அத்தியாயம்: 6, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1143

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُفَضَّلُ يَعْنِي ابْنَ فَضَالَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ ‏ ‏تَزِيغَ ‏ ‏الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ الْعَصْرِ ثُمَّ نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا فَإِنْ ‏ ‏زَاغَتْ ‏ ‏الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பயணிக்கும் நேரத்தில் சூரியன் உச்சியிருந்து சாயாமலிருந்தால் லுஹ்ருத் தொழுகையை(யைத் தொழாமல் புறப்பட்டு) அஸ்ரு நேரம்வரைத் தாமதப்படுத்தி, பின்பு (ஓரிடத்தில்) இறங்கி லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்துத் தொழுவார்கள். அவர்கள் பயணம் புறப்படுவதற்குமுன் சூரியன் உச்சியிருந்து சாய்ந்துவிட்டிருந்தால் லுஹ்ருத் தொழுத பின்னர் பயணம் மேற்கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1142

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنَ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏قَالَ :‏‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏أَعْجَلَهُ ‏ ‏السَّيْرُ فِي السَّفَرِ يُؤَخِّرُ صَلَاةَ الْمَغْرِبِ حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ صَلَاةِ الْعِشَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவசர(இரா)ப் பயணம் புறப்படுவதாக இருந்தால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப் படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1141

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ :‏‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவசர(இரா)ப் பயணம் புறப்பட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவதை நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1140

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ :‏

‏ ‏كَانَ إِذَا ‏ ‏جَدَّ ‏ ‏بِهِ السَّيْرُ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بَعْدَ أَنْ يَغِيبَ الشَّفَقُ ‏وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا ‏ ‏جَدَّ ‏ ‏بِهِ السَّيْرُ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ

இப்னு உமர் (ரலி), அவசர(இரா)ப் பயணம் செய்வதாயின் (வானில்) செம்மேகம் மறைந்தபின் மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவசர(இரா)ப் பயணம் செய்ய நேரிட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள்” என்றும் குறிப்பிடுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1139

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا عَجِلَ بِهِ السَّيْرُ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவசர(இரா)ப் பயணம் புறப்பட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1138

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ سِيرِينَ ‏ ‏قَالَ :‏

‏ ‏تَلَقَّيْنَا ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏حِينَ قَدِمَ ‏ ‏الشَّامَ ‏ ‏فَتَلَقَّيْنَاهُ ‏ ‏بِعَيْنِ التَّمْرِ ‏ ‏فَرَأَيْتُهُ ‏ ‏يُصَلِّي عَلَى حِمَارٍ وَوَجْهُهُ ذَلِكَ الْجَانِبَ وَأَوْمَأَ ‏ ‏هَمَّامٌ ‏ ‏عَنْ يَسَارِ الْقِبْلَةِ فَقُلْتُ لَهُ رَأَيْتُكَ تُصَلِّي لِغَيْرِ الْقِبْلَةِ ‏قَالَ ‏ ‏لَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَفْعَلُهُ لَمْ أَفْعَلْهُ

அனஸ் பின் மாலிக் (ரலி) சிரியாவிலிருந்து திரும்பியபோது அவர்களை ‘அய்னுத் தம்ரு’ எனும் இடத்தில் நாங்கள் சந்தித்தவேளை, அவர்கள் கழுதையின் மீதமர்ந்தவாறு (கூடுதலான தொழுகைகள்) தொழுவதை நான் கண்டேன். அவர்களுடைய முகம் (கிப்லா அல்லாத) வேறு திசையில் இருந்தது. அப்போது நான், “நீங்கள் கிப்லா அல்லாத வேறு திசை நோக்கித் தொழுவதை நான் கண்டேனே?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  (பயணத்தில்) இவ்வாறு செய்வதை நான் பார்த்திராவிட்டால் நானும் இவ்வாறு செய்திருக்க மாட்டேன்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அனஸ் பின் ஸீரீன் (ரஹ்)


குறிப்பு :

அனஸ் (ரலி) தொழுத திசையை அறிவிப்பாளர் ஹம்மாம் (ரஹ்) கிப்லாவுக்கு இடப்பக்கம் என சைகை செய்து காட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1137

‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏أَخْبَرَهُ ‏

أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي ‏ ‏السُّبْحَةَ ‏ ‏بِاللَّيْلِ فِي السَّفَرِ عَلَى ظَهْرِ ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏حَيْثُ تَوَجَّهَتْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் பயணம் செய்யும்போது தமது வாகனத்தின் முதுகிலமர்ந்தவாறு அது செல்லும் திசையில் நஃபில் தொழுகைகள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பாளர் : ஆமிர் பின் ரபீஆ (ரலி) வழியாக அவரின் மகன் அப்துல்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1136

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُسَبِّحُ ‏ ‏عَلَى ‏ ‏الرَّاحِلَةِ ‏ ‏قِبَلَ ‏ ‏أَيِّ وَجْهٍ تَوَجَّهَ وَيُوتِرُ عَلَيْهَا غَيْرَ أَنَّهُ لَا ‏ ‏يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் எந்தத் திசையை முன்னோக்கிப் பயணித்தாலும் அதில் இருந்தவாறு அவர்கள் நஃபில் தொழுகைகளைத் தொழுவார்கள். வாகனத்தில் இருந்தவாறு வித்ரும் தொழுவார்கள். ஆனால், கடமையான (ஃபர்ளுத்) தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள். (இறங்கித்தான் தொழுவார்கள்.)

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக அவரின் மகன் ஸாலிம் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1135

و حَدَّثَنِي ‏ ‏عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏‏

أَنَّهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُوتِرُ عَلَى رَاحِلَتِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகனத்தின் மீதமர்ந்து வித்ருத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1134

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ قَالَ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ ‏


قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ ‏ ‏كَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يَفْعَلُ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகனத்தின் மீதமர்ந்து அது செல்லும் திசையில் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே தொழுவார்கள்” என்று (இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) கூறுகின்றார்.