அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2273

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

وَدِدْتُ أَنِّي كُنْتُ اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا اسْتَأْذَنَتْهُ ‏ ‏سَوْدَةُ ‏ ‏فَأُصَلِّي الصُّبْحَ ‏ ‏بِمِنًى ‏ ‏فَأَرْمِي ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏قَبْلَ أَنْ يَأْتِيَ النَّاسُ فَقِيلَ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏فَكَانَتْ ‏ ‏سَوْدَةُ ‏ ‏اسْتَأْذَنَتْهُ قَالَتْ نَعَمْ إِنَّهَا كَانَتْ امْرَأَةً ثَقِيلَةً ‏ ‏ثَبِطَةً ‏ ‏فَاسْتَأْذَنَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَذِنَ لَهَا ‏

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

“ஸவ்தா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றதைப் போன்று, நானும் அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்று, மினாவில் ஸுப்ஹுத் தொழுது விட்டு, மக்கள் வருவதற்கு முன்பே ‘ஜம்ரா’வில் கல்லெறிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பினேன்” என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ஸவ்தா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தாரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி), “ஆம். அவர் கனத்த உடலுடைய பெண்ணாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவருக்கு அனுமதியளித்தார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக காசிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2272

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الثَّقَفِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

كَانَتْ ‏ ‏سَوْدَةُ ‏ ‏امْرَأَةً ضَخْمَةً ‏ ‏ثَبِطَةً ‏ ‏فَاسْتَأْذَنَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏تُفِيضَ ‏ ‏مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏بِلَيْلٍ فَأَذِنَ لَهَا فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَلَيْتَنِي كُنْتُ اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا اسْتَأْذَنَتْهُ ‏ ‏سَوْدَةُ ‏ ‏وَكَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏لَا ‏ ‏تُفِيضُ ‏ ‏إِلَّا مَعَ الْإِمَامِ

ஸவ்தா (ரலி) கனத்த உடலுடையவராகவும் மெதுவாக நடக்கும் பெண்ணாகவும் இருந்தார். எனவே, அவர் முஸ்தலிஃபாவிலிருந்து இரவிலேயே புறப்பட்டுச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கு அனுமதியளித்தார்கள்.

ஸவ்தா (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றதைப் போன்று நானும் அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும்!

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

“ஆயிஷா (ரலி), இமாமுடனேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப்) புறப்பட்டுச் செல்வார்கள்” என்று இதன் அறிவிப்பாளரான காசிம் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2271

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَفْلَحُ يَعْنِي ابْنَ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ: ‏

اسْتَأْذَنَتْ ‏ ‏سَوْدَةُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْلَةَ ‏ ‏الْمُزْدَلِفَةِ ‏ ‏تَدْفَعُ ‏ ‏قَبْلَهُ وَقَبْلَ ‏ ‏حَطْمَةِ النَّاسِ ‏ ‏وَكَانَتْ امْرَأَةً ثَبِطَةً ‏ ‏يَقُولُ ‏ ‏الْقَاسِمُ ‏ ‏وَالثَّبِطَةُ الثَّقِيلَةُ ‏ ‏قَالَ فَأَذِنَ لَهَا فَخَرَجَتْ قَبْلَ ‏ ‏دَفْعِهِ ‏ ‏وَحَبَسَنَا حَتَّى أَصْبَحْنَا ‏ ‏فَدَفَعْنَا ‏ ‏بِدَفْعِهِ ‏ ‏وَلَأَنْ أَكُونَ اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا اسْتَأْذَنَتْهُ ‏ ‏سَوْدَةُ ‏ ‏فَأَكُونَ ‏ ‏أَدْفَعُ ‏ ‏بِإِذْنِهِ أَحَبُّ إِلَيَّ مِنْ مَفْرُوحٍ بِهِ

முஸ்தலிஃபா இரவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கும் முன்பே (மினாவிற்குப்) புறப்பட்டுச் செல்வதற்கு, ஸவ்தா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். ஸவ்தா, கனத்த உடலுடையவராக (மெதுவாக நடப்பவராக) இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸவ்தா (ரலி) அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறப்படுவதற்கு முன்பே (மினாவிற்குப்) புறப்பட்டுச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களை ஸுப்ஹுவரை அங்கேயே தங்கியிருக்கச் செய்தார்கள். பிறகு அவர்கள் (ஸுப்ஹுத் தொழுதுவிட்டுப்) புறப்படவே நாங்களும் புறப்பட்டோம்.

ஸவ்தா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்று, முன்னதாகச் சென்றதைப் போன்று, நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும்விட அது எனக்கு மிகவும் உவப்பானதாய் இருந்திருக்கும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸபிதா’ எனும் சொல்லுக்கு, கனத்த உடலுடையவர் என்று பொருள்” என்பதாக இதன் அறிவிப்பாளரான காசிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு அஸ்ஸித்தீக் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 46, ஹதீஸ் எண்: 2254

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الثَّقَفِيِّ: ‏

أَنَّهُ سَأَلَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏وَهُمَا ‏ ‏غَادِيَانِ ‏ ‏مِنْ ‏ ‏مِنًى ‏ ‏إِلَى ‏ ‏عَرَفَةَ ‏ ‏كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا الْيَوْمِ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ كَانَ ‏ ‏يُهِلُّ ‏ ‏الْمُهِلُّ ‏ ‏مِنَّا فَلَا يُنْكَرُ عَلَيْهِ وَيُكَبِّرُ الْمُكَبِّرُ مِنَّا فَلَا يُنْكَرُ عَلَيْهِ

நானும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது, நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது இந்த நாளில் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி), “அன்று எங்களில் சிலர் தல்பியா கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. வேறுசிலர் தக்பீர் கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கும் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக முஹம்மது பின் அபீபக்ரு அஸ்ஸகஃபீ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 46, ஹதீஸ் எண்: 2252

‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏

غَدَوْنَا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏مِنًى ‏ ‏إِلَى ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏مِنَّا الْمُلَبِّي وَمِنَّا الْمُكَبِّرُ

நாங்கள் (அரஃபா நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவிலிருந்து அரஃபாவிற்குச் சென்றோம். அப்போது எங்களில் சிலர் தல்பியா (லப்பைக்…) கூறிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறிக்கொண்டிருந்தனர்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)