அத்தியாயம்: 1, பாடம்: 47, ஹதீஸ் எண்: 164

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الزُّبَيْرِيُّ وَهُوَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْحَسَنَ ‏ ‏يَقُولُا ‏
‏إِنَّ رَجُلًا مِمَّنْ كَانَ قَبْلَكُمْ خَرَجَتْ بِهِ ‏ ‏قُرْحَةٌ ‏ ‏فَلَمَّا آذَتْهُ انْتَزَعَ سَهْمًا مِنْ ‏ ‏كِنَانَتِهِ ‏ ‏فَنَكَأَهَا ‏ ‏فَلَمْ ‏ ‏يَرْقَأْ ‏ ‏الدَّمُ حَتَّى مَاتَ قَالَ رَبُّكُمْ قَدْ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ ثُمَّ مَدَّ يَدَهُ إِلَى الْمَسْجِدِ فَقَالَ إِي وَاللَّهِ لَقَدْ حَدَّثَنِي بِهَذَا الْحَدِيثِ ‏ ‏جُنْدَبٌ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي هَذَا الْمَسْجِدِ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَهْبُ بْنُ جَرِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْحَسَنَ ‏ ‏يَقُولُ حَدَّثَنَا ‏ ‏جُنْدَبُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَجَلِيُّ ‏ ‏فِي هَذَا الْمَسْجِدِ فَمَا نَسِينَا وَمَا ‏ ‏نَخْشَى أَنْ يَكُونَ ‏ ‏جُنْدَبٌ ‏ ‏كَذَبَ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجَ بِرَجُلٍ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ ‏ ‏خُرَاجٌ ‏ ‏فَذَكَرَ نَحْوَهُ ‏

உங்களுக்கு முன்னிருந்த (இஸ்ராயீல்) மக்களிடையே ஒருவர் இருந்தார். அவருடைய உடலில் ஒரு கொப்புளம் கிளம்பியது. அது அவரை வேதனைப் படுத்தியபோது (பொறுமை இழந்த) அவர் தமது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவி கொப்புளத்தில் பாய்ச்சினார். (கொப்புளம் உடைந்து) இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது. இறுதியில் அவர் இறந்து போனார். உங்கள் இறைவன் “(என் அடியான் அவசரப்பட்டு தன்னை அழித்துக் கொண்டதால்) அவன் மீது நான் சொர்க்கத்தைத் தடை செய்து விட்டேன்” என்று கூறினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் (ரலி) அறிவித்ததாக ஹஸன் அல்பஸரீ (ரஹ்).

குறிப்பு:

(பஸ்ராவிலுள்ள) பள்ளிவாசலை நோக்கித் தமது கையை நீட்டியவாறு, “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸைத் தாம் செவியுற்றதாக இந்தப் பள்ளிவாசலில் வைத்துத்தான் ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்” என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிப்பாளர்களுள் ஒருவரன ஷைபான் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 1, பாடம்: 47, ஹதீஸ் எண்: 163

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ ‏ ‏حَيٌّ مِنْ ‏ ‏الْعَرَبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْتَقَى هُوَ وَالْمُشْرِكُونَ فَاقْتَتَلُوا فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى عَسْكَرِهِ وَمَالَ الْآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ وَفِي ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلٌ ‏ ‏لَا يَدَعُ لَهُمْ ‏ ‏شَاذَّةً ‏ ‏إِلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ فَقَالُوا مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ ‏ ‏فُلَانٌ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَقَالَ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنْ الْقَوْمِ أَنَا صَاحِبُهُ أَبَدًا قَالَ فَخَرَجَ مَعَهُ كُلَّمَا وَقَفَ وَقَفَ مَعَهُ وَإِذَا أَسْرَعَ أَسْرَعَ مَعَهُ قَالَ فَجُرِحَ ‏ ‏الرَّجُلُ ‏ ‏جُرْحًا شَدِيدًا فَاسْتَعْجَلَ الْمَوْتَ فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ بِالْأَرْضِ ‏ ‏وَذُبَابَهُ ‏ ‏بَيْنَ ثَدْيَيْهِ ثُمَّ تَحَامَلَ عَلَى سَيْفِهِ فَقَتَلَ نَفْسَهُ فَخَرَجَ ‏ ‏الرَّجُلُ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ قَالَ وَمَا ذَاكَ قَالَ ‏ ‏الرَّجُلُ ‏ ‏الَّذِي ذَكَرْتَ آنِفًا أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَأَعْظَمَ النَّاسُ ذَلِكَ فَقُلْتُ أَنَا لَكُمْ بِهِ فَخَرَجْتُ فِي طَلَبِهِ حَتَّى جُرِحَ جُرْحًا شَدِيدًا فَاسْتَعْجَلَ الْمَوْتَ فَوَضَعَ ‏ ‏نَصْلَ ‏ ‏سَيْفِهِ بِالْأَرْضِ ‏ ‏وَذُبَابَهُ ‏ ‏بَيْنَ ثَدْيَيْهِ ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ فَقَتَلَ نَفْسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَ ذَلِكَ ‏ ‏إِنَّ الرَّجُلَ لِيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ وَإِنَّ الرَّجُلَ لِيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபரில்) சந்தித்துப் போரிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எதிரணியினரும் (அன்றைய போரின் இறுதியில்) தத்தம் படையினரிடமும் திரும்பினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே (‘குஸ்மான்’ என்றழைக்கப்பட்ட) ஒருவர் இருந்தார். அவர் (அன்றைய போரில் எதிரிகள்) எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடந்துச் சென்று தமது வாளால் வெட்டி வீழ்த்தினார். “இன்று இவர் பெற்ற நற்கூலியைப் போன்று நம்மில் எவரும் பெறவில்லை” என்று சக வீரர்கள் பேசிக்கொண்டனர். ஆனால், அவரைப் பற்றி, “அவர் நரகவாசி” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். எனவே, வீரர்களுள் ஒருவர், “நான் எப்போதும் (போரில்) அவருடன் கூடவே இருக்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு அவருடன் இணைந்தார்.

அந்த வீரர் நின்றால் அவருடன் இவரும் நின்றார்; அவர் விரைந்து நடந்தால் அவருடன் இவரும் விரைந்து நடந்தார். (இறுதியாக, போரில் ஏற்பட்ட) கடுமையான காயங்களால் அவ்வீரர் (வேதனை தாளாமல்) உடனே இறந்து போக விரும்பி தனது வாளின் கைப்பிடியை பூமியில் (நட்டு)வைத்து வாள்முனையைத் தன் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திச் சாய்த்துத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.

(அவ்வீரரைப் பின்தொடர்ந்து) சென்றவர் திரும்பி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒருவரைப் பற்றித் தாங்கள் கூறினீர்களல்லவா? அதை (ஏற்றுக் கொள்ளாமல்) மக்கள் பெரிதாகப் பேசிக் கொண்டனர். எனவே நான், ‘அவரைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு உங்களிடம் வந்து சொல்வதற்கு நான் பொறுப்பு’ என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடித் தொடர்ந்தேன். அவர் (ஒரு கட்டத்தில் எதிரிகளால்) மிகக் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். எனவே, (வலி தாள முடியாத) அவர் உடனே இறந்து போக விரும்பி, தனது வாளின் கைப்பிடியை பூமியில் (நட்டு)வைத்து வாள்முனையைத் தன் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திச் சாய்த்துத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப்பார்வைக்கு சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து வரும் ஒருவர் (உண்மையில்) நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். அவ்வாறே மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்யும் ஒருவர் (உண்மையில்) சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 47, ஹதீஸ் எண்: 162

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏شَهِدْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حُنَيْنًا ‏ ‏فَقَالَ ‏ ‏لِرَجُلٍ ‏ ‏مِمَّنْ يُدْعَى بِالْإِسْلَامِ ‏ ‏هَذَا مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا حَضَرْنَا الْقِتَالَ قَاتَلَ ‏ ‏الرَّجُلُ ‏ ‏قِتَالًا شَدِيدًا فَأَصَابَتْهُ جِرَاحَةٌ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏الرَّجُلُ ‏ ‏الَّذِي قُلْتَ لَهُ آنِفًا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَإِنَّهُ قَاتَلَ الْيَوْمَ قِتَالًا شَدِيدًا وَقَدْ مَاتَ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى النَّارِ فَكَادَ بَعْضُ الْمُسْلِمِينَ أَنْ ‏ ‏يَرْتَابَ ‏ ‏فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ إِذْ قِيلَ إِنَّهُ لَمْ يَمُتْ وَلَكِنَّ بِهِ جِرَاحًا شَدِيدًا فَلَمَّا كَانَ مِنْ اللَّيْلِ لَمْ يَصْبِرْ عَلَى الْجِرَاحِ فَقَتَلَ نَفْسَهُ فَأُخْبِرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِذَلِكَ فَقَالَ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ثُمَّ أَمَرَ ‏ ‏بِلَالًا ‏ ‏فَنَادَى فِي النَّاسِ أَنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَأَنَّ اللَّهَ يُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹுனைன் போரில் கலந்து கொண்டபோது, முஸ்லிம் என்று கருதப்பட்ட ஒரு வீரரைப் பற்றி, “அவர் நரகவாசிகளுள் ஒருவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். நாங்களனைவரும் போரில் ஈடுபட்டபோது (எதிரிகளை எதிர்த்து) அவர் உக்கிரமாகப் போரிட்டுப் படுகாயமடைந்தார். எனவே, (அவர் இறந்து விட்டார் என்று தவறாகக் கருதிக் கொண்டு) “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நரகவாசி என்று குறிப்பிட்டவர் இன்று மிகக் கடுமையாகப் போரிட்டு இறந்து விட்டார்” என்று நபி (ஸல்) அவர்களிடம் (முதலில் தவறான தகவல்) கூறப் பட்டது.

அதற்கு நபி (ஸல்), “அவர் நரகத்திற்கே (செல்வார்)” என்று கூறினார்கள். இதை ஏற்றுக் கொள்வதில் முஸ்லிகளுள் சிலர் கருத்து வேறுபாடு கொண்டனர். சற்றுக் கழிந்த பின்னர், “அவர் படுகாயமடைந்தது உண்மைதான்; ஆனால் இறந்துவிடவில்லை” என்ற சரியான தகவல் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது.

அன்று இரவு அவர் வலிதாள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இச்செய்தி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப் பட்டபோது, “அல்லாஹ் மிகப்பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியானும் அவனுடைய தூதனும் ஆவேன் என உறுதி கூறுகிறேன்” என்றார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம், “முஸ்லிம் ஆத்மாவைத் தவிர வேறு யாரும் சொர்க்கம் புகமுடியாது. பாவியின் (செயல்களைப் பாடமாக்குவதன்) மூலமாக இந்த மார்க்கத்துக்கு அல்லாஹ் மேலும் வலுவூட்டுகிறான் என்று மக்களுக்கு அறிவியுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே பிலால் (ரலி) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 47, ஹதீஸ் எண்: 161

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَعَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتِ بْنِ الضَّحَّاكِ الْأَنْصَارِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏الثَّوْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ‏ ‏قَالَ ‏
‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ حَلَفَ بِمِلَّةٍ سِوَى الْإِسْلَامِ كَاذِبًا مُتَعَمِّدًا فَهْوَ كَمَا قَالَ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عَذَّبَهُ اللَّهُ بِهِ فِي نَارِ جَهَنَّمَ ‏
‏هَذَا حَدِيثُ ‏ ‏سُفْيَانَ ‏ ‏وَأَمَّا ‏ ‏شُعْبَةُ ‏ ‏فَحَدِيثُهُ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ حَلَفَ بِمِلَّةٍ سِوَى الْإِسْلَامِ كَاذِبًا فَهْوَ كَمَا قَالَ وَمَنْ ذَبَحَ نَفْسَهُ بِشَيْءٍ ذُبِحَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ ‏

“இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை முன்னிறுத்தி (மனமறிந்து) அதன் மீது பொய்ச் சத்தியம் செய்பவர் அவ்வாறே ஆகி விடுவார். எதன் மூலம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டாரோ அதன் மூலமே தீசூழ் நரகத்திலும் வேதனை செய்யப் படுவார்.

அறிவிப்பாளர்: ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) வழியாக ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்).

குறிப்பு:

மேற்காணும் ஹதீஸ் ஷுஅபா (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், “இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை முன்னிறுத்தி (மனமறிந்து) அதன் மீது பொய்ச் சத்தியம் செய்பவர் அவ்வாறே ஆகி விடுவார். எதன் மூலம் அறுத்துக் கொண்டு ஒருவர் தம்மைத்தாமே மாய்த்துக் கொண்டாரோ அதன் மூலமே அவர் மறுமை நாளில் அறுக்கப்படுவார்” என்று காணப் படுகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 47, ஹதீஸ் எண்: 160

حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ وَهُوَ ابْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبُو قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَيْسَ عَلَى رَجُلٍ نَذْرٌ فِيمَا لَا يَمْلِكُ وَلَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ فِي الدُّنْيَا عُذِّبَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ ادَّعَى دَعْوَى كَاذِبَةً لِيَتَكَثَّرَ بِهَا لَمْ يَزِدْهُ اللَّهُ إِلَّا قِلَّةً وَمَنْ حَلَفَ عَلَى ‏ ‏يَمِينِ صَبْرٍ ‏ ‏فَاجِرَةٍ ‏

தம் கைவசம் இல்லாததில் நேர்ச்சை செய்வது (ம் அதை நிறைவேற்றுவதும்) எவருக்கும் தகாது. ஓர் இறை நம்பிக்கையாளரைச் சபிப்பது அவரைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும். இவ்வுலகில் எதைக் கொண்டு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறாரோ, அதன் மூலமே மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். (தனது செல்வத்தை) அதிகமாக்கிக் கொள்வதற்காகப் பொய்வாதம் புரிகிறவருக்கு அல்லாஹ் குறைவையே (இழப்பையே) அதிகப்படுத்துவான். (நீதிபதி முன் அளிக்கும்) பிரமாண வாக்குமூலத்தின்போது பொய்ச் சத்தியம் செய்பவர் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திக்குபோது அவனது கோபத்துக்கு உள்ளானவராகவே சந்திப்பார்.

அறிவிப்பாளர்: ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 47, ஹதீஸ் எண்: 159

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ سَلَّامِ بْنِ أَبِي سَلَّامٍ الدِّمَشْقِيُّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا قِلَابَةَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏ثَابِتَ بْنَ الضَّحَّاكِ ‏ ‏أَخْبَرَهُ ‏
‏أَنَّهُ بَايَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَحْتَ الشَّجَرَةِ وَأَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ بِمِلَّةٍ غَيْرِ الْإِسْلَامِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلَيْسَ عَلَى رَجُلٍ نَذْرٌ فِي شَيْءٍ لَا يَمْلِكُهُ ‏

“இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை முன்னிறுத்தி (மனமறிந்து) அதன் மீது பொய்ச் சத்தியம் செய்பவர் அவ்வாறே ஆகி விடுவார். எதன் மூலம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டாரோ அதன் மூலமே மறுமை நாளில் வேதனை செய்யப் படுவார். தம் கைவசம் இல்லாத எதிலும் நேர்ச்சை செய்வது எவருக்கும் தகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி – பைஅத்துர் ரிள்வான் சிறப்புத் தோழர்களுள் ஒருவர்).

அத்தியாயம்: 1, பாடம்: 47, ஹதீஸ் எண்: 158

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ ‏ ‏يَتَوَجَّأُ ‏ ‏بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ شَرِبَ سَمًّا فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ ‏ ‏يَتَحَسَّاهُ ‏ ‏فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ ‏ ‏تَرَدَّى ‏ ‏مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ ‏ ‏يَتَرَدَّى ‏ ‏فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا ‏
‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْثَرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏كُلُّهُمْ بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ذَكْوَانَ

“ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்து கொண்டவர் (மறுமையில்) தீசூழ் நரகிலும் தமது கையில் அந்தக் கூராயுதத்தை வைத்துக் கொண்டு, அதனால் தமது வயிற்றில் தாமே என்றென்றும் முடிவின்றிக் குத்திக் கொண்டே இருப்பார். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகிலும் என்றென்றும் முடிவின்றி விஷத்தைக் குடித்துக் கொண்டேயிருப்பார். மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகில் (மீண்டும் மீண்டும்) தள்ளப் பட்டு, மேலும் கீழும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).