அத்தியாயம்: 1, பாடம்: 81, ஹதீஸ் எண்: 268

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا ‏:‏

وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ أَدْنَى مَقْعَدِ أَحَدِكُمْ مِنْ الْجَنَّةِ أَنْ يَقُولَ لَهُ تَمَنَّ فَيَتَمَنَّى ‏ ‏وَيَتَمَنَّى فَيَقُولُ لَهُ هَلْ تَمَنَّيْتَ فَيَقُولُ نَعَمْ فَيَقُولُ لَهُ فَإِنَّ لَكَ مَا تَمَنَّيْتَ وَمِثْلَهُ مَعَهُ

“ஒருவரிடம், ‘நீ (வேண்டியவரையில்) ஆசைப்படு’ என்று (இறைவன்) சொல்வான். அப்போது அவர் ஒவ்வொன்றாக ஆசைப்படுவார். (இறுதியில்) அவரிடம், ‘ஆசைப்பட்டு (முடித்து) விட்டாயா?’ என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், ‘ஆம்’ என்று பதிலளிப்பார். அப்போது, ‘நீ ஆசைப்பட்டதும் அத்துடன் அதைப் போன்றதும் உனக்குக் கிடைக்கும்’ என்று அவரிடம் இறைவன் கூறுவான். இது, சொர்க்கத்தில் உங்களுள் ஒருவரது மிகக் குறைந்த பதவி(க்குரிய பரிசாகும்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

”இது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 1, பாடம்: 81, ஹதீஸ் எண்: 267

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏أَخْبَرَهُ ‏:‏

أَنَّ نَاسًا قَالُوا لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ هَلْ تُضَارُّونَ فِي الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّكُمْ تَرَوْنَهُ كَذَلِكَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْهُ فَيَتَّبِعُ مَنْ كَانَ يَعْبُدُ الشَّمْسَ الشَّمْسَ وَيَتَّبِعُ مَنْ كَانَ يَعْبُدُ الْقَمَرَ الْقَمَرَ وَيَتَّبِعُ مَنْ كَانَ يَعْبُدُ الطَّوَاغِيتَ الطَّوَاغِيتَ وَتَبْقَى هَذِهِ الْأُمَّةُ فِيهَا مُنَافِقُوهَا ‏ ‏فَيَأْتِيهِمْ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي صُورَةٍ غَيْرِ صُورَتِهِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ نَعُوذُ بِاللَّهِ مِنْكَ هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا فَإِذَا جَاءَ رَبُّنَا عَرَفْنَاهُ ‏ ‏فَيَأْتِيهِمْ اللَّهُ تَعَالَى فِي صُورَتِهِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا فَيَتَّبِعُونَهُ ‏ ‏وَيُضْرَبُ ‏ ‏الصِّرَاطُ بَيْنَ ظَهْرَيْ جَهَنَّمَ فَأَكُونُ أَنَا وَأُمَّتِي أَوَّلَ مَنْ يُجِيزُ وَلَا يَتَكَلَّمُ يَوْمَئِذٍ إِلَّا الرُّسُلُ وَدَعْوَى الرُّسُلِ يَوْمَئِذٍ اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ وَفِي جَهَنَّمَ كَلَالِيبُ مِثْلُ شَوْكِ السَّعْدَانِ هَلْ رَأَيْتُمْ السَّعْدَانَ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّهَا مِثْلُ شَوْكِ السَّعْدَانِ غَيْرَ أَنَّهُ لَا يَعْلَمُ مَا قَدْرُ عِظَمِهَا إِلَّا اللَّهُ تَخْطَفُ النَّاسَ بِأَعْمَالِهِمْ فَمِنْهُمْ الْمُؤْمِنُ بَقِيَ بِعَمَلِهِ وَمِنْهُمْ الْمُجَازَى حَتَّى ‏ ‏يُنَجَّى حَتَّى إِذَا فَرَغَ اللَّهُ مِنْ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ وَأَرَادَ أَنْ يُخْرِجَ بِرَحْمَتِهِ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ أَمَرَ الْمَلَائِكَةَ أَنْ يُخْرِجُوا مِنْ النَّارِ مَنْ كَانَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا مِمَّنْ أَرَادَ اللَّهُ تَعَالَى أَنْ يَرْحَمَهُ مِمَّنْ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَيَعْرِفُونَهُمْ فِي النَّارِ يَعْرِفُونَهُمْ بِأَثَرِ السُّجُودِ تَأْكُلُ النَّارُ مِنْ ابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏إِلَّا أَثَرَ السُّجُودِ حَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ فَيُخْرَجُونَ مِنْ النَّارِ وَقَدْ امْتَحَشُوا فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءُ الْحَيَاةِ فَيَنْبُتُونَ مِنْهُ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ ثُمَّ يَفْرُغُ اللَّهُ تَعَالَى مِنْ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ وَيَبْقَى رَجُلٌ مُقْبِلٌ بِوَجْهِهِ عَلَى النَّارِ وَهُوَ آخِرُ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ فَيَقُولُ أَيْ رَبِّ اصْرِفْ وَجْهِي عَنْ النَّارِ فَإِنَّهُ قَدْ قَشَبَنِي رِيحُهَا وَأَحْرَقَنِي ذَكَاؤُهَا فَيَدْعُو اللَّهَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَدْعُوَهُ ثُمَّ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى هَلْ عَسَيْتَ إِنْ فَعَلْتُ ذَلِكَ بِكَ أَنْ تَسْأَلَ غَيْرَهُ فَيَقُولُ لَا أَسْأَلُكَ غَيْرَهُ وَيُعْطِي رَبَّهُ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ مَا شَاءَ اللَّهُ فَيَصْرِفُ اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ فَإِذَا أَقْبَلَ عَلَى الْجَنَّةِ وَرَآهَا سَكَتَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَيْ رَبِّ قَدِّمْنِي إِلَى بَابِ الْجَنَّةِ فَيَقُولُ اللَّهُ لَهُ أَلَيْسَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ لَا تَسْأَلُنِي غَيْرَ الَّذِي أَعْطَيْتُكَ وَيْلَكَ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏مَا أَغْدَرَكَ فَيَقُولُ أَيْ رَبِّ وَيَدْعُو اللَّهَ حَتَّى يَقُولَ لَهُ فَهَلْ عَسَيْتَ إِنْ أَعْطَيْتُكَ ذَلِكَ أَنْ تَسْأَلَ غَيْرَهُ فَيَقُولُ لَا وَعِزَّتِكَ فَيُعْطِي رَبَّهُ مَا شَاءَ اللَّهُ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ فَيُقَدِّمُهُ إِلَى بَابِ الْجَنَّةِ فَإِذَا قَامَ عَلَى بَابِ الْجَنَّةِ ‏ ‏انْفَهَقَتْ ‏ ‏لَهُ الْجَنَّةُ فَرَأَى مَا فِيهَا مِنْ الْخَيْرِ وَالسُّرُورِ فَيَسْكُتُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَيْ رَبِّ أَدْخِلْنِي الْجَنَّةَ فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ أَلَيْسَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ أَنْ لَا تَسْأَلَ غَيْرَ مَا أُعْطِيتَ وَيْلَكَ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏مَا أَغْدَرَكَ فَيَقُولُ أَيْ رَبِّ لَا أَكُونُ أَشْقَى خَلْقِكَ فَلَا يَزَالُ يَدْعُو اللَّهَ حَتَّى يَضْحَكَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى مِنْهُ فَإِذَا ضَحِكَ اللَّهُ مِنْهُ قَالَ ادْخُلْ الْجَنَّةَ فَإِذَا دَخَلَهَا قَالَ اللَّهُ لَهُ ‏ ‏تَمَنَّهْ فَيَسْأَلُ رَبَّهُ ‏ ‏وَيَتَمَنَّى حَتَّى إِنَّ اللَّهَ لَيُذَكِّرُهُ مِنْ كَذَا وَكَذَا حَتَّى إِذَا انْقَطَعَتْ بِهِ الْأَمَانِيُّ قَالَ اللَّهُ تَعَالَى ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ ‏


قَالَ ‏ ‏عَطَاءُ بْنُ يَزِيدَ ‏ ‏وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏ ‏مَعَ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏لَا يَرُدُّ عَلَيْهِ مِنْ حَدِيثِهِ شَيْئًا حَتَّى إِذَا حَدَّثَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَنَّ اللَّهَ قَالَ لِذَلِكَ الرَّجُلِ وَمِثْلُهُ مَعَهُ قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏وَعَشَرَةُ أَمْثَالِهِ مَعَهُ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏مَا حَفِظْتُ إِلَّا قَوْلَهُ ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏أَشْهَدُ أَنِّي حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَوْلَهُ ذَلِكَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏وَذَلِكَ الرَّجُلُ آخِرُ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْيَمَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعَيْبٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏وَعَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏أَخْبَرَهُمَا ‏ ‏أَنَّ النَّاسَ قَالُوا لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ مَعْنَى حَدِيثِ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ

மக்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பௌர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அவ்வாறே (மறுமையில் தெளிவாக) இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களை ஒன்று கூட்டி, “(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக் கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று கூறுவான். ஆகவே, சூரியனை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்(களான தீய சக்தி)களை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் அவற்றைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள்.

அப்போது இறைவன் அவர்களிடம், அவர்கள் அறிந்திராத ஒரு தோற்றத்தில் வந்து, “நான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள், “உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம்” என்பர். அப்போது நற்பேறுகளுக்கு உரியவனும் மிக்குயர்ந்தோனுமாகிய அல்லாஹ், அவர்கள் அறிந்து கொள்ளும் தோற்றத்தில் அவர்களிடம், “நான் உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள், “நீயே எங்கள் இறைவன்!” என்று கூறியவாறு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும். நானும் என் சமுதாயத்தாருமே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதலாமவர்களாக இருப்போம். அன்று இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள். அந்தச் சூழ்நிலையில் இறைத்தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும், “அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்று” என்பதாகவே இருக்கும். நரகத்(தின் மேலே உள்ள அப்பாலத்)தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் (ஸஅதான்) முற்களைப் போன்றிருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வர்ணித்துவிட்டு, “கருவேலமரத்தை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?” என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள், “ஆம் (பார்த்திருக்கின்றோம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள்.

(தொடர்ந்து),

“அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்றுதான் இருக்கும். ஆயினும், அதன் பருமன் என்னவென்று அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களின் தன்மைக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் தமது (பாவச்) செயல்களால் (அங்கேயே) எஞ்சிவிடும் இறைநம்பிக்கையாளரும் இருப்பார். இன்னும் தண்டனை அளிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டவரும் இருப்பார். இறுதியாக இறைவன், அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காமல் இருந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று உறுதி கூறியவர்களில், தான் கருணை காட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். நரகத்திலிருக்கும் அவர்களை அவர்களது ஸஜ்தாவின் அடையாளங்களை வைத்து வானவர்கள் இனம் கண்டு கொள்வார்கள். மனிதனி(ன் நெற்றியி)ல் உள்ள ஸஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப்பகுதிகளை நரகம் தீண்டுகிறது. ஸஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆவே, அவர்கள் அங்கமெல்லாம் கருத்து விட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அப்போது அவர்கள் மீது உயிர்நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் உழுநிலத்தில் விதைப்பயிர் முளைத்தெழுவதைப்போல் (புதுப்பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள்.

பிறகு இறைவன் (தன் எல்லா) அடியார்களிடையேயும் தீர்ப்பு வழங்கி முடிப்பான். அப்போது சொர்க்கத்துக்கு உரிய இறுதியான ஒருவர் நரக வாயிலின் எதிரில் எஞ்சியிருப்பார். அவர், “என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்தெடுக்கிறது. ஆகவே, என் முகத்தை நரகத்தை விட்டு (வேறு பக்கம்) திருப்பிடுவாயாக!” என்று வேண்டி, அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனைச் சொற்கள் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார். பிறகு அல்லாஹ், “நீ கேட்டதை நான் கொடுத்தால் வேறெதையும் கேட்க மாட்டாயே?” என்று கேட்பான். அதற்கவர், “(இல்லை;) வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தை விட்டு (வேறு பக்கம்) திருப்பி விடுவான். இதையடுத்து அவர் (தூரமாக இருக்கும்) சொர்க்கத்தை முன்னோக்கி, அதைப் பார்த்துக் கொண்டு, அல்லாஹ் நாடிய நேரம்வரை அமைதியாக இருப்பார்.

பிறகு, “என் இறைவா! சொர்க்கத்தின் வாசல்வரை என்னைக் கொண்டு செல்வாயாக!” என்பார். அதற்கு இறைவன் அவரிடம், “இப்போது உனக்கு நான் வழங்கியதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டேன் என நீ வாக்குறுதியும் உறுதிமொழியும் வழங்கவில்லையா? ஆதமின் மகனே! உனக்குக் கேடுதான். என்னே உன்னுடைய வாக்குமாற்றம்!” என்பான். ஆனால், அவர் தொடர்ந்து, “என் இறைவா … ” என்று தொடங்கி அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பார். அவரிடம் இறைவன், “இதை(யும்) நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைப்பாயோ?” என்று கேட்பான்.

அதற்கு அவர், “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணை! (வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன்)” என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, அல்லாஹ் அவரைச் சொர்க்கத்தின் வாசல்வரை அனுமதிப்பான். அவர் சொர்க்கத்தின் வாசலில் நிற்கும் போது அவருக்காகச் சொர்க்கம் திறந்து கொள்ளும். உடனே அவர் அதிலுள்ள உல்லாசமான சுகங்களைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரைதான் அமைதியாக இருப்பார். பிறகு, “என் இறைவா! என்னைச் சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!” என்று கேட்பார். அப்போது அவரிடம் இறைவன், “இப்போது உனக்கு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்பதில்லை என்று கூறி என்னிடம் வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் நீ வழங்கினாயே! ஆதமின் மகனே! உனக்குக் கேடுதான். என்னே உன்னுடைய வாக்குமாற்றம்!” என்பான். அதற்கு அவர், “என் இறைவா! நான் உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆகிவிடக்கூடாது” என்று கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பார். இறுதியில் அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிட்டு, “சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்” என்று கூறிவிடுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின், “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்” என்று அவரிடம் இறைவன் கூறுவான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டுத் தம் இறைவனிடம் கோருவார். அப்போது இறைவன், “இன்னின்னதை நீ ஆசைப்படு” என்று அவருக்கு நினைவுபடுத்துவான். இறுதியில் அவருடைய ஆசைகள் அனைத்தும் அடங்கி விடும்போது, “இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று மிக்குயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும்போது அவர்களுடனிருந்த அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. ஆனால், “இதுவும் உனக்குக் கிடைக்கும்; இன்னொரு மடங்கும் கிடைக்கும் என்று இறைவன் கூறுவான்” என்று அபூஹுரைரா (ரலி) சொல்லிவந்தபோது அபூஸயீத் (ரலி) (குறுக்கிட்டு) “இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான் என்றல்லவா ஹதீஸ் இருக்கிறது அபூஹுரைரா!” என்றார்கள். அபூஹுரைரா (ரலி), “‘இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் கிடைக்கும் என்றே நான் மனனமிட்டிருந்தேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூஸயீத் (ரலி), “இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்டுள்ளேன் என்று அறுதியிட்டுக் கூறுகிறேன்” என்றார்கள் என்று அறிவிப்பாளர் அதாஉ பின் யஸீத் (ரஹ்) கூறுகின்றார்.

அதாஉ பின் யஸீத் (ரஹ்) மற்றும் ஸயீதிப்னுல் முஸய்யிப் (ரஹ்) ஆகிய இருவர் வழி அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களிடம் மக்கள், “அல்லாஹ்வின் தூதரே, மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?” என்று கேட்டார்கள் என்ற குறிப்போடு மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம் பெற்றுள்ளன.

அத்தியாயம்: 1, பாடம்: 80, ஹதீஸ் எண்: 266

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مَيْسَرَةَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ الْبُنَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏صُهَيْبٍ :‏ ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ قَالَ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ فَيَقُولُونَ أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنْ النَّارِ قَالَ فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنْ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ سَلَمَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَزَادَ ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ ‏
‏لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ

“சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர், “உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று அல்லாஹ் அவர்களிடம் கேட்பான். அதற்கு அவர்கள், ” (இறைவா! எங்களுக்குப் பேரருள் புரிந்து) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்தாயே! (எங்களுக்கு வேறென்ன வேண்டும்?)” என்று கேட்பார்கள்.

அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி(அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்கத் தம் இறைவனைக் காண்பதைவிட அவர்களுக்கு வேறேதும் அதிவிருப்பமாக இருக்காது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸுஹைப் (ரலி)


குறிப்பு:

ஹம்மாதிபுனு ஸலமா (ரஹ்) வழி அறிவிப்பில், “நன்மை செய்தோருக்கு (உரிய கூலியான) நன்மையும் மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும் …” என்ற (10:26) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்” என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 80, ஹதீஸ் எண்: 265

حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏وَأَبُو غَسَّانَ الْمَسْمَعِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ الصَّمَدِ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي غَسَّانَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو عَبْدِ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ :‏ ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏جَنَّتَانِ مِنْ فِضَّةٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلَّا رِدَاءُ الْكِبْرِيَاءِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ

“பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியாலான இரு சொர்க்கங்கள் (அல்லாஹ்விடம்) உள்ளன. பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன்னாலான (வேறு) இரு சொர்க்கங்களும் உள்ளன. ‘அத்னு’ எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்குத் தடையேதும் இருக்காது – அவன் மீதுள்ள ‘பெருமை’ எனும் மேலாடை தவிர” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 79, ஹதீஸ் எண்: 264

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُبَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏:‏

قَامَ فِينَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِأَرْبَعٍ ‏ ‏إِنَّ اللَّهَ لَا يَنَامُ وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ يَرْفَعُ ‏ ‏الْقِسْطَ ‏ ‏وَيَخْفِضُهُ وَيُرْفَعُ إِلَيْهِ عَمَلُ النَّهَارِ بِاللَّيْلِ وَعَمَلُ اللَّيْلِ بِالنَّهَارِ

“அல்லாஹ் உறங்கமாட்டான்; உறங்குவது என்பது அவனுக்குத் தகாதது.

அவன் (மனித வாழ்வின்) துலாக்கோலைத் தாழ்த்துகின்றான்; உயர்த்துகின்றான்.

(மனிதர்கள்) இரவில் புரிந்த செயல்கள், (அவர்களது) பகல் செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகின்றன.

(மனிதர்கள்) பகலில் புரிந்த செயல்கள், (அவர்களது) இரவுச் செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறன்ன” என்ற நான்கு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்றவர்களாக எங்களுக்குச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 79, ஹதீஸ் எண்: 263

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُبَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ :‏ ‏

قَامَ فِينَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِخَمْسِ كَلِمَاتٍ فَقَالَ ‏ ‏إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَنَامُ وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ يَخْفِضُ ‏ ‏الْقِسْطَ ‏ ‏وَيَرْفَعُهُ يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ حِجَابُهُ النُّورُ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏النَّارُ ‏ ‏لَوْ كَشَفَهُ لَأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ ‏


وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏وَلَمْ يَقُلْ حَدَّثَنَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏قَامَ فِينَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِأَرْبَعِ كَلِمَاتٍ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ مِنْ خَلْقِهِ وَقَالَ حِجَابُهُ النُّورُ ‏

“வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உறங்கமாட்டான்; உறங்குவது என்பது அவனுக்குத் தகாதது.

அவன் (மனித வாழ்வின்) துலாக்கோலைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.

(மனிதர்கள்) இரவில் புரிந்த செயல்கள், (அவர்களது) பகல் செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறன.

(மனிதர்கள்) பகலில் புரிந்த செயல்கள், (அவர்களது) இரவுச் செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறன.

அவனது தடுப்புத்திரை என்பது ஒரு பேரொளியாகும். அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்” என்று ஐந்து விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்றவர்களாக எங்களுக்குச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி)


குறிப்புகள் :

இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள ‘பேரொளி’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘தீச்சுடர்’ என்ற சொல் அபூபக்ரு (ரஹ்) வழி அறிவிப்பில் காணப்படுகின்றது.

அல்-அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்ற நிலையில் எங்களிடம் சொன்னவை நான்கு விஷயங்களாகும்” என்றும் “ஒளியே அவனது திரையாகும்” என்றும் இடம் பெற்றுள்ளது.

“அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 1, பாடம்: 78, ஹதீஸ் எண்: 262

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏قَالَ :‏

قُلْتُ ‏ ‏لِأَبِي ذَرٍّ ‏‏لَوْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَسَأَلْتُهُ فَقَالَ عَنْ أَيِّ شَيْءٍ كُنْتَ تَسْأَلُهُ قَالَ كُنْتُ أَسْأَلُهُ هَلْ رَأَيْتَ رَبَّكَ قَالَ ‏ ‏أَبُو ذَرٍّ ‏ ‏قَدْ سَأَلْتُ فَقَالَ ‏ ‏رَأَيْتُ نُورًا

“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருந்தால் அவர்களிடம் (ஒரு விஷயத்தைப் பற்றிக்) கேட்டிருப்பேன்” என்று அபூதர் (ரலி) அவர்களிடம் கூறினேன். “எதைப் பற்றிக் கேட்டிருப்பாய்?” என்று என்னிடம் அவர்கள் கேட்டார்கள். நான், “நீங்கள் உங்கள் இறைவனை (மிஃராஜின்போது) பார்த்தீர்களா? என்று கேட்டிருப்பேன்” என்றேன். அபூதர் (ரலி), ” (இதுபற்றி) நான் அல்லாஹ்வின் தூதரிடமே கேட்டேன். அதற்கு அவர்கள், (மிஃராஜின்போது) நான் கண்டது பேரொளியை (மட்டுமே) என்று பதிலளித்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) கூறியதாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 78, ஹதீஸ் எண்: 261

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ :‏ ‏

سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ رَأَيْتَ رَبَّكَ قَالَ ‏ ‏نُورٌ أَنَّى أَرَاهُ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “(மிஃராஜின்போது) நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ” (அவனைச் சுற்றிலும்) பேரொளி! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 77, ஹதீஸ் எண்: 260

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَشْوَعَ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏قَالَ :‏ ‏

قُلْتُ ‏ ‏لِعَائِشَةَ ‏‏فَأَيْنَ ‏ ‏قَوْله ‏ : ‏ثُمَّ دَنَا ‏ ‏فَتَدَلَّى ‏ ‏فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى ‏‏قَالَتْ ‏ ‏إِنَّمَا ذَاكَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَأْتِيهِ فِي صُورَةِ الرِّجَالِ وَإِنَّهُ أَتَاهُ فِي هَذِهِ الْمَرَّةِ فِي صُورَتِهِ الَّتِي هِيَ صُورَتُهُ فَسَدَّ أُفُقَ السَّمَاء

“பின்னர், அவர் நெருங்கி, இன்னும் அருகே வந்தார். (வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான அல்லது அதைவிடக் குறைந்த (இடைவெளியில் அவரது) நெருக்கம் இருந்தது. பிறகு அல்லாஹ் தன் அடியாருக்கு அறிவிக்க வேண்டியவற்றை அறிவித்தான்” எனும் (53:8-11) வசனங்களின் பொருள் என்ன?” என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். “அது (வானவர்) ஜிப்ரீலை(நபியவர்கள் பார்த்ததை)யே குறிக்கிறது. நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) மனிதர்(களை ஒத்த) உருவில் வருவதே வழக்கம். ஆனால், அம்முறை மட்டும் அடிவானத்தையே அடைத்தபடி (பிரமாண்டமான) தமது (உண்மையான) தோற்றத்தில் வந்தார்” என்று அன்னை ஆயிஷா (ரலி) விளக்கினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக மஸ்ரூக் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 77, ஹதீஸ் எண்: 259

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏قَالَ ‏‏كُنْتُ مُتَّكِئًا عِنْدَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقَالَتْ :‏ ‏

يَا ‏ ‏أَبَا عَائِشَةَ ‏ ‏ثَلَاثٌ مَنْ تَكَلَّمَ بِوَاحِدَةٍ مِنْهُنَّ فَقَدْ أَعْظَمَ عَلَى اللَّهِ ‏ ‏الْفِرْيَةَ ‏ ‏قُلْتُ مَا هُنَّ قَالَتْ مَنْ زَعَمَ أَنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَأَى رَبَّهُ فَقَدْ أَعْظَمَ عَلَى اللَّهِ ‏ ‏الْفِرْيَةَ ‏ ‏قَالَ وَكُنْتُ مُتَّكِئًا فَجَلَسْتُ فَقُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ ‏ ‏أَنْظِرِينِي ‏ ‏وَلَا تَعْجَلِينِي أَلَمْ يَقُلْ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏: ‏وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ ‏

– ‏وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى ‏
‏فَقَالَتْ أَنَا أَوَّلُ هَذِهِ الْأُمَّةِ سَأَلَ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّمَا هُوَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏لَمْ أَرَهُ عَلَى صُورَتِهِ الَّتِي خُلِقَ عَلَيْهَا غَيْرَ هَاتَيْنِ الْمَرَّتَيْنِ رَأَيْتُهُ مُنْهَبِطًا مِنْ السَّمَاءِ سَادًّا عِظَمُ خَلْقِهِ مَا بَيْنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ فَقَالَتْ ‏ ‏أَوَ لَمْ تَسْمَعْ أَنَّ اللَّهَ يَقُولُ ‏: ‏لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ ‏

‏أَوَ لَمْ تَسْمَعْ أَنَّ اللَّهَ يَقُولُ ‏: ‏وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بِإِذْنِهِ مَا يَشَاءُ إِنَّهُ عَلِيٌّ حَكِيمٌ ‏

‏قَالَتْ وَمَنْ زَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَتَمَ شَيْئًا مِنْ كِتَابِ اللَّهِ فَقَدْ أَعْظَمَ عَلَى اللَّهِ ‏ ‏الْفِرْيَةَ ‏ ‏وَاللَّهُ يَقُولُ ‏: ‏يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ ‏

‏قَالَتْ وَمَنْ زَعَمَ أَنَّهُ يُخْبِرُ بِمَا يَكُونُ فِي غَدٍ فَقَدْ أَعْظَمَ عَلَى اللَّهِ ‏ ‏الْفِرْيَةَ ‏ ‏وَاللَّهُ يَقُولُ ‏: ‏قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏وَزَادَ قَالَتْ وَلَوْ كَانَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَاتِمًا شَيْئًا مِمَّا أُنْزِلَ عَلَيْهِ لَكَتَمَ هَذِهِ الْآيَةَ ‏

‏وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ ‏ ‏وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ ‏

حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏هَلْ رَأَى ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَبَّهُ فَقَالَتْ سُبْحَانَ اللَّهِ لَقَدْ قَفَّ شَعَرِي لِمَا قُلْتَ وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَحَدِيثُ ‏ ‏دَاوُدَ ‏ ‏أَتَمُّ وَأَطْوَلُ

நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்தில் சாய்ந்தவனாக அமர்ந்திருந்த ஒருபோது, அவர்கள் (என்னை), “அபூஆயிஷா!” (என்று எனது குன்யத் பெயரால் விளித்து,) “மூன்று (மிகக் கொடிய) விஷயங்கள் உள்ளன. யாராவது அவற்றில் ஒன்றைக் கூறினாலும் அவர் அல்லாஹ்வின்மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக் கட்டியவர் ஆவார்” என்று கூறினார்கள். நான், “அவை எவை?” என்று கேட்டேன். அதற்கு, “யார் முஹம்மது (ஸல்) தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக் கட்டிவிட்டார்” என்று சொன்னார்கள். சாய்ந்து அமர்ந்திருந்த நான் நிமிர்ந்துவிட்டேன். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். ‘திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்’ (81:23) என்றும் ‘நிச்சயமாக மற்றொரு முறையும் அவனைக் கண்டார்’ (53:13) என்றும் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறவில்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள் :

இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது, (வானவர்) ஜிப்ரீலை(நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவரது இயற்கையான தோற்றத்தில் அந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கின்றேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி)

“எவருடைய பார்வையும் அவனை எட்ட முடியாது; அவனே அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன் (6:103) என்று அல்லாஹ் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா?

அல்லது,

மனிதர்களுள் எவரிடமும் வஹீயின் மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்து, தான் நாடுகின்றவற்றை (வேதமாக) தன் அனுமதியின் பேரில் அறிவிக்கச் செய்தோ அல்லாமல் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. அவன் மிக்குயர்ந்தவன்; ஞானமிக்கவன் (42:51) என்று அல்லாஹ் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா?” என்று என்னை வினவி(மூன்றில் முதலாவதை நிறுவி)னார்கள்.

(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) கூறினார்கள் :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறைவேதத்திலிருந்து எதையும் மறைத்து விட்டார்கள் என்று யாரேனும் கூறினால், அவரும் அல்லாஹ்வின்மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக் கட்டிவிட்டார். ‘தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட(வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்! (அவ்வாறு) நீங்கள் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள் …’ (5:67) என்று அல்லாஹ் கூறுகின்றான்” என்று விளக்கி(இரண்டாவதை நிறுவி)னார்கள்.

அதையடுத்து,

“நபி (ஸல்) அவர்கள் நாளை நடக்கவிருப்பதைத் தெரிவிப்பார்கள் என்று யாரேனும் கூறினால் அவரும் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யைப் புனைந்து விட்டார். ஏனெனில், ‘(நபியே) கூறுவீராக! அல்லாஹ்வைத்தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவானவற்றை அறியமாட்டார் …’ (27:65) என்று அல்லாஹ் கூறுகின்றான்” என்று எடுத்துரைத்(து மூன்றாவதையும் நிறுவி முடித்)தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக மஸ்ரூக் (ரஹ்)


குறிப்புகள் :

தாவூத் (ரஹ்) வழி அறிவிப்பில், “முஹம்மது (ஸல்) தமக்கு அருளப்பட்ட(வேதத்)திலிருந்து எதையாவது மறைப்பவராக இருந்தால், கீழ்க்காணும்

‘(நபியே!) அல்லாஹ்வும் அருள்புரிந்து நீங்களும் அருள்புரிந்தவர் (ஆன ஜைது) இடம் நீங்கள், அல்லாஹ்வுக்குப் பயந்து, ’நீ உன் மனைவியை (மணவிலக்குச் செய்துவிடாமல்) உன்னிடமே நிறுத்தி வைத்துக் கொள்’ என்று சொன்னபோது, அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை மனிதர்களுக்கு அஞ்சி நீங்கள் உங்களது மனத்தில் மறைத்து வைத்தீர்கள்; அல்லாஹ்வே நீங்கள் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியுடையோன்’ (33:37)

என்ற வசனத்தை மறைத்திருப்பார்கள் (ஆனால், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து அவர்கள் எதையும் மறைத்துவிடவில்லை)” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூடுதலாகக் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

இபுனு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், மஸ்ரூக் (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மிஃராஜின்போது) தம் இறைவனைப் பார்த்தார்களா?” என்று கேட்டபோது, “ஸுப்ஹானல்லாஹ்! நீர் கூறியதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது!” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறி விளக்கம் சொல்லத் தொடங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.

அல்-குர்ஆனின் 53:13 மற்றும் 81:23 வசனங்களுக்கு, இப்னு மஸ்ஊத் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) போன்றோரின் விளக்கங்கள் அவர்களது சொந்தக் கூற்றுகளாகும். ஆனால், அன்னை ஆயிஷா (ரலி) எடுத்துக் கூறியவை அல்லாஹ்வின் வசனச் சான்றுகளாகும்.