அத்தியாயம்: 15, பாடம்: 50, ஹதீஸ் எண்: 2285

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْمُحَيَّاةِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَعْلَى أَبُو الْمُحَيَّاةِ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏قَالَ: ‏ ‏

قِيلَ ‏ ‏لِعَبْدِ اللَّهِ ‏ ‏إِنَّ نَاسًا يَرْمُونَ ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏مِنْ فَوْقِ ‏ ‏الْعَقَبَةِ ‏ ‏قَالَ فَرَمَاهَا ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏مِنْ بَطْنِ الْوَادِي ‏ ‏ثُمَّ  قَالَ ‏‏‏مِنْ هَا هُنَا وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ رَمَاهَا الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) (ஹஜ்ஜின்போது) பத்னுல் வாதி பள்ளத்தாக்கில் நின்று (ஜம்ராவின் மீது) கல்லை எறிந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் “மக்கள் பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்று ஜம்ராவின் மீது கல்லை எறிகின்றனரே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அல்பகரா அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் இங்கிருந்ததுதான் (ஜம்ராவின் மீது) கல்லை எறிந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 50, ஹதீஸ் எண்: 2284

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ: ‏ ‏

أَنَّهُ حَجَّ مَعَ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ فَرَمَى ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏بِسَبْعِ حَصَيَاتٍ وَجَعَلَ ‏ ‏الْبَيْتَ ‏ ‏عَنْ يَسَارِهِ ‏ ‏وَمِنًى ‏ ‏عَنْ يَمِينِهِ ‏وَقَالَ هَذَا ‏ ‏مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏فَلَمَّا أَتَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்கள் இறையில்லம் கஅபா தமக்கு இடப் பக்கமாகவும், மினா தமக்கு வலப் பக்கமாகவும் இருக்கும்படி (பத்னுல் வாதி பள்ளத்தாக்கில்) நின்று ஜம்ராவின் மீது ஏழு பொடிக் கற்களை எறிந்தார்கள். மேலும், “அல்பகரா அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)


குறிப்பு :

உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பு “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஜம்ரத்துல் அகபாவிற்குச் சென்றபோது…” என்று தொடங்குகிறது.

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2281

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَهُ: ‏

‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏كَانَ ‏ ‏يُقَدِّمُ ضَعَفَةَ أَهْلِهِ فَيَقِفُونَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ ‏ ‏بِالْمُزْدَلِفَةِ ‏ ‏بِاللَّيْلِ فَيَذْكُرُونَ اللَّهَ مَا بَدَا لَهُمْ ثُمَّ ‏ ‏يَدْفَعُونَ ‏ ‏قَبْلَ أَنْ يَقِفَ الْإِمَامُ وَقَبْلَ أَنْ ‏ ‏يَدْفَعَ ‏ ‏فَمِنْهُمْ مَنْ يَقْدَمُ ‏ ‏مِنًى ‏ ‏لِصَلَاةِ الْفَجْرِ وَمِنْهُمْ مَنْ يَقْدَمُ بَعْدَ ذَلِكَ فَإِذَا قَدِمُوا رَمَوْا ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏وَكَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يَقُولُ أَرْخَصَ فِي أُولَئِكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (ஃபஜ்ருக்கு முன்பே மினாவிற்கு) அனுப்பிவிடுவார்கள். அதன்படி, அவர்கள் முஸ்தலிஃபாவில் மஷ்அருல் ஹராம் எனுமிடத்தில் இரவில் தங்கியிருந்து, அங்குத் தமக்குத் தெரிந்தவகையில் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். இமாம், முஸ்தலிஃபாவில் தங்கியிருந்து திரும்புவதற்கு முன்பே (பலவீனர்கள் மினாவிற்குத்) திரும்பிவிடுவர். அவர்களில் சிலர் ஃபஜ்ருத் தொழுகைக்காக முன்கூட்டியே மினாவிற்குச் சென்றுவிடுவர். இன்னும் சிலர் அதற்குப் பின் செல்வர். மினாவுக்குச் சென்றதும் ‘ஜம்ரா’வில் கல்லெறிவர். “(முதியோர், பெண்கள், நோயாளிகள் போன்ற) இத்தகைய(நலிந்த)வர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இவ்வாறு செய்ய) அனுமதி யளித்துள்ளார்கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2280

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏

بَعَثَ بِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِسَحَرٍ ‏ ‏مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏فِي ‏ ‏ثَقَلِ ‏ ‏نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُلْتُ أَبَلَغَكَ أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ بَعَثَ بِي بِلَيْلٍ طَوِيلٍ قَالَ لَا إِلَّا كَذَلِكَ ‏ ‏بِسَحَرٍ ‏ ‏قُلْتُ لَهُ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏رَمَيْنَا الْجَمْرَةَ قَبْلَ الْفَجْرِ وَأَيْنَ صَلَّى الْفَجْرَ قَالَ لَا إِلَّا كَذَلِكَ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அதிகாலைக்கு முந்தைய) ஸஹர் நேரத்திலேயே தம் பயணச் சாமான்களுடன் என்னை (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) சொன்னார்கள் என அதாஉ (ரஹ்) கூறினார்கள். நான் (இப்னு ஜுரைஜ்), அதாஉ (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இரவு நன்கு இருக்கவே) நீண்ட இரவில் என்னை (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் எனும் செய்தி தங்களுக்கு எட்டியதா?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) “இல்லை; மேற்கண்டவாறு ஸஹர் நேரத்திலேயே என்னை அனுப்பிவைத்தார்கள் என்று மட்டுமே கூறினார்கள்” என்றார்கள். நான் அவரிடம், “இப்னு அப்பாஸ் (ரலி), நாங்கள் ஃபஜ்ருக்கு முன்பே ஜம்ராவில் கல்லெறிந்தோம் என்று கூறினார்களா?, ஃபஜ்ரை எங்கு தொழுவித்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்), “இல்லை; மேற்கண்டவாறு மட்டுமே கூறினார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2279

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏

كُنْتُ فِيمَنْ قَدَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ضَعَفَةِ أَهْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் குடும்பத்தைச் சேர்ந்த பலவீனர்களை முன்கூட்டியே (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்களுள் நானும் ஒருவனாயிருந்தேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2278

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ: ‏

أَنَا مِمَّنْ قَدَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ضَعَفَةِ أَهْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் குடும்பத்துப் பலவீனர்களை முன்கூட்டியே (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்களுள் நானும் ஒருவன் ஆவேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2277

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ: ‏

بَعَثَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏الثَّقَلِ ‏ ‏أَوْ قَالَ فِي الضَّعَفَةِ ‏ ‏مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏بِلَيْلٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “பலவீனர்(களான பெண்)களுடன் அல்லது பயணச் சுமைகளுடன் என்னையும் ‘ஜம்உ’ (எனும் முஸ்தலிஃபா)விலிருந்து (மினாவிற்கு) இரவிலேயே அனுப்பிவைத்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2276

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ شَوَّالٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ حَبِيبَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏كُنَّا نَفْعَلُهُ عَلَى عَهْدِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نُغَلِّسُ ‏ ‏مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏إِلَى ‏ ‏مِنًى ‏

وَفِي رِوَايَةِ النَّاقِدِ ‏ ‏نُغَلِّسُ ‏ ‏مِنْ ‏ ‏مُزْدَلِفَةَ

நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் ‘ஜம்உ’விலிருந்து மினாவிற்கு இருளிலேயே (விடியலுக்கு முன்பே) புறப்பட்டுச் செல்வோம்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஹபீபா (ரலி)


குறிப்பு :

அம்ரு பின் முஹம்மது அந்நாகித் (ரஹ்) வழி அறிவிப்பில், “முஸ்தலிஃபாவிலிருந்து…” என்று இடம்பெற்றுள்ளது. முஸதலிஃபாவுக்கு ‘ஜம்உ’ என்னும் இன்னொரு பெயரும் வழங்கப்படும்.

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2275

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شَوَّالٍ ‏ ‏أَخْبَرَهُ: ‏

أَنَّهُ دَخَلَ عَلَى ‏ ‏أُمِّ حَبِيبَةَ ‏ ‏فَأَخْبَرَتْهُ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَ بِهَا مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏بِلَيْلٍ

நான் (நபியவர்களின் துணைவியார்) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) என்னை முஸ்தலிஃபாவிலிருந்து (மினாவிற்கு) இரவி(ன் இருளி)லேயே அனுப்பிவைத்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஹபீபா (ரலி) வழியாக ஸாலிம் பின் ஷவ்வால் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2274

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏مَوْلَى ‏ ‏أَسْمَاءَ ‏ ‏قَالَ: ‏ ‏

قَالَتْ لِي ‏ ‏أَسْمَاءُ ‏ ‏وَهِيَ عِنْدَ دَارِ ‏ ‏الْمُزْدَلِفَةِ ‏ ‏هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ لَا فَصَلَّتْ سَاعَةً ثُمَّ قَالَتْ يَا بُنَيَّ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ نَعَمْ قَالَتْ ارْحَلْ بِي فَارْتَحَلْنَا حَتَّى رَمَتْ ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏ثُمَّ صَلَّتْ فِي مَنْزِلِهَا فَقُلْتُ لَهَا ‏ ‏أَيْ ‏ ‏هَنْتَاهْ ‏ ‏لَقَدْ ‏ ‏غَلَّسْنَا ‏ ‏قَالَتْ كَلَّا ‏‏أَيْ بُنَيَّ إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَذِنَ ‏ ‏لِلظُّعُنِ ‏

و حَدَّثَنِيهِ ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي رِوَايَتِهِ قَالَتْ لَا أَيْ بُنَيَّ إِنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَذِنَ ‏ ‏لِظُعُنِهِ

அஸ்மா (ரலி) முஸ்தலிஃபாவில் தங்கியிருந்த இடத்தில் இருந்தபோது, என்னிடம் “சந்திரன் மறைந்துவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். அவர்கள் சிறிது நேரம் தொழுதுவிட்டுப் பிறகு “மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நான் “ஆம் (மறைந்துவிட்டது)” என்றேன். “என்னுடன் (மினாவுக்குப்) புறப்படு” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். (மினா வந்ததும்) அவர்கள் ‘ஜம்ரா’வில் கல்லெறிந்துவிட்டுப் பின்னர் (திரும்பிவந்து) தமது கூடாரத்தில் தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான், “அம்மா! நாம் விடிவதற்கு முன்பே (மினாவுக்கு) வந்து விட்டோம்” என்றேன். அவர்கள், “(இதில் தவறேதும்) இல்லை, மகனே! நபி (ஸல்) பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்து உள்ளார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா (ரலி) வழியாக அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைஸான் (ரஹ்)


குறிப்பு :

ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “இல்லை, மகனே! அல்லாஹ்வின் நபி (ஸல்), (ஹஜ்) பயணத்திலிருந்த தம் பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்துள்ளார்கள்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.