அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 698

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سِمَاكُ بْنُ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏قَالَ :‏

إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ ‏ ‏بِق وَالْقُرْآنِ الْمَجِيدِ ‏ ‏وَكَانَ صَلَاتُهُ بَعْدُ تَخْفِيفًا

நபி (ஸல்) (ஆரம்பக் காலத்தில்) ஃபஜ்ருத் தொழுகையில் “காஃப்; வல்குர்ஆனில் மஜீத்” எனும் (50ஆவது) அத்தியாயத்தை (முழுதும்) ஓதிவந்தார்கள். அதற்குப் பின்னர் அவர்களது தொழுகை சுருக்கமாகவே அமைந்தது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 697

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ :‏

عَنْ ‏ ‏زِيَادِ بْنِ عِلَاقَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الصُّبْحَ فَقَرَأَ فِي أَوَّلِ رَكْعَةٍ ‏ ‏وَالنَّخْلَ ‏ ‏بَاسِقَاتٍ ‏ ‏لَهَا ‏ ‏طَلْعٌ ‏ ‏نَضِيدٌ ‏ ‏وَرُبَّمَا قَالَ ‏ ‏ق

“நான் நபி (ஸல்) அவர்களுடன் ஸுப்ஹுத் தொழுகை தொழுதேன். முதல் ரக்அத்தில் நபி (ஸல்) கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்ச மரங்களையும் (நாமே முளைக்கச் செய்தோம்) எனும் (50:10ஆவது) வசன(அத்தியாய)த்தை” என்றும் சில வேளைகளில், “காஃப் எனும் (50ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்” என்றும் என் தந்தையின் சகோதரர் (குத்பா பின் மாலிக்-ரலி) கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : குத்பா பின் மாலிக் (ரலி) வழியாக ஸியாத் பின் இலாக்கா (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 696

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَرِيكٌ ‏ ‏وَابْنُ عُيَيْنَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏زِيَادِ بْنِ عِلَاقَةَ ‏ ‏عَنْ ‏ ‏قُطْبَةَ بْنِ مَالِكٍ :‏

سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ فِي الْفَجْرِ ‏ ‏وَالنَّخْلَ ‏ ‏بَاسِقَاتٍ ‏ ‏لَهَا ‏ ‏طَلْعٌ ‏ ‏نَضِيدٌ

நபி (ஸல்) ஃபஜ்ருத் தொழுகையில் “கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்ச மரங்களையும் (நாமே முளைக்கச் செய்தோம்)” எனும் (50:10ஆவது) வசன(அத்தியாய)த்தை ஓதுவதை நான் கேட்டேன்.

அறிவிப்பாளர் : குத்பா பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 695

حَدَّثَنِي ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏زِيَادِ بْنِ عِلَاقَةَ ‏ ‏عَنْ ‏ ‏قُطْبَةَ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ :‏

صَلَّيْتُ وَصَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَرَأَ ‏ ‏ق وَالْقُرْآنِ الْمَجِيدِ ‏ ‏حَتَّى قَرَأَ ‏ ‏وَالنَّخْلَ ‏ ‏بَاسِقَاتٍ ‏ ‏قَالَ فَجَعَلْتُ أُرَدِّدُهَا وَلَا أَدْرِي مَا قَالَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குத் தொழுவித்த(ஒரு)போது நான் தொழுதேன். (அத்தொழுகையில்) “காஃப் வல்குர்ஆனில் மஜீத்” (என்று தொடங்கும் 50ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். அதில் “வந்நக்ல பாசிகா(த்)தின்” எனும் (10ஆவது) வசனத்தை அவர்கள் ஓதியபோது, நானும் அதைத் திரும்ப ஓதலானேன்; ஆனால், அவர்கள் ஓதியது எனக்குப் (பொருள்) புரியவில்லை.

அறிவிப்பாளர் : குத்பா பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 694

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏الْوَلِيدُ بْنُ سَرِيعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ حُرَيْثٍ :‏

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ فِي الْفَجْرِ ‏ ‏وَاللَّيْلِ إِذَا ‏ ‏عَسْعَسَ

நபி (ஸல்) ஃபஜ்ருத் தொழுகையில் “பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதாணை!” எனும் வசனத்(தையுடைய 81ஆவது அத்தியாய)த்தை ஓதுவதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் ஹுரைஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 693

و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَتَقَارَبَا فِي اللَّفْظِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُحَمَّدَ بْنَ عَبَّادِ بْنِ جَعْفَرٍ ‏ ‏يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ سُفْيَانَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ الْمُسَيَّبِ الْعَابِدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ ‏ ‏قَالَ :‏

صَلَّى لَنَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الصُّبْحَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏فَاسْتَفْتَحَ سُورَةَ ‏ ‏الْمُؤْمِنِينَ ‏ ‏حَتَّى جَاءَ ذِكْرُ ‏ ‏مُوسَى ‏ ‏وَهَارُونَ ‏ ‏أَوْ ذِكْرُ ‏ ‏عِيسَى ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏يَشُكُّ أَوْ اخْتَلَفُوا عَلَيْهِ ‏ ‏أَخَذَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَعْلَةٌ فَرَكَعَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ السَّائِبِ ‏ ‏حَاضِرٌ ذَلِكَ


وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏فَحَذَفَ فَرَكَعَ ‏ ‏وَفِي حَدِيثِهِ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏ابْنِ الْعَاصِ

நபி (ஸல்) (ஒரு நாள்) மக்காவில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். அப்போது ’அல்முஃமினூன்’ (எனும் 23ஆவது) அத்தியாயத்தை ஓதலானார்கள். அதில் மூஸா (அலை), ஹாரூன் (அலை) ஆகியோரைப் பற்றிய (23:45ஆவது) வசனம் அல்லது ஈஸா (அலை) அவர்களைப் பற்றிய (23:50ஆவது) வசனம் வந்ததும் நபி(ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்டுவிட்டது. உடனே (அவர்களால் தொடர்ந்து ஓத முடியாமல்) ருகூஉச் செய்துவிட்டார்கள். அந்தத் தொழுகையில் நானும் கலந்துகொண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரலி)


குறிப்புகள் :

நபி (ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்ட வசனம் குறித்து முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) ஐயத்துடன், பிற அறிவிப்பாளர்களுக்கு வேறுபட்டு அறிவிக்கின்றார்.

அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) வழி அறிவிப்பில், “அத்தோடு நிறுத்திக் கொண்டு நபி (ஸல்) ருகூஉச் செய்துவிட்டார்கள்” என்று காணப்படுகிறது.

இமாம் நவவீ (ரஹ்) அவர்களின் முக்கியக் குறிப்பு:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரின் பெயராக ‘அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ்’ பதிவாகியுள்ளது பிழையாகும். இவர், நபித்தோழரான அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் அல்லர். மாறாக, நபித்தோழர்களுக்குப் பிற்காலத்தவரான அப்துல்லாஹ் பின் அம்ரில் ஹிஜாஸீ என்பவராவார். ‘இப்னுல் ஆஸ்’ எனும் கோத்திரப் பெயர் நீக்கத்துக்குரியது (“அத்தாரீக்” – இமாம் புகாரீ மற்றும் இபுனு அபீஹாத்தம், ரஹ்- அலைஹிம்).

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 692

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏قَزْعَةُ ‏ ‏قَالَ:‏

أَتَيْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏وَهُوَ ‏ ‏مَكْثُورٌ عَلَيْهِ ‏ ‏فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ عَنْهُ قُلْتُ إِنِّي لَا أَسْأَلُكَ عَمَّا يَسْأَلُكَ هَؤُلَاءِ عَنْهُ قُلْتُ أَسْأَلُكَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مَا لَكَ فِي ذَاكَ مِنْ خَيْرٍ فَأَعَادَهَا عَلَيْهِ فَقَالَ كَانَتْ صَلَاةُ الظُّهْرِ تُقَامُ فَيَنْطَلِقُ أَحَدُنَا إِلَى ‏ ‏الْبَقِيعِ ‏ ‏فَيَقْضِي حَاجَتَهُ ثُمَّ يَأْتِي أَهْلَهُ فَيَتَوَضَّأُ ثُمَّ يَرْجِعُ إِلَى الْمَسْجِدِ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الرَّكْعَةِ الْأُولَى

நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் (ஒருமுறை) சென்றபோது அவர்களைச் சுற்றி நிறையப் பேர் குழுமியிருந்தனர். மக்கள் அனைவரும் கலைந்து சென்றதும் நான், “அவர்கள் உங்களிடம் கேட்டதையெல்லாம் நான் கேட்கமாட்டேன். நான் உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றிக் கேட்கின்றேன்” என்று சொன்னேன். அதற்கு அபூஸயீத் (ரலி), “அதைக் கேட்டு உங்களுக்கு ஆகப் போவதென்ன?” என்று கூறினார்கள். நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். அப்போது அபூஸயீத் (ரலி), “லுஹ்ருத் தொழுகைக்காக (நபியவர்களது காலத்தில்) இகாமத் சொல்லப்படும். அப்போது எங்களில் ஒருவர் (ஊருக்கு ஒதுக்குப் புறத்திலுள்ள) பகீஉல் ஃகர்கத் பகுதிக்குச் சென்று இயற்கைக் கடனை நிறைவேற்றுவார். பிறகு தமது இல்லத்திற்குச் சென்று ஒளுச் செய்துவிட்டுப் பள்ளிவாசலுக்குத் திரும்பிவருவார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முதல் ரக்அத்திலேயே இருந்துகொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக கஸ்ஆ பின் யஹ்யா (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 691

حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ يَعْنِي ابْنَ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ وَهُوَ ابْنُ عَبْدِ العَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏عَطِيَّةَ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏قَزْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ :‏

لَقَدْ كَانَتْ صَلَاةُ الظُّهْرِ تُقَامُ فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى ‏ ‏الْبَقِيعِ ‏ ‏فَيَقْضِي حَاجَتَهُ ثُمَّ يَتَوَضَّأُ ثُمَّ يَأْتِي وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الرَّكْعَةِ الْأُولَى مِمَّا يُطَوِّلُهَا

லுஹ்ருத் தொழுகைக்காக (நபியவர்களது காலத்தில்) இகாமத் சொல்லப்படும். அப்போது ஒருவர் (ஊருக்கு ஒதுக்குப் புறத்திலுள்ள) பகீஉல் ஃகர்கத் பகுதிக்குச் சென்று இயற்கைக் கடனை நிறைவேற்றி, ஒளுச் செய்துவிட்டுத் திரும்பிவந்து விடுவார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முதல் ரக்அத்திலேயே நீட்டித்துக் கொண்டிருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 690

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوْنٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ سَمُرَةَ ‏ ‏قَالَ :‏

قَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏لِسَعْدٍ ‏ ‏قَدْ شَكَوْكَ فِي كُلِّ شَيْءٍ حَتَّى فِي الصَّلَاةِ قَالَ ‏ ‏أَمَّا أَنَا فَأَمُدُّ فِي الْأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الْأُخْرَيَيْنِ وَمَا ‏ ‏آلُو ‏ ‏مَا اقْتَدَيْتُ بِهِ مِنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ذَاكَ الظَّنُّ بِكَ ‏ ‏أَوْ ذَاكَ ظَنِّي بِكَ


و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ ‏ ‏وَأَبِي عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِهِمْ وَزَادَ فَقَالَ تُعَلِّمُنِي الْأَعْرَابُ بِالصَّلَاةِ

உமர் (ரலி) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (கூஃபா நகர) மக்கள் (என்னிடம்) முறையிட்டுள்ளனர் (உங்கள் விளக்கம் என்ன?)” என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத் (ரலி), “நான் (தொழுகையின்) முதல் இரண்டு ரக்அத்களில் நீளமாக ஓதுகிறேன். பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுவித்துக் காட்டிய முறையைப் பின்பற்றுவதில் எந்தக் குறையும் நான் செய்யவில்லை” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “உங்களைப் பற்றி (நமது) எண்ணமும்” அல்லது “உங்களைப் பற்றி எனது எண்ணமும் அதுவே” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)


குறிப்பு :

மிஸ்அர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாட்டுப்புறத்து மக்கள் எனக்குத் தொழுகையைக் கற்றுத்தருகின்றார்களா?” என்று (ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) கேட்டதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 689

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ :‏

أَنَّ أَهْلَ ‏ ‏الْكُوفَةِ ‏ ‏شَكَوْا ‏ ‏سَعْدًا ‏ ‏إِلَى ‏ ‏عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏فَذَكَرُوا مِنْ صَلَاتِهِ فَأَرْسَلَ إِلَيْهِ ‏ ‏عُمَرُ ‏ ‏فَقَدِمَ عَلَيْهِ فَذَكَرَ لَهُ مَا عَابُوهُ بِهِ مِنْ أَمْرِ الصَّلَاةِ فَقَالَ ‏ ‏إِنِّي لَأُصَلِّي بِهِمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا ‏ ‏أَخْرِمُ ‏ ‏عَنْهَا إِنِّي لَأَرْكُدُ بِهِمْ فِي الْأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الْأُخْرَيَيْنِ فَقَالَ ذَاكَ الظَّنُّ بِكَ ‏ ‏أَبَا إِسْحَقَ


حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

கூஃபாவாசிகள் (தம் ஆளுநரான) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் புகார் கூறினர். ஸஅத் தொழுவிப்பது குறித்து அவர்கள் (குறை) கூறினர். இதையொட்டி உமர் (ரலி) ஸஅத் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பித் தம்மிடம் வருமாறு கூறினார்கள். அவ்வாறே ஸஅத் (ரலி) அவர்களும் வந்தார்கள். அப்போது ஸஅத் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) தொழுகை தொடர்பாக மக்கள் கூறிய குற்றச்சாட்டை எடுத்துரைத்தார்கள். அதற்கு ஸஅத் (ரலி), “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே அவர்களுக்குத் தொழுவித்து வருகிறேன்; அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிடவில்லை. நான் தொழுகையின் முந்திய இரு ரக்அத்களில் நீளமாக ஓதியும் பிந்திய இரு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே, அபூஇஸ்ஹாக்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)