அத்தியாயம்: 45, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4713

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ هِشَامِ بْنِ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ :‏

مَرَّ بِالشَّامِ عَلَى أُنَاسٍ وَقَدْ أُقِيمُوا فِي الشَّمْسِ وَصُبَّ عَلَى رُءُوسِهِمُ الزَّيْتُ فَقَالَ مَا هَذَا قِيلَ يُعَذَّبُونَ فِي الْخَرَاجِ ‏.‏ فَقَالَ أَمَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ اللَّهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ فِي الدُّنْيَا ‏”‏ ‏

ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி), ஷாம் (சிரியா) நாட்டில் மக்களில் சிலரைக் கடந்துசென்றார்கள். அம்மக்களது தலையில் ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டு வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி), “என்ன இது?” என்று கேட்டார்கள். “கராஜ் (வரி செலுத்தாதது) தொடர்பாகத் தண்டிக்கப்படுகின்றனர்” என்று சொல்லப் பட்டது.

அப்போது ஹிஷாம் (ரலி), “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் (மறுமையில்) வேதனை செய்வான்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 45, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4712

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ يَحْيَى بْنِ مَالِكٍ الْمَرَاغِيِّ – وَهُوَ أَبُو أَيُّوبَ – عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا قَاتَلَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيَجْتَنِبِ الْوَجْهَ ‏”‏

“உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், (அவருடைய) முகத்தில் அடிப்பதைத் தவிர்த்துக்கொள்ளட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4711

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا الْمُثَنَّى، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنِ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَفِي حَدِيثِ ابْنِ حَاتِمٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا قَاتَلَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيَجْتَنِبِ الْوَجْهَ فَإِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ عَلَى صُورَتِهِ ‏”‏ ‏

“உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், (அவருடைய) முகத்தில் அடிப்பதைத் தவிர்த்துக்கொள்ளட்டும். ஏனெனில், அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை, தன் உருவத்திலேயே படைத்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4710

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعَ أَبَا أَيُّوبَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِذَا قَاتَلَ أَحَدُكُمْ أَخَاهُ فَلاَ يَلْطِمَنَّ الْوَجْهَ ‏”‏ ‏

“உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், (அவருடைய) முகத்தில் அறைய வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4709

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا قَاتَلَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيَتَّقِ الْوَجْهَ ‏”‏

“உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், (அவருடைய) முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4708

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، – يَعْنِي الْحِزَامِيَّ – عَنِ أَبِي الزِّنَادِ عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِذَا قَاتَلَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيَجْتَنِبِ الْوَجْهَ ‏”‏


حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ ‏ “‏ إِذَا ضَرَبَ أَحَدُكُمْ ‏”‏

“உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், (அவருடைய) முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) வழி அறிவிப்பு, “உங்களில் ஒருவர் (தம் சகோதரரை) அடித்தால் …” என்று ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 45, பாடம்: 31, ஹதீஸ் எண்: 4707

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لَمَّا صَوَّرَ اللَّهُ آدَمَ فِي الْجَنَّةِ تَرَكَهُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَتْرُكَهُ فَجَعَلَ إِبْلِيسُ يُطِيفُ بِهِ يَنْظُرُ مَا هُوَ فَلَمَّا رَآهُ أَجْوَفَ عَرَفَ أَنَّهُ خُلِقَ خَلْقًا لاَ يَتَمَالَكُ ‏”‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادٌ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏

“அல்லாஹ், (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்தில் படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அவரைச் சுற்றி வந்து, உற்றுப் பார்க்கலானான். அவருக்கு வயிறு இருப்பதாக அவரைக் கண்டபோது, தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என அவன் அறிந்துகொண்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 30, ஹதீஸ் எண்: 4706

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، سَمِعْتُ الأَعْمَشَ، يَقُولُ سَمِعْتُ عَدِيَّ بْنَ ثَابِتٍ، يَقُولُ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ صُرَدٍ قَالَ :‏ ‏

اسْتَبَّ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَعَلَ أَحَدُهُمَا يَغْضَبُ وَيَحْمَرُّ وَجْهُهُ فَنَظَرَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ ذَا عَنْهُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ‏”‏ ‏ فَقَامَ إِلَى الرَّجُلِ رَجُلٌ مِمَّنْ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ أَتَدْرِي مَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آنِفًا قَالَ ‏”‏ إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ ذَا عَنْهُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ‏”‏ ‏فَقَالَ لَهُ الرَّجُلُ أَمَجْنُونًا تَرَانِي


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர். அவர்களில் ஒருவருக்குக் கோபமேற்பட்டு அவரது முகம் சிவக்கலாயிற்று. அவரை உற்றுப் பார்த்த நபி (ஸல்), “எனக்கு ஒரு (பிரார்த்தனை) சொல் தெரியும். அதை அவர் சொல்வாராயின் அ(வருக்கு ஏற்பட்டிருக்கும் கோபமான)து அவரைவிட்டுப் போய்விடும். ‘அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்’ (என்பதே அந்தச் சொல்)” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) இவ்வாறு கூறியதைக் கேட்டவர்களில் ஒருவர் அந்த மனிதரை நோக்கிச் சென்று, “சற்று முன்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்ன சொன்னார்கள் என்று உனக்குத் தெரியுமா? எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை அவர் சொல்வாராயின் அ(வருக்கு ஏற்பட்டுள்ள கோபமான)து அவரைவிட்டுப் போய் விடும். ‘அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்’ (என்பதே அந்த சொல்) என்று கூறினார்கள்” என்றார். அதற்கு அவர், “நான் உனக்குப் பைத்தியக்காரனாகத் தெரிகின்றேனா?” என்று கேட்டார்.

அறிவிப்பாளர் : ஸுலைமான் பின் ஸுரத் (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 30, ஹதீஸ் எண்: 4705

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ ابْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ قَالَ :‏ ‏

اسْتَبَّ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَعَلَ أَحَدُهُمَا تَحْمَرُّ عَيْنَاهُ وَتَنْتَفِخُ أَوْدَاجُهُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنِّي لأَعْرِفُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ عَنْهُ الَّذِي يَجِدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ‏”‏ ‏.‏ فَقَالَ الرَّجُلُ وَهَلْ تَرَى بِي مِنْ جُنُونٍ


قَالَ ابْنُ الْعَلاَءِ فَقَالَ وَهَلْ تَرَى ‏.‏ وَلَمْ يَذْكُرِ الرَّجُلَ

நபி (ஸல்) அவர்களின் அருகில் இரண்டு ஆடவர் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர். அவர்களில் ஒருவருடைய கண்கள் (கோபத்தால்) சிவந்து, கழுத்து நரம்புகள் புடைத்தன.

நபி (ஸல்), “எனக்கு ஒரு (பிரார்த்தனை) சொல் தெரியும். அதை அவர் சொல்வாராயின் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய (கோப) உணர்ச்சி விலகிவிடும். ‘அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்’ (ஷைத்தானிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்) (என்பதே அது)” என்று கூறினார்கள். (மக்கள் கோபத்திலிருந்தவரிடம் இதை எடுத்துரைத்தபோது) அவர், “எனக்குப் பைத்தியம்  பிடித்திருப்பதாகத் தெரிகிறதா?” என்று கேட்டார்.

அறிவிப்பாளர் : ஸுலைமான் பின் ஸுரத் (ரலி)


குறிப்பு :

இப்னுல் அலா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘அவர்’ எனும் சொல் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 45, பாடம்: 30, ஹதீஸ் எண்: 4704

حَدَّثَنَا حَاجِبُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ :‏ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ ‏”‏ ‏.‏ قَالُوا فَالشَّدِيدُ أَيُّمَ هُوَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ ‏”‏ ‏


وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ عَبْدِ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْرَامَ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன்” என்று கூறினார்கள். மக்கள், “அப்படியானால், வீரன் என்பவன் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே (வீரன் ஆவான்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)