அத்தியாயம்: 55, பாடம்: 9, ஹதீஸ் எண்: 5283

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ سُهَيْلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِيهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا تَثَاوَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ بِيَدِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ ‏”‏

”உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால் தமது கையால் தடுத்துக்கொள்ளட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 55, பாடம்: 9, ஹதீஸ் எண்: 5282

حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، قَالَ سَمِعْتُ ابْنًا لأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ يُحَدِّثُ أَبِي عَنْ أَبِيهِ قَالَ :

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِذَا تَثَاوَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ بِيَدِهِ عَلَى فِيهِ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ ‏”‏

”உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 55, பாடம்: 9, ஹதீஸ் எண்: 5281

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ التَّثَاؤُبُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ ‏”‏

”கொட்டாவி, ஷைத்தானிடமிருந்தே ஏற்படுகிறது. எனவே, உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது இயன்றவரை அவர் (அதைக்) கட்டுப்படுத்திக்கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 55, பாடம்: 9, ஹதீஸ் எண்: 5280

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ عَنْ أَبِيهِ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبُو النَّضْرِ، هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ :‏

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَعَطَسَ رَجُلٌ عِنْدَهُ فَقَالَ لَهُ ‏”‏ يَرْحَمُكَ اللَّهُ ‏”‏ ‏.‏ ثُمَّ عَطَسَ أُخْرَى فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ الرَّجُلُ مَزْكُومٌ ‏”‏

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒருவர் தும்மிவிட்டு ’அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறி)னார். அவருக்கு நபி (ஸல்) ’யர்ஹமுகல்லாஹ்’ (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக) என்று மறுமொழி கூறினார்கள். அவரே மற்றொரு முறை தும்மினார். அப்போது நபி (ஸல்) , “இவருக்கு ஜலதோஷம் ஏற்பட்டுள்ளது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

அத்தியாயம்: 55, பாடம்: 9, ஹதீஸ் எண்: 5279

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالاَ حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ قَالَ :‏

دَخَلْتُ عَلَى أَبِي مُوسَى وَهْوَ فِي بَيْتِ بِنْتِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ فَعَطَسْتُ فَلَمْ يُشَمِّتْنِي وَعَطَسَتْ فَشَمَّتَهَا فَرَجَعْتُ إِلَى أُمِّي فَأَخْبَرْتُهَا فَلَمَّا جَاءَهَا قَالَتْ عَطَسَ عِنْدَكَ ابْنِي فَلَمْ تُشَمِّتْهُ وَعَطَسَتْ فَشَمَّتَّهَا ‏.‏ فَقَالَ إِنَّ ابْنَكِ عَطَسَ فَلَمْ يَحْمَدِ اللَّهَ فَلَمْ أُشَمِّتْهُ وَعَطَسَتْ فَحَمِدَتِ اللَّهَ فَشَمَّتُّهَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَحَمِدَ اللَّهَ فَشَمِّتُوهُ فَإِنْ لَمْ يَحْمَدِ اللَّهَ فَلاَ تُشَمِّتُوهُ ‏”‏

(என் தந்தை) அபூமூஸா (ரலி), ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் மகளும் தம் மனைவியுமான உம்மு குல்ஸூம் அவர்களது) இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நான் தும்மினேன். ஆனால், என் தந்தை எனக்கு மறுமொழி கூறவில்லை. அவர்களின் மனைவி தும்மியபோது மறுமொழி கூறினார்கள்.

நான் என் தாயாரிடம் திரும்பிவந்து, நடந்ததை அவரிடம் தெரிவித்தேன். என் தாயாரிடம் அபூமூஸா (ரலி) வந்தபோது, “உங்களுக்கு அருகில் என் பிள்ளை தும்மியபோது நீங்கள் மறுமொழி கூறவில்லை; அவள் தும்மியபோது மட்டும் மறுமொழி கூறியிருக்கின்றீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு (என் தந்தை) அபூமூஸா (ரலி), “உன் பிள்ளை தும்மியவுடன் ’அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறவில்லை. எனவேதான், நான் அவருக்கு மறுமொழி பகரவில்லை. ஆனால், அவள் தும்மியவுடன் ’அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறினாள். எனவேதான், அவளுக்கு நான் மறுமொழி பகர்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) , ’உங்களில் ஒருவர் தும்மியவுடன், ’அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறினால் அவருக்கு நீங்கள் மறுமொழி கூறுங்கள். அவர் ’அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறாவிட்டால், அவருக்கு நீங்கள் மறுமொழி கூறாதீர்கள்’ என்று கூற நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி) வழியாக அன்னாரின் மகன் அபூபுர்தா பின் அபீமூஸா (ரஹ்)

அத்தியாயம்: 55, பாடம்: 9, ஹதீஸ் எண்: 5278

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا حَفْصٌ، – وَهُوَ ابْنُ غِيَاثٍ – عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

عَطَسَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلاَنِ فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الآخَرَ فَقَالَ الَّذِي لَمْ يُشَمِّتْهُ عَطَسَ فُلاَنٌ فَشَمَّتَّهُ وَعَطَسْتُ أَنَا فَلَمْ تُشَمِّتْنِي ‏.‏ قَالَ ‏ “‏ إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ وَإِنَّكَ لَمْ تَحْمَدِ اللَّهَ ‏”‏


وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، – يَعْنِي الأَحْمَرَ – عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருவர் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) “யர்ஹமுக்கல்லாஹ்” (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக) என்று மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை.

மறுமொழி கூறப்படாதவர், “இன்னவர் தும்மியபோது நீங்கள் அவருக்கு மறுமொழி கூறினீர்கள். நான் தும்மியபோது எனக்கு மறுமொழி கூறவில்லையே?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) , “அவர் (தும்மியவுடன் ’அல்ஹம்து லில்லாஹ்’ என்று) இறைவனைப் புகழ்ந்தார். நீர் இறைவனைப் புகழவில்லை (எனவேதான், அவருக்கு மறுமொழி; உமக்கு மறுமொழி இல்லை)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 55, பாடம்: 8, ஹதீஸ் எண்: 5277

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ حَدَّثَنِي وَقَالَ، الآخَرَانِ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، قَالَ : قَالَ سَالِمٌ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ كُلُّ أُمَّتِي مُعَافَاةٌ إِلاَّ الْمُجَاهِرِينَ وَإِنَّ مِنَ الإِجْهَارِ أَنْ يَعْمَلَ الْعَبْدُ بِاللَّيْلِ عَمَلاً ثُمَّ يُصْبِحُ قَدْ سَتَرَهُ رَبُّهُ فَيَقُولُ يَا فُلاَنُ قَدْ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ فَيَبِيتُ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ ‏”‏ ‏.‏ قَالَ زُهَيْرٌ ‏”‏ وَإِنَّ مِنَ الْهِجَارِ ‏”‏

”என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர! ஓர் அடியான் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் இறைவன் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, “இன்னவரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்” என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்து விட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கிவிடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 55, பாடம்: 7, ஹதீஸ் எண்: 5276

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَأَبُو كُرَيْبٍ – وَاللَّفْظُ لأَبِي كُرَيْبٍ – قَالَ يَحْيَى وَإِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الأَعْمَشُ عَنْ شَقِيقٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ :‏

قِيلَ لَهُ أَلاَ تَدْخُلُ عَلَى عُثْمَانَ فَتُكَلِّمَهُ فَقَالَ أَتُرَوْنَ أَنِّي لاَ أُكَلِّمُهُ إِلاَّ أُسْمِعُكُمْ وَاللَّهِ لَقَدْ كَلَّمْتُهُ فِيمَا بَيْنِي وَبَيْنَهُ مَا دُونَ أَنْ أَفْتَتِحَ أَمْرًا لاَ أُحِبُّ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ فَتَحَهُ وَلاَ أَقُولُ لأَحَدٍ يَكُونُ عَلَىَّ أَمِيرًا إِنَّهُ خَيْرُ النَّاسِ ‏.‏ بَعْدَ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ يُؤْتَى بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ فَتَنْدَلِقُ أَقْتَابُ بَطْنِهِ فَيَدُورُ بِهَا كَمَا يَدُورُ الْحِمَارُ بِالرَّحَى فَيَجْتَمِعُ إِلَيْهِ أَهْلُ النَّارِ فَيَقُولُونَ يَا فُلاَنُ مَا لَكَ أَلَمْ تَكُنْ تَأْمُرُ بِالْمَعْرُوفِ وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ فَيَقُولُ بَلَى قَدْ كُنْتُ آمُرُ بِالْمَعْرُوفِ وَلاَ آتِيهِ وَأَنْهَى عَنِ الْمُنْكَرِ وَآتِيهِ ‏”‏


حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ كُنَّا عِنْدَ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَقَالَ رَجُلٌ مَا يَمْنَعُكَ أَنْ تَدْخُلَ عَلَى عُثْمَانَ فَتُكَلِّمَهُ فِيمَا يَصْنَعُ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், “நீங்கள் (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று (சமகால அரசியல் குழப்பங்கள் தொடர்பாகப்) பேசக் கூடாதா? (அவர் உங்களுக்கு நெருக்கமானவர் ஆயிற்றே?)” என்று கேட்கப்பட்டது.

அதற்கு உஸாமா (ரலி) கூறினார்கள்: உங்கள் முன்னிலையில்தான் அவரிடம் நான் பேச வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரிடம் அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்கு வித்திடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே அவர்களிடம் பேசுகிறேன். ஏனெனில், கலகத்திற்கு வித்திட்ட முதல் ஆளாக நானிருக்க விரும்பவில்லை.

மேலும், எனக்கு ஆட்சித் தலைவராக இருக்கும் எவரையும், ’மக்களில் நீங்கள்தான் சிறந்தவர்’ என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அவ்வாறு நான் சொல்லவே மாட்டேன்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். அப்போது அவரது வயிற்றிலுள்ள குடல்கள் முழுவதும் வெளியே வந்துவிடும். அவர் குடலை இழுத்துக்கொண்டு கழுதை, செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப் போன்று சுற்றிவருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, ’இன்னவரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியுமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாம் என(அவர்களை)த் தடுத்துக்கொண்டிருந்த (நற்) பணி செய்திகொண்டிருக்கவில்லையா?’ என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், ’ஆம்; நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாம் என (மக்களை) நான் தடுத்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்’ என்று கூறுவார்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக அபூவாயில் ஷகீக் பின் ஸலமா (ரஹ்)


குறிப்பு :

ஜரீர் (ரஹ் வழி அறிவிப்பு, “நாங்கள் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தோம். அப்போது ஒருவர், ’நீங்கள் (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று, அவர் செய்துகொண்டிருப்பதைப் பற்றி பேசாமலிருப்பதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார் …” என ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 55, பாடம்: 3, ஹதீஸ் எண்: 5268

حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، – وَهُوَ ابْنُ الْحَارِثِ – أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللَّهِ الْخَوْلاَنِيَّ، يَذْكُرُ أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ :‏

عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّكُمْ قَدْ أَكْثَرْتُمْ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ مَنْ بَنَى مَسْجِدًا – قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ – يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ ‏”‏ ‏‏


وَفِي رِوَايَةِ هَارُونَ ‏”‏ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ‏”‏

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை(விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது, அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

அப்போது உஸ்மான் (ரலி) மக்களிடம், “நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ’யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகின்றாரோ –(புகைர் (ரஹ்) அறிவிப்பில் ’அல்லாஹ்வின் உவப்பை நாடி பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகின்றாரோ’ என்று ஆஸிம் பின் உமர் (ரஹ்) அறிவித்தார்கள் என நான் எண்ணுகிறேன் என்று) இடம்பெற்றுள்ளது)- அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப் போன்ற ஒன்றைக் கட்டுகின்றான்’ என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்)


குறிப்பு :

ஹாரூன் பின் ஸயீத் (ரஹ்) வழி, “அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகின்றான்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 55, பாடம்: 6, ஹதீஸ் எண்: 5275

وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يَتَبَيَّنُ مَا فِيهَا يَهْوِي بِهَا فِي النَّارِ أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ ‏”‏

”ஓர் அடியார் பின்விளைவை யோசிக்காமல் ஒரு (தீய) வார்த்தை பேசிவிடும் காரணமாக கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் அவர் நரகத்தில் போய் விழுகின்றார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)