அத்தியாயம்: 1, பாடம்: 63, ஹதீஸ் எண்: 205

و حَدَّثَنَا ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمَلِيحِ ‏:‏ ‏

‏أَنَّ ‏ ‏عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ ‏ ‏عَادَ ‏ ‏مَعْقِلَ بْنَ يَسَارٍ ‏ ‏فِي مَرَضِهِ فَقَالَ لَهُ ‏ ‏مَعْقِلٌ ‏ ‏إِنِّي مُحَدِّثُكَ بِحَدِيثٍ لَوْلَا أَنِّي فِي الْمَوْتِ لَمْ أُحَدِّثْكَ بِهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا مِنْ أَمِيرٍ يَلِي أَمْرَ الْمُسْلِمِينَ ثُمَّ لَا ‏ ‏يَجْهَدُ ‏ ‏لَهُمْ وَيَنْصَحُ إِلَّا لَمْ يَدْخُلْ مَعَهُمْ الْجَنَّةَ ‏

மஅகில் பின் யஸார் (ரலி) நோயுற்றிருந்தபோது அவர்களை உடல் நலம் விசாரிக்க (ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ரஹ்) வந்திருந்தார்.

அப்போது, “உங்களுக்கு நான் ஒரு ஹதீஸை அறிவிக்கப் போகின்றேன். நான் இறக்கும் தருவாயில் இல்லாவிட்டால் அதை நான் அறிவிக்க மாட்டேன். ஓர் ஆட்சியாளர் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள் மீது) அக்கறை காட்டாமலும் இருந்தால், அவர்களு(ள் சொர்க்கம் செல்வோரு)டன் சேர்ந்து அவர் சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற நான் செவியுற்றிருக்கின்றேன்” என்று மஅகில் பின் யஸார் (ரலி) கூறினார்.

அறிவிப்பாளர் : மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) வழியாக அபுல் மலீஹ் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 1.63, ஹதீஸ் எண்: 204

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏قَالَ ‏:‏ ‏

‏دَخَلَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ ‏ ‏عَلَى ‏ ‏مَعْقَلِ بْنِ يَسَارٍ ‏ ‏وَهُوَ وَجِعٌ فَسَأَلَهُ فَقَالَ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا لَمْ أَكُنْ حَدَّثْتُكَهُ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا ‏ ‏يَسْتَرْعِي ‏ ‏اللَّهُ عَبْدًا رَعِيَّةً يَمُوتُ حِينَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهَا إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ ‏


قَالَ أَلَّا كُنْتَ حَدَّثْتَنِي هَذَا قَبْلَ الْيَوْمِ قَالَ مَا حَدَّثْتُكَ أَوْ لَمْ أَكُنْ لَأُحَدِّثَكَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنٌ يَعْنِي الْجُعْفِيَّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏الْحَسَنُ ‏ ‏كُنَّا عِنْدَ ‏ ‏مَعْقِلِ بْنِ يَسَارٍ ‏ ‏نَعُودُهُ فَجَاءَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏مَعْقِلٌ ‏ ‏إِنِّي سَأُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِهِمَا ‏

மஅகில் பின் யஸார் (ரலி) நோயுற்றிருந்தபோது (உடல் நலம் விசாரிப்பதற்காக) அவர்களிடம் (பஸராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ரஹ்) சென்றிருந்தார்.

அப்போது உபைதுல்லாஹ்விடம் மஅகில் (ரலி), “முன்பு நான் உங்களிடம் அறிவித்திராத செய்தி ஒன்றை அறிவிக்கின்றேன்: குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, தம் பொறுப்பிலிருந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்து விட்டாரெனில், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்றார்.

அப்போது உபைதுல்லாஹ் (ரஹ்), “இதற்கு முன்பு இதை நீங்கள் எனக்கு அறிவிக்க வில்லையே?” என்று கேட்டார். மஅகில் (ரலி), “நான் உங்களுக்கு(க் காரணத்தோடுதான்) அறிவிக்கவில்லை” அல்லது “உங்களிடம் நான் (காரணத்தோடுதான்) அறிவிக்காமல் இருந்தேன்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) வழியாக ஹஸன் அல் பஸரீ (ரஹ்)


குறிப்பு:

ஹிஷம் (ரஹ்) வழி அறிவிப்பில் “நாங்கள் மஅகில் பின் யஸார் (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தோம். அப்போது (ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ரஹ்) வந்தார். அவரிடம் மஅகில் (ரலி), நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கப் போகின்றேன்… என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸின் பொருள்பட அறிவித்தார்கள்” என்று ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 63, ஹதீஸ் எண்: 203

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَشْهَبِ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏قَالَ ‏:‏ ‏

‏عَادَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ ‏ ‏مَعْقِلَ بْنَ يَسَارٍ الْمُزنِيَّ ‏ ‏فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ قَالَ ‏ ‏مَعْقِلٌ ‏ ‏إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ عَلِمْتُ أَنَّ لِي حَيَاةً مَا حَدَّثْتُكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا مِنْ عَبْدٍ ‏ ‏يَسْتَرْعِيهِ ‏ ‏اللَّهُ رَعِيَّةً يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ ‏

மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) நோய்வாய்ப்பட்டு இறந்தார். (அதற்கு முன்னர்) அவரை உடல் நலம் விசாரிப்பதற்காக (பஸ்ராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ரஹ்) சென்றிருந்தார்.

அப்போது, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற செய்தி ஒன்றை இப்போது உங்களுக்கு அறிவிக்கப்போகின்றேன். நான் இன்னும் (சிலகாலம்) உயிர் வாழ்வேன் என்று அறிந்திருந்தால் (அதை) நான் அறிவிக்கப்போவதில்லை. (கேளுங்கள்:) குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, தம் பொறுப்பிலிருந்த மக்களை அவர் ஏமாற்றி மோசடி செய்த நிலையில் இறந்து விட்டாரெனில், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன்” என மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) கூறினார்.

அறிவிப்பாளர் : மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) வழியாக ஹஸன் அல் பஸரீ (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 40, ஹதீஸ் எண்: 138

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَحْمَدُ بْنُ خِرَاشٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏حُسَيْنٌ الْمُعَلِّمُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بُرَيْدَةَ ‏ ‏أَنَّ ‏ ‏يَحْيَى بْنَ يَعْمَرَ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا الْأَسْوَدِ الدِّيلِيَّ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏حَدَّثَهُ قَالَ ‏:‏

أَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ نَائِمٌ عَلَيْهِ ثَوْبٌ أَبْيَضُ ثُمَّ أَتَيْتُهُ فَإِذَا هُوَ نَائِمٌ ثُمَّ أَتَيْتُهُ وَقَدْ اسْتَيْقَظَ فَجَلَسْتُ إِلَيْهِ فَقَالَ ‏ ‏مَا مِنْ عَبْدٍ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ إِلَّا دَخَلَ الْجَنَّةَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ ثَلَاثًا ثُمَّ قَالَ فِي الرَّابِعَةِ عَلَى ‏ ‏رَغْمِ ‏ ‏أَنْفِ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ فَخَرَجَ ‏ ‏أَبُو ذَرٍّ ‏ ‏وَهُوَ يَقُولُ وَإِنْ ‏ ‏رَغِمَ ‏ ‏أَنْفُ ‏ ‏أَبِي ذَرٍّ ‏

நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை சென்றபோது அவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். பிறகு மீண்டும் அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் விழித்திருந்தார்கள். நான் அவர்கள் அருகில் சென்று அமர்ந்தேன்.

அப்போது, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று உறுதி கூறி, அதே நம்பிக்கையில் இறந்துவிடும் எந்த அடியாரும் சொர்க்கம் புகாமல் இருக்க மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நான், “அவர் விபச்சாரம் புரிந்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம்! விபச்சாரம் புரிந்திருந்தாலும் திருடியிருந்தாலுங்கூட” என்று சொன்னார்கள். நான், (மீண்டும்) “அவர் விபச்சாரம் புரிந்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் மீண்டும், “விபச்சாரம் புரிந்திருந்தாலும் திருடியிருந்தாலுங்கூட” என்று சொன்னார்கள். மூன்றாவது முறையும் (நான் கேட்க) முன் சொன்னவாறே பதில் கூறினார்கள்.

நான்காவது முறை, “அபூதர்ரின் *மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூதர் (ரலி)


குறிப்புகள் :

“அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார்கள்” என்று அபுல் அஸ்வத் அத்தீலீ (ரஹ்) என்ற அறிப்பாளர் கூடுதலாக அறிவிக்கின்றார்.

*எதையும் கவ்வுகின்ற உறுப்பு, வாயே அன்றி மூக்கு அல்ல. எனவே, ‘மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்பது குறியீட்டுச் சொல்தான். எனவே, அதை நேரடிப் பொருளில் தமிழ்ப் படுத்துவது சரியல்ல. ஒருவரது செயல்/பேச்சு வெறுப்பூட்டுவதாக இருப்பதைக் குறிப்பதற்கு அரபியரின் மொழி வழக்கில், ’அவரது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்பர். அதற்கு, “அவரது செயல்/பேச்சு எனக்கு வெறுப்பூட்டுகின்றது” என்பது பொருளாம்.

 

அத்தியாயம்: 1, பாடம்: 40, ஹதீஸ் எண்: 137

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏وَاصِلٍ الْأَحْدَبِ ‏ ‏عَنْ ‏ ‏الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ ‏ ‏قَالَ :‏

سَمِعْتُ ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏يُحَدِّثُ ‏‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏أَتَانِي ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَبَشَّرَنِي أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ

என்னிடம் (வானவர் ) ஜிப்ரீல் (அலை) வந்து, “உங்கள் சமுதாயத்தைச் சார்ந்தோரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் இறந்து விடுபவர் சொர்க்கம் செல்வார்” என்று நற்செய்தி கூறினார்.

உடனே நான், “அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் திருடி இருந்தாலுமா?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல், “அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் திருடியிருந்தாலும் (தவறுக்கு உரிய தண்டனை அனுபவித்த பின் இறைவன் நாடினால் சொர்க்கம் செல்வார்)” என்று பதிலளித்தார் என்று அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூதர் (ரலி) வழியாக அல் மஅரூர் பின் ஸுவைத் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 40, ஹதீஸ் எண்: 136

و حَدَّثَنِي ‏ ‏أَبُو أَيُّوبَ الْغَيْلَانِيُّ سُلَيْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُرَّةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ لَقِيَ اللَّهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ وَمَنْ لَقِيَهُ يُشْرِكُ بِهِ دَخَلَ النَّارَ ‏


قَالَ ‏ ‏أَبُو أَيُّوبَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُعَاذٌ وَهُوَ ابْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏بِمِثْلِه

“அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் (மரணித்து) அவனை (மறுமையில்) சந்திப்பவர் சொர்க்கம் செல்வார்; அவனுக்கு இணை வைத்தவராக அவனைச் சந்திப்பவர் நரகம் செல்வார்” என்று அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 40, ஹதீஸ் எண்: 135

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏:

‏أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الْمُوجِبَتَانِ فَقَالَ ‏ ‏مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ وَمَنْ مَاتَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ النَّارَ ‏

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “(ஒருவருக்கு சொர்க்கத்தையோ நரகத்தையோ) கட்டாயமாக்கும் இரண்டு யாவை? என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்), “அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்து விடுபவர் சொர்க்கம் செல்வார். அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்து விடுபவர் நரகம் செல்வார்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 40, ஹதீஸ் எண்: 134

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏وَكِيعٌ :‏

‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏يَقُولُ ‏ ‏مَنْ مَاتَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ النَّارَ وَقُلْتُ أَنَا وَمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராக இறந்து விடுபவர் நிச்சயமாக நரகம் செல்வார்” என்று (எதிர்மறையாகக்) கூறியதை (இப்னு நுமைர் ஆகிய) நான் செவியுற்று, (அதே கருத்தை) “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இறந்து விடுபவர் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்” என்று (இயல்மறையாகக்) கூறினேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக இப்னு நுமைர் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 1.10, ஹதீஸ் எண்: 40

حَدَّثَنَا ‏ ‏سَهْلُ بْنُ عُثْمَانَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَوْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏شَكَّ ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏قَالَ ‏:‏

‏لَمَّا كَانَ ‏ ‏غَزْوَةُ ‏ ‏تَبُوكَ ‏ ‏أَصَابَ النَّاسَ مَجَاعَةٌ قَالُوا يَا رَسُولَ اللَّهِ لَوْ أَذِنْتَ لَنَا فَنَحَرْنَا ‏ ‏نَوَاضِحَنَا ‏ ‏فَأَكَلْنَا وَادَّهَنَّا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏افْعَلُوا قَالَ فَجَاءَ ‏ ‏عُمَرُ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنْ فَعَلْتَ قَلَّ ‏ ‏الظَّهْرُ ‏ ‏وَلَكِنْ ادْعُهُمْ ‏ ‏بِفَضْلِ ‏ ‏أَزْوَادِهِمْ ثُمَّ ادْعُ اللَّهَ لَهُمْ عَلَيْهَا بِالْبَرَكَةِ لَعَلَّ اللَّهَ أَنْ يَجْعَلَ فِي ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ قَالَ فَدَعَا ‏ ‏بِنِطَعٍ ‏ ‏فَبَسَطَهُ ثُمَّ دَعَا بِفَضْلِ أَزْوَادِهِمْ قَالَ فَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِكَفِّ ذُرَةٍ قَالَ وَيَجِيءُ الْآخَرُ بِكَفِّ تَمْرٍ قَالَ وَيَجِيءُ الْآخَرُ بِكَسْرَةٍ حَتَّى اجْتَمَعَ عَلَى ‏ ‏النِّطَعِ ‏ ‏مِنْ ذَلِكَ شَيْءٌ يَسِيرٌ قَالَ فَدَعَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْهِ بِالْبَرَكَةِ ثُمَّ قَالَ خُذُوا فِي أَوْعِيَتِكُمْ قَالَ فَأَخَذُوا فِي أَوْعِيَتِهِمْ حَتَّى مَا تَرَكُوا فِي الْعَسْكَرِ وِعَاءً إِلَّا مَلَئُوهُ قَالَ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا وَفَضَلَتْ فَضْلَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ لَا ‏ ‏يَلْقَى اللَّهَ بِهِمَا عَبْدٌ غَيْرَ ‏ ‏شَاكٍّ ‏ ‏فَيُحْجَبَ عَنْ الْجَنَّةِ

தபூக் போரின்போது மக்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்கு அனுமதியளித்தால் நாங்கள் எங்கள் ஒட்டகங்களை அறுத்துச் சாப்பிடுவோம்; (அவற்றின் கொழுப்பை உருக்கி) எண்ணெய் எடுத்துக் கொள்வோம்” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “செய்து கொள்ளுங்கள்” என்று அனுமதி அளித்தார்கள்.

அப்போது அங்கு வந்த உமர் (ரலி) ,”அல்லாஹ்வின் தூதரே! இவ்வாறு நீங்கள் செய்(ய அனுமதியளித்)தால் வாகனப் பிராணிகள் குறைந்துவிடும். இதை விடுத்து, மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களைக் கொண்டு வரச்சொல்லுங்கள். பின்னர் அவற்றில் பெருக்கம் (பரக்கத்) ஏற்பட அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள். அல்லாஹ் அதில் (பெருக்கத்தை) ஏற்படுத்தக்கூடும்” என்றார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்” என்று கூறிவிட்டு, ஒரு தோல் விரிப்பைக் கொண்டு வந்து விரிக்கச் சொன்னார்கள். பிறகு மக்களிடம் எஞ்சியிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொன்னார்கள். ஒருவர் ஒரு கையளவு கோதுமையைக் கொண்டு வந்தார்; மற்றொருவர் ஒரு கையளவு பேரீச்சம் பழங்களுடன் வந்தார். இன்னொருவர் ரொட்டித்துண்டு ஒன்றைக் கொண்டு வந்தார். அந்த விரிப்பின் மீது சிறிதளவு உணவுப்பொருள்கள் சேர்ந்தன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதில் பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு “உங்கள் பைகளில் நிரப்பிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே மக்களும் தம் பைகளில் நிரப்பிக் கொண்டனர். அந்தப் படையினர் தம்மிடம் இருந்த எந்தப் பையையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றிலும் நிரப்பிக்கொண்டனர். மக்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்ட பின்னரும் மிச்சமிருந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதி கூறுகின்றேன். இவ்விரண்டு உறுதிமொழிகளையும் சந்தேகம் கொள்ளாமல் நம்பிய நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கும் எந்த அடியாருக்கும் சொர்க்கம் செல்வதற்குத் தடை என்பதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (அல்லது) அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.10, ஹதீஸ் எண்: 38

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ ‏ ‏قَالَ :‏ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ ‏


حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ الْحَذَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ أَبِي بِشْرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏حُمْرَانَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏عُثْمَانَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مِثْلَهُ سَوَاءً

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று (மனமார) அறிந்த நிலையில் இறந்து விடுபவர் சொர்க்கம் செல்வார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)