அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 703

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمِنْهَالِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ ‏ ‏قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ فِي الْفَجْرِ مَا بَيْنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ آيَةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஃபஜ்ருத் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூபர்ஸா அல் அஸ்லமீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 702

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏عَنْ ‏ ‏التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمِنْهَالِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَرْزَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَقْرَأُ فِي صَلَاةِ ‏ ‏الْغَدَاةِ ‏ ‏مِنْ السِّتِّينَ إِلَى الْمِائَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதிகாலைத் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூபர்ஸா அல் அஸ்லமீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 701

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ :‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَقْرَأُ فِي الظُّهْرِ ‏ ‏بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ‏ ‏وَفِي الصُّبْحِ بِأَطْوَلَ مِنْ ذَلِكَ

நபி (ஸல்) லுஹ்ருத் தொழுகையில் “ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா…” (எனும் 87ஆவது) அத்தியாயத்தை ஓதுவார்கள். ஸுப்ஹுத் தொழுகையில் அதைவிடப் பெரிய(அத்தியாயத்)தை ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 700

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏قَالَ :‏

كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ فِي الظُّهْرِ ‏ ‏بِاللَّيْلِ إِذَا ‏ ‏يَغْشَى ‏ ‏وَفِي الْعَصْرِ نَحْوَ ذَلِكَ وَفِي الصُّبْحِ أَطْوَلَ مِنْ ذَلِكَ

நபி (ஸல்) லுஹ்ருத் தொழுகையில் “வல்லைலி இதா யக்‌ஷா” (எனும் 92ஆவது) அத்தியாயத்தை ஓதுவார்கள். அஸ்ருத் தொழுகையில் அது போன்றதையும் ஸுப்ஹுத் தொழுகையில் அதைவிடப் பெரிய(அத்தியாயத்)தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 699

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏جَابِرَ بْنَ سَمُرَةَ :‏

عَنْ صَلَاةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ كَانَ ‏ ‏يُخَفِّفُ الصَّلَاةَ وَلَا ‏ ‏يُصَلِّي صَلَاةَ هَؤُلَاءِ قَالَ وَأَنْبَأَنِي أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ ‏ ‏بِق وَالْقُرْآنِ ‏ ‏وَنَحْوِهَا

நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் தொழுகை குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாகவே தொழுவிப்பார்கள்; இதோ, இவர்களெல்லாம் தொழுவிப்பதைப் போன்று (நீளமாகத்) தொழுவிக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஃபஜ்ருத் தொழுகையில் “காஃப் வல்குர்ஆனில் மஜீத்” (என்று தொடங்கும் 50ஆவது அத்தியாயம்) போன்றதை ஓதுவார்கள்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக ஸிமாக் பின் ஹர்பு (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 698

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سِمَاكُ بْنُ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏قَالَ :‏

إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ ‏ ‏بِق وَالْقُرْآنِ الْمَجِيدِ ‏ ‏وَكَانَ صَلَاتُهُ بَعْدُ تَخْفِيفًا

நபி (ஸல்) (ஆரம்பக் காலத்தில்) ஃபஜ்ருத் தொழுகையில் “காஃப்; வல்குர்ஆனில் மஜீத்” எனும் (50ஆவது) அத்தியாயத்தை (முழுதும்) ஓதிவந்தார்கள். அதற்குப் பின்னர் அவர்களது தொழுகை சுருக்கமாகவே அமைந்தது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 697

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ :‏

عَنْ ‏ ‏زِيَادِ بْنِ عِلَاقَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الصُّبْحَ فَقَرَأَ فِي أَوَّلِ رَكْعَةٍ ‏ ‏وَالنَّخْلَ ‏ ‏بَاسِقَاتٍ ‏ ‏لَهَا ‏ ‏طَلْعٌ ‏ ‏نَضِيدٌ ‏ ‏وَرُبَّمَا قَالَ ‏ ‏ق

“நான் நபி (ஸல்) அவர்களுடன் ஸுப்ஹுத் தொழுகை தொழுதேன். முதல் ரக்அத்தில் நபி (ஸல்) கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்ச மரங்களையும் (நாமே முளைக்கச் செய்தோம்) எனும் (50:10ஆவது) வசன(அத்தியாய)த்தை” என்றும் சில வேளைகளில், “காஃப் எனும் (50ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்” என்றும் என் தந்தையின் சகோதரர் (குத்பா பின் மாலிக்-ரலி) கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : குத்பா பின் மாலிக் (ரலி) வழியாக ஸியாத் பின் இலாக்கா (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 696

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَرِيكٌ ‏ ‏وَابْنُ عُيَيْنَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏زِيَادِ بْنِ عِلَاقَةَ ‏ ‏عَنْ ‏ ‏قُطْبَةَ بْنِ مَالِكٍ :‏

سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ فِي الْفَجْرِ ‏ ‏وَالنَّخْلَ ‏ ‏بَاسِقَاتٍ ‏ ‏لَهَا ‏ ‏طَلْعٌ ‏ ‏نَضِيدٌ

நபி (ஸல்) ஃபஜ்ருத் தொழுகையில் “கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்ச மரங்களையும் (நாமே முளைக்கச் செய்தோம்)” எனும் (50:10ஆவது) வசன(அத்தியாய)த்தை ஓதுவதை நான் கேட்டேன்.

அறிவிப்பாளர் : குத்பா பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 695

حَدَّثَنِي ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏زِيَادِ بْنِ عِلَاقَةَ ‏ ‏عَنْ ‏ ‏قُطْبَةَ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ :‏

صَلَّيْتُ وَصَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَرَأَ ‏ ‏ق وَالْقُرْآنِ الْمَجِيدِ ‏ ‏حَتَّى قَرَأَ ‏ ‏وَالنَّخْلَ ‏ ‏بَاسِقَاتٍ ‏ ‏قَالَ فَجَعَلْتُ أُرَدِّدُهَا وَلَا أَدْرِي مَا قَالَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குத் தொழுவித்த(ஒரு)போது நான் தொழுதேன். (அத்தொழுகையில்) “காஃப் வல்குர்ஆனில் மஜீத்” (என்று தொடங்கும் 50ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். அதில் “வந்நக்ல பாசிகா(த்)தின்” எனும் (10ஆவது) வசனத்தை அவர்கள் ஓதியபோது, நானும் அதைத் திரும்ப ஓதலானேன்; ஆனால், அவர்கள் ஓதியது எனக்குப் (பொருள்) புரியவில்லை.

அறிவிப்பாளர் : குத்பா பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 694

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏الْوَلِيدُ بْنُ سَرِيعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ حُرَيْثٍ :‏

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ فِي الْفَجْرِ ‏ ‏وَاللَّيْلِ إِذَا ‏ ‏عَسْعَسَ

நபி (ஸல்) ஃபஜ்ருத் தொழுகையில் “பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதாணை!” எனும் வசனத்(தையுடைய 81ஆவது அத்தியாய)த்தை ஓதுவதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் ஹுரைஸ் (ரலி)