அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 688

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَقْرَأُ فِي صَلَاةِ الظُّهْرِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ قَدْرَ ثَلَاثِينَ آيَةً وَفِي الْأُخْرَيَيْنِ قَدْرَ خَمْسَ عَشْرَةَ آيَةً ‏ ‏أَوْ قَالَ نِصْفَ ذَلِكَ ‏ ‏وَفِي الْعَصْرِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ قَدْرَ قِرَاءَةِ خَمْسَ عَشْرَةَ آيَةً وَفِي الْأُخْرَيَيْنِ قَدْرَ نِصْفِ ذَلِكَ

நபி (ஸல்) லுஹ்ருத் தொழுகையின் முந்திய இரு ரக்அத்களில் முப்பது வசனங்கள் அளவும், அதன் பிந்திய இரு ரக்அத்களில் அதில்பாதி/பதினைந்து வசனங்கள் அளவும் ஓதுவார்கள். அஸ்ருத் தொழுகையின் முந்திய இரு ரக்அத்களில் பதினைந்து வசனங்கள் அளவும், அதன் பிந்திய இரு ரக்அத்களில் அதில் பாதியளவும் ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 687

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الصِّدِّيقِ :‏

عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏ ‏كُنَّا ‏ ‏نَحْزِرُ ‏ ‏قِيَامَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الظُّهْرِ وَالْعَصْرِ ‏ ‏فَحَزَرْنَا ‏ ‏قِيَامَهُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنْ الظُّهْرِ قَدْرَ قِرَاءَةِ ‏ ‏الم تَنْزِيلُ السَّجْدَةِ ‏ ‏وَحَزَرْنَا ‏ ‏قِيَامَهُ فِي الْأُخْرَيَيْنِ قَدْرَ النِّصْفِ مِنْ ذَلِكَ ‏ ‏وَحَزَرْنَا ‏ ‏قِيَامَهُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنْ الْعَصْرِ عَلَى قَدْرِ قِيَامِهِ فِي الْأُخْرَيَيْنِ مِنْ الظُّهْرِ وَفِي الْأُخْرَيَيْنِ مِنْ الْعَصْرِ عَلَى النِّصْفِ مِنْ ذَلِكَ


وَلَمْ يَذْكُرْ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏الم تَنْزِيلُ ‏ ‏وَقَالَ قَدْرَ ثَلَاثِينَ آيَةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் எவ்வளவு நேரம் நிலையில் நின்றார்கள் என்பதை நாங்கள் மதிப்பிட்டுவந்தோம்.

லுஹ்ருத் தொழுகையின் முன்னிரு ரக்அத்களில் (முப்பது வசனங்களைக் கொண்ட) அலிஃப், லாம், மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும் 32ஆவது) அத்தியாயம் ஓதும் அளவுக்கும், அதன் பின்னிரு ரக்அத்களில் அதில் பாதியளவுக்கும் நிற்பார்கள். அஸ்ருத் தொழுகையின் முன்னிரு ரக்அத்களில் லுஹ்ருத் தொழுகையின் பின்னிரு ரக்அத்கள் அளவுக்கும், அதன் பின்னிரு ரக்அத்களில் அதில் பாதியளவுக்கும் நிற்பார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “அலிஃப், லாம், மீம் தன்ஸீல்” என்பதற்குப் பதிலாக “முப்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு (நிற்பார்கள்)” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 686

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏وَأَبَانُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ :‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنْ الظُّهْرِ وَالْعَصْرِ ‏ ‏بِفَاتِحَةِ الْكِتَابِ ‏ ‏وَسُورَةٍ وَيُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا وَيَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الْأُخْرَيَيْنِ ‏ ‏بِفَاتِحَةِ الْكِتَابِ

நபி (ஸல்) லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளின் முதலிரண்டு ரக்அத்களில் அல் ஃபாத்திஹா அத்தியாயத்தையும் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை நாங்கள் செவியுறும்படி ஓதுவார்கள். பிந்திய இரு ரக்அத்களிலும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை (மட்டும்) ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 685

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏الْحَجَّاجِ يَعْنِي الصَّوَّافَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ‏ ‏وَأَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي بِنَا فَيَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ ‏ ‏بِفَاتِحَةِ الْكِتَابِ ‏ ‏وَسُورَتَيْنِ وَيُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا وَكَانَ يُطَوِّلُ الرَّكْعَةَ الْأُولَى مِنْ الظُّهْرِ وَيُقَصِّرُ الثَّانِيَةَ وَكَذَلِكَ فِي الصُّبْحِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தும்போது லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளின் முதலிரண்டு ரக்அத்களில் அல்ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தையும் (அதனுடன் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓர் அத்தியாயம் என) இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை நாங்கள் செவியுறும்படி ஓதுவார்கள். லுஹ்ருத் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீளமாகவும் இரண்டாவது ரக்அத்தில் (அதைவிடக்) குறைவாகவும் ஓதுவார்கள். ஸுப்ஹுத் தொழுகையிலும் இவ்வாறே (கூட்டி-குறைத்து) ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 33, ஹதீஸ் எண்: 684

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏مَعْنٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏قَالَ :‏

سَأَلْتُ ‏ ‏مَسْرُوقًا ‏ ‏مَنْ ‏ ‏آذَنَ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْجِنِّ لَيْلَةَ اسْتَمَعُوا الْقُرْآنَ ‏ ‏فَقَالَ حَدَّثَنِي ‏ ‏أَبُوكَ ‏ ‏يَعْنِي ‏ ‏ابْنَ مَسْعُودٍ ‏ ‏أَنَّهُ ‏ ‏آذَنَتْهُ ‏ ‏بِهِمْ شَجَرَةٌ

நான் மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்களிடம், “ஜின்கள் குர்ஆனைச் செவிமடுத்த அந்த இரவில் ஜின்கள் அங்கு இருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு மஸ்ரூக் (ரஹ்) “ஒரு மரம்தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜின்களைப் பற்றித் தெரிவித்தாக உங்கள் தந்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 33, ஹதீஸ் எண்: 683

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْشَرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏

لَمْ أَكُنْ لَيْلَةَ الْجِنِّ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَوَدِدْتُ أَنِّي كُنْتُ مَعَهُ

ஜின்-இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருந்திருக்க வேண்டும் என்று விரும்பினேன்; ஆனால் அந்த இரவில் நான் அவர்களுடன் இருக்கவில்லை.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 33, ஹதீஸ் எண்: 682

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَلْقَمَةَ :‏

هَلْ كَانَ ‏ ‏ابْنُ مَسْعُودٍ ‏ ‏شَهِدَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْلَةَ الْجِنِّ قَالَ فَقَالَ ‏ ‏عَلْقَمَةُ ‏ ‏أَنَا سَأَلْتُ ‏ ‏ابْنَ مَسْعُودٍ ‏ ‏فَقُلْتُ هَلْ شَهِدَ أَحَدٌ مِنْكُمْ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْلَةَ الْجِنِّ قَالَ لَا وَلَكِنَّا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ذَاتَ لَيْلَةٍ فَفَقَدْنَاهُ فَالْتَمَسْنَاهُ فِي الْأَوْدِيَةِ ‏ ‏وَالشِّعَابِ ‏ ‏فَقُلْنَا ‏ ‏اسْتُطِيرَ ‏ ‏أَوْ ‏ ‏اغْتِيلَ ‏ ‏قَالَ فَبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ فَلَمَّا أَصْبَحْنَا إِذَا هُوَ ‏ ‏جَاءٍ مِنْ قِبَلَ ‏ ‏حِرَاءٍ ‏ ‏قَالَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَقَدْنَاكَ فَطَلَبْنَاكَ فَلَمْ نَجِدْكَ فَبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ فَقَالَ ‏ ‏أَتَانِي دَاعِي الْجِنِّ فَذَهَبْتُ مَعَهُ فَقَرَأْتُ عَلَيْهِمْ الْقُرْآنَ قَالَ فَانْطَلَقَ بِنَا فَأَرَانَا آثَارَهُمْ وَآثَارَ نِيرَانِهِمْ وَسَأَلُوهُ الزَّادَ فَقَالَ لَكُمْ كُلُّ عَظْمٍ ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ يَقَعُ فِي أَيْدِيكُمْ أَوْفَرَ مَا يَكُونُ لَحْمًا وَكُلُّ بَعْرَةٍ عَلَفٌ لِدَوَابِّكُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَا تَسْتَنْجُوا بِهِمَا فَإِنَّهُمَا طَعَامُ إِخْوَانِكُمْ


و حَدَّثَنِيهِ ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ إِلَى قَوْلِهِ وَآثَارَ نِيرَانِهِمْ ‏ ‏قَالَ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏وَسَأَلُوهُ الزَّادَ وَكَانُوا مِنْ جِنِّ الْجَزِيرَةِ إِلَى آخِرِ الْحَدِيثِ مِنْ قَوْلِ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏مُفَصَّلًا مِنْ حَدِيثِ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى قَوْلِهِ ‏ ‏وَآثَارَ نِيرَانِهِمْ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ

நான் அல்கமா (ரஹ்) அவர்களிடம், இப்னு மஸ்ஊத் (ரலி)  ‘ஜின்(-இரவு’ எனச் பேசப்பட்ட அந்த) இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அல்கமா (ரஹ்), நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “ஜின்களின் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உங்களில் யாராவது இருந்தீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “இல்லை; ஆனால், ஒரு நாள் இரவு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது திடீரென அவர்களைக் காணவில்லை. எனவே, பள்ளத்தாக்குகளிலும் மலைக் கணவாய்களிலும் அவர்களைத் தேடிப்பார்த்தோம். (அவர்கள் அங்கு கிடைக்காமல் போகவே) “அவர்களை ஜின் தூக்கிச் சென்றிருக்கும்; அல்லது மர்மமான முறையில் அவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்” என்று நாங்கள் பேசிக்கொண்டோம். பின்னர் அன்றைய மோசமான இரவை(ஒரு வழியாக)க் கழித்தோம்.

அதிகாலையில் நபி (ஸல்) ஹிரா மலைக் குன்றுப் பக்கமிருந்து வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் காணாமல் நாங்கள் தேடினோம். நீங்கள் கிடைக்காமல் போகவே அந்த மோசமான இரவை (ஒருவாறு) கழித்தோம்” என்று கூறினோம்.

அப்போது நபி (ஸல்), “ஜின்களில் ஒருவர் என்னை அழைக்க வந்தார். எனவே அவருடன் சென்று ஜின்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினேன்” என்று கூறினார்கள். பிறகு எங்களை அழைத்துச் சென்று ஜின்கள் விட்டுச்சென்ற அடையாளங்களையும் அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும் காட்டினார்கள்.

ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு) ஆகுமானதைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு நபி (ஸல்), “அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில் இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்கள் பிராணிக்குத் தீவனமாகும்” என்று கூறியுள்ளார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் தோழர்களிடம்), “எனவே, நீங்கள் (எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் (மல-ஜலம் கழித்தபின்) துப்புரவு செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத்(ரலி) வழியாக ஆமிர் பின் ஷரஹ்பீல் (ரஹ்)


குறிப்புகள் :

இஸ்மாயீல் பின் இபுராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், “… அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும்” என்பதுவரை மட்டும் இடம்பெற்றுள்ளது.

“நபி (ஸல்) அவர்களிடம் (தங்களது) உணவு குறித்து ஜின்கள் வினவியோர் (அரபு) தீபகற்பத்தைச் சேர்ந்த ஜின்கள் ஆவர்” என்று ஷஅபீ (ரஹ்) கூறுகிறார்.

அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் (ரஹ்) வழி அறிவிப்பிலும் “… அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும்” என்பதுவரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள ஜின்களின் உணவைப் பற்றிய கேள்விக் குறிப்புகள் இடம்பெறவில்லை.

மேற்காணும் நிகழ்வின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, அந்த இரவு ‘ஜின்-இரவு’ என அடையாளப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அத்தியாயம்: 4, பாடம்: 33, ஹதீஸ் எண்: 681

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏

مَا قَرَأَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الْجِنِّ وَمَا رَآهُمْ انْطَلَقَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي طَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ ‏ ‏عَامِدِينَ ‏ ‏إِلَى سُوقِ ‏ ‏عُكَاظٍ ‏ ‏وَقَدْ حِيلَ بَيْنَ الشَّيَاطِينِ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ وَأُرْسِلَتْ عَلَيْهِمْ الشُّهُبُ فَرَجَعَتْ الشَّيَاطِينُ إِلَى قَوْمِهِمْ فَقَالُوا مَا لَكُمْ قَالُوا حِيلَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ وَأُرْسِلَتْ عَلَيْنَا الشُّهُبُ قَالُوا مَا ذَاكَ إِلَّا مِنْ شَيْءٍ حَدَثَ فَاضْرِبُوا مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا فَانْظُرُوا مَا هَذَا الَّذِي حَالَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ فَانْطَلَقُوا يَضْرِبُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا فَمَرَّ النَّفَرُ الَّذِينَ أَخَذُوا نَحْوَ ‏ ‏تِهَامَةَ ‏ ‏وَهُوَ بِنَخْلٍ ‏ ‏عَامِدِينَ ‏ ‏إِلَى سُوقِ ‏ ‏عُكَاظٍ ‏ ‏وَهُوَ ‏ ‏يُصَلِّي بِأَصْحَابِهِ صَلَاةَ الْفَجْرِ فَلَمَّا سَمِعُوا الْقُرْآنَ اسْتَمَعُوا لَهُ وَقَالُوا هَذَا الَّذِي حَالَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ فَرَجَعُوا إِلَى قَوْمِهِمْ فَقَالُوا يَا قَوْمَنَا ‏ ‏إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى نَبِيِّهِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏‏قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنْ الْجِنِّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜின்களுக்கு(என்று குர்ஆனை) ஓதிக்காட்டவுமில்லை; ஜின்களை அவர்கள் பார்க்கவுமில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்கள் சிலருடன் ஒருபோது உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே (அந்த நேரத்தில்) தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும், (வானுலகச் செய்திகளை ஒட்டுக்கேட்கச் செல்லும்) ஷைத்தான்கள்மீது தீப்பந்தங்கள் (எரிகற்கள்) ஏவிவிடப்பட்டிருந்தன. ஷைத்தான்கள் தம் கூட்டத்தாரிடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல் வெறுமனே) திரும்பியபோது “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று (ஷைத்தான்) கூட்டத்தார் கேட்டார்கள். அதற்கு ஷைத்தான்கள் “நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடை ஏற்படுத்தப்பட்டுவிட்டது; மேலும், எங்கள்மீது தீப்பந்தங்கள் ஏவப்பட்டன” என்று கூறினர். “ஏதேனும் புதியதொரு நிகழ்ச்சி ஏற்பட்டதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் விரவிச் சென்று, நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடையாக உள்ள அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்” என்றார்கள்.

அவ்வாறே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் விரவிச் சென்றார்கள். அவர்களில் ஒரு குழுவினர் திஹாமா எனும் பகுதியை நோக்கிச் சென்றனர். உக்காழ் சந்தைக்குச் செல்லும் வழியில் நக்லு எனுமிடத்தில் அப்போது நபி (ஸல்) தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகை தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை ஷைத்தான்கள் செவியுற்றபோது “நமக்கும் வானுலகச் செய்திக்கும் இடையே தடையாக இருப்பது இதுதான்” என்று கூறிக்கொண்டு, தங்கள் கூட்டத்தாரிடம் திரும்பினர். அவர்களிடம், “எங்கள் சமுதாயமே! நிச்சயமாக நாங்கள் வியத்தகு ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே, அதை நாங்கள் நம்பினோம். நாங்கள் (இனி) ஒருபோதும் எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம்” என்று கூறினர்.

இதையடுத்து அல்லாஹ் தன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு “நிச்சயமாக ஜின்களில் சிலர் (குர்ஆனைச்) செவியேற்றனர் என எனக்கு வஹீ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக!” எனும் (72:1ஆவது) வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 32, ஹதீஸ் எண்: 680

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏فِي ‏ ‏قَوْله :‏

لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ ‏ ‏قَالَ ‏‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُعَالِجُ ‏ ‏مِنْ التَّنْزِيلِ شِدَّةً كَانَ يُحَرِّكُ شَفَتَيْهِ فَقَالَ لِي ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏أَنَا أُحَرِّكُهُمَا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُحَرِّكُهُمَا فَقَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏أَنَا أُحَرِّكُهُمَا كَمَا كَانَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يُحَرِّكُهُمَا فَحَرَّكَ شَفَتَيْهِ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏ ‏لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ ‏ ‏قَالَ جَمْعَهُ فِي صَدْرِكَ ثُمَّ تَقْرَؤُهُ ‏ ‏فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ‏ ‏قَالَ فَاسْتَمِعْ وَأَنْصِتْ ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ قَالَ فَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَتَاهُ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏اسْتَمَعَ فَإِذَا انْطَلَقَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قَرَأَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا أَقْرَأَهُ

“(நபியே!) இந்த வேதஅறிவிப்பை மனனம் செய்வதற்காக அவசரப்பட்டு உங்கள் நாவை அசைக்காதீர்கள்” எனும் (75:16ஆவது) வசனம் பற்றிய விளக்கம் என்னவெனில்,

தம்மிடம் வேத அறிவிப்பை (வஹீயை) (வானவர்) ஜிப்ரீல் (அலை) கொண்டுவரும்போது, நபி (ஸல்) அவர்களுக்கு (வேதவசனங்களை முழுமையாக மனனம் செய்வது) சிரமமாக இருந்தது. அவர்கள் தம் நாவையும் இரு உதடுகளையும் (மனனமிடுவதற்காக) அசைத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அல்லாஹ், “(நபியே!) இந்த வேதஅறிவிப்பை மனனம் செய்வதற்காக அவசரப்பட்டு உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) இருத்தி, (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16,17) வசனங்களை அல்லாஹ் அருளினான்.
மேலும் “நாம் இதனை ஓதும்போது, நீங்கள் பின்தொடர்ந்து ஓதுங்கள்” எனும் (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது “நாம் (வானவர் மூலம் வேதவசனங்களை) அருளும்போது, வாய்மூடி அதனைக் கவனத்துடன் கேளுங்கள்” என்று கூறினான். பின்னர் “உம்மை ஓதவைப்பது எமது பொறுப்பாகும்” என்றான்.

(இந்த வசனங்கள் அருளப்பெற்ற) பின்னர் தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீ கொண்டு) வரும்போது நபி (ஸல்)  (அருளப்படுவதை அமைதியாகக்) கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஜிப்ரீல் (அலை) சென்ற பின்னர் ஜிப்ரீல் (அலை) ஓதிக் கொடுத்தபடி நபி (ஸல்) அவற்றை ஓதினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் உதடுகளை அசைத்ததைப் போன்று உங்களுக்கு நான் அசைத்துக் காட்டுகின்றேன்” என்று இந்த ஹதீஸை எனக்கு அறிவிக்கும்போது இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் அசைத்துக் காட்டினார்கள்.

“இந்த ஹதீஸைப் பிறருக்கு அறிவிக்கும்போது, இப்னு அப்பாஸ் (ரலி) தம் உதடுகளை எனக்கு அசைத்துக் காட்டியவாறு பிறருக்கும் நான் அசைத்துக் காட்டுவேன்” என்று ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 4, பாடம்: 32, ஹதீஸ் எண்: 679

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ :‏

فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ ‏ ‏لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ ‏‏قَالَ كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا نَزَلَ عَلَيْهِ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏بِالْوَحْيِ كَانَ مِمَّا يُحَرِّكُ بِهِ لِسَانَهُ وَشَفَتَيْهِ فَيَشْتَدُّ عَلَيْهِ فَكَانَ ذَلِكَ يُعْرَفُ مِنْهُ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏ ‏لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ ‏ ‏أَخْذَهُ ‏ ‏إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ ‏ ‏إِنَّ عَلَيْنَا أَنْ نَجْمَعَهُ فِي صَدْرِكَ وَقُرْآنَهُ فَتَقْرَؤُهُ ‏ ‏فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ‏ ‏قَالَ أَنْزَلْنَاهُ فَاسْتَمِعْ لَهُ ‏ ‏إِنَّ عَلَيْنَا بَيَانَهُ ‏ ‏أَنْ نُبَيِّنَهُ بِلِسَانِكَ فَكَانَ إِذَا أَتَاهُ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏أَطْرَقَ ‏ ‏فَإِذَا ذَهَبَ قَرَأَهُ كَمَا وَعَدَهُ اللَّه

“(நபியே!) இந்த வேதஅறிவிப்பை மனனம் செய்வதற்காக அவசரப்பட்டு உங்கள் நாவை அசைக்காதீர்கள்” எனும் (75:16ஆவது) வசனம் பற்றிய விளக்கம் என்னவெனில்,
தம்மிடம் வேத அறிவிப்பை (வஹீயை) (வானவர்) ஜிப்ரீல் (அலை) கொண்டுவரும்போது, நபி (ஸல்) தம் நாவையும் இரு உதடுகளையும் (மனனமிடுவதற்காக) அசைத்துக் கொண்டிருப்பார்கள். அது அவர்களுக்குச் சிரமமாகவும் இருந்தது. அவர்களது முகபாவத்திலும் அந்தச் சிரமம் தெரிந்தது. ஆகவே அல்லாஹ், “(நபியே!) இந்த வேதஅறிவிப்பை மனனம் செய்வதற்காக அவசரப்பட்டு உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) இருத்தி, (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16,17) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

அதாவது “உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும்” என்று இறைவன் கூறினான். மேலும் “நாம் இதனை ஓதும்போது, நீங்கள் பின்தொடர்ந்து ஓதுங்கள்” எனும் (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது “நாம் (வானவர் மூலம் வேதவசனங்களை) அருளும்போது, அதைக் கவனத்துடன் கேளுங்கள்” என்று கூறினான். பின்னர் “அதை விளக்குவதும் எமது பொறுப்பாகும்” எனும் (75:19ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது “உங்கள் நாவினால் அதை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நமது பொறுப்பாகும்” என்று கூறினான்.

(இந்த வசனங்கள் அருளப்பெற்ற) பின்னர் தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீ கொண்டு) வரும்போது நபி (ஸல்) தலையைத் தாழ்த்தி (அருளப்படுவதை அமைதியாகக்) கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஜிப்ரீல் (அலை) சென்ற பின்னர் அல்லாஹ் வாக்களித்தபடி நபி (ஸல்)  அவற்றை ஓதினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)