وَإِنَّ اللَّهَ لَهُوَ ”أَضْحَكَ وَأَبْكَى “  ‏‏” ‏وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى“ ‏


‏قَالَ ‏ ‏أَيُّوبُ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي مُلَيْكَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا بَلَغَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَوْلُ ‏ ‏عُمَرَ ‏ ‏وَابْنِ عُمَرَ ‏ ‏قَالَتْ ‏ ‏إِنَّكُمْ ‏ ‏لَتُحَدِّثُونِّي عَنْ غَيْرِ كَاذِبَيْنِ وَلَا مُكَذَّبَيْنِ وَلَكِنَّ السَّمْعَ يُخْطِئُ

நான் (மக்காவில்) இப்னு உமர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது நாங்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் மகளார் உம்மு அபான் அவர்களது ஜனாஸாவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் உஸ்மான் (ரலி) அவர்களுடைய மகன் அம்ரும் இருந்தார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துவந்து, இப்னு உமர் (ரலி) அமர்ந்திருந்த இடத்தை(அடுத்து)க் காட்டினார். அவர்கள் வந்து எனக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள். நான் அவர்கள் இருவருக்குமிடையே இருந்தேன். அப்போது வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. உடனே இப்னு உமர் (ரலி), அம்ரிடம், “நீங்கள் எழுந்து சென்று, அவர்களை அழ வேண்டாம் எனத் தடுங்கள்” என்று சைகை செய்துவிட்டு, “குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்.

உடனே இப்னு அப்பாஸ் (ரலி), “நாங்கள் (ஒரு பயணத்தில்) இறைநம்பிக்கையார்களின் தலைவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் (மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலுள்ள) ‘பைதாஉ’ எனுமிடத்தில் இருந்தபோது, (சற்றுத் தொலைவில்) ஒரு மரத்திற்குக் கீழே யாரோ ஒருவர் தங்கியிருந்தார். (இதைக் கண்ட) உமர் (ரலி) என்னிடம், “நீங்கள் சென்று அவர் யாரெனப் பார்த்து வந்து என்னிடம் கூறுங்கள்” என்றார். நான் சென்று பார்த்த போது அங்கு ஸுஹைப் (ரலி) இருந்தார். நான் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து, “நீங்கள் பார்த்துவிட்டு வந்து தெரிவிக்கச் சொன்னவர் ஸுஹைப் (ரலி)” என்றேன். அதற்கு உமர் (ரலி), “அவரை நம்முடன் சேர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்!” என்றார்கள். நான் “அவருடன் அவருடைய குடும்பத்தாரும் உள்ளார்கள்” என்றேன். உமர் (ரலி), “அவருடன் அவருடைய குடும்பத்தார் இருந்தாலும் சரியே! (அவரை நம்முடன் வந்து சேர்ந்துகொள்ளச் சொல்லுங்கள்)” என்றார்கள். நாங்கள் (அனைவரும் ’பைதாஉ’லிருந்து மதீனாவுக்கு) வந்து சேர்ந்து வெகுநாட்கள் ஆகியிருக்கவில்லை. அதற்குள் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் உமர் (ரலி) (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றார்கள். அப்போது ஸுஹைப் (ரலி) “சகோதரரே! நண்பரே!” எனக் கதறியபடியே (அழுதுகொண்டு) வந்தார். அப்போது உமர் (ரலி), “குடும்பத்தாரின் அழுகைகளுள் சிலவற்றால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீர் அறியவில்லையா?” (அல்லது) “நீர் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்.

உடனே நான் எழுந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன்; இப்னு உமர் (ரலி) சொன்ன ஹதீஸை அவர்களிடம் தெரிவித்தேன். ஆயிஷா (ரலி), “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எவரோ ஒருவர் அழுவதன் காரணமாக இறந்துவிட்ட (இறைநம்பிக்கையாளரான) மனிதர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருபோதும் கூறவில்லை. மாறாக, குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறைமறுப்பாளனுக்கு அல்லாஹ் இன்னும் வேதனையை அதிகப்படுத்துகின்றான் என்றே கூறினார்கள். அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான்; அழவும் வைக்கிறான் (53:43). ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது (35:18)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்).


குறிப்புகள் :

இப்னு உமர் (ரலி), (“இறந்தவர் இறைமறுப்பாளராக இருந்தால்” என்று குறிப்பிட்டுச் சொல்லாமல்) பொதுப்படையாக (“இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று)தான் கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்களோ “குடும்பத்தாரின் அழுகைகளுள் சிலவற்றால் …“ என்று (குடும்பத்தைக் குறிப்பாக்கிக்) கூறினார்கள்.

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், உமர் (ரலி), “நீர் அறியவில்லையா? கேள்விப்படவில்லையா?” என்று கேட்டதாக இடம்பெற்றுள்ளது.

காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ரு (ரஹ்) கூறினார்கள்:

உமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது, “நீங்கள் பொய்யர்களோ பொய்ப்பிக்கப்பட்டவர்களோ அல்லாத இருவர் சொன்ன ஹதீஸை என்னிடம் கூறுகின்றீர்கள். ஆயினும், செவிப்புலன் (சில நேரங்களில்) தவறிழைத்துவிடுகின்றது” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1542

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ :‏‏

‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏لَمَّا طُعِنَ ‏ ‏عَوَّلَتْ ‏ ‏عَلَيْهِ ‏ ‏حَفْصَةُ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏حَفْصَةُ ‏ ‏أَمَا ‏سَمِعْتِ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏الْمُعَوَّلُ عَلَيْهِ ‏ ‏يُعَذَّبُ وَعَوَّلَ عَلَيْهِ ‏ ‏صُهَيْبٌ ‏ ‏فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏يَا ‏ ‏صُهَيْبُ ‏ ‏أَمَا عَلِمْتَ أَنَّ ‏ ‏الْمُعَوَّلَ عَلَيْهِ ‏يُعَذَّبُ

உமர் பின் அல்கத்தாப் (ரலி) (கத்தியால்) குத்தப்பட்டபோது, அவர்களுக்காக (அவர்களுடைய மகள்) ஹஃப்ஸா (ரலி) சப்தமிட்டு அழுதார்கள். அப்போது உமர் (ரலி), “ஹஃப்ஸா! ‘சப்தமிட்டு எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுகின்றார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீ அறியவில்லையா?” என்று கேட்டார்கள். (அவ்வாறே உமர்மீது அதிக அன்புகொண்டிருந்த) ஸுஹைப் (ரலி) சப்தமிட்டு அழுதபோதும் “ஸுஹைப்! ‘சப்தமிட்டு எவருக்கு அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீர் அறியவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1541

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعَيْبُ بْنُ صَفْوَانَ أَبُو يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏ ‏:‏

لَمَّا أُصِيبَ ‏ ‏عُمَرُ ‏ ‏أَقْبَلَ ‏ ‏صُهَيْبٌ ‏ ‏مِنْ مَنْزِلِهِ حَتَّى دَخَلَ عَلَى ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَامَ بِحِيَالِهِ يَبْكِي فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏عَلَامَ تَبْكِي أَعَلَيَّ تَبْكِي قَالَ إِي وَاللَّهِ لَعَلَيْكَ أَبْكِي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ وَاللَّهِ لَقَدْ عَلِمْتَ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ ‏ ‏يُبْكَى عَلَيْهِ يُعَذَّبُ ‏


‏قَالَ فَذَكَرْتُ ذَلِكَ ‏ ‏لِمُوسَى بْنِ طَلْحَةَ ‏ ‏فَقَالَ كَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏تَقُولُ ‏ ‏إِنَّمَا كَانَ أُولَئِكَ ‏ ‏الْيَهُودَ

உமர் (ரலி) (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றிருந்தபோது, ஸுஹைப் (ரலி) தமது இல்லத்திலிருந்து உமர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, அவர்களுக்கு எதிரில் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி), “ஏன் அழுகின்றீர்? எனக்காகவா அழுகின்றீர்?” என்று கேட்டார்கள். “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்காகவே அழுகிறேன், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!” என்று ஸுஹைப் (ரலி), கூறினார்கள். உமர் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணை! “எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீர் அறிந்திருக்கின்றீரே” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அப்துல் மலிக் பின் உமைர் பின் சுவைத் (ரஹ்) கூறுகின்றார்:

“இந்த ஹதீஸை நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “இதுவெல்லாம் அந்த யூதர்களுக்காகத்தான் என ஆயிஷா (ரலி) கூறிக்கொண்டிருந்தார்கள்” என்றார்.

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1540

حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا أُصِيبَ ‏ ‏عُمَرُ ‏ ‏جَعَلَ ‏ ‏صُهَيْبٌ ‏ ‏يَقُولُ وَا ‏ ‏أَخَاهْ فَقَالَ لَهُ ‏ ‏عُمَرُ :‏

‏ ‏يَا ‏ ‏صُهَيْبُ ‏ ‏أَمَا عَلِمْتَ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ

உமர் (ரலி) (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றிருந்தபோது, ஸுஹைப் (ரலி) (சப்தமிட்டு அழுதவர்களாக) “அந்தோ! சகோதரரே!” என்று கூறலானார்கள். அப்போது உமர் (ரலி), “ஸுஹைபே! ‘உயிரோடிருப்பவர்கள் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீர் அறியவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1539

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏:‏

لَمَّا طُعِنَ ‏ ‏عُمَرُ ‏ ‏أُغْمِيَ عَلَيْهِ فَصِيحَ عَلَيْهِ فَلَمَّا أَفَاقَ ‏ ‏قَالَ أَمَا عَلِمْتُمْ ‏‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ

உமர் (ரலி) கத்தியால் குத்தப்பட்டு மயக்கமுற்றிருந்தபோது, உரத்த அழுகுரல் கேட்டது. மயக்கம் தெளிந்ததும் அவர்கள், “உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீங்கள் அறியவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1538

و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ :‏‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا ‏ ‏نِيحَ ‏ ‏عَلَيْهِ

“இறந்தவருக்காக ஒப்பாரிவைத்து அழுவதால், அவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுவார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1537

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ :‏‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا ‏ ‏نِيحَ ‏ ‏عَلَيْهِ

“இறந்தவருக்காக ஒப்பாரிவைத்து அழுவதால் மண்ணறையில் அவர் வேதனை செய்யப்படுவார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1536

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بِشْرٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ :‏‏

‏أَنَّ ‏ ‏حَفْصَةَ ‏ ‏بَكَتْ عَلَى ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَ مَهْلًا يَا بُنَيَّةُ ‏ ‏أَلَمْ تَعْلَمِي ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) இறந்தபோது அவர்களுக்காக (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அழுதார். அப்போது நான், “(என் தந்தையின்) அருமை மகளே! பொறுமை கொள்! ‘இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதால் அவர் வேதனை செய்யப்படுகிறார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீ அறியவில்லையா?” என்று கேட்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1535

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ عُمَرَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ الْبُنَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَى عَلَى امْرَأَةٍ تَبْكِي عَلَى صَبِيٍّ لَهَا فَقَالَ لَهَا ‏ ‏اتَّقِي اللَّهَ وَاصْبِرِي فَقَالَتْ وَمَا ‏ ‏تُبَالِي بِمُصِيبَتِي فَلَمَّا ذَهَبَ قِيلَ لَهَا إِنَّهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخَذَهَا مِثْلُ الْمَوْتِ فَأَتَتْ بَابَهُ فَلَمْ تَجِدْ عَلَى بَابِهِ بَوَّابِينَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَعْرِفْكَ فَقَالَ إِنَّمَا الصَّبْرُ عِنْدَ ‏ ‏أَوَّلِ صَدْمَةٍ ‏ ‏أَوْ قَالَ عِنْدَ أَوَّلِ الصَّدْمَةِ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏قَالُوا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏عُثْمَانَ بْنِ عُمَرَ ‏ ‏بِقِصَّتِهِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الصَّمَدِ ‏ ‏مَرَّ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِامْرَأَةٍ عِنْدَ قَبْرٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஒரு பெண்மணி அருகில் சென்றார்கள். அந்தப் பெண், (இறந்துவிட்ட) தன் குழந்தை அருகே அழுதுகொண்டிருந்தாள். அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்),”அல்லாஹ்வை அஞ்சிக்கொள்; பொறுமையாக இரு” என்று கூறினார்கள். அதற்கு அப்பெண், “என் துயரத்தை நீங்கள் அடையவில்லை” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்கிருந்து சென்றதும் அப்பெண்ணிடம் “அவர்கள் அல்லாஹ்வின் தூதர்” என்று சொல்லப்பட்டது. அப்பெண்ணுக்கு மரணமே வந்துவிட்டதைப் போன்று வருத்தம் ஏற்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலில் வாயிற்காவலர் எவரும் இருக்கவில்லை. அப்பெண் “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களை (யாரென) அறியவில்லை” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

அப்துஸ் ஸமத் பின் அப்தில் வாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில் “நபி (ஸல்) அவர்கள் ஒரு கப்றின் அருகிலிருந்து (அழுது) கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து செல்லும்போது …” என ஹதீஸ் துவங்குகிறது.

அத்தியாயம்: 11, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1534

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الصَّبْرُ عِنْدَ ‏ ‏الصَّدْمَةِ الْأُولَى

“பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)