அத்தியாயம்: 11, பாடம்: 07, ஹதீஸ் எண்: 1533

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ يَعْنِي ابْنَ غَزِيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحَارِثِ بْنِ الْمُعَلَّى ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏:‏

‏كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَسَلَّمَ عَلَيْهِ ثُمَّ أَدْبَرَ الْأَنْصَارِيُّ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا أَخَا ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏كَيْفَ أَخِي ‏ ‏سَعْدُ بْنُ عُبَادَةَ ‏ ‏فَقَالَ ‏ ‏صَالِحٌ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ يَعُودُهُ مِنْكُمْ فَقَامَ وَقُمْنَا مَعَهُ وَنَحْنُ بِضْعَةَ عَشَرَ مَا عَلَيْنَا نِعَالٌ وَلَا ‏ ‏خِفَافٌ ‏ ‏وَلَا ‏ ‏قَلَانِسُ ‏ ‏وَلَا قُمُصٌ نَمْشِي فِي تِلْكَ ‏ ‏السِّبَاخِ ‏ ‏حَتَّى جِئْنَاهُ فَاسْتَأْخَرَ قَوْمُهُ مِنْ حَوْلِهِ حَتَّى دَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ الَّذِينَ مَعَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு முறை நாங்கள் அமர்ந்திருந்தோம். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து. ஸலாம் கூறிவிட்டுப் பிறகு திரும்பிச் செல்ல முயன்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அன்ஸாரி சகோதரரே! என் சகோதரர் ஸஅத் பின் உபாதா எப்படி இருக்கின்றார்?” என்று விசாரித்தார்கள். அதற்கு “நலமுடன் இருக்கின்றார்” என்று அவர் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் அவரை உடல் நலம் விசாரிப்ப(தற்கு நம்முடன் வருப)வர் யார்?” என்று கேட்டவாறு எழுந்தார்கள். அவர்களுடன் நாங்களும் எழுந்தோம். அப்போது நாங்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இருந்தோம். நாங்கள் காலணிகளோ காலுறைகளோ தொப்பிகளோ அங்கிகளோ அணிந்திருக்கவில்லை. கரடு முரடான அந்தப் பாதையில் நடந்தே அவரிடம் சென்றோம். அப்போது ஸஅத் (ரலி) அவர்களைச் சுற்றிலுமிருந்த அவருடைய கூட்டத்தார் அவரைவிட்டு விலகி வழிவிடவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடன் வந்த தோழர்களும் ஸஅத் (ரலி) அவர்களிடம் நெருக்கமானார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1532

حَدَّثَنَا ‏ ‏يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّدَفِيُّ ‏ ‏وَعَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحَارِثِ الْأَنْصَارِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏:‏

‏اشْتَكَى ‏ ‏سَعْدُ بْنُ عُبَادَةَ ‏ ‏شَكْوَى ‏ ‏لَهُ فَأَتَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَعُودُهُ مَعَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏فَلَمَّا دَخَلَ عَلَيْهِ وَجَدَهُ فِي ‏ ‏غَشِيَّةٍ ‏ ‏فَقَالَ أَقَدْ ‏ ‏قَضَى ‏ ‏قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ فَبَكَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا رَأَى الْقَوْمُ بُكَاءَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَكَوْا فَقَالَ ‏ ‏أَلَا تَسْمَعُونَ إِنَّ اللَّهَ لَا يُعَذِّبُ بِدَمْعِ الْعَيْنِ وَلَا بِحُزْنِ الْقَلْبِ وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا وَأَشَارَ إِلَى لِسَانِهِ أَوْ يَرْحَمُ

ஸஅத் பின் உபாதா (ரலி) நோயுற்றபோது, அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காக அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃபு, ஸஅத் பின் அபீவக்காஸ், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சென்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தபோது (ஸஅத் பின் உபாதா அவர்களின் குடும்பத்தார் அவரைச்) சூழ்ந்திருப்பதைக் கண்டதும் “என்ன, இறந்து விட்டாரா?” என்று கேட்டார்கள். அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்கமாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை. மாறாக, இதோ இதன் காரணமாகவே தண்டிக்கிறான் அல்லது தயவு காட்டுகிறான்” என்று கூறி தமது நாவைக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1531

حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏قَالَ :‏ ‏

‏كُنَّا عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَرْسَلَتْ إِلَيْهِ ‏ ‏إِحْدَى بَنَاتِهِ ‏ ‏تَدْعُوهُ وَتُخْبِرُهُ أَنَّ صَبِيًّا لَهَا ‏ ‏أَوْ ابْنًا لَهَا ‏ ‏فِي الْمَوْتِ فَقَالَ لِلرَّسُولِ ‏ ‏ارْجِعْ إِلَيْهَا فَأَخْبِرْهَا أَنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى فَمُرْهَا فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ فَعَادَ الرَّسُولُ فَقَالَ إِنَّهَا قَدْ أَقْسَمَتْ لَتَأْتِيَنَّهَا قَالَ فَقَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَامَ مَعَهُ ‏ ‏سَعْدُ بْنُ عُبَادَةَ ‏ ‏وَمُعَاذُ بْنُ جَبَلٍ ‏ ‏وَانْطَلَقْتُ مَعَهُمْ فَرُفِعَ إِلَيْهِ الصَّبِيُّ وَنَفْسُهُ ‏ ‏تَقَعْقَعُ ‏ ‏كَأَنَّهَا فِي ‏ ‏شَنَّةٍ ‏ ‏فَفَاضَتْ عَيْنَاهُ فَقَالَ لَهُ ‏ ‏سَعْدٌ ‏ ‏مَا هَذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَدُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ الْأَحْوَلِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّ حَدِيثَ ‏ ‏حَمَّادٍ ‏ ‏أَتَمُّ وَأَطْوَلُ

நாங்கள் நபி (ஸல்) அருகில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய மகள்களுள் ஒருவர் (ஸைனப்-ரலி) ‘தம் குழந்தை’ அல்லது ‘தம் மகன்’ இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். செய்தி கொண்டு வந்தவரிடம், “என் மகளிடம் திரும்பிச் சென்று, எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்!” என்று கூறியனுப்பினார்கள். அவர் (சென்றுவிட்டு) திரும்பிவந்து “உங்கள் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும் எனக் கூறுகிறார்” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோரும் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன்.

(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தை கொடுக்கப்பட்டது; இற்றுப்போன பழைய தோல் பையில் இருப்பதைப் போன்று (குழந்தையின் மார்பு ஏறி இறங்கிக்கொண்டு). இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. ஸஅத் பின் உபாதா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே, என்ன இது (ஏன் அழுகின்றீர்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்), “இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகின்றான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்பு :

மேற்காணும் ஹதீஸ், இபுனு நுமைர் (ரஹ்), இபுனு ஃபழீல் (ரஹ்), அபூபக்ரிப்னு அபீஷைபா (ரஹ்), அபூமுஆவியா (ரஹ்) ஆகியோர் வழியிலும் பதிவாகியுள்ளது. எனினும், ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) வழியிலான மேற்காணும் அறிவிப்பே நெடியதும் நிறைவானதுமாகும்.

அத்தியாயம்: 11, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1530

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي نَجِيحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ بْنِ عُمَيْرٍ ‏ ‏قَالَ قَالَتْ ‏ ‏أُمُّ سَلَمَةَ :‏‏

‏لَمَّا مَاتَ ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏قُلْتُ غَرِيبٌ وَفِي أَرْضِ غُرْبَةٍ لَأَبْكِيَنَّهُ بُكَاءً يُتَحَدَّثُ عَنْهُ فَكُنْتُ قَدْ تَهَيَّأْتُ لِلْبُكَاءِ عَلَيْهِ إِذْ أَقَبَلَتْ امْرَأَةٌ مِنْ ‏ ‏الصَّعِيدِ ‏ ‏تُرِيدُ أَنْ ‏ ‏تُسْعِدَنِي ‏ ‏فَاسْتَقْبَلَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ ‏ ‏أَتُرِيدِينَ أَنْ تُدْخِلِي ‏ ‏الشَّيْطَانَ بَيْتًا أَخْرَجَهُ اللَّهُ مِنْهُ مَرَّتَيْنِ فَكَفَفْتُ عَنْ الْبُكَاءِ فَلَمْ أَبْكِ

(என் முதல் கணவர்) அபூஸலமா இறந்தபோது, நான் “(என் கணவர்) ஒரு வெளியூர்காரர்; அந்நிய மண்ணில் (இறந்துபோயிருக்கின்றார்). அவருக்காக நான் (ஒப்பாரிவைத்து) நன்கு அழவேண்டும். அதுபற்றி (ஊரெல்லாம்) பேசப்பட வேண்டும்” என்று கூறிக்கொண்டு அழுகைக்குத் தயாரானேன். அப்போது (மதீனாவையொட்டிய ‘அவாலீ’ எனப்படும்) மேட்டுப் பகுதியிலிருந்து ஒரு பெண் எனக்கு ஒத்தாசை செய்யும் நோக்கில் வந்து கொண்டிருந்தாள். அவளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எதிர்கொண்டு “அல்லாஹ் ஓர் இல்லத்திலிருந்து (அந்த இல்லத்தார் இறைநம்பிக்கைகொண்டதன் மூலம்) ஷைத்தானை வெளியேற்றிய பின் அவனை உள்ளே அனுமதிக்க நீ விரும்புகின்றாயா?” என்று இரண்டு முறை கேட்டார்கள். எனவே, நான் அழுகையை நிறுத்திக்கொண்டேன்; (அதன் பின் அவருக்காக) நான் அழவில்லை.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1529

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ يَعْقُوبَ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبِي ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَلَمْ تَرَوْا الْإِنْسَانَ إِذَا مَاتَ شَخَصَ بَصَرُهُ قَالُوا بَلَى قَالَ فَذَلِكَ حِينَ يَتْبَعُ بَصَرُهُ نَفْسَهُ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒரு மனிதன் இறக்கும்போது அவனது பார்வை நிலை குத்தி நிற்பதை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் “ஆம் (கவனித்திருக்கின்றோம்)” என்று விடையளித்தனர். “உயிர் பிரிந்து செல்லும்போது, அதைப் பார்வை பின்தொடர்வதுதான் அது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1528

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ الْفَزَارِيُّ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏وَقَدْ ‏ ‏شَقَّ بَصَرُهُ ‏ ‏فَأَغْمَضَهُ ثُمَّ قَالَ ‏ ‏إِنَّ الرُّوحَ إِذَا قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ ‏ ‏فَضَجَّ ‏ ‏نَاسٌ مِنْ أَهْلِهِ فَقَالَ لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ إِلَّا بِخَيْرٍ فَإِنَّ الْمَلَائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ ثُمَّ قَالَ اللَّهُمَّ اغْفِرْ ‏ ‏لِأَبِي سَلَمَةَ ‏ ‏وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي ‏ ‏عَقِبِهِ ‏ ‏فِي ‏ ‏الْغَابِرِينَ ‏ ‏وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مُوسَى الْقَطَّانُ الْوَاسِطِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُثَنَّى بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ الْحَسَنِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ الْحَذَّاءُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ وَاخْلُفْهُ فِي تَرِكَتِهِ وَقَالَ اللَّهُمَّ أَوْسِعْ لَهُ فِي قَبْرِهِ وَلَمْ يَقُلْ افْسَحْ لَهُ ‏ ‏وَزَادَ قَالَ ‏ ‏خَالِدٌ الْحَذَّاءُ ‏ ‏وَدَعْوَةٌ أُخْرَى سَابِعَةٌ نَسِيتُهَا

(என் முதல் கணவர்) அபூஸலமாவின் (இறுதி நாளின்போது அவரது) பார்வை நிலைகுத்தி நின்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து, அவருடைய கண்களை மூடிவிட்டார்கள். பிறகு, “உயிர் கைப்பற்றப்படும்போது பார்வை அதைப் பின்தொடர்கிறது” என்று கூறினார்கள். அப்போது அபூஸலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ‘ஆமீன்’ கூறுகின்றனர்” என்று கூறினார்கள். மேலும், “இறைவா! அபூஸலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)


குறிப்பு :

உபைதுல்லாஹ் பின் அல்ஹஸன் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர் விட்டுச் சென்றவர்களில் அவருக்குப் பகரமாக அவரைவிடச் சிறந்தவரை ஏற்படுத்துவாயாக” என்றும் “இறைவா, அவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக” என்று கூறாமல் “மிகவும் விரிவாக்குவாயாக“ என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது. “பிரார்த்தனையில் ஏழாவதாக நபி (ஸல்) கூறியதை நான் மறந்து விட்டேன்” என அறிவிப்பாளர்களுள் ஒருவரான காலித் அல்ஹஃத்தா (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 11, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1527

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا حَضَرْتُمْ الْمَرِيضَ أَوْ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلَائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ قَالَتْ فَلَمَّا مَاتَ ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏أَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏أَبَا سَلَمَةَ ‏ ‏قَدْ مَاتَ قَالَ قُولِي ‏ ‏اللَّهُمَّ اغْفِرْ لِي وَلَهُ ‏ ‏وَأَعْقِبْنِي ‏ ‏مِنْهُ ‏ ‏عُقْبَى ‏ ‏حَسَنَةً قَالَتْ فَقُلْتُ ‏ ‏فَأَعْقَبَنِي ‏ ‏اللَّهُ مَنْ هُوَ خَيْرٌ لِي مِنْهُ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

“நீங்கள் நோயாளியையோ இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ‘ஆமீன்’ கூறுகின்றனர்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

(என் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்தபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே, அபூஸலமா இறந்துவிட்டார்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்), “இறைவா!, என்னையும் அவரையும் மன்னிப்பாயாக! அவருக்கு மாற்றாக அவரைவிடச் சிறந்த துணையை எனக்கு வழங்குவாயாக” என்று கூறுமாறு என்னிடம் சொன்னார்கள். நான் அவ்வாறே பிரார்த்தித்தேன். அவரைவிடச் சிறந்தவரான முஹம்மது (ஸல்) அவர்களையே அல்லாஹ் எனக்குத் துணையாக வழங்கினான்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 02, ஹதீஸ் எண்: 1526

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ سَعِيدٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ بْنُ كَثِيرِ بْنِ أَفْلَحَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ سَفِينَةَ ‏ ‏يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَقُولُ ‏:‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا مِنْ عَبْدٍ تُصِيبُهُ مُصِيبَةٌ فَيَقُولُ” إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ “‏ ‏”اللَّهُمَّ ‏ ‏أْجُرْنِي ‏ ‏فِي مُصِيبَتِي ‏ ‏وَأَخْلِفْ ‏ ‏لِي خَيْرًا مِنْهَا“ إِلَّا أَجَرَهُ اللَّهُ فِي مُصِيبَتِهِ وَأَخْلَفَ لَهُ خَيْرًا مِنْهَا

قَالَتْ فَلَمَّا تُوُفِّيَ ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏قُلْتُ كَمَا أَمَرَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْلَفَ اللَّهُ لِي خَيْرًا مِنْهُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ يَعْنِي ابْنَ كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سَفِينَةَ ‏ ‏مَوْلَى ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏وَزَادَ قَالَتْ فَلَمَّا تُوُفِّيَ ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏قُلْتُ مَنْ خَيْرٌ مِنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏صَاحِبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ عَزَمَ اللَّهُ لِي فَقُلْتُهَا قَالَتْ فَتَزَوَّجْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

“ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா’ என்று கூறினால், அவர் (இழந்து) சகித்த துன்பத்திற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை வழங்கி, அ(வர் இழந்த)தைவிடச் சிறந்ததை அதற்கு ஈடாக வழங்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டேன்.

(என் முதல் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளையிட்டதைப் போன்றே (இன்னா லில்லாஹி… என்று) நான் கூறினேன். அபூஸலமாவைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதரையே எனக்கு அல்லாஹ் மாற்றாக (கணவராக) வழங்கினான்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், ”அபூஸலமா இறந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழரான அபூஸலமாவைவிடச் சிறந்தவர் எவர் இருக்க முடியும்?“ என்று நான் எண்ணினேன். பிறகு அல்லாஹ் என் உள்ளத்தில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி கூறும்) உறுதியை அளித்தபோது, அவ்வாறே சொன்னேன். அல்லாஹ்வின் தூதரையே மணந்துகொண்டேன்” என்று அன்னை உம்மு ஸலமா (ரலி) அதிகப்படியாகக் கூறியதாக வந்துள்ளது.

அத்தியாயம்: 11, பாடம்: 02, ஹதீஸ் எண்: 1525

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَعْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سَفِينَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ :‏‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا مِنْ مُسْلِمٍ تُصِيبُهُ مُصِيبَةٌ فَيَقُولُ مَا أَمَرَهُ اللَّهُ ‏ ”إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ‏“ ‏اللَّهُمَّ ‏ ‏أْجُرْنِي ‏ ‏فِي مُصِيبَتِي ‏ ‏وَأَخْلِفْ ‏ ‏لِي خَيْرًا مِنْهَا إِلَّا أَخْلَفَ اللَّهُ لَهُ خَيْرًا مِنْهَا قَالَتْ فَلَمَّا مَاتَ ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏قُلْتُ أَيُّ الْمُسْلِمِينَ خَيْرٌ مِنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَوَّلُ بَيْتٍ هَاجَرَ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ إِنِّي قُلْتُهَا فَأَخْلَفَ اللَّهُ لِي رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ أَرْسَلَ إِلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَاطِبَ بْنَ أَبِي بَلْتَعَةَ ‏ ‏يَخْطُبُنِي لَهُ فَقُلْتُ إِنَّ لِي بِنْتًا وَأَنَا غَيُورٌ فَقَالَ أَمَّا ابْنَتُهَا ‏ ‏فَنَدْعُو اللَّهَ أَنْ يُغْنِيَهَا عَنْهَا وَأَدْعُو اللَّهَ أَنْ يَذْهَبَ بِالْغَيْرَةِ

“ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப, ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்கள்)’ என்றும், ‚‘அல்லா ஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா (இறைவா, எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்காக எனக்கு நன்மையை வழங்குவாயாக!)’ என்றும் கூறினால், அதற்கு ஈடாக அதைவிடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

(என் முதல் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்தபோது நான், ‘அபூஸலமாவைவிட முஸ்லிம்களுள் சிறந்தவர் எவர் இருக்க முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதலில் நாடு துறந்துவந்த குடும்பம் (அவருடைய குடும்பம்தான்)” என்று நினைத்தேன். ஆயினும், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றுக்கேற்ப) இன்னாலில்லாஹி… என்று நான் சொல்லிக்கொண்டேன். அவ்வாறே அவருக்கு ஈடாக அல்லாஹ், தன்னுடைய தூதரையே (இரண்டாவது கணவராக) எனக்கு வழங்கினான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் ஹாத்திப் பின் அபீபல்த்தஅ (ரலி) அவர்களை அனுப்பி, தமக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அப்போது நான், ‘எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நானோ முன்கோபக்காரி ஆவேன்’ என்று கூறிவிட்டேன். (எனது பதிலைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அவருடைய மகள் (தாயின் துணையின்றி) தன்னிறைவுடன் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம். அவரது முன்கோபத்தைப் போக்கவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1524

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَعُثْمَانُ ‏ ‏ابْنَا ‏ ‏أَبِي شَيْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالُوا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقِّنُوا ‏ ‏مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

“உங்களில் மரணத் தருவாயில் இருப்பவர்களுக்கு, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’வை நினைவுபடுத்துங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)