அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 673

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏أَنَّ ‏ ‏زَيْنَبَ الثَّقَفِيَّةَ :‏

كَانَتْ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْعِشَاءَ فَلَا تَطَيَّبْ تِلْكَ اللَّيْلَةَ

“நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ளப் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, அந்த இரவுப் பொழுதில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெண்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் பின்த்தி அபீமுஆவியா அஸ்ஸகஃபிய்யா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 672

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏كَعْبُ بْنُ عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏بِلَالِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَمْنَعُوا النِّسَاءَ حُظُوظَهُنَّ مِنْ الْمَسَاجِدِ إِذَا اسْتَأْذَنُوكُمْ


فَقَالَ ‏ ‏بِلَالٌ ‏ ‏وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ فَقَالَ لَهُ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَقُولُ أَنْتَ لَنَمْنَعُهُنَّ

“பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்காக உங்களிடம் அனுமதி கேட்டால், அவர்களுக்குப் பள்ளிவாசலில் உள்ள உரிமையைத் தடுக்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய மகன் பிலால் (ரஹ்), “அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை நாங்கள் தடுப்போம்” என்று கூறினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள் என்று நான் கூறுகிறேன். ஆனால், நீயோ அவர்களைத் தடுப்போம் என்று கூறுகிறாயே!” என்று கண்டித்தார்கள்.

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 671

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَابْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏وَرْقَاءُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ائْذَنُوا لِلنِّسَاءِ بِاللَّيْلِ إِلَى الْمَسَاجِدِ


فَقَالَ ابْنٌ لَهُ يُقَالُ لَهُ ‏ ‏وَاقِدٌ ‏ ‏إِذَنْ يَتَّخِذْنَهُ ‏ ‏دَغَلًا ‏ ‏قَالَ فَضَرَبَ فِي صَدْرِهِ وَقَالَ أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَقُولُ لَا

“பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களுக்குச் செல்ல நீங்கள் அனுமதியளியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தெரிவித்தார்கள்.
‘வாகித்’ என அழைக்கப்பட்ட, அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய மகன், “அவ்வாறு அனுமதி கொடுத்தால் அவர்கள் அதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தம் புதல்வருடைய நெஞ்சில் அடித்து, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னதை உனக்கு அறிவிக்கின்றேன். ஆனால் நீ முடியாது என்று மறுக்கின்றாயா?” என்று (கடிந்து) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 670

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَمْنَعُوا النِّسَاءَ مِنْ الْخُرُوجِ إِلَى الْمَسَاجِدِ بِاللَّيْلِ


فَقَالَ ‏ ‏ابْنٌ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏لَا نَدَعُهُنَّ يَخْرُجْنَ فَيَتَّخِذْنَهُ ‏ ‏دَغَلًا ‏ ‏قَالَ فَزَبَرَهُ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏وَقَالَ أَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَقُولُ لَا نَدَعُهُنَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

“பெண்கள் இரவில் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தெரிவித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய மகன்களுள் ஒருவர், “பெண்களை வெளியே செல்ல நாங்கள் விடமாட்டோம். (பெண்கள் வெளியே செல்வதற்கு) இதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள்” என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று கூறுகிறேன். ஆனால் நீ அவர்களை நாங்கள் விடமாட்டோம் என்று கூறுகிறாயா?” என்று கூறி தம் மகனைக் கண்டித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 669

حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَنْظَلَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَالِمًا ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَقُولُ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ إِلَى الْمَسَاجِدِ فَأْذَنُوا لَهُنَّ

“உங்கள் மனைவியர் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி அளியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றிருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 668

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَابْنُ إِدْرِيسَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ

“அல்லாஹ்வின் பெண் அடியார்கள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 667

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏قَالَ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ إِذَا اسْتَأْذَنَّكُمْ إِلَيْهَا


قَالَ فَقَالَ ‏ ‏بِلَالُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ قَالَ فَأَقْبَلَ عَلَيْهِ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏فَسَبَّهُ سَبًّا سَيِّئًا مَا سَمِعْتُهُ سَبَّهُ مِثْلَهُ قَطُّ وَقَالَ أُخْبِرُكَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَقُولُ وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ

“உங்கள் மனைவியர் உங்களிடம் (தொழுவதற்காகப்) பள்ளிவாசல்களுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக அவர் மகன் ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்)


குறிப்பு :

“இந்த ஹதீஸை என் தந்தை அறிவித்தபோது (என் சகோதரர்) பிலால் பின் அப்தில்லாஹ் (ரஹ்), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அவர்களைத் தடுப்போம்’ என்று கூறினார். உடனே (என் என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (என் சகோதரர்) பிலால் பின் அப்தில்லாஹ்வை நோக்கி மிகக் கடுமையாக ஏசினார்கன். அதைப் போன்று அவர்கள் ஏசியதை நான் கேட்டதே இல்லை. பிறகு, ‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை உனக்கு அறிவிக்கின்றேன். ஆனால், நீயோ அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை நாங்கள் தடுப்போம் என்று கூறுகிறாயே?’ என்றார்கள்” என்பதாக ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறியதும் பதிவாகியுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 666

حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏سَمِعَ ‏ ‏سَالِمًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِيهِ :‏

يَبْلُغُ بِهِ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا اسْتَأْذَنَتْ أَحَدَكُمْ امْرَأَتُهُ إِلَى الْمَسْجِدِ فَلَا يَمْنَعْهَا

“உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்கு(த் தொழ)ச் செல்ல அனுமதி கோரினால் அவர் மறுக்கக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக அவர் மகன் ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 29, ஹதீஸ் எண்: 665

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ :‏

لَقَدْ رَأَيْتُ الرِّجَالَ عَاقِدِي ‏ ‏أُزُرِهِمْ ‏ ‏فِي أَعْنَاقِهِمْ مِثْلَ الصِّبْيَانِ مِنْ ضِيقِ ‏ ‏الْأُزُرِ ‏ ‏خَلْفَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ قَائِلٌ يَا مَعْشَرَ النِّسَاءِ لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَرْفَعَ الرِّجَالُ

ஆண்கள், ( மேலாடையில்லாமல்) அணிந்த கீழாடை சிறியதாக இருந்த காரணத்தால் சிறுவர்களைப் போன்று அவர்கள் தம் கீழாடையைப் பிடரியின் மீது கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுது கொண்டு) இருந்ததை நான் பார்த்திருக்கின்றேன். ஆதலால், (தொழத் தொடங்கு முன்னர்) “பெண்களே! ஆண்கள் (ஸஜ்தாவிலிருந்து) நிமிரும்வரை நீங்கள் உங்களுடைய தலைகளை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்த வேண்டாம்” என்று (நபியவர்களின் உத்தரவை) ஒருவர் கூறுவது வழக்கம்.

அறிவிப்பாளர் : ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 28, ஹதீஸ் எண்: 664

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا وَشَرُّهَا آخِرُهَا وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا وَشَرُّهَا أَوَّلُهَا

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“ஆண்களுடைய வரிசைகளுள் (கூட்டுத் தொழுகையில்) சிறந்தது முதல் வரிசையாகும்; அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும்; அவற்றில் தீயது முதல் வரிசையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)