அத்தியாயம்: 3, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1995

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏قَالَ ‏ ‏تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ فَأَتَيْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏وَكَانَ لِي صَدِيقًا فَقُلْتُ أَلَا تَخْرُجُ بِنَا إِلَى النَّخْلِ فَخَرَجَ وَعَلَيْهِ ‏ ‏خَمِيصَةٌ ‏ ‏فَقُلْتُ لَهُ ‏
‏سَمِعْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ نَعَمْ ‏ ‏اعْتَكَفْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعَشْرَ الْوُسْطَى مِنْ رَمَضَانَ فَخَرَجْنَا صَبِيحَةَ عِشْرِينَ فَخَطَبَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نَسِيتُهَا أَوْ أُنْسِيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ كُلِّ ‏ ‏وِتْرٍ ‏ ‏وَإِنِّي أُرِيتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ فَمَنْ كَانَ ‏ ‏اعْتَكَفَ ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلْيَرْجِعْ قَالَ فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءِ ‏ ‏قَزَعَةً ‏ ‏قَالَ وَجَاءَتْ سَحَابَةٌ فَمُطِرْنَا حَتَّى سَالَ سَقْفُ الْمَسْجِدِ وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ وَأُقِيمَتْ الصَّلَاةُ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْجُدُ فِي الْمَاءِ وَالطِّينِ قَالَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ وَفِي حَدِيثِهِمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ انْصَرَفَ وَعَلَى جَبْهَتِهِ ‏ ‏وَأَرْنَبَتِهِ ‏ ‏أَثَرُ الطِّينِ

நாங்கள் லைலத்துல் கத்ரு இரவு பற்றி (ஒரு நாள்) பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என் தோழராக இருந்தார்கள். அவர்களிடம், “நீங்கள் எங்களுடன் பேரீச்சந் தோப்பு வரை வருகிறீர்களா?” என்று கேட்டேன். உடனே புறப்பட்டார்கள்.

அப்போது அவர்கள் கறுப்புக் கம்பளி ஆடை அணிந்திருந்தார்கள். அவர்களிடம் “லைலத்துல் கத்ரு இரவு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கின்றீர்களா?” என்று கேட்டேன்.

அவர்கள், “ஆம், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தின் நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாவது நாள் காலையில் நாங்கள் (பள்ளிவாசலில் இருந்து) வெளியேறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடையே உரையாற்றினார்கள்.

‘எனக்கு லைலத்துல் கத்ரு இரவு (கனவில்) காட்டப் பட்டது. ஆனால், அதை நான் மறந்து விட்டேன். (அல்லது மறக்கடிக்கப்பட்டேன்.) எனவே, ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப் படையான ஒவ்வோர் இரவிலும் அதை நீங்கள் தேடிக் கொள்ளுங்கள். நான் (அந்த இரவில்) ஈரச் சேற்றில் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வதைப் போன்று எனக்குக் காட்டப் பட்டது. அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தவர் மறுபடியும் (பள்ளிவாசலுக்கு) வரட்டும்!” என்றார்கள்.

நாங்கள் மீண்டும் சென்றோம். அப்போது வானில் மழை மேகத்தின் ஒரு துண்டைக்கூட நாங்கள் காணவில்லை. (திடீரென) ஒரு மேகம் (திரண்டு) வந்து மழை பெய்தது. பள்ளிவாசலின் கூரையிலிருந்து மழை நீர் சொட்டியது. அப்போதைய கூரை பேரீச்ச மட்டையால் வேயப்பட்டு இருந்தது. தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஈரச் சேற்றில் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ததை நான் கண்டேன். அவர்களது நெற்றியில் சேறு படிந்திருந்ததைக் கண்டேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)


குறிப்பு : அல் அவ்ஸாயீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்துத் திரும்பியபோது அவர்களை நான் கண்டேன். அவர்களது நெற்றியிலும் மூக்கு நுனியிலும் சேற்றின் அடையாளம் இருந்தது” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1993

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرٌ وَهُوَ ابْنُ مُضَرَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُجَاوِرُ ‏ ‏فِي الْعَشْرِ الَّتِي فِي وَسَطِ الشَّهْرِ فَإِذَا كَانَ مِنْ حِينِ تَمْضِي عِشْرُونَ لَيْلَةً وَيَسْتَقْبِلُ إِحْدَى وَعِشْرِينَ يَرْجِعُ إِلَى مَسْكَنِهِ وَرَجَعَ مَنْ كَانَ ‏ ‏يُجَاوِرُ ‏ ‏مَعَهُ ثُمَّ إِنَّهُ أَقَامَ فِي شَهْرٍ ‏ ‏جَاوَرَ ‏ ‏فِيهِ تِلْكَ اللَّيْلَةَ الَّتِي كَانَ يَرْجِعُ فِيهَا فَخَطَبَ النَّاسَ فَأَمَرَهُمْ بِمَا شَاءَ اللَّهُ ثُمَّ قَالَ ‏ ‏إِنِّي كُنْتُ ‏ ‏أُجَاوِرُ ‏ ‏هَذِهِ الْعَشْرَ ثُمَّ بَدَا لِي أَنْ أُجَاوِرَ هَذِهِ الْعَشْرَ الْأَوَاخِرَ فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعِي فَلْيَبِتْ فِي مُعْتَكَفِهِ وَقَدْ رَأَيْتُ هَذِهِ اللَّيْلَةَ فَأُنْسِيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي كُلِّ ‏ ‏وِتْرٍ ‏ ‏وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏ ‏مُطِرْنَا لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ ‏ ‏فَوَكَفَ ‏ ‏الْمَسْجِدُ فِي مُصَلَّى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَنَظَرْتُ إِلَيْهِ وَقَدْ انْصَرَفَ مِنْ صَلَاةِ الصُّبْحِ وَوَجْهُهُ مُبْتَلٌّ طِينًا وَمَاءً ‏

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُجَاوِرُ ‏ ‏فِي رَمَضَانَ الْعَشْرَ الَّتِي فِي وَسَطِ الشَّهْرِ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ فَلْيَثْبُتْ فِي مُعْتَكَفِهِ وَقَالَ وَجَبِينُهُ مُمْتَلِئًا طِينًا وَمَاءً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த (ரமளான்) மாதத்தின் நடுப் பத்து நாட்களில் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃப் வழிபாட்டில்) இருப்பார்கள். இருபதாவது இரவு முடிந்து இருபத்தொன்றாவது இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருப்பவர்களும் திரும்புவார்கள்.

இவ்வழக்கப்படி, ஒரு ரமளானில் இஃதிகாஃப் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தாம் வழக்கமாக இல்லம் திரும்பும் இரவில் (பள்ளிவாசலிலேயே) தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடியவற்றை அவர்களுக்குக் கட்டளை இட்டார்கள்.

பின்னர் “நான் இந்த(நடு)ப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தேன். பிறகு இறுதிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. ஆகவே, என்னுடன் இந்த(நடு)ப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தவர் அதே இடத்திலேயே தங்கி (இஃதிகாஃப்) இருக்கட்டும். இந்த (லைலத்துல் கத்ரு) இரவை நான் (கனவில்) கண்டேன். பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டது. எனவே, (ரமளானின்) இறுதிப் பத்தில் ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடிக்கொள்ளுங்கள். நான் (லைலத்துல் கத்ரு இரவில்) ஈரச் சேற்றில் ஸஜ்தாச் செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்” என்று கூறினார்கள்.

இருபத்தொன்றாவது நாள் இரவில் எங்களுக்கு மழை பெய்தது. பள்ளிவாசல் கூரையிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழும் இடத்தில் மழை நீர் சொட்டியது. அன்று காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸுப்ஹுத் தொழுதுவிட்டுத் திரும்பும்போது அவர்களை நான் கண்டேன். அவர்களது முகத்தில் ஈரமான சேறு படிந்திருந்தது.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)


குறிப்பு : அப்துல் அஜீஸ் அத்தராவர்தீ (ரஹ்) வழி அறிவிப்பும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் மாதத்தின் நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள் …” என்றே தொடங்குகிறது. (ஆனால்,) “அவர்களது நெற்றியில் ஈரமான சேறு” என்று காணப்படுகிறது.

அத்தியாயம்: 13, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1932

حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ الْأَشَجِّ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏مَوْلَى ‏ ‏سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

‏كُنَّا فِي رَمَضَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ شَاءَ صَامَ وَمَنْ شَاءَ أَفْطَرَ فَافْتَدَى بِطَعَامِ مِسْكِينٍ حَتَّى أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ ‏ ” فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ ‏“

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ரமளான் மாதத்தில் நாங்கள் நாடினால் நோன்பு நோற்போம்; நாடினால் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு, அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளித்து வந்தோம்.

இறுதியில் (அந்த நடைமுறையை மாற்றுகின்ற) “உங்களில் அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்” எனும் இந்த (2:185ஆவது) வசனம் அருளப் பெற்றது.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1931

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرٌ يَعْنِي ابْنَ مُضَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏مَوْلَى ‏ ‏سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏” ‏وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ“ ‏‏كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ حَتَّى نَزَلَتْ الْآيَةُ الَّتِي بَعْدَهَا ‏ ‏فَنَسَخَتْهَا

“நோன்பு நோற்பதற்குச் சக்தி உள்ளவர்கள் (நோன்பு நோற்காமல் விட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்” எனும் இந்த (2:184ஆவது) வசனம் அருளப் பெற்றபோது, நாடியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டுப் பரிகாரம் செய்துவந்தார்.

பின்னர் அதை மாற்றி, அதற்குப் பின்னுள்ள (“உங்களில் அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்” என்ற 2:185ஆவது) வசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.02, ஹதீஸ் எண்: 8

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدِ بْنِ جَمِيلِ بْنِ طَرِيفِ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيُّ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ أَبِي سُهَيْلٍ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُا :‏

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرُ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ وَلا نَفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الإسْلامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ قَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُ فَقَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لا أَزِيدُ عَلَى هَذَا وَلا أَنْقُصُ مِنْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ إِنْ صَدَقَ

நஜ்துவாசிகளில் ஒருவர் தலைமுடி கலைந்தவராக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார். (அவர் சற்றுத் தொலைவில் இருந்ததால்) அவரது குரலை எங்களால் கேட்க முடிந்ததே தவிர, அவர் என்ன சொல்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்கி வந்தபோதுதான் அவர் இஸ்லாத்(தின் அடிப்படைக் கடமைகள் யாவை என்ப)தைப் பற்றி வினவுகின்றார் என்று எங்களுக்குப் புரிந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(ஒரு நாளின்) பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (நிறைவேற்றுவது)” என்று அவருக்கு பதிலளித்தார்கள். உடனே அவர் “இவற்றைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமைத் தொழுகைகள்) உள்ளதா?” என்று கேட்க “நீயாக விரும்பினாலேயன்றி(க் கூடுதலாகக் கடமை) இல்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அடுத்து, “ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது” என நபி (ஸல்) கூறினார்கள். அவர், “இதைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமையான நோன்புகள்) உள்ளனவா?” என்று கேட்க, “நீயாக விரும்பினாலேயன்றி(க் கூடுதலாகக் கடமை) ஏதுமில்லை” என்று நபி (ஸல்)  கூறினார்கள்.

மேலும், ‘ஜகாத்’ (செலுத்துவது) பற்றியும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். அதற்கவர், “இதைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமையான தானம்) உண்டா?” எனக் கேட்க, “நீயாக விரும்பி(வழங்கி)டுவதைத் தவிரக் கூடுதலாக(க் கடமை) இல்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதை (விடக்) குறைக்கவும் மாட்டேன்” என்று கூறித் திரும்பிச் சென்றார். “அவருடைய கூற்றை உண்மைப்படுத்திச் செயலாற்றினால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)