அத்தியாயம்: 45, பாடம்: 36, ஹதீஸ் எண்: 4723

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ ‏”‏ ‏

“ஒருவர், ஒரு சாலை வழியே நடந்து செல்லும்போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டார். உடனே அதை (எடுத்து) தள்ளிப் போட்டார். அவரது அந்த நற்செயலை அல்லாஹ் நன்றியறிதலோடு ஏற்று, அவருக்குப் பாவமன்னிப்பு வழங்கினான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 35, ஹதீஸ் எண்: 4722

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ قَالَ :‏

هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ يُشِيرُ أَحَدُكُمْ إِلَى أَخِيهِ بِالسِّلاَحِ فَإِنَّهُ لاَ يَدْرِي أَحَدُكُمْ لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ ‏”‏

“நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில், நீங்கள் அறியாமல், ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பறித்து(அவரைத் தாக்கி)விடக்கூடும். அதனால் நீங்கள் நரகப் படுகுழியில் வீழ்ந்து விடுவீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 45, பாடம்: 35, ஹதீஸ் எண்: 4721

حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالَ عَمْرٌو حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ :‏

قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ أَشَارَ إِلَى أَخِيهِ بِحَدِيدَةٍ فَإِنَّ الْمَلاَئِكَةَ تَلْعَنُهُ حَتَّى وَإِنْ كَانَ أَخَاهُ لأَبِيهِ وَأُمِّهِ ‏”‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ

அபுல்காஸிம் (முஹம்மது – ஸல்), “ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தின் மூலம் சைகை செய்தால், அவர் அச்செயலைக் கைவிடும்வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர் – அவர் தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் பிறந்த தன் சொந்த சகோதரராய் இருந்தாலும் சரியே” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4720

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، – وَاللَّفْظُ لِعَبْدِ اللَّهِ – قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ إِذَا مَرَّ أَحَدُكُمْ فِي مَسْجِدِنَا أَوْ فِي سُوقِنَا وَمَعَهُ نَبْلٌ فَلْيُمْسِكْ عَلَى نِصَالِهَا بِكَفِّهِ أَنْ يُصِيبَ أَحَدًا مِنَ الْمُسْلِمِينَ مِنْهَا بِشَىْءٍ ‏”‏ ‏ أَوْ قَالَ ‏”‏ لِيَقْبِضْ عَلَى نِصَالِهَا ‏”‏

“உங்களில் ஒருவர் தம்முடன் அம்புகளை வைத்துக்கொண்டு, நமது பள்ளிவாசலிலோ கடைத்தெருவிலோ நடந்துசென்றால், அவற்றில் எதுவும் முஸ்லிம்களில் எவரையும் காயப்படுத்திவிடாமலிருக்க அவற்றின் முனைகளைத் தமது கரத்தால் பிடித்து(மறைத்து)க் கொள்ளட்டும்! / அவற்றின் முனைகளைக் கைக்குள் வைத்துக்கொள்ளட்டும்!“ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4719

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى:‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا مَرَّ أَحَدُكُمْ فِي مَجْلِسٍ أَوْ سُوقٍ وَبِيَدِهِ نَبْلٌ فَلْيَأْخُذْ بِنِصَالِهَا ثُمَّ لْيَأْخُذْ بِنِصَالِهَا ثُمَّ لْيَأْخُذْ بِنِصَالِهَا ‏”‏


قَالَ فَقَالَ أَبُو مُوسَى وَاللَّهِ مَا مُتْنَا حَتَّى سَدَّدْنَاهَا بَعْضُنَا فِي وُجُوهِ بَعْضٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் ஒருவர் பள்ளிவாசலிலோ கடைத்தெருவிலோ தமது கையில் அம்புடன் நடந்துசென்றால், அதன் முனையைப் பிடித்து(மறைத்து)க் கொண்டு செல்லட்டும்; அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க்கொண்டு செல்லட்டும்; அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க்கொண்டு செல்லட்டும்!” என்று (மும்முறை) கூறினார்கள்.

ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களுக்கிடையே சிலரின் முகங்களுக்கெதிரே அம்புகளை உயர்த்திப் பிடிக்காமல் சிலர் மரணித்ததில்லை.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4718

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ أَمَرَ رَجُلاً كَانَ يَتَصَدَّقُ بِالنَّبْلِ فِي الْمَسْجِدِ أَنْ لاَ يَمُرَّ بِهَا إِلاَّ وَهُوَ آخِذٌ بِنُصُولِهَا


وَقَالَ ابْنُ رُمْحٍ كَانَ يَصَّدَّقُ بِالنَّبْلِ ‏

ஒருவர் பள்ளிவாசலில் அம்புகளைத் தர்மம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவற்றின் முனையைப் பிடித்து(மறைத் து)க்கொண்டுதான் செல்ல வேண்டுமெனக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

இப்னு ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், “பெருந்தன்மையுடன் தருமம் செய்பவராக அவர் இருந்தார் …” என்ற கூடுதலான தகவல் காணப்படுகின்றது.

அத்தியாயம்: 45, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4717

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو الرَّبِيعِ، قَالَ أَبُو الرَّبِيعِ حَدَّثَنَا وَقَالَ، يَحْيَى – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ :‏

أَنَّ رَجُلاً، مَرَّ بِأَسْهُمٍ فِي الْمَسْجِدِ قَدْ أَبْدَى نُصُولَهَا فَأُمِرَ أَنْ يَأْخُذَ بِنُصُولِهَا كَىْ لاَ يَخْدِشَ مُسْلِمًا ‏

ஒருவர் பள்ளிவாசலில் அம்புகளில் சிலவற்றை, அவற்றின் முனைகள் வெளியே தெரியுமாறு எடுத்துச் சென்றார். அப்போது அவை முஸ்லிம் எவரையும் கீறி(க் காயப் படுத்தி)விடாதபடி எடுத்துச் செல்லுமாறு அவர் கட்டளையிடப்பட்டார்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4716

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ، أَبُو بَكْرٍ حَدَّثَنَا – سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا يَقُولُ :‏

مَرَّ رَجُلٌ فِي الْمَسْجِدِ بِسِهَامٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أَمْسِكْ بِنِصَالِهَا ‏”‏ ‏

மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் ஒருவர் அம்புகளுடன் நடந்து சென்றார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அம்புகளின் முனைகளைப் பிடித்து(மறைத்து)க் கொள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4715

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ :‏

أَنَّ هِشَامَ بْنَ حَكِيمٍ، وَجَدَ رَجُلاً وَهُوَ عَلَى حِمْصَ يُشَمِّسُ نَاسًا مِنَ النَّبَطِ فِي أَدَاءِ الْجِزْيَةِ فَقَالَ مَا هَذَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ اللَّهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاسَ فِي الدُّنْيَا ‏”‏

ஹிம்ஸ் பகுதியின் ஆட்சியர் ஒருவர், ஜிஸ்யா செலுத்தாத விவசாயிகளில் சிலரை வெயிலில் நிறுத்தி வைத்திருப்பதை ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) கண்டார்கள்.

அப்போது ஹிஷாம் (ரலி), “என்ன இது?” என்று கேட்டுவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் (மறு உலகில்) வேதனை செய்வான் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 45, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4714

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ قَالَ :‏

مَرَّ هِشَامُ بْنُ حَكِيمِ بْنِ حِزَامٍ عَلَى أُنَاسٍ مِنَ الأَنْبَاطِ بِالشَّامِ قَدْ أُقِيمُوا فِي الشَّمْسِ فَقَالَ مَا شَأْنُهُمْ قَالُوا حُبِسُوا فِي الْجِزْيَةِ ‏.‏ فَقَالَ هِشَامٌ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ اللَّهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاسَ فِي الدُّنْيَا ‏”‏


حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، كُلُّهُمْ عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ فِي حَدِيثِ جَرِيرٍ قَالَ وَأَمِيرُهُمْ يَوْمَئِذٍ عُمَيْرُ بْنُ سَعْدٍ عَلَى فِلَسْطِينَ فَدَخَلَ عَلَيْهِ فَحَدَّثَهُ فَأَمَرَ بِهِمْ فَخُلُّوا

ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி), ஷாம் (சிரியா) நாட்டில் விவசாயிகள் சிலரைக் கடந்து சென்றார்கள். அந்த விவசாயிகள் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி), “இவர்களுடைய விஷயம் என்ன?” என்று கேட்டார்கள். மக்கள், “ஜிஸ்யா (செலுத்த மறுத்தது) தொடர்பாகப் பிடிக்கப்பட்டனர்” என்று பதிலளித்தனர்.

அப்போது ஹிஷாம் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் (மறு உலகில்) வேதனை செய்வான்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)


குறிப்பு :

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அன்றைய தினத்தில் ஃபலஸ்தீனத்தின் ஆட்சியாளராக உமைர் பின் ஸஅத் என்பவர் இருந்தார். அவரிடம் ஹிஷாம் (ரலி) சென்று (மக்களுக்கு இழைக்கப்படும் வேதனையைத்) தெரிவித்தார்கள். உடனே உமைர் பின் ஸஅத் அவர்களின் ஆணையின் பேரில் அந்த விவசாயிகள் விடுவிக்கப்பட்டனர்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.