அத்தியாயம்: 5, பாடம்: 12, ஹதீஸ் எண்: 848

و حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى الْقَنْطَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏نَهَى أَنْ يُصَلِّيَ الرَّجُلُ ‏ ‏مُخْتَصِرًا


‏وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 11, ஹதீஸ் எண்: 847

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ :‏

‏أَنَّ نَفَرًا جَاءُوا إِلَى ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏قَدْ ‏ ‏تَمَارَوْا ‏ ‏فِي الْمِنْبَرِ مِنْ أَيِّ عُودٍ هُوَ فَقَالَ أَمَا وَاللَّهِ إِنِّي لَأَعْرِفُ مِنْ أَيِّ عُودٍ هُوَ وَمَنْ عَمِلَهُ وَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ قَالَ فَقُلْتُ لَهُ يَا ‏ ‏أَبَا عَبَّاسٍ ‏ ‏فَحَدِّثْنَا قَالَ أَرْسَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏امْرَأَةٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏إِنَّهُ لَيُسَمِّهَا يَوْمَئِذٍ ‏ ‏انْظُرِي ‏ ‏غُلَامَكِ ‏ ‏النَّجَّارَ يَعْمَلْ لِي ‏ ‏أَعْوَادًا أُكَلِّمُ النَّاسَ عَلَيْهَا فَعَمِلَ هَذِهِ الثَّلَاثَ دَرَجَاتٍ ثُمَّ أَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَوُضِعَتْ هَذَا الْمَوْضِعَ فَهِيَ مِنْ طَرْفَاءِ ‏ ‏الْغَابَةِ ‏ ‏وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ عَلَيْهِ فَكَبَّرَ وَكَبَّرَ النَّاسُ وَرَاءَهُ وَهُوَ عَلَى الْمِنْبَرِ ثُمَّ رَفَعَ فَنَزَلَ الْقَهْقَرَى حَتَّى سَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ ثُمَّ عَادَ حَتَّى فَرَغَ مِنْ آخِرِ صَلَاتِهِ ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا بِي وَلِتَعَلَّمُوا صَلَاتِي


حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدٍ الْقَارِيُّ الْقُرَشِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏أَنَّ ‏ ‏رِجَالًا أَتَوْا ‏ ‏سَهْلَ بْنَ سَعْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏قَالَ أَتَوْا ‏ ‏سَهْلَ بْنَ سَعْدٍ ‏ ‏فَسَأَلُوهُ مِنْ أَيِّ شَيْءٍ مِنْبَرُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَاقُوا الْحَدِيثَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ أَبِي حَازِمٍ ‏

ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து, “(நபியவர்களின் சொற்பொழிவு மேடை) மிம்பரை உருவாக்குவதற்குப் பயன்பட்ட மரம் எது?” என்று சர்ச்சையில் ஈடுபட்டனர். அப்போது ஸஹ்லு (ரலி), “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த மரத்தால் செய்யப்பட்டது? அதைச் செய்தவர் யார்? என்பதை நான் நன்கறிவேன். அதன்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  முதல்நாளில் அமர்ந்ததை நான் பார்த்திருக்கின்றேன்” என்று கூறினார்கள். நான், “அபூஅப்பாஸ் (ஸஹ்லிப்னு ஸஅத்) அவர்களே! அது பற்றி எங்களுக்கு(விவரமாக)ச் சொல்லுங்கள்” என்று வேண்டினேன். அப்போது அவர்கள்,

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பெண்மணிக்கு ஆளனுப்பி (அவரை வரவழைத்து), ‘நான் அமர்ந்து மக்களுக்கு உரையாற்றுவதற்காக உன் தச்சு வேலையாளிடம் எனக்காக மரச்சட்டங்களை(இணைத்து மிம்பர் ஒன்றை)ச் செய்யச் சொல்வாயாக!’ என்று கூறியதற்கு ஒப்ப, மூன்று படிகள் கொண்ட இந்த மிம்பரை அந்தத் தச்சர் செய்தார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உத்தரவுப்படி, அது (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) இந்த இடத்தில் வைக்கப்பட்டது. அது அல்ஃகாபாக் காட்டின் ஒருவகை சவுக்கு மரத்தால் செய்யப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த மேடைமீது (தொழுவதற்காக) நின்று தக்பீர் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்து மக்கள் தக்பீர் கூறினர். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்ததும் திரும்பாமல் அப்படியே பின்வாக்கில் இறங்கி அந்த மேடையின் கீழ்ப் பகுதி(க்கருகில் தரையில்) சஜ்தாச் செய்தார்கள். பிறகு முன்போன்றே மீண்டும் (அந்த மேடையில் ஏறியும் இறங்கியும்) இறுதிவரை தொழுதார்கள். பின்னர் மக்களை முன்னோக்கி, ‘மக்களே! நீங்கள் என்னைப் பின்பற்றவும் எனது தொழுகையை நீங்கள் கற்றுக் கொள்ளவுமே இவ்வாறு நான் செய்தேன்’ என்று விளக்கினார்கள்” என்று ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி)


குறிப்பு :

அபூஹாஸிம் வழி அறிவிப்பு, “… மக்கள் (சிலர்) ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி) அவர்களிடம் வந்து, நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எந்த மரத்தால் செய்யப்பட்டது? என்று கேட்டனர் …” என்று தொடங்குகிறது. இடையில், தச்சரின் எஜமானியான அப்பெண்ணின் பெயரை ஸஹ்லு (ரலி) குறிப்பிட்டதாகவும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 10, ஹதீஸ் எண்: 846

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا قَتَادَةَ الْأَنْصَارِيَّ ‏ ‏يَقُولُ :‏ ‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي لِلنَّاسِ ‏ ‏وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ ‏ ‏عَلَى عُنُقِهِ فَإِذَا سَجَدَ وَضَعَهَا ‏


حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ الْمَقْبُرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ ‏ ‏سَمِعَ ‏ ‏أَبَا قَتَادَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏بَيْنَا نَحْنُ فِي الْمَسْجِدِ جُلُوسٌ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ أَنَّهُ أَمَّ النَّاسَ فِي تِلْكَ الصَّلَاةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (தம் பேத்தி) உமாமா பின்த்தி அபில்ஆஸைத் தமது கழுத்தின் மீது சுமந்துவாறு மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்கள் ஸஜ்தாவிற்குச் செல்லும்போது உமாமாவைக் கீழே இறக்கிவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா அல்-அன்ஸாரீ (ரலி)


குறிப்பு :

ஸயீத் அல்-மக்பரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் வந்தார்கள் …” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. ஆனால் நபி (ஸல்) “… அத்தொழுகையை மக்களுக்குத் தொழுவித்தார்கள்” என்ற குறிப்பு இல்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 10, ஹதீஸ் எண்: 845

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ ‏ ‏وَابْنِ عَجْلَانَ ‏ ‏سَمِعَا ‏ ‏عَامِرَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ ‏ ‏قَالَ :‏

‏رَأَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَؤُمُّ النَّاسَ ‏ ‏وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ ‏ ‏وَهِيَ ابْنَةُ ‏ ‏زَيْنَبَ بِنْتِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى عَاتِقِهِ فَإِذَا رَكَعَ وَضَعَهَا وَإِذَا رَفَعَ مِنْ السُّجُودِ أَعَادَهَا

நபி (ஸல்), தம் மகள் ஸைனப்-அபுல்ஆஸ் பின் அர்ரபீஉ தம்பதியருக்குப் பிறந்த (தம் பேத்தி) உமாமாவைத் தமது தோளில் சுமந்துகொண்டு மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்ததை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் ருகூஉக்குச் செல்லும்போது உமாமாவைக் கீழே இறக்கிவிட்டார்கள். ஸஜ்தாவிலிருந்து எழுந்துவிட்டால் மீண்டும் உமாமாவைத் தமது தோளில் அமர்த்திக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா அல்-அன்ஸாரீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 10, ஹதீஸ் எண்: 844

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِمَالِكٍ ‏ ‏حَدَّثَكَ ‏ ‏عَامِرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي وَهُوَ حَامِلٌ ‏ ‏أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلِأَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ ‏ ‏فَإِذَا قَامَ حَمَلَهَا وَإِذَا سَجَدَ وَضَعَهَا ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏مَالِكٌ ‏ ‏نَعَمْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் பேத்தியான குழந்தை) உமாமாவை(த்தம் தோளில்) சுமந்து கொண்டு தொழுவார்கள். உமாமா, நபி (ஸல்) அவர்களின் மகள் ஸைனபு-அபுல்ஆஸ் பின் அர்ரபீஉ தம்பதியரின் மகளாவார். அவர்கள் (நிலையில்) நிற்கும்போது உமாமாவைச் சுமந்திருப்பார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது உமாமாவைக் கீழே இறக்கிவிடுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)


குறிப்பு:

“இந்த ஹதீஸை, அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து >அம்ரு பின் ஸுலைம் அஸ்ஸுரைக் (ரஹ்) அவர்களும் அம்ரு அவர்களிடமிருந்து > ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் > உங்களுக்கு அறிவித்தார்களா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஆம் என்றார்கள்” என்று யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) கூறியதாகக் குறிப்பிடப்படுகின்றது.

அத்தியாயம்: 5, பாடம்: 09, ஹதீஸ் எண்: 843

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏رَبِيعَةُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الدَّرْدَاءِ ‏ ‏قَالَ :‏‏

‏قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَمِعْنَاهُ يَقُولُ ‏ ‏أَعُوذُ بِاللَّهِ مِنْكَ ثُمَّ قَالَ أَلْعَنُكَ بِلَعْنَة اللَّهِ ثَلَاثًا وَبَسَطَ يَدَهُ كَأَنَّهُ يَتَنَاوَلُ شَيْئًا فَلَمَّا فَرَغَ مِنْ الصَّلَاةِ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ قَدْ سَمِعْنَاكَ تَقُولُ فِي الصَّلَاةِ شَيْئًا لَمْ نَسْمَعْكَ تَقُولُهُ قَبْلَ ذَلِكَ وَرَأَيْنَاكَ بَسَطْتَ يَدَكَ قَالَ إِنَّ عَدُوَّ اللَّهِ إِبْلِيسَ جَاءَ بِشِهَابٍ مِنْ نَارٍ لِيَجْعَلَهُ فِي وَجْهِي فَقُلْتُ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قُلْتُ أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ التَّامَّةِ فَلَمْ يَسْتَأْخِرْ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَرَدْتُ أَخْذَهُ وَاللَّهِ لَوْلَا دَعْوَةُ أَخِينَا ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏لَأَصْبَحَ مُوثَقًا يَلْعَبُ بِهِ وِلْدَانُ أَهْلِ ‏ ‏الْمَدِينَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள்) தொழும்போது, “நான் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” என்றும் “அல்லாஹ்வின் சாபத்தால் உன்னை நான் சபிக்கின்றேன்” என்றும் மூன்றுமுறை கூறியதை நாங்கள் செவியுற்றோம். மேலும், அவர்கள் தமது கரத்தை விரித்து எதையோ பிடிப்பதைப் போன்று சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழும்போது, நாங்கள் இதுவரைச் செவியுறாத ஒன்றைக் கூறினீர்கள். மேலும், நீங்கள் உங்கள் கரத்தை விரித்ததையும் நாங்கள் கண்டோம்” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் எதிரி இப்லீஸ் ஒரு தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு அதை என் முகத்தில் வைக்க (என்னிடம்) வந்தான். உடனே நான் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகின்றேன் என்று மூன்று முறையும் அல்லாஹ்வின் முழு சாபத்தால் உன்னை நான் சபிக்கின்றேன் என மூன்று முறையும் கூறினேன். ஆனால், அவன் பின்வாங்கிச் செல்லவில்லை. பிறகு நான் அவனைப் பிடிக்க நினைத்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! எம் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் வேண்டுதல் மட்டும் இல்லையாயின், காலையில் மதீனத்துச் சிறுவர்கள் அவனைச் சீண்டி விளையாடும் வகையில் (இந்தப் பள்ளிவாசலில்) அவன் கட்டிவைக்கப்பட்டிருப்பான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 09, ஹதீஸ் எண்: 842

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏النَّضْرُ بْنُ شُمَيْلٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ زِيَادٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ عِفْرِيتًا مِنْ الْجِنِّ جَعَلَ ‏ ‏يَفْتِكُ ‏ ‏عَلَيَّ الْبَارِحَةَ لِيَقْطَعَ عَلَيَّ الصَّلَاةَ وَإِنَّ اللَّهَ أَمْكَنَنِي مِنْهُ ‏ ‏فَذَعَتُّهُ ‏ ‏فَلَقَدْ هَمَمْتُ أَنْ أَرْبِطَهُ إِلَى جَنْبِ سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ حَتَّى تُصْبِحُوا تَنْظُرُونَ إِلَيْهِ أَجْمَعُونَ أَوْ كُلُّكُمْ ثُمَّ ذَكَرْتُ قَوْلَ أَخِي ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏رَبِّ اغْفِرْ لِي ‏ ‏وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي ‏فَرَدَّهُ اللَّهُ ‏ ‏خَاسِئًا ‏


‏و قَالَ ‏ ‏ابْنُ مَنْصُورٍ ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ زِيَادٍ ‏ ‏ح ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ هُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏ابْنِ جَعْفَرٍ ‏ ‏قَوْلُهُ ‏ ‏فَذَعَتُّهُ ‏ ‏وَأَمَّا ‏ ‏ابْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏فَقَالَ فِي رِوَايَتِهِ ‏ ‏فَدَعَتُّهُ

“நேற்றிரவு ஒரு முரட்டு ஜின் எனது தொழுகையைக் கெடுக்க சதி செய்தது. அல்லாஹ் அதை வெல்வதற்கு எனக்கு சக்தியளித்தான். அதன் குரல்வளையை நான் பிடித்துவிட்டேன். காலையில் எல்லாரும்/நீங்கள் எல்லாரும் வந்து அதைக் காணும்வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க முடிவு செய்தேன். பிறகு என் சகோதரர் ஸுலைமான் (அலை), ‘இறைவா! என்னை மன்னித்துவிடுவாயாக! மேலும் எனக்குப்பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு நீ வழங்குவாயாக!’ (38:35) என்று வேண்டியது என் நினைவுக்கு வந்தது. ஆகவே, (எனது முடிவைக் கைவிட்டேன். பின்னர்) அல்லாஹ் அந்த ஜின்னை இழிந்த நிலையில் விரட்டியடித்துவிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அதன் குரல்வளையைப் பிடித்துவிட்டேன்” என்பது இடம்பெறவில்லை. அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அதை வலுவாகப் பிடித்துத் தள்ளிவிட்டேன்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 08, ஹதீஸ் எண்: 841

حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏:‏

كُنَّا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَبَعَثَنِي فِي حَاجَةٍ فَرَجَعْتُ وَهُوَ ‏ ‏يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ وَوَجْهُهُ عَلَى غَيْرِ الْقِبْلَةِ فَسَلَّمْتُ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيَّ فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏ ‏إِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرُدَّ عَلَيْكَ إِلَّا أَنِّي كُنْتُ أُصَلِّي ‏


‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَلَّى بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏كَثِيرُ بْنُ شِنْظِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏ ‏بَعَثَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَاجَةٍ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏حَمَّادٍ

நாங்கள் (பனூ முஸ்தலிக் பயணத்தின் போது) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். இடையே, அவர்கள் என்னை வேறொரு வேலையாக அனுப்பினார்கள். நான் (அந்த வேலையை முடித்துத்) திரும்பி வந்தபோது அவர்கள் தமது வாகன(ஒட்டக)த்தில் இறையில்லம் கஅபா அல்லாத வேறொரு திசையை நோக்கி அமர்ந்தவாறு (கூடுதலான தொழுகையைத்) தொழுது கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். ஆனால் அவர்கள் எனக்கு பதில் ஸலாம் சொல்லவில்லை அவர்கள் தொழுது முடித்ததும், “நான் தொழுது கொண்டிருந்ததுதான் உங்களுக்கு பதில் ஸலாம் கூறவிடாமல் என்னைத் தடுத்தது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 08, ஹதீஸ் எண்: 840

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ :‏‏

‏أَرْسَلَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ مُنْطَلِقٌ إِلَى ‏ ‏بَنِي الْمُصْطَلِقِ ‏ ‏فَأَتَيْتُهُ وَهُوَ ‏ ‏يُصَلِّي عَلَى بَعِيرِهِ فَكَلَّمْتُهُ فَقَالَ لِي ‏ ‏بِيَدِهِ هَكَذَا وَأَوْمَأَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏بِيَدِهِ ثُمَّ كَلَّمْتُهُ فَقَالَ لِي ‏ ‏هَكَذَا فَأَوْمَأَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏أَيْضًا بِيَدِهِ نَحْوَ الْأَرْضِ وَأَنَا أَسْمَعُهُ يَقْرَأُ يُومِئُ بِرَأْسِهِ فَلَمَّا فَرَغَ قَالَ ‏ ‏مَا فَعَلْتَ فِي الَّذِي أَرْسَلْتُكَ لَهُ فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أُكَلِّمَكَ إِلَّا أَنِّي كُنْتُ أُصَلِّي


قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏وَأَبُو الزُّبَيْرِ ‏ ‏جَالِسٌ مُسْتَقْبِلَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَقَالَ بِيَدِهِ ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏إِلَى ‏ ‏بَنِي الْمُصْطَلِقِ ‏ ‏فَقَالَ بِيَدِهِ إِلَى غَيْرِ ‏ ‏الْكَعْبَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பனூ முஸ்தலிக் குலத்தாரின் இடம் நோக்கிப் பயணம் செய்தபோது, வேறொரு வேலையாக என்னை அனுப்பியிருந்தார்கள். நான் (என் வேலையை முடித்துவிட்டு) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமது ஒட்டகத்தில் அமர்ந்தவாறு குர்ஆன் ஓதித் தமது தலையால் சைகை செய்து தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். உடனே அவர்கள் தமது கரத்தால் இவ்வாறு சைகை செய்தார்கள். பிறகு மீண்டும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். அப்போதும் அவர்கள் இவ்வாறு சைகை செய்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், “நான் உங்களை அனுப்பிவைத்த வேலை என்ன ஆயிற்று?” என்று கேட்டுவிட்டு, “நான் தொழுது கொண்டிருந்ததுதான் உங்களிடம் பேசமுடியாமல் என்னைத் தடுத்தது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒவ்வொரு அசைவும் நபித்தோழர்கள் வழியாக அவர்கள்தம் மாணவத் தோழர்களுக்கு அசைத்துக் காட்டப் பட்டது. வழிவழியாக அந்த அசைவுகள் அண்ணலாரை நேரில் பார்த்து, அவர்கள் கூறுவதைச் செவியுறுவதுபோலவே உள்வாங்கப்பட்டன.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹைர் (ரஹ்) இதை அறிவிக்கும்போது, “அல்லாஹ்வின் தூதர் இவ்வாறு சைகை செய்தார்கள்” என நபித்தோழர் ஜாபிர் (ரலி) காட்டிய சைகையைப் போலவே தமது கரத்தால் “இவ்வாறு” என சைகை செய்து காட்டினார். இரண்டாவது முறை சைகையை, வாகனத்தில் இருக்கும் ஒருவர் தரையில் நிற்கும் ஒருவருக்குச் செய்யும் சைகையைப்போல் கீழ்நோக்கி சைகை செய்து காட்டினார்.

இந்த ஹதீஸை அபுஸ்ஸுஹைர் (ரஹ்) அறிவிக்கும்போது, இறையில்லம் கஅபாவை முன்னோக்கி அமர்ந்திருந்தார். அப்போது (கஅபா அல்லாத திசையான) பனூ முஸ்தலிக் குலத்தாரின் வசிப்பிடத்திசையை நோக்கி சைகை செய்து காட்டினார்.

அத்தியாயம்: 5, பாடம்: 08, ஹதீஸ் எண்: 839

دَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏أَنَّهُ قَالَ :‏ ‏

إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَنِي لِحَاجَةٍ ثُمَّ أَدْرَكْتُهُ وَهُوَ يَسِيرُ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏يُصَلِّي ‏ ‏فَسَلَّمْتُ عَلَيْهِ فَأَشَارَ إِلَيَّ فَلَمَّا فَرَغَ دَعَانِي فَقَالَ ‏ ‏إِنَّكَ سَلَّمْتَ ‏ ‏آنِفًا ‏ ‏وَأَنَا أُصَلِّي وَهُوَ مُوَجِّهٌ حِينَئِذٍ ‏ ‏قِبَلَ ‏ ‏الْمَشْرِقِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை, தேவையான ஒரு வேலையைச் செய்துவர அனுப்பி இருந்தார்கள். அவர்கள் (தமது வாகனத்தில் கூடுதலான தொழுகை) தொழுதவாறு சென்று கொண்டிருந்தபோது, (என் வேலை முடிந்த பின்னர்) அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன். அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள் (பதில் ஸலாம் கூறாமல்) என்னை நோக்கி சைகை செய்தார்கள். அவர்கள் தொழுது முடித்ததும் என்னை அழைத்து, “சற்று முன்னர் எனக்கு நீங்கள் ஸலாம் சொன்னீர்கள். அப்போது நான் தொழுது கொண்டிருந்தேன்” என்று கூறினார்கள். அப்போது அவர்களுடைய முகம் (கிப்லா அல்லாத) கிழக்குத் திசையை முன்னோக்கி இருந்தது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)