அத்தியாயம்: 5, பாடம்: 18, ஹதீஸ் எண்: 873

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا وَلَا يُؤْذِيَنَّا بِرِيحِ الثُّومِ

“இந்த(ப் பூண்டு)ச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்கவோ, பூண்டின் (துர்)நாற்றத்தால் நமக்குத் தொல்லை தரவோ வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 18, ஹதீஸ் எண்: 872

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ وَهُوَ ابْنُ صُهَيْبٍ ‏ ‏قَالَ :‏‏

سُئِلَ ‏ ‏أَنَسٌ ‏ ‏عَنْ الثُّومِ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلَا يَقْرَبَنَّا وَلَا ‏ ‏يُصَلِّي مَعَنَا

அனஸ் (ரலி) அவர்களிடம் வெள்ளைப் பூண்டு குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘இந்தச் செடியிலிருந்து (விளையும் பூண்டைச்) சாப்பிட்டவர் நம்மை நெருங்கவோ நம்முடன் தொழவோ வேண்டாம்’ எனச் சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக, அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 18, ஹதீஸ் எண்: 871

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ فَلَا يَقْرَبَنَّ مَسَاجِدَنَا حَتَّى يَذْهَبَ رِيحُهَا ‏ ‏يَعْنِي الثُّومَ

“இந்தச் செடியிலிருந்து விளைவதை – அதாவது – வெள்ளைப் பூண்டைச் சாப்பிட்டவர் அதன் வாடை விலகாதவரை நம்முடைய பள்ளிவாசலை நெருங்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 18, ஹதீஸ் எண்: 870

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏خَيْبَرَ ‏ ‏مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ ‏ ‏يَعْنِي الثُّومَ ‏ ‏فَلَا يَأْتِيَنَّ الْمَسَاجِدَ ‏


قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏فِي غَزْوَةٍ وَلَمْ يَذْكُرْ ‏ ‏خَيْبَرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபர் போரின்போது, “இந்த(ப் பூண்டு)ச் செடியிலிருந்து விளைகின்றதை அதாவது வெள்ளைப் பூண்டைச் சாப்பிட்டவர் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) வழி அறிவிப்பில், “கைபர் போரின்போது” என்று இல்லாமல், “…ஒரு போரின்போது …” என்று பொதுவாகக் காணப்படுகிறது.

அத்தியாயம்: 5, பாடம்: 17, ஹதீஸ் எண்: 869

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمٌ هُوَ ابْنُ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ بْنِ مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي عَتِيقٍ ‏ ‏قَالَ ‏ ‏تَحَدَّثْتُ أَنَا ‏ ‏وَالْقَاسِمُ ‏ ‏عِنْدَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏حَدِيثًا وَكَانَ ‏ ‏الْقَاسِمُ ‏ ‏رَجُلًا ‏ ‏لَحَّانَةً ‏ ‏وَكَانَ لِأُمِّ وَلَدٍ فَقَالَتْ لَهُ ‏ ‏عَائِشَةُ ‏ ‏:‏

مَا لَكَ لَا تَحَدَّثُ كَمَا يَتَحَدَّثُ ابْنُ أَخِي هَذَا أَمَا إِنِّي قَدْ عَلِمْتُ مِنْ أَيْنَ أُتِيتَ هَذَا أَدَّبَتْهُ أُمُّهُ وَأَنْتَ أَدَّبَتْكَ أُمُّكَ قَالَ فَغَضِبَ ‏ ‏الْقَاسِمُ ‏ ‏وَأَضَبَّ ‏ ‏عَلَيْهَا فَلَمَّا رَأَى مَائِدَةَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَدْ أُتِيَ بِهَا قَامَ قَالَتْ أَيْنَ قَالَ أُصَلِّي قَالَتْ اجْلِسْ قَالَ إِنِّي أُصَلِّي قَالَتْ اجْلِسْ ‏ ‏غُدَرُ إِنِّي ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا صَلَاةَ بِحَضْرَةِ الطَّعَامِ وَلَا هُوَ يُدَافِعُهُ ‏ ‏الْأَخْبَثَانِ ‏


حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو حَزْرَةَ الْقَاصُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عَتِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ قِصَّةَ ‏ ‏الْقَاسِمِ

நானும் என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவரான அல்காஸிம் பின் முஹம்மது பின் அப்திர் ரஹ்மானும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். அல்காஸிம் குழறுப் பேச்சுக்காரராக இருந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி), “இந்த என் சகோதரரின் மகனைப் போன்று நீ தெளிவாகப் பேசுவதில்லையே ஏன்? இந்தப் பழக்கம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று நான் அறிந்து கொண்டேன்”, “இவரை, இவருடைய தாய் வளர்த்திருக்கின்றார்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அல்காஸிம் கோபம் கொண்டு, ஆயிஷா (ரலி) மீது எரிச்சலடைந்தார். ஆயிஷா (ரலி) அவர்களுக்குமுன் உணவுத் தட்டு கொண்டு வரப்பட்டபோது அல்காஸிம் எழுந்து விட்டார். ஆயிஷா (ரலி) “எங்கே (போகின்றாய்)?” என்று கேட்க, அல்காஸிம் “நான் தொழப்போகிறேன்” என்றார். ஆயிஷா (ரலி) “உட்கார்!” என்றார்கள். அல்காஸிம், “நான் தொழப்போகின்றேன்” என்று (மீண்டும்) கூறினார். ஆயிஷா (ரலி) “அவசரக்காரனே! உட்கார். ‘உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீரையோ மலத்தையோ அடக்கிக் கொண்டு தொழக் கூடாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியேற்று இருக்கிறேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக இப்னு அபீஅத்தீக் (ரஹ்)


குறிப்பு :

மேற்கண்ட ஹதீஸின் இஸ்மாயீல் பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், அல்காஸிமைப் பற்றிய குறிப்பு இல்லாமல் நபி (ஸல்) அவர்களது கூற்று மட்டும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 17, ஹதீஸ் எண்: 868

حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا وُضِعَ عَشَاءُ أَحَدِكُمْ وَأُقِيمَتْ الصَّلَاةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ وَلَا يَعْجَلَنَّ حَتَّى يَفْرُغَ مِنْهُ ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْحَقَ الْمُسَيَّبِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ مَسْعَدَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏الصَّلْتُ بْنُ مَسْعُودٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِهِ

“உங்களில் ஒருவருக்கு இரவு உணவு வைக்கப்பட்டு, தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் உணவை உண்ணத் தொடங்குங்கள். அதை உண்டு முடிக்கும்வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 17, ஹதீஸ் எண்: 867

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ :‏‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا قُرِّبَ الْعَشَاءُ وَحَضَرَتْ الصَّلَاةُ فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا صَلَاةَ الْمَغْرِبِ وَلَا تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَحَفْصٌ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ

“நீங்கள் மஃக்ரிப் தொழுவதற்கு முன்னர் (உங்கள் முன்னே) இரவு உணவு வைக்கப்படுமானால் முதலில் உணவை உண்ணத் தொடங்குங்கள். உங்களது இரவு உணவை விடுத்து (தொழுகைக்காக) நீங்கள் அவசரப்பட வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 17, ஹதீஸ் எண்: 866

أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏:‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا حَضَرَ الْعَشَاءُ وَأُقِيمَتْ الصَّلَاةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ

“இரவு உணவு முன்வைக்கப்பட்டு, தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுமானால் நீங்கள் முதலில் உணவை உண்ணத் தொடங்குங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 16, ஹதீஸ் எண்: 865

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏:‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَتْ لَهُ خَمِيصَةٌ لَهَا عَلَمٌ فَكَانَ يَتَشَاغَلُ بِهَا فِي الصَّلَاةِ فَأَعْطَاهَا ‏ ‏أَبَا جَهْمٍ ‏ ‏وَأَخَذَ كِسَاءً لَهُ ‏ ‏أَنْبِجَانِيًّا

நபி (ஸல்) அவர்களிடம் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்று இருந்தது. அது தொழுகையில் அவர்களது கவனத்தை ஈர்த்துவந்தது. எனவே, அதை(த் தமக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து மற்றொரு சாதாரண ஆடையை வாங்கிக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 16, ஹதீஸ் எண்: 864

حَدَّثَنَا ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي فِي ‏ ‏خَمِيصَةٍ ‏ ‏ذَاتِ أَعْلَامٍ فَنَظَرَ إِلَى عَلَمِهَا فَلَمَّا قَضَى صَلَاتَهُ قَالَ ‏ ‏اذْهَبُوا بِهَذِهِ ‏ ‏الْخَمِيصَةِ ‏ ‏إِلَى ‏ ‏أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ ‏ ‏وَأْتُونِي ‏ ‏بِأَنْبِجَانِيِّهِ ‏ ‏فَإِنَّهَا أَلْهَتْنِي ‏ ‏آنِفًا ‏ ‏فِي صَلَاتِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்து கொண்டு நின்று தொழுதார்கள். அதன் வேலைப்பாட்டை உற்று நோக்கினார்கள். தொழுது முடித்ததும், “இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூஜஹ்ம் பின் ஹுதைஃபாவிடம் (இதைக்) கொண்டு செல்லுங்கள். (அவரிடமிருந்து) சாராரண ஆடையை(ப் பெற்று) என்னிடம் கொண்டு வாருங்கள். ஏனெனில் சற்று முன்பு இது தொழுகையிலிருந்து எனது கவனத்தைத் திருப்பிவிட்டது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)