அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 773

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ أَمَرَ بِالْحَرْبَةِ فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ وَرَاءَهُ وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الْأُمَرَاءُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெருநாள் தினத்தன்று (தொழுவிப்பதற்காகத் தொழுகைத் திடலுக்குப்) புறப்படும்போது (முனை அகலமான) ஈட்டியை எடுத்து வருமாறு உத்தரவிடுவார்கள். (தொழுகைத் திடலில்) அவர்களுக்கு முன்னால் அந்த ஈட்டி (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதன் எதிரில் நின்று தொழுவிப்பார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள். பொதுவாகப் பயணத்திலும் இவ்வாறே செய்வார்கள். இதனால்தான் (நம்) தலைவர்களும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 772

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَيْوَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَسْوَدِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سُئِلَ فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏تَبُوكَ ‏ ‏عَنْ سُتْرَةِ الْمُصَلِّي فَقَالَ ‏ ‏كَمُؤْخِرَةِ ‏ ‏الرَّحْلِ ‏

தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு வைத்துக் கொள்வது பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் “வாகன(ஒட்டக)த்தின் சேணப்பலகை போன்ற ஒன்றை (தடுப்பாக) வைத்துக் கொள்ளுமாறு” கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 771

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ :‏

سُئِلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ سُتْرَةِ الْمُصَلِّي فَقَالَ ‏ ‏مِثْلُ ‏ ‏مُؤْخِرَةِ ‏ ‏الرَّحْلِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு வைத்துக் கொள்வது பற்றிக் கேட்கப்பட்டது அப்போது அவர்கள், “வாகன (ஒட்டக)த்தின் சேணப்பலகை போன்றதை வைத்துக் கொள்ளுமாறு” கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 770

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكِ بْنِ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏قَالَ :‏

كُنَّا نُصَلِّي وَالدَّوَابُّ تَمُرُّ بَيْنَ أَيْدِينَا فَذَكَرْنَا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مِثْلُ ‏ ‏مُؤْخِرَةِ ‏ ‏الرَّحْلِ ‏ ‏تَكُونُ بَيْنَ يَدَيْ أَحَدِكُمْ ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ


و قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فَلَا يَضُرُّهُ مَنْ مَرَّ بَيْنَ يَدَيْهِ

நாங்கள் (திறந்தவெளிகளில்) தொழுபவர்களாக இருந்தோம். அப்போது எங்களுக்கு முன்னால் கால்நடைகள் கடந்து செல்லும். எனவே, இது பற்றி நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, “உங்களில் ஒருவர் வாகன (ஒட்டக)த்தின் சேணப்பலகை போன்றதை (தடுப்பாக) வைத்துக் கொள்ளட்டும். பிறகு அவரை எது கடந்து சென்றாலும் அவருக்குப் பிரச்சனை இல்லை” என்று அவர்கள் கூறினார்கள்.


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “… பிறகு அவரை யார் கடந்து சென்றாலும் அவருக்குப் பிரச்சனை இல்லை” என்று உயர்திணைச் சொல் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 769

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا وَضَعَ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ مِثْلَ ‏ ‏مُؤْخِرَةِ ‏ ‏الرَّحْلِ ‏ ‏فَلْيُصَلِّ وَلَا يُبَالِ مَنْ مَرَّ وَرَاءَ ذَلِكَ

“உங்களில் ஒருவர் (தொழும்போது) தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை (தடுப்பாக) வைத்துக் கொண்டு தொழட்டும். அந்தக் கட்டைக்கு அப்பால் கடந்து செல்பவரை அவர் பொருட்படுத்த வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 46, ஹதீஸ் எண்: 768

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ يَعْنِي الْأَحْمَرَ ‏ ‏عَنْ ‏ ‏حُسَيْنٍ الْمُعَلِّمِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنٌ الْمُعَلِّمُ ‏ ‏عَنْ ‏ ‏بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْجَوْزَاءِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْتَفْتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ وَالْقِرَاءَةَ بِ ‏‏الْحَمْد لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ‏‏وَكَانَ إِذَا رَكَعَ لَمْ ‏ ‏يُشْخِصْ ‏ ‏رَأْسَهُ وَلَمْ ‏ ‏يُصَوِّبْهُ ‏ ‏وَلَكِنْ بَيْنَ ذَلِكَ وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ قَائِمًا وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ السَّجْدَةِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا وَكَانَ يَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ وَكَانَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى وَكَانَ يَنْهَى عَنْ ‏ ‏عُقْبَةِ الشَّيْطَانِ ‏ ‏وَيَنْهَى أَنْ يَفْتَرِشَ الرَّجُلُ ذِرَاعَيْهِ افْتِرَاشَ السَّبُعِ وَكَانَ يَخْتِمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ ‏


وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي خَالِدٍ ‏ ‏وَكَانَ يَنْهَى عَنْ ‏ ‏عَقِبِ الشَّيْطَانِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குவார்கள். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று (குர்ஆன்) ஓத ஆரம்பிப்பார்கள். ருகூஉச் செய்யும்போது தலையை உயர்த்தாமல், தாழ்த்தாமல் நேராக வைத்திருப்பார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால் நிமிர்ந்து நிற்காமல் ஸஜ்தாவுக்குச் செல்லமாட்டார்கள். ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால் நேராக நிமர்ந்து உட்காராமல் (இரண்டாவது) ஸஜ்தாச் செய்யமாட்டார்கள். ஒவ்வொர் இரண்டு ரக்அத்திலும் அத்திஹிய்யாத் ஓதுவார்கள். (அமர்வின்போது) இடக்காலை விரித்துவைத்து, வலக்காலை நட்டுவைப்பார்கள். மேலும், ஷைத்தான் உட்காருவதைப் போன்று (கால்களை நட்டு, புட்டத்தைத் தரையில் படியவைத்து) உட்கார வேண்டாம் என்றும், மிருகங்கள் உட்காருவதைப் போன்று முழங்கைகளைத் தரையில் பரப்பி வைத்து உட்கார வேண்டாம் என்றும் தடை விதித்துவந்தார்கள். அவர்கள் ஸலாம் கூறித் தொழுகையை முடிப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அபூகாலித் (ரஹ்) வழியில் இப்னு நுமைர் (ரஹ்) அறிவிக்கும் ஹதீஸில் ஷைத்தான் அமர்வதைப் போன்று என்பதைக் குறிக்க மூலத்தில் வந்துள்ள “உக்பத்திஷ் ஷைத்தான்” என்பதற்கு பதிலாக “அகிபிஷ் ஷைத்தான்” என்று காணப்படுகிறது.

அத்தியாயம்: 4, பாடம்: 46, ஹதீஸ் எண்: 767

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَمْرٍو ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ بُرْقَانَ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ الْأَصَمِّ ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ ‏ ‏قَالَتْ :‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا سَجَدَ ‏ ‏جَافَى ‏ ‏حَتَّى يَرَى مَنْ خَلْفَهُ وَضَحَ إِبْطَيْهِ ‏


قَالَ ‏ ‏وَكِيعٌ ‏ ‏يَعْنِي بَيَاضَهُمَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஜ்தாச் செய்யும்போது, தம் அக்குள்களின் வெண்மையைப் பின்னாலிருப்பவர் பார்க்கும் அளவுக்குக் கைகளை அகற்றி வைப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி)


குறிப்பு :

“வளஹ எனும் அரபு மூலச் சொல்லுக்கு வெண்மை எனப் பொருள்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான வகீஉ
(ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 4, பாடம்: 46, ஹதீஸ் எண்: 766

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَصَمِّ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ الْأَصَمِّ ‏ ‏أَنَّهُ أَخْبَرَهُ عَنْ ‏ ‏مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ : ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا سَجَدَ ‏ ‏خَوَّى ‏ ‏بِيَدَيْهِ ‏ ‏يَعْنِي جَنَّحَ حَتَّى يُرَى وَضَحُ إِبْطَيْهِ مِنْ وَرَائِهِ وَإِذَا قَعَدَ اطْمَأَنَّ عَلَى فَخِذِهِ الْيُسْرَى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஜ்தாச் செய்யும்போது பின்னாலிருந்து (பார்த்தால்) அவர்களுடைய இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்குத் தம் கைகளை விரித்து (இடைவெளி விட்டு) வைப்பார்கள். அவர்கள் (ஸஜ்தாவிலிருந்து எழுந்ததும்) தமது இடத்தொடையின் (காலின்) மீது வசதியாக அமர்ந்து கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 46, ஹதீஸ் எண்: 765

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَصَمِّ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏يَزِيدَ بْنِ الْأَصَمِّ ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏قَالَتْ :‏

كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا سَجَدَ لَوْ شَاءَتْ ‏ ‏بَهْمَةٌ ‏ ‏أَنْ تَمُرَّ بَيْنَ يَدَيْهِ لَمَرَّتْ

நபி (ஸல்) ஸஜ்தாச் செய்யும்போது அவர்களின் இரு கைகளுக்கிடையே ஓர் ஆட்டுக்குட்டி கடந்து சென்றுவிட முடியும்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 46, ஹதீஸ் எண்: 764

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرٌ وَهُوَ ابْنُ مُضَرَ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا صَلَّى ‏ ‏فَرَّجَ ‏ ‏بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ


حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏وَاللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ رَبِيعَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا سَجَدَ ‏ ‏يُجَنِّحُ ‏ ‏فِي سُجُودِهِ حَتَّى يُرَى وَضَحُ إِبْطَيْهِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا سَجَدَ ‏ ‏فَرَّجَ ‏ ‏يَدَيْهِ عَنْ إِبْطَيْهِ حَتَّى إِنِّي لَأَرَى بَيَاضَ إِبْطَيْهِ

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) தொழும்போது தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கைகளையும் விரித்துவைப்பார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மாலிக் பின் புஹைனா (ரலி)


குறிப்பு :

அம்ரு பின் அல்ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஜ்தாச் செய்யும்போது தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்குத் தம் கைகளை (விலாப்புறத்திலிருந்து) அகற்றிவைப்பார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

லைஸ் பின் ஸஅத் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஜ்தாச் செய்யும்போது தம்மிரு கைகளையும் நான் அவர்களுடைய அக்குள்களின் வெண்மையைப் பார்க்கும் அளவுக்கு அக்குள் ஒட்டாமல் விரித்து வைப்பார்கள்” என்று அப்துல்லாஹ் பின் மாலிக் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.