அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2503

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ الْجُهَنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَدِّهِ ‏ ‏قَالَ: ‏

‏أَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْمُتْعَةِ ‏ ‏عَامَ الْفَتْحِ حِينَ دَخَلْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏ثُمَّ لَمْ نَخْرُجْ مِنْهَا حَتَّى نَهَانَا عَنْهَا

நாங்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவிற்குள் நுழைந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொள்ள உத்தரவிட்டார்கள். பின்னர் மக்காவிலிருந்து புறப்படுவதற்குள் அதிலிருந்து எங்களைத் தடுத்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஸப்ரா அல்ஜுஹனீ (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2502

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ عُمَرَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الرَّبِيعُ بْنُ سَبْرَةَ الْجُهَنِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏حَدَّثَهُ :‏

‏أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ ‏ ‏إِنِّي قَدْ كُنْتُ أَذِنْتُ لَكُمْ فِي ‏ ‏الِاسْتِمْتَاعِ ‏ ‏مِنْ النِّسَاءِ وَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ ذَلِكَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ فَمَنْ كَانَ عِنْدَهُ مِنْهُنَّ شَيْءٌ فَلْيُخَلِّ سَبِيلَهُ وَلَا تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَائِمًا بَيْنَ الرُّكْنِ وَالْبَابِ وَهُوَ يَقُولُ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ

நான் (மக்கா வெற்றியின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், “மக்களே! நான் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு அனுமதியளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத்திருமணத்திற்கு மறுமை நாள்வரை தடை விதித்துவிட்டான். எனவே, அல்முத்ஆ திருமணம் செய்த பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அவளை அவளது வழியில் விட்டுவிடட்டும். அவளுக்கு நீங்கள் (மணக்கொடையாகக்) கொடுத்திருந்த எதையும் (திரும்ப) எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸப்ரா அல்ஜுஹனீ (ரலி)


குறிப்பு :

அப்ததிப்னு ஸுலைமான் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜருல் அஸ்வதுக்கும் கஅபாவின் தலைவாயிலுக்கும் நடுவில் நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன் …” என ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2501

حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرٌ يَعْنِي ابْنَ مُفَضَّلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَارَةُ بْنُ غَزِيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏الرَّبِيعِ بْنِ سَبْرَةَ: ‏

‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏غَزَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتْحَ ‏ ‏مَكَّةَ ‏ ‏قَالَ فَأَقَمْنَا بِهَا خَمْسَ عَشْرَةَ ثَلَاثِينَ بَيْنَ لَيْلَةٍ وَيَوْمٍ ‏ ‏فَأَذِنَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏مُتْعَةِ النِّسَاءِ ‏ ‏فَخَرَجْتُ أَنَا وَرَجُلٌ مِنْ قَوْمِي وَلِي عَلَيْهِ فَضْلٌ فِي الْجَمَالِ وَهُوَ قَرِيبٌ مِنْ ‏ ‏الدَّمَامَةِ ‏ ‏مَعَ كُلِّ وَاحِدٍ مِنَّا بُرْدٌ فَبُرْدِي ‏ ‏خَلَقٌ ‏ ‏وَأَمَّا بُرْدُ ابْنِ عَمِّي فَبُرْدٌ جَدِيدٌ ‏ ‏غَضٌّ ‏ ‏حَتَّى إِذَا كُنَّا بِأَسْفَلِ ‏ ‏مَكَّةَ ‏ ‏أَوْ بِأَعْلَاهَا فَتَلَقَّتْنَا فَتَاةٌ مِثْلُ ‏ ‏الْبَكْرَةِ ‏ ‏الْعَنَطْنَطَةِ ‏ ‏فَقُلْنَا هَلْ لَكِ أَنْ ‏ ‏يَسْتَمْتِعَ ‏ ‏مِنْكِ أَحَدُنَا قَالَتْ وَمَاذَا تَبْذُلَانِ فَنَشَرَ كُلُّ وَاحِدٍ مِنَّا بُرْدَهُ فَجَعَلَتْ تَنْظُرُ إِلَى الرَّجُلَيْنِ ‏ ‏وَيَرَاهَا صَاحِبِي تَنْظُرُ إِلَى ‏ ‏عِطْفِهَا ‏ ‏فَقَالَ إِنَّ بُرْدَ هَذَا ‏ ‏خَلَقٌ ‏ ‏وَبُرْدِي جَدِيدٌ ‏ ‏غَضٌّ ‏ ‏فَتَقُولُ بُرْدُ هَذَا لَا بَأْسَ بِهِ ثَلَاثَ مِرَارٍ أَوْ مَرَّتَيْنِ ثُمَّ ‏ ‏اسْتَمْتَعْتُ ‏ ‏مِنْهَا فَلَمْ أَخْرُجْ حَتَّى حَرَّمَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو النُّعْمَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَارَةُ بْنُ غَزِيَّةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الرَّبِيعُ بْنُ سَبْرَةَ الْجُهَنِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ الْفَتْحِ إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏فَذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏بِشْرٍ ‏ ‏وَزَادَ قَالَتْ وَهَلْ يَصْلُحُ ذَاكَ وَفِيهِ قَالَ إِنَّ بُرْدَ هَذَا ‏ ‏خَلَقٌ ‏ ‏مَحٌّ

என் தந்தை (ஸப்ரா அல்ஜுஹனீ) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்கா வெற்றிப் போரில் கலந்து கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மக்காவில் பதினைந்து நாட்கள் (முப்பது இரவு – பகல்கள்) தங்கியிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நானும் எனது குடும்பத்தைச் சேர்ந்த (என் தந்தையின் சகோரர் புதல்வர்) ஒருவரும் (பெண் தேடிப்) புறப்பட்டோம். நான் அவரைவிட அழகில் சிறந்தவனாக இருந்தேன். அவர் சுமாரான அழகுடையவராகவே இருந்தார்.

எங்களில் ஒவ்வொருவருடனும் ஒரு போர்வை இருந்தது. எனது போர்வை மிகப் பழையதாயிருந்தது. என் தந்தையின் சகோதரர் புதல்வரது போர்வை புதியதாகவும் மிருதுவாகவும் இருந்தது. நாங்கள் மக்காவிற்குக் கீழ்ப் புறத்திலோ மேற் புறத்திலோ இருந்தபோது, கழுத்து நீண்ட இளம் ஒட்டகத்தைப் போன்ற (அழகான) கன்னிப் பெண் ஒருத்தி எங்களைச் சந்தித்தாள். அவளிடம் நாங்கள், “எங்களில் ஒருவரை அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொள்ள இசைவு உண்டா?” எனக் கேட்டோம். அவள், “நீங்கள் இருவரும் (எனக்காக) என்ன செலவிடுவீர்கள்?” என்று கேட்டாள். எங்களில் ஒவ்வொருவரும் எங்களிடமிருந்த போர்வையை விரித்துக் காட்டினோம். அவள் எங்கள் இருவரையும் கூர்ந்து நோக்கலானாள். என்னுடன் வந்திருந்தவர் அவளது ஒரு பக்கத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு, “இவரது போர்வை பழையது; எனது போர்வை புதியது; மென்மையானது” என்று சொன்னார். உடனே அவள், “இவரது போர்வையே பரவாயில்லை (அதுவே போதும்)” என இரு முறையோ மூன்று முறையோ கூறினாள். பிறகு அவளை நான் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொண்டேன். நான் (அங்கிருந்து) புறப்படுவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஸப்ரா அல்ஜுஹனீ (ரலி) வழியாக அவர்தம் மகன் ரபீஉ பின் ஸப்ரா (ரஹ்)


குறிப்பு :                                                                   

வுஹைப் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் மக்கா வெற்றி ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவை நோக்கிப் புறப்பட்டோம் …” என்று ஆரம்பமாகிறது. என்னுடன் வந்திருந்தவர் (என்னைச் சுட்டி), “இவரது போர்வை இற்றுப்போன பழைய போர்வை எனக் கூறினார்” என்றும் அவரைக் குறித்து அப்பெண், “அவர் (எனக்கு) சரிப்படுவாரா?” என்று கேட்டதாகவும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2500

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏الرَّبِيعِ بْنِ سَبْرَةَ الْجُهَنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏سَبْرَةَ ‏ ‏أَنَّهُ قَالَ: ‏

أَذِنَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْمُتْعَةِ ‏ ‏فَانْطَلَقْتُ أَنَا وَرَجُلٌ إِلَى امْرَأَةٍ مِنْ ‏ ‏بَنِي عَامِرٍ ‏ ‏كَأَنَّهَا ‏ ‏بَكْرَةٌ ‏ ‏عَيْطَاءُ ‏ ‏فَعَرَضْنَا عَلَيْهَا أَنْفُسَنَا فَقَالَتْ مَا ‏ ‏تُعْطِي فَقُلْتُ رِدَائِي وَقَالَ صَاحِبِي رِدَائِي وَكَانَ ‏ ‏رِدَاءُ ‏ ‏صَاحِبِي أَجْوَدَ مِنْ رِدَائِي وَكُنْتُ أَشَبَّ مِنْهُ فَإِذَا نَظَرَتْ إِلَى ‏ ‏رِدَاءِ ‏ ‏صَاحِبِي أَعْجَبَهَا وَإِذَا نَظَرَتْ إِلَيَّ أَعْجَبْتُهَا ثُمَّ قَالَتْ أَنْتَ وَرِدَاؤُكَ يَكْفِينِي فَمَكَثْتُ مَعَهَا ثَلَاثًا ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ كَانَ عِنْدَهُ شَيْءٌ مِنْ هَذِهِ النِّسَاءِ الَّتِي ‏ ‏يَتَمَتَّعُ ‏ ‏فَلْيُخَلِّ سَبِيلَهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு (மக்கா வெற்றியின்போது) அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொள்ள அனுமதியளித்தார்கள். நானும் மற்றொருவரும் ‘பனூ ஆமிர்’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் சென்றோம். அவள் கழுத்து நீண்ட இளம் ஒட்டகத்தைப் போன்று (அழகாக) இருந்தாள். எங்களில் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவளிடம் நாங்கள் கோரினோம். அவள், “நீங்கள் (மணக்கொடையாக) என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டாள். நான், “எனது மேலாடையை” என்றேன். என்னுடன் வந்திருந்தவரும் “எனது மேலாடையை” என்று கூறினார். என்னுடன் வந்திருந்தவரின் மேலாடை எனது மேலாடையைவிடத் தரமானதாக இருந்தது. ஆனால், நான் அவரைவிட (வயது குறைந்த) இளைஞனாயிருந்தேன். அவள் என்னுடன் வந்திருந்தவரின் மேலாடையைக் கூர்ந்து பார்த்தபோது, அது அவளுக்குப் பிடித்தது. அதே சமயத்தில், அவள் என்னைப் பார்த்தபோது, நானும் அவளுக்குப் பிடித்திருந்தேன். பிறகு அவள், (என்னைப் பார்த்து) “நீரும் உமது மேலாடையுமே எனக்குப் போதும்” என்றாள். நான் (அவளை மணமுடித்து) அவளுடன் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்முத்ஆ முறையில் மணமுடிக்கப்பட்ட பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அப்பெண்ணை அவளது வழியில் விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2499

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يُونُسُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عُمَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏إِيَاسِ بْنِ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏

رَخَّصَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ ‏ ‏أَوْطَاسٍ ‏ ‏فِي ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏ثَلَاثًا ثُمَّ نَهَى عَنْهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்தாஸ் போர் ஆண்டில் மூன்று நாட்களுக்கு அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொள்ள அனுமதியளித்தார்கள். பின்னர் அதற்குத் தடை விதித்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2498

‏حَدَّثَنَا ‏ ‏حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏قَالَ: ‏

كُنْتُ عِنْدَ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏فَأَتَاهُ آتٍ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏وَابْنُ الزُّبَيْرِ ‏ ‏اخْتَلَفَا فِي ‏ ‏الْمُتْعَتَيْنِ ‏ ‏فَقَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏فَعَلْنَاهُمَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ نَهَانَا عَنْهُمَا ‏ ‏عُمَرُ ‏ ‏فَلَمْ نَعُدْ لَهُمَا

நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களும் (தமத்துஉ வகை ஹஜ் மற்றும் இடைக்காலத் திருமணம் ஆகிய) இரு முத்ஆக்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டனர்” என்று கூறினார். அப்போது ஜாபிர் (ரலி), “நாங்கள் அவ்விரண்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருக்கும் காலத்தில்) செய்தோம். பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அவ்விரண்டையும் செய்யலாகாதென எங்களுக்குத் தடை விதித்தார்கள். எனவே, நாங்கள் அவ்விரண்டையும் திரும்பச் செய்யவில்லை” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2497

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ: ‏

كُنَّا ‏ ‏نَسْتَمْتِعُ ‏ ‏بِالْقَبْضَةِ ‏ ‏مِنْ التَّمْرِ وَالدَّقِيقِ الْأَيَّامَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏حَتَّى نَهَى عَنْهُ ‏ ‏عُمَرُ ‏ ‏فِي شَأْنِ ‏ ‏عَمْرِو بْنِ حُرَيْثٍ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ரு (ரலி) அவர்களது காலத்திலும் ஒரு கையளவுப் பேரீச்சம் பழம் மற்றும் மாவு ஆகியவற்றைக் கொடுத்து, சில நாட்களுக்காக நாங்கள் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துவந்தோம். உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அம்ரு பின் ஹுரைஸ் (ரலி) தொடர்பான விஷயத்தில் அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2496

‏و حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَطَاءٌ: ‏

قَدِمَ ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏مُعْتَمِرًا فَجِئْنَاهُ فِي مَنْزِلِهِ فَسَأَلَهُ الْقَوْمُ عَنْ أَشْيَاءَ ثُمَّ ذَكَرُوا ‏ ‏الْمُتْعَةَ ‏ ‏فَقَالَ ‏ ‏نَعَمْ ‏ ‏اسْتَمْتَعْنَا ‏ ‏عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَعُمَرَ

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) உம்ராவிற்காக வந்தபோது, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு நாங்கள் சென்றோம். அவர்களிடம் மக்கள் பல விஷயங்களைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். பிறகு அவர்களிடம் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் பற்றியும் பேசினர். அப்போது ஜாபிர் (ரலி), “ஆம்; நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்திருந்தோம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2495

‏و حَدَّثَنِي ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ يَعْنِي ابْنَ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ ‏ ‏وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَانَا ‏ ‏فَأَذِنَ لَنَا فِي ‏ ‏الْمُتْعَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் வந்து, அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொள்ள எங்களுக்கு (தாற்காலிகமாக) அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர்கள்: ஸலமா பின் அல்அக்வஉ (ரலி), ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2494

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْحَسَنَ بْنَ مُحَمَّدٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏وَسَلَمَةَ بْنِ الْأَكْوَعِ ‏ ‏قَالَا: ‏

خَرَجَ عَلَيْنَا مُنَادِي رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ ‏ ‏أَذِنَ لَكُمْ أَنْ تَسْتَمْتِعُوا ‏ ‏يَعْنِي ‏ ‏مُتْعَةَ النِّسَاءِ

அல்லாஹ்வின் தூதருடைய அறிவிப்பாளர் ஒருவர் (நாங்கள் ஹுனைன் அல்லது அவ்தாஸ் போரில் இருந்தபோது) எங்களிடம் வந்து, “முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்து கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுக்கு (தாற்காலிகமாக) அனுமதியளித்துள்ளார்கள்” என்று அறிவிப்புச் செய்தார்.

அறிவிப்பாளர்கள்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)