அத்தியாயம்: 1, பாடம்: 89, ஹதீஸ் எண்: 303

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏لَمَّا أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ ‏ [“‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ ‏” ] ‏دَعَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُرَيْشًا ‏ ‏فَاجْتَمَعُوا فَعَمَّ وَخَصَّ فَقَالَ ‏ ‏يَا ‏ ‏بَنِي كَعْبِ بْنِ لُؤَيٍّ ‏ ‏أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنْ النَّارِ يَا ‏ ‏بَنِي مُرَّةَ بنِ كَعْبٍ ‏ ‏أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنْ النَّارِ يَا ‏ ‏بَنِي عَبْدِ شَمْسٍ ‏ ‏أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنْ النَّارِ يَا ‏ ‏بَنِي عَبْدِ مَنَافٍ ‏ ‏أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنْ النَّارِ يَا ‏ ‏بَنِي هَاشِمٍ ‏ ‏أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنْ النَّارِ يَا ‏ ‏بَنِي عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنْ النَّارِ يَا ‏ ‏فَاطِمَةُ ‏ ‏أَنْقِذِي نَفْسَكِ مِنْ النَّارِ فَإِنِّي لَا أَمْلِكُ لَكُمْ مِنْ اللَّهِ شَيْئًا غَيْرَ أَنَّ لَكُمْ رَحِمًا ‏ ‏سَأَبُلُّهَا ‏ ‏بِبَلَالِهَا ‏


‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَحَدِيثُ ‏ ‏جَرِيرٍ ‏ ‏أَتَمُّ وَأَشْبَعُ ‏

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் இந்த (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  குறைஷியரை (ஓரிடத்திற்கு) அழைத்தார்கள்.

அவர்கள் அனைவரும் ஒன்றுகூடிய பின்னர், “கஅப் பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். முர்ரா பின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து ஷம்ஸின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து மனாஃபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹாஷிமின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்!

ஏனென்றால், அல்லாஹ்வி(ன் விசாரணை/தண்டனையி)லிருந்து உங்களைக் காக்க என்னால் இயலாது. ஆயினும், உங்களுடன் எனக்கு இருக்கும் இரத்த உறவை நான் (கருகிவிடாமல்) பசுமையாக்குவேன்” என்று குலப் பெயராலும் தனியாகவும் அழைத்துக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 88, ஹதீஸ் எண்: 302

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏:‏

‏أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ أَبِي قَالَ فِي النَّارِ فَلَمَّا ‏ ‏قَفَّى ‏ ‏دَعَاهُ فَقَالَ ‏ ‏إِنَّ أَبِي وَأَبَاكَ فِي النَّارِ

“அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கின்றார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்), “(நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் (சோகத்துடன்) திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில் தான் (இருக்கின்றார்கள்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 87, ஹதீஸ் எண்: 301

حَدَّثَنِي ‏ ‏يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّدَفِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏بَكْرَ بْنَ سَوَادَةَ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏:‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَلَا قَوْلَ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي ‏ ‏إِبْرَاهِيمَ [“‏رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنْ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي‏] ” ‏الْآيَةَ وَقَالَ ‏ ‏عِيسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام [‏ “‏إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ “] ‏فَرَفَعَ يَدَيْهِ وَقَالَ اللَّهُمَّ أُمَّتِي أُمَّتِي وَبَكَى فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏اذْهَبْ إِلَى ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏وَرَبُّكَ أَعْلَمُ فَسَلْهُ مَا يُبْكِيكَ فَأَتَاهُ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَسَأَلَهُ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَا قَالَ وَهُوَ أَعْلَمُ فَقَالَ اللَّهُ ‏ ‏يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏اذْهَبْ إِلَى ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏فَقُلْ إِنَّا ‏ ‏سَنُرْضِيكَ فِي أُمَّتِكَ وَلَا نَسُوءُكَ

இப்ராஹீம் (அலை) கூறுவதாக அல்லாஹ் (குர்ஆனில்) எடுத்துச் சொல்லுகின்ற, “இறைவா! நிச்சயமாக (சிலைகளான) இவை மக்களில் அநேகரை வழிகெடுத்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவராவார் …” என்ற (14:36ஆவது) வசனத்தையும் ஈஸா (அலை) கூறியதாகக் குறிப்பிட்டுள்ள, “(இப்போது) நீ இவர்களுக்கு வேதனை அளித்தால் இவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ இவர்களை மன்னித்தாலும் (அப்போதும் உன் அடியார்களே!) நீயே கண்ணியமிக்கவன்; ஞானம் நிறைந்தவன்” என்ற (5:118 ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். அப்போது நபியவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தியவாறு “இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம் (இவர்களைக் காப்பாற்றுவாயாக!)” என்று அழுது பிரார்த்தித்தார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (வானவர் ஜிப்ரீலிடம்), “ஜிப்ரீலே! நீங்கள் முஹம்மதிடம் சென்று -உங்கள் இறைவனுக்குத் தெரியும்; என்றாலும்- ‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேளுங்கள்” என்றான்.

அவ்வாறே ஜிப்ரீல் (அலை) சென்று, (நபியவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) -அல்லாஹ்வுக்குத் தெரியும்; என்றாலும்- தாம் கூறிய (பிரார்த்தனைக்) கூற்றைத் தெரிவித்தார்கள். அதற்கு அல்லாஹ், “ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று, நாம் உம் சமுதாயத்தவர் தொடர்பாக உம்மை மனநிறைவடையச் செய்வோம்; உம்மை நாம் துயரில் ஆழ்த்த மாட்டோம் என்று கூறுக” என்றான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 86, ஹதீஸ் எண்: 300

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ ‏:‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ قَدْ دَعَا بِهَا فِي أُمَّتِهِ وَخَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ ‏

“தம் சமுதாயத்தாருக்காக வேண்டிக் கொள்வதற்கு ஒவ்வோரு நபிக்கும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு. எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்யத் தக்கவைத்துக் கொண்டுவிட்டேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 86, ஹதீஸ் எண்: 299

حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَانَا ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي غَسَّانَ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ يَعْنُونَ ابْنَ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏:‏

‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ دَعَاهَا لِأُمَّتِهِ وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ أَبِي خَلَفٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ قَالَ أُعْطِيَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏

“தம் சமுதாயத்தாருக்காக வேண்டிக் கொள்வதற்கு ஒவ்வோரு நபிக்கும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை இருந்தது. எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்யத் தக்கவைத்துக் கொண்டுவிட்டேன்” என்று அல்லாஹ்வின் நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “சிறப்புப் பிரார்த்தனை இருந்தது” என்பது “சிறப்புப் பிரார்த்தனை வழங்கப்பட்டிருந்தது” என்று குறிப்பிடப்படுகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 86, ஹதீஸ் எண்: 298

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ وَهُوَ ابْنُ زِيَادٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ دَعَا بِهَا فِي أُمَّتِهِ فَاسْتُجِيبَ لَهُ وَإِنِّي أُرِيدُ إِنْ شَاءَ اللَّهُ أَنْ أُؤَخِّرَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ ‏

“தம் சமுதாயத்தாருக்காக வேண்டிக் கொள்வதற்கு ஒவ்வோரு நபிக்கும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை இருந்தது; (ஒவ்வொரு நபியும் பிரார்த்தித்து) ஏற்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நாடினால் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காக ஒத்திவைக்க விரும்புகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 86, ஹதீஸ் எண்: 297

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ وَهُوَ ابْنُ الْقَعْقَاعِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ يَدْعُو بِهَا فَيُسْتَجَابُ لَهُ ‏ ‏فَيُؤْتَاهَا وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ ‏

“பிரார்த்திப்பதில் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை ஒவ்வோரு நபிக்கும் இருந்தது. (மற்ற நபிமார்கள் பிரார்த்தித்து, அல்லாஹ்வால்) ஏற்றுக் கொள்ளப்பட்டு, (அவர்களுக்கு) வழங்கப்பட்டுவிட்டது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 86, ஹதீஸ் எண்: 296

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا ‏

“ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை ஒவ்வோரு நபிக்கும் இருந்தது. அனைத்து நபிமாரும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகத் தக்கவைத்திருக்கிறேன். அல்லாஹ் நாடினால், என் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணித்தவருக்கு அது கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 86, ஹதீஸ் எண்: 295

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَمْرَو بْنَ أَبِي سُفْيَانَ بْنِ أَسِيدِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيَّ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏لِكَعْبِ الْأَحْبَارِ :‏ ‏

‏إِنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ ‏ ‏يَدْعُوهَا فَأَنَا أُرِيدُ إِنْ شَاءَ اللَّهُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ ‏


‏فَقَالَ ‏ ‏كَعْبٌ ‏ ‏لِأَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏نَعَمْ ‏

“ஒவ்வொரு நபிக்கும் அவர் (அல்லாஹ்விடம்) வேண்டிக் கொள்வதற்காக ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகின்றேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).


குறிப்பு :

இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கக் கேட்ட கஅப் அல்-அஹ்பார் (ரஹ்), “இதை அல்லாஹ்வின் தூதரிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டு, “ஆம்” என்று அபூஹுரைரா (ரலி) பதிலளித்ததாக அம்ரிப்னு அபீஸுஃப்யான் (ரஹ்) வழியான அறிவிப்பில் கூடுதலாகப் பதிவாகியுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 86, ஹதீஸ் எண்: 294

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ وَأَرَدْتُ إِنْ شَاءَ اللَّهُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ ‏


حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ بْنِ أَسِيدِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيُّ ‏ ‏مِثْلَ ذَلِكَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

“ஒவ்வொரு நபிக்கும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால், நான் எனது பிரார்த்தனையை மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)