அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 238

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏لَعَلَّهُ قَالَ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ صَعْصَعَةَ ‏ ‏رَجُلٍ مِنْ قَوْمِهِ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَا أَنَا عِنْدَ ‏ ‏الْبَيْتِ ‏ ‏بَيْنَ النَّائِمِ وَالْيَقْظَانِ إِذْ سَمِعْتُ قَائِلًا يَقُولُ أَحَدُ الثَّلَاثَةِ بَيْنَ الرَّجُلَيْنِ فَأُتِيتُ فَانْطُلِقَ بِي فَأُتِيتُ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ فِيهَا مِنْ مَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏فَشُرِحَ ‏ ‏صَدْرِي إِلَى كَذَا وَكَذَا قَالَ ‏ ‏قَتَادَةُ ‏ ‏فَقُلْتُ لِلَّذِي مَعِي مَا ‏ ‏يَعْنِي قَالَ إِلَى أَسْفَلِ بَطْنِهِ فَاسْتُخْرِجَ قَلْبِي فَغُسِلَ بِمَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏ثُمَّ أُعِيدَ مَكَانَهُ ثُمَّ حُشِيَ إِيمَانًا وَحِكْمَةً ثُمَّ أُتِيتُ بِدَابَّةٍ أَبْيَضَ يُقَالُ لَهُ ‏ ‏الْبُرَاقُ ‏ ‏فَوْقَ الْحِمَارِ وَدُونَ الْبَغْلِ يَقَعُ خَطْوُهُ عِنْدَ أَقْصَى طَرْفِهِ فَحُمِلْتُ عَلَيْهِ ثُمَّ انْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا السَّمَاءَ الدُّنْيَا فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقِيلَ مَنْ هَذَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ نَعَمْ قَالَ فَفَتَحَ لَنَا وَقَالَ مَرْحَبًا بِهِ وَلَنِعْمَ الْمَجِيءُ جَاءَ قَالَ فَأَتَيْنَا عَلَى ‏ ‏آدَمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَذَكَرَ أَنَّهُ لَقِيَ فِي السَّمَاءِ الثَّانِيَةِ ‏ ‏عِيسَى ‏ ‏وَيَحْيَى ‏ ‏عَلَيْهَا السَّلَام ‏ ‏وَفِي الثَّالِثَةِ ‏ ‏يُوسُفَ ‏ ‏وَفِي الرَّابِعَةِ ‏ ‏إِدْرِيسَ ‏ ‏وَفِي الْخَامِسَةِ ‏ ‏هَارُونَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ ‏ ‏قَالَ ثُمَّ انْطَلَقْنَا حَتَّى انْتَهَيْنَا إِلَى السَّمَاءِ السَّادِسَةِ فَأَتَيْتُ عَلَى ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ مَرْحَبًا بِالْأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ فَلَمَّا جَاوَزْتُهُ بَكَى فَنُودِيَ مَا يُبْكِيكَ قَالَ رَبِّ هَذَا غُلَامٌ بَعَثْتَهُ بَعْدِي يَدْخُلُ مِنْ أُمَّتِهِ الْجَنَّةَ أَكْثَرُ مِمَّا يَدْخُلُ مِنْ أُمَّتِي قَالَ ثُمَّ انْطَلَقْنَا حَتَّى انْتَهَيْنَا إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَأَتَيْتُ عَلَى ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏وَقَالَ فِي الْحَدِيثِ وَحَدَّثَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ رَأَى أَرْبَعَةَ أَنْهَارٍ يَخْرُجُ مِنْ أَصْلِهَا نَهْرَانِ ظَاهِرَانِ وَنَهْرَانِ بَاطِنَانِ فَقُلْتُ يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏مَا هَذِهِ الْأَنْهَارُ قَالَ أَمَّا النَّهْرَانِ الْبَاطِنَانِ فَنَهْرَانِ فِي الْجَنَّةِ وَأَمَّا الظَّاهِرَانِ فَالنِّيلُ وَالْفُرَاتُ ثُمَّ رُفِعَ لِي ‏ ‏الْبَيْتُ الْمَعْمُورُ ‏ ‏فَقُلْتُ يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏مَا هَذَا قَالَ هَذَا ‏ ‏الْبَيْتُ الْمَعْمُورُ ‏ ‏يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ إِذَا خَرَجُوا مِنْهُ لَمْ يَعُودُوا فِيهِ آخِرُ مَا عَلَيْهِمْ ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ أَحَدُهُمَا خَمْرٌ وَالْآخَرُ لَبَنٌ فَعُرِضَا عَلَيَّ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقِيلَ أَصَبْتَ أَصَابَ اللَّهُ بِكَ أُمَّتُكَ عَلَى الْفِطْرَةِ ثُمَّ فُرِضَتْ عَلَيَّ كُلَّ يَوْمٍ خَمْسُونَ صَلَاةً ثُمَّ ذَكَرَ قِصَّتَهَا إِلَى آخِرِ الْحَدِيثِ ‏


‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ صَعْصَعَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏فَذَكَرَ نَحْوَهُ وَزَادَ فِيهِ فَأُتِيتُ ‏ ‏بِطَسْتٍ ‏ ‏مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَشُقَّ مِنْ ‏ ‏النَّحْرِ ‏ ‏إِلَى ‏ ‏مَرَاقِّ ‏ ‏الْبَطْنِ فَغُسِلَ بِمَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏ثُمَّ مُلِئَ حِكْمَةً وَإِيمَانًا ‏

“நான் இறையில்லத்தில் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் (படுத்து) இருந்தபோது, (வானவர்) ஒருவர் (வந்து), “(அதோ, அந்த) இருவருக்கும் நடுவில் (படுத்து) உள்ள மூன்றாமவர்தாம்” என்று (என்னைச் சுட்டிக்) கூறுவதைக் கேட்டேன். எனக்காகப் பொன்னாலான தாம்பாளம் ஒன்று கொண்டுவரப் பட்டது. அதில் ‘ஸம்ஸம்’ நீர் இருந்தது. எனது நெஞ்சு இங்கிருந்து … இதுவரையில் பிளக்கப்பட்டது.

பிறகு எனது இருதயம் வெளியிலெடுக்கப்பட்டு, ஸம்ஸம் நீரால் கழுவப்பட்டு, பழையபடி அது இருந்த இடத்தில் (பொருத்தி) வைக்கப்பட்டது. பிறகு இறைநம்பிக்கையாலும் ஞானத்தாலும் அது நிரப்பப்பட்டது. பிறகு நாட்டுக் கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் இடைப்பட்ட உருவமைப்பில், வெள்ளை நிறத்திலமைந்த, பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கின்ற ‘புராக்’ எனப்படும் ஒரு (மின்னல்வேக) வாகனம் எனக்காகக் கொண்டு வரப்பட்டது. நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். பின்னர் நாங்கள் (புறப்பட்டு,) பூமியின் (முதல்) வானத்திற்குச் சென்றோம். அதைத் திறக்கும்படி ஜிப்ரீல் (அலை) பணித்தபோது, “யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள். “உம்முடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை), “முஹம்மது” என்று பதிலளித்தார்கள். “அவர் அழைக்கப்பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை), “ஆம்” என்றார். (அந்த வானத்தின் காவலர்) எங்களுக்காகத் திறந்து, “அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்வருகை!” என்று (வாழ்த்துக்) கூறினர். நாங்கள் (அந்த வானிலிருந்த) ஆதம் (அலை) அவர்களிடம் சென்றோம் …

…இரண்டாம் வானத்தில் ஈஸா (அலை), யஹ்யா (அலை) ஆகியோரையும் மூன்றாம் வானத்தில் யூஸுஃப் (அலை) அவர்களையும் நான்காம் வானத்தில் இத்ரீஸ் (அலை) அவர்களையும் ஐந்தாம் வானத்தில் ஹாரூன் (அலை) அவர்களையும் சந்தித்த பிறகு, நாங்கள் ஆறாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள், “நற்குணச் சகோதரருக்கு நல்வரவு! நற்குண நபிக்கு நல்வரவு!” என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான் அவர்களிடமிருந்து கிளம்பியபோது அவர்கள் அழுதார்கள். “ஏன் அழுகின்றீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இறைவா! என் சமுதாயத்தாரில் சொர்க்கம் செல்கின்றவர்களைவிட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு உன்னால் அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் செல்வார்கள் (என்பதால் என் சமுதாய மக்களை எண்ணி அழுதேன்)” என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன் …

oOo

அங்கு நான்கு நதிகளைக் கண்டதாக நபி (ஸல்) கூறினார்கள். மேலும், ‘ஸித்ரத்துல் முன்தஹா’வின் அடிமூலத்திலிருந்து, வெளிநோக்கி இரண்டு நதிகளும் உள்நோக்கி இரண்டு நதிகளும் வெளியாகி(ஓடி)க் கொண்டிருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், “ஜிப்ரீலே! இந்நதிகள் எவை?” என்று கேட்டேன். “உள்ளே ஓடுபவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள(ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய)வையாகும். வெளியே ஓடுபவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்கள்.

பிறகு அல்-பைத்துல் மஅமூர் (எனும் இறையில்லம்) எனக்குக் காட்டப்பட்டது. நான், “ஜிப்ரீல்! இது என்ன?” என்று கேட்டேன். “இதுதான் அல்-பைத்துல் மஅமூர் ஆகும். இதில் (இறைவனை வணங்குவதற்காக) ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் நுழைகின்றார்கள். அவர்கள் இங்கிருந்து வெளியே சென்றால் திரும்ப இங்கு வரமாட்டார்கள். (முதல் தடவை நுழைவான) அது அவர்களது இறுதி நுழைவாகும்” என்று ஜிப்ரீல் (அலை) சொன்னார்கள். பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றின் ஒன்றில் மதுவும் மற்றொன்றில் பாலும் இருந்தன. அவ்விரு பாத்திரங்களையும் என்னிடம் எடுத்துக் காட்டப்(பட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு கூறப்)பட்டது. நான் பாலைத் தேர்ந்தெடுத்தேன். அப்போது, “மிக மேன்மையானதைப் பெற்று விட்டீர்கள். உங்கள் மூலம் அல்லாஹ் மிக மேன்மையையே நாடியுள்ளான். உங்கள் சமுதாயத்தாரும் அந்த (மிக மேன்மையான) இயற்கை நெறியிலேயே இருப்பார்கள்” என்று கூறப்பட்டது. பிறகு என்மீது நாளொன்றுக்கு ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டன ….

இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறுதிவரை குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

என்னுடன் இருந்த(ஜாரூத் என்ப)வரிடம், (அல்லாஹ்வின் தூதரது நெஞ்சு பிளக்கப் பட்ட) “இங்கிருந்து … இதுவரையில் என்று கூறப்படுவதன் பொருள் யாது?” என்று நான் கேட்டதற்கு, “(நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து) அடிவயிறுவரை என்பது அனஸ் (ரலி) அவர்களது கருத்து” என்று (ஜாரூத்) பதிலளித்தார் என்பதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்)  கூறுகின்றார்.

முஆத் இபுனு ஹிஷாம் வழி அறிவிப்பில், “… நுண்ணறிவும் இறைநம்பிக்கையும் நிரப்பப்பட்ட பொன்னாலான தாம்பாளம் ஒன்று எனக்காகக் கொண்டுவரப்பட்டது. பிறகு எனது காறையெலும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டு ஸம்ஸம் நீரால் கழுவப்பட்டது. பிறகு ஞானத்தாலும் இறைநம்பிக்கையாலும் (என் நெஞ்சம்) நிரப்பப்பட்டது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அறிவித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 237

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ ‏ ‏أَبُو ذَرٍّ ‏ ‏يُحَدِّثُ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏فُرِجَ سَقْفُ بَيْتِي وَأَنَا ‏ ‏بِمَكَّةَ ‏ ‏فَنَزَلَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَفَرَجَ صَدْرِي ثُمَّ غَسَلَهُ مِنْ مَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَأَفْرَغَهَا فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ فَلَمَّا جِئْنَا السَّمَاءَ الدُّنْيَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏لِخَازِنِ السَّمَاءِ الدُّنْيَا افْتَحْ قَالَ مَنْ هَذَا قَالَ هَذَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قَالَ هَلْ مَعَكَ أَحَدٌ قَالَ نَعَمْ ‏ ‏مَعِيَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَأُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ فَفَتَحَ قَالَ فَلَمَّا عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا فَإِذَا رَجُلٌ عَنْ يَمِينِهِ أَسْوِدَةٌ وَعَنْ يَسَارِهِ أَسْوِدَةٌ قَالَ فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى قَالَ فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ ‏ ‏وَالِابْنِ الصَّالِحِ قَالَ قُلْتُ يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏مَنْ هَذَا قَالَ هَذَا ‏ ‏آدَمُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهَذِهِ الْأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ نَسَمُ بَنِيهِ فَأَهْلُ الْيَمِينِ أَهْلُ الْجَنَّةِ وَالْأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى قَالَ ثُمَّ عَرَجَ بِي ‏ ‏جِبْرِيلُ ‏ ‏حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ فَقَالَ لِخَازِنِهَا افْتَحْ قَالَ فَقَالَ لَهُ خَازِنُهَا مِثْلَ مَا قَالَ خَازِنُ السَّمَاءِ الدُّنْيَا فَفَتَحَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَاوَاتِ ‏ ‏آدَمَ ‏ ‏وَإِدْرِيسَ ‏ ‏وَعِيسَى ‏ ‏وَمُوسَى ‏ ‏وَإِبْرَاهِيمَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ ‏ ‏أَجْمَعِينَ وَلَمْ يُثْبِتْ كَيْفَ مَنَازِلُهُمْ غَيْرَ أَنَّهُ ذَكَرَ أَنَّهُ قَدْ وَجَدَ ‏ ‏آدَمَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فِي السَّمَاءِ الدُّنْيَا ‏ ‏وَإِبْرَاهِيمَ ‏ ‏فِي السَّمَاءِ السَّادِسَةِ قَالَ فَلَمَّا مَرَّ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِإِدْرِيسَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ ‏ ‏قَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالْأَخِ الصَّالِحِ قَالَ ثُمَّ مَرَّ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ هَذَا ‏ ‏إِدْرِيسُ ‏ ‏قَالَ ثُمَّ مَرَرْتُ ‏ ‏بِمُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالْأَخِ الصَّالِحِ قَالَ قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا ‏ ‏مُوسَى ‏ ‏قَالَ ثُمَّ مَرَرْتُ ‏ ‏بِعِيسَى ‏ ‏فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالْأَخِ الصَّالِحِ قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا ‏ ‏عِيسَى ابْنُ مَرْيَمَ ‏ ‏قَالَ ثُمَّ مَرَرْتُ ‏ ‏بِإِبْرَاهِيمَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ ‏ ‏وَالِابْنِ الصَّالِحِ قَالَ قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا ‏ ‏إِبْرَاهِيمُ ‏


قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏ابْنُ حَزْمٍ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏وَأَبَا حَبَّةَ الْأَنْصَارِيَّ ‏ ‏كَانَا يَقُولَانِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ عَرَجَ بِي حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوًى أَسْمَعُ فِيهِ صَرِيفَ الْأَقْلَامِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ حَزْمٍ ‏ ‏وَأَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَفَرَضَ اللَّهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلَاةً قَالَ فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى أَمُرَّ ‏ ‏بِمُوسَى ‏ ‏فَقَالَ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏مَاذَا فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ قَالَ قُلْتُ فَرَضَ عَلَيْهِمْ خَمْسِينَ صَلَاةً قَالَ لِي ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَرَاجِعْ رَبَّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ قَالَ فَرَاجَعْتُ رَبِّي فَوَضَعَ ‏ ‏شَطْرَهَا ‏ ‏قَالَ فَرَجَعْتُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَأَخْبَرْتُهُ قَالَ رَاجِعْ رَبَّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ قَالَ فَرَاجَعْتُ رَبِّي فَقَالَ هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ لَا ‏ ‏يُبَدَّلُ ‏ ‏الْقَوْلُ لَدَيَّ قَالَ فَرَجَعْتُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏فَقَالَ رَاجِعْ رَبَّكَ فَقُلْتُ قَدْ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي قَالَ ثُمَّ انْطَلَقَ بِي ‏ ‏جِبْرِيلُ ‏ ‏حَتَّى نَأْتِيَ سِدْرَةَ الْمُنْتَهَى فَغَشِيَهَا أَلْوَانٌ لَا أَدْرِي مَا هِيَ قَالَ ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ فَإِذَا فِيهَا ‏ ‏جَنَابِذُ ‏ ‏اللُّؤْلُؤَ وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் :

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (வானவர்) ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்தார். என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ’ஸம்ஸம்’ நீரால் கழுவினார். பிறகு ஞானமும் இறைநம்பிக்கையும் நிரம்பிய, பொன்னாலான தாம்பாளத்தோடு என்னிடம் வந்து, அதிலிருந்து என் நெஞ்சினுள் ஊற்றி மூடினார்.

பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டு விண்ணில் ஏறினார். பூமியின் (முதல்) வானத்திற்கு நாங்கள் வந்தபோது முதல் வானக் காவலரிடம், “திறப்பீராக!” என்று ஜிப்ரீல் கூறினார். “யார்?” எனக் காவலர் கேட்டார். அவர் “(நான்)ஜிப்ரீல்” என்று ஜிப்ரீல் பதிலளித்தார். “உம்முடன் யாரேனும் வந்திருக்கிறார்களா?” என்று காவலர் கேட்டார். “என்னுடன் முஹம்மது வந்திருக்கின்றார்” என்று ஜிப்ரீல் பதிலளித்தார். “அவருக்கு ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று காவலர் கேட்க, ஜிப்ரீல் “ஆம்” என்று பதிலளித்தார். முதல் வானக் காவலர் திறந்தார். நாங்கள் முதல் வானத்துக்குள் உயர்ந்து சென்றபோது அங்கு தமக்கு வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் மக்கள் (பிரிந்து) புடைசூழ்ந்திருக்க ஒருவர் இருந்தார். அவர் தமது வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (என்னைப் பார்த்ததும் அவர்,) “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குண மகனுக்கு நல்வரவு!” என்று என்னை வரவேற்றார். “இவர் யார் ஜிப்ரீலே?” என்று ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டேன். “இவர்தாம் (ஆதிமனிதர்) ஆதம். இவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள், அன்னாரின் வழித்தோன்றல்கள். வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள்; இடப்பக்கமிருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர் வலப்பக்கம் பார்க்கும்போது சிரிக்கின்றார். இடப்பக்கம் பார்க்கும்போது அழுகின்றார்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்.

பிறகு ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு இரண்டாம் வானம் வரும்வரை உயர்ந்தேறினார். இரண்டாம் வானம் வந்ததும் அதன் காவலரிடம் “திறப்பீராக!” என்று கூறினார். அதன் காவலரும் முதலாம் வானத்தின் காவலர் கேட்டதைப் போன்றே கேட்ட பின்னர் திறந்தார்.

oOo

இவ்வாறாக அபூதர் (ரலி) அறிவித்ததாக அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகின்றார். தொடர்ந்து,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆதம் (அலை) அவர்களை முதல் வானத்திலும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்திலும் கண்டதாக அபூதர் (ரலி) அறிவித்தார்களேயன்றி, ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), ஈஸா (அலை), மூஸா (அலை) மற்றும் இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்ட(க் கூடுதல்) விபரங்களை நிறுவவில்லை.

ஜிப்ரீல் (அலை) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இத்ரீஸ் (அலை) அவர்களைச் சென்றடைந்தபோது, “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குணச் சகோதரருக்கு நல்வரவு!” என்று இத்ரீஸ் (அலை) வரவேற்றார்கள். பிறகு (அவரைக்) கடக்கும்போது “இவர் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, “இவர்தாம் இத்ரீஸ்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார் என்பதை அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.

oOo

நபி (ஸல்) கூறினார்கள் :

பின்னர் நான் மூஸா (அலை) அவர்களைச் சென்றடைந்தபோது அவர்களும், “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குணச் சகோதரருக்கு நல்வரவு!” என்று வரவேற்றார்கள். “இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். “இவர்தாம் மூஸா” என்று ஜிப்ரீல் பதிலளித்தார். பிறகு நான் ஈஸா (அலை) அவர்களைச் சென்றடைந்தபோது அவர்களும், “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குணச் சகோதரருக்கு நல்வரவு!” என்று வரவேற்றார்கள். “இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை), “இவர்தாம் மர்யமின் மகன் ஈஸா” என்று பதிலளித்தார். பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைச் சென்றடைந்தபோது அவர்கள், “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குண மகனுக்கு நல்வரவு!” என்று என்னை வரவேற்றார். “இவர் யார்?” என்று கேட்டேன். “இவர்தாம் இப்ராஹீம்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்.

oOo

இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல்-அன்சாரி (ரலி) ஆகிய இருவர் வழியாகச் செவியுற்று, இப்னு ஹஸ்மு (ரஹ்) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்களுக்குக் கூறியதாவது :

“… பிறகு ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தேறினார். ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்த போது எழுதுகோல்கள் கீறுகின்ற ஓசையைப்போல் செவியுற்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.

அனஸ் பின் மாலிக்(ரலி), இப்னு ஹஸ்மு (ரஹ்) ஆகியோர் அறிவிப்பதாவது :

“…என் சமுதாயத்தார் மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக் கோண்டு நான் திரும்பி, மூஸா (அலை) அவர்களைக் கடந்தபோது மூஸா (அலை), “உங்கள் சமுதாயத்தார் மீது உங்கள் இறைவன் கடமையாக்கியது என்ன?” என்று கேட்டார்கள். நான், “அவர்கள் மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்” என்று பதிலளித்தேன். “அவ்வாறாயின் (எண்ணிக்கையைக் குறைக்க வேண்டி) உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்! ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அவற்றைத் தாங்க முடியாது” என்று கூறினார்கள். நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்து (குறைப்பைத்) தெரிவித்தபோது (மீண்டும்) அவர்கள், “(இன்னும் குறைக்க வேண்டி) உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், இதையும் உங்கள் சமுதாயத்தார் தாங்கமாட்டார்கள்” என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றபோது, “(முடிவான) இவை ஐவேளைத் தொழுகைகளும் (நன்மைகளில்) ஐம்பது(வேளைத் தொழுகைகளு)க்கு ஈடுமாகும். இந்தச் சொல் என்னால் மாற்றப்படாது” என்று கூறிவிட்டான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அவர்கள், “(இன்னும் குறைக்க வேண்டி) உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்!” என்றார்கள். “என் இறைவனிடம் (இன்னும் குறைத்துக் கேட்க) வெட்கப்படுகின்றேன்” என்று சொல்லிவிட்டேன்.

அதன் பின்னர், (வானின் உயரெல்லையில் உள்ள) ‘ஸித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்கு என்னை ஜிப்ரீல் அழைத்துச் சென்றார். அதை, இன்னவைதாம் என்று எனக்கு(ச் சொல்ல)த் தெரியாத பல வண்ணங்களைப் போர்த்திக் கொண்டிருந்தன. பிறகு நான் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டேன். அங்கு முத்தாலான கோபுரங்கள் இருந்தன. சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 236

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ الْبُنَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَاهُ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ ‏ ‏فَصَرَعَهُ ‏ ‏فَشَقَّ عَنْ قَلْبِهِ فَاسْتَخْرَجَ الْقَلْبَ فَاسْتَخْرَجَ مِنْهُ ‏ ‏عَلَقَةً ‏ ‏فَقَالَ هَذَا حَظُّ الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏ثُمَّ ‏ ‏لَأَمَهُ ‏ ‏ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ ‏ ‏يَعْنِي ‏ ‏ظِئْرَهُ ‏ ‏فَقَالُوا إِنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏قَدْ قُتِلَ فَاسْتَقْبَلُوهُ وَهُوَ ‏ ‏مُنْتَقِعُ ‏ ‏اللَّوْنِ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏وَقَدْ كُنْتُ أَرْئِي أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ ‏


‏حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ وَهُوَ ابْنُ بِلَالٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يُحَدِّثُنَا عَنْ لَيْلَةَ أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏مَسْجِدِ الْكَعْبَةِ ‏ ‏أَنَّهُ جَاءَهُ ثَلَاثَةُ نَفَرٍ ‏ ‏قَبْلَ أَنْ ‏ ‏يُوحَى إِلَيْهِ ‏ ‏وَهُوَ نَائِمٌ فِي ‏ ‏الْمَسْجِدِ الْحَرَامِ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ نَحْوَ حَدِيثِ ‏ ‏ثَابِتٍ الْبُنَانِيِّ ‏ ‏وَقَدَّمَ فِيهِ شَيْئًا وَأَخَّرَ وَزَادَ وَنَقَصَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) வந்து நபியவர்களைப் பிடித்துப் படுக்க வைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இதயத்தை வெளியிலெடுத்து, அதிலிருந்து ஒரு துண்டை(வெட்டி)ப் பிரித்து எடுத்து, “இதுதான் உம்மிடமிருந்த ஷைத்தானுக்குரிய பங்கு” என்று கூறினார். பிறகு அதை ஒரு பொன்னாலான தாம்பாளத்தில் வைத்து ஸம்ஸம் நீரால் கழுவினார். பின்னர் முன்பு இருந்த இடத்தில் பொருத்தினார். (நபியவர்களுடன் விளையாடிய) சிறுவர்கள், நபியவர்களின் செவிலித்தாயிடம் ஓடிச் சென்று, “முஹம்மது கொல்லப்பட்டுவிட்டார்” என்று கூறினர். செவிலித்தாய் நபியவர்களிடம் வந்தபோது (அச்சத்தால்) அவர்கள் நிறம் மாறிக் காணப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

“நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்ட அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்” என்று ஹதீஸின் இறுதியில் அனஸ் (ரலி) குறிப்பிடுகின்றார்.

ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களுக்கு (தடைப்பட்ட பின்னர் மீண்டும்) வஹீ வருவதற்குமுன் இறையில்லம் கஅபா அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் (வானவர்) மூவர் வந்தனர் …” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது விண்ணேற்றப் பயணம் குறித்து அனஸ் (ரலி) இடமிருந்து செவியுற்றதாகக் குறிப்பிடப்படும் செய்தி, சற்றுக் கூடுதல்-குறைவுடன் காணப்படுகின்றது.

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 235

حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزُ بْنُ أَسَدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُتِيتُ فَانْطَلَقُوا بِي إِلَى ‏ ‏زَمْزَمَ ‏ ‏فَشُرِحَ ‏ ‏عَنْ صَدْرِي ثُمَّ غُسِلَ بِمَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏ثُمَّ أُنْزِلْتُ ‏

“என்னை அ(ந்த வான)வர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குக் கொண்டு சென்றார்கள். என் நெஞ்சு பிளக்கப்பட்டு, (எனது இதயம்) ஸம்ஸம் நீரால் கழுவப்பட்டது. பிறகு திரும்பக் கொண்டு வந்து விடப்பட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 234

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ الْبُنَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ :‏ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُتِيتُ بِالْبُرَاقِ وَهُوَ دَابَّةٌ أَبْيَضُ طَوِيلٌ فَوْقَ الْحِمَارِ وَدُونَ الْبَغْلِ يَضَعُ حَافِرَهُ عِنْدَ مُنْتَهَى طَرْفِهِ قَالَ فَرَكِبْتُهُ حَتَّى أَتَيْتُ ‏ ‏بَيْتَ الْمَقْدِسِ ‏ ‏قَالَ فَرَبَطْتُهُ بِالْحَلْقَةِ الَّتِي يَرْبِطُ بِهِ الْأَنْبِيَاءُ قَالَ ثُمَّ دَخَلْتُ الْمَسْجِدَ فَصَلَّيْتُ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ خَرَجْتُ فَجَاءَنِي ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏بِإِنَاءٍ مِنْ خَمْرٍ وَإِنَاءٍ مِنْ لَبَنٍ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اخْتَرْتَ الْفِطْرَةَ ثُمَّ ‏ ‏عَرَجَ ‏ ‏بِنَا إِلَى السَّمَاءِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا ‏ ‏بِآدَمَ ‏ ‏فَرَحَّبَ بِي وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِابْنَيْ الْخَالَةِ ‏ ‏عِيسَى ابْنِ مَرْيَمَ ‏ ‏وَيَحْيَى بْنِ زَكَرِيَّاءَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمَا فَرَحَّبَا وَدَعَوَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّالِثَةِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا ‏ ‏بِيُوسُفَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا هُوَ قَدْ أُعْطِيَ ‏ ‏شَطْرَ ‏ ‏الْحُسْنِ فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الرَّابِعَةِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏قِيلَ مَنْ هَذَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏قَالَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا ‏ ‏بِإِدْرِيسَ ‏ ‏فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏[‏وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا] ‏

‏ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الْخَامِسَةِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ مَنْ هَذَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا ‏ ‏بِهَارُونَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ السَّادِسَةِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏قِيلَ مَنْ هَذَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا ‏ ‏بِمُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏فَقِيلَ مَنْ هَذَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا ‏ ‏بِإِبْرَاهِيمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُسْنِدًا ظَهْرَهُ إِلَى ‏ ‏الْبَيْتِ الْمَعْمُورِ ‏ ‏وَإِذَا هُوَ يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَا يَعُودُونَ إِلَيْهِ ثُمَّ ذَهَبَ بِي إِلَى السِّدْرَةِ الْمُنْتَهَى وَإِذَا وَرَقُهَا كَآذَانِ الْفِيَلَةِ وَإِذَا ثَمَرُهَا كَالْقِلَالِ قَالَ فَلَمَّا ‏ ‏غَشِيَهَا ‏ ‏مِنْ أَمْرِ اللَّهِ مَا غَشِيَ تَغَيَّرَتْ فَمَا أَحَدٌ مِنْ خَلْقِ اللَّهِ يَسْتَطِيعُ أَنْ ‏ ‏يَنْعَتَهَا ‏ ‏مِنْ حُسْنِهَا فَأَوْحَى اللَّهُ إِلَيَّ مَا أَوْحَى فَفَرَضَ عَلَيَّ خَمْسِينَ صَلَاةً فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَنَزَلْتُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَا فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ خَمْسِينَ صَلَاةً قَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ فَإِنَّ أُمَّتَكَ لَا يُطِيقُونَ ذَلِكَ فَإِنِّي قَدْ ‏ ‏بَلَوْتُ ‏ ‏بَنِي إِسْرَائِيلَ ‏ ‏وَخَبَرْتُهُمْ قَالَ فَرَجَعْتُ إِلَى رَبِّي فَقُلْتُ يَا رَبِّ خَفِّفْ عَلَى أُمَّتِي فَحَطَّ عَنِّي خَمْسًا فَرَجَعْتُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏فَقُلْتُ حَطَّ عَنِّي خَمْسًا قَالَ إِنَّ أُمَّتَكَ لَا يُطِيقُونَ ذَلِكَ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ قَالَ فَلَمْ أَزَلْ أَرْجِعُ بَيْنَ رَبِّي تَبَارَكَ وَتَعَالَى وَبَيْنَ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏حَتَّى قَالَ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏إِنَّهُنَّ خَمْسُ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ لِكُلِّ صَلَاةٍ عَشْرٌ فَذَلِكَ خَمْسُونَ صَلَاةً وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ لَهُ عَشْرًا وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا لَمْ تُكْتَبْ شَيْئًا فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ سَيِّئَةً وَاحِدَةً قَالَ فَنَزَلْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرْتُهُ فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ قَدْ رَجَعْتُ إِلَى رَبِّي حَتَّى اسْتَحْيَيْتُ مِنْهُ

நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், ‘புராக்’ எனும் உயரமான ஒரு (மின்னல் வேக) வாகனம் (எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்துவிட்டு, அந்த இறையாலத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத் தேர்ந்தெடுத்தபோது, “இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்” என்று ஜிப்ரீல் கூறினார்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு முதல் வானத்திற்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப் பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப் பட்டார்” என்றார். எங்களுக்காக (முதல் வானம்) திறக்கப்பட்டது. நான் அங்கு (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னை வாழ்த்தி வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு இரண்டாம் வானத்துக்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மது” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப்பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப்பட்டார்” என்றார். எங்களுக்காக (இரண்டாம் வானம்) திறக்கப்பட்டது. அங்கு, பெரியன்னை-சிற்றன்னையின் மகன்களான ஈஸா பின் மர்யம் (அலை), யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) ஆகிய இரு சகோதரர்களைக் கண்டேன். அவர்கள் இருவரும் என்னை வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தனர்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மூன்றாம் வானத்துக்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மது” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப்பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப்பட்டார்” என்றார். எங்களுக்காக (மூன்றாம் வானம்) திறக்கப்பட்டது. அங்கு, பேரழகு வழங்கப்பட்ட யூஸுஃப் (அலை) அவர்களைக் கண்டேன். அன்னாரும் என்னை வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு நான்காம் வானத்துக்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மது” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப்பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப்பட்டார்” என்றார். எங்களுக்காக (நான்காம் வானம்) திறக்கப்பட்டது. அங்கு, “மேலும், நாம் அவரை உயர்வான ஓர் இடதுக்கு உயர்த்தினோம்” (19:57) என்று அல்லாஹ் (சிறப்பித்துக்) கூறுகின்ற இத்ரீஸ் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு ஐந்தாம் வானத்துக்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மது” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப்பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப்பட்டார்” என்றார். எங்களுக்காக (ஐந்தாம் வானம்) திறக்கப்பட்டது. அங்கு நான் ஹாரூன் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னை வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு ஆறாம் வானத்துக்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மது” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப்பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப்பட்டார்” என்றார். எங்களுக்காக (ஆறாம் வானம்) திறக்கப்பட்டது. அங்கு நான் மூஸா (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு ஏழாம் வானத்துக்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மது” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப்பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப்பட்டார்” என்றார். எங்களுக்காக (ஏழாம் வானம்) திறக்கப்பட்டது. அங்கு நான் இப்ராஹீம் (அலை) அவர்களை, அல்-பைத்துல் மஅமூர் எனும் (சிறப்புமிகு) இல்லத்தில் தமது முதுகைச் சாய்த்து அமர்ந்திருக்கக் கண்டேன். (இறைவனை வணங்க) அந்த இல்லத்தினுள் ஒவ்வொரு நாளும் (வந்து) நுழையும் எழுபதாயிரம் வானவர்களுள் ஒருமுறை வருபவர் மறுமுறை வரார்.

அதன் பின்னர், (வானின் உயரெல்லையில் உள்ள) ‘ஸித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்கு என்னை ஜிப்ரீல் அழைத்துச் சென்றார். அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் அதன் பழங்கள் கூஜாக்களைப் போன்றும் தோன்றின. அல்லாஹ்வின் கட்டளையால் விவரிக்க முடியாத வண்ணங்கள் அதைச் சூழ்ந்து கொண்டபோது அது (வினோதமாக) மாறிப் போனது. அல்லாஹ்வின் படைப்புகளில் எவராலும் அதன் அழகை விவரித்துக் கூற முடியாது. அப்போது அறிவிக்க வேண்டியவற்றை அல்லாஹ் எனக்கு அறிவித்தான். (ஒரு நாளின்) இரவிலும் பகலிலும் என்மீது ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான்.

பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் இறங்கி வந்தேன். அப்போது அவர்கள், “உங்கள் சமுதாயத்தாருக்கு உம்முடைய இறைவன் என்ன கடமையாக்கினான்?” என்று கேட்டார்கள். “ஐம்பது (வேளைத்) தொழுகைகளை” என்று நான் பதிலளித்தேன். “உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று (எண்ணிக்கையைக் குறைத்து) இலேசாக்கும்படி வேண்டுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் இதைத் தாங்கமாட்டார்கள். நான் இஸ்ராயீல் மக்களிடம் பழகி அனுபவப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள். நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று, “என் இறைவா! என் சமுதாயத்தாருக்கு (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்து) இலேசாக்குவாயாக!” என்று கேட்டேன். இறைவன் (ஐம்பதிலிருந்து) ஐந்தைக் குறைத்தான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்து, “(ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “உங்கள் சமுதாயத்தார் இதையும் தாங்க மாட்டார்கள். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் (குறைத்து) இலேசாக்கும்படிக் கேளுங்கள்” என்றார்கள். அவ்வாறே நான், நற்பேறுகளுக்கு உரியவனும் மிக்குயர்ந்தோனுமாகிய என் இறைவனுக்கும் மூஸா (அலை) அவர்களுக்குமிடையே போய்-வந்து கொண்டிருந்தேன்.

இறுதியாக, “முஹம்மதே! (ஒரு நாளின்) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள் (உம் சமுதாயத்தார் மீது கடமை) ஆகும். ஒவ்வொரு தொழுகைக்கும் பத்து (நன்மைகள்) உள்ளன. இவை ஐம்பது வேளைத் தொழுகை(களின் நன்மை)களுக்குச் சமமானவை. ஒருவர், ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே, அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காக ஒரு நன்மை பதிவு செய்யப்படும். அதை அவர் செய்து முடித்துவிட்டால், அவருக்காகப் பத்து நன்மைகள் பதிவு செய்யப்படும். ஒருவர் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டால் (குற்றம்) எதுவும் பதியப்படுவதில்லை. (எண்ணியபடி) அதை அவர் செய்து முடித்துவிட்டால் ஒரு குற்றமாகவே அது பதிவு செய்யப்படும்” என்று அல்லாஹ் கூறினான்.

பின்னர் நான் அங்கிருந்து மூஸா(அலை) அவர்களிடம் வந்து, நடந்ததைத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் (குறைத்து) இலேசாக்கும்படிக் கேளுங்கள்” என்று கூறினார்கள். “நான் வெட்கப்படும் அளவுக்கு என் இறைவனிடம் போய் வந்துவிட்டேன் என்று மூஸா (அலை) அவர்களிடம் சொல்லிவிட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 73, ஹதீஸ் எண்: 233

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى ‏ ‏يَقُولُ :‏

سَأَلْتُ ‏ ‏أَبَا سَلَمَةَ ‏‏أَيُّ الْقُرْآنِ أُنْزِلَ قَبْلُ قَالَ ‏[‏يَا أَيُّهَا الْمُدَّثِّرُ] ‏

‏فَقُلْتُ أَوْ اقْرَأْ فَقَالَ سَأَلْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏أَيُّ الْقُرْآنِ أُنْزِلَ قَبْلُ قَالَ [‏يَا أَيُّهَا الْمُدَّثِّرُ ‏

‏فَقُلْتُ أَوْ اقْرَأْ قَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏أُحَدِّثُكُمْ مَا حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏جَاوَرْتُ ‏ ‏بِحِرَاءٍ ‏ ‏شَهْرًا فَلَمَّا قَضَيْتُ ‏ ‏جِوَارِي ‏ ‏نَزَلْتُ ‏ ‏فَاسْتَبْطَنْتُ ‏ ‏بَطْنَ الْوَادِي فَنُودِيتُ فَنَظَرْتُ أَمَامِي وَخَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي فَلَمْ أَرَ أَحَدًا ثُمَّ نُودِيتُ فَنَظَرْتُ فَلَمْ أَرَ أَحَدًا ثُمَّ نُودِيتُ فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا هُوَ عَلَى الْعَرْشِ فِي الْهَوَاءِ ‏ ‏يَعْنِي ‏ ‏جِبْرِيلَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَأَخَذَتْنِي رَجْفَةٌ شَدِيدَةٌ فَأَتَيْتُ ‏ ‏خَدِيجَةَ ‏ ‏فَقُلْتُ ‏ ‏دَثِّرُونِي ‏ ‏فَدَثَّرُونِي فَصَبُّوا عَلَيَّ مَاءً فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏[‏يَا أَيُّهَا الْمُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْ] ‏


‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ عُمَرَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَلِيُّ بْنُ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏فَإِذَا هُوَ جَالِسٌ عَلَى عَرْشٍ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ

நான் (யஹ்யா பின் அபீகஸீர்), அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம், “முன்னதாக அருளப்பட்ட குர்ஆன் வசனம் எது?” என்று கேட்டேன். அதற்கு, “போர்த்திக் கொண்டிருப்பவரே! எனும் (74:1ஆவது) வசனம்” என்றார்கள். நான், “ஓதுவீராக! (என்று தொடங்கும் 96:1ஆவது) வசனம் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அபூஸலமா (ரஹ்) பதில் கூறும்போது, “நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், எந்த வசனம் முன்னதாக அருளப்பட்டது? என்று (இதே கேள்வியைக்) கேட்டபோது அதற்கு அவர்கள், போர்த்திக் கொண்டிருப்பவரே! எனும் (74:1ஆவது) வசனம் என்றே பதிலளித்தார்கள். (நீங்கள் என்னிடம் வினவியது போலவே) ஓதுவீராக! எனும் (96:1ஆவது) வசனம் இல்லையா?” என்று (மீண்டும்) வினவினேன். அதற்கு ஜாபிர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குச் சொன்னதையே உங்களுக்கு நான் சொல்கின்றேன்:

நான் ஹிரா மலைக்குகையில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக் கொண்டு (மலையிலிருந்து) இறங்கி, அங்கிருந்த ‘பத்னுல் வாதீ’ பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்தேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு, என் முன்னும் பின்னும் வலமும் இடமும் பார்வையைச் செலுத்தி(த்தேடி)ப் பார்த்தேன். அங்கு யாரையும் நான் காணவில்லை. பிறகு (மீண்டும்) அழைக்கப்பட்டு, பார்வையைச் செலுத்தினேன். யாரையும் நான் காணவில்லை. பிறகு (மூன்றாவது முறையாக) அழைக்கப்பட்டபோது தலை நிமிர்ந்து பார்த்தேன். அப்போது அவர் (வானவர் ஜிப்ரீல்) ஆகாயவெளியில் ஓர் ஆசனத்தில் (அமர்ந்து) இருந்தார். அப்போது நான் கடுமையாக நடுக்கமுற்றேன். உடனே நான் (என் மனைவி) கதீஜாவிடம் வந்து, என்னைப் போர்த்துங்கள் என்று கூறினேன். அவ்வாறே எனக்குப் போர்த்திவிட்டார். என் மீது நீரை ஊற்றினார்கள். அப்போது மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ், போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுவீராக! (எழுந்து) எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப் படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! எனும் (74:1-4) வசனங்களை அருளினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்”.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு:

முதன் முதலில் வஹீயாக இறங்கியவை, “படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக! …” எனத்தொடங்கி, “… மனிதன் அறியாத அனைத்தையும் கற்பித்தான்” என்று முடியும் 96:1-5 வசனங்கள் ஆகும். அதற்குப் பிறகு வஹீ வருவது சிறிது காலம் நின்று போயிருந்தது. வஹீ நின்றுபோன பிறகு தொடக்கமாக அருளப்பட்டவை, “போர்த்திக் கொண்டிருப்பவரே!…” என்று தொடங்கி “… அசுத்தங்களிலிருந்து விலகியிருப்பீராக!” எனும் (74:1-5) வசனங்களாகும்.

இதே ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) பற்றி யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) வழியாக அலீ பின் அல்-முபாரக் (ரஹ்) அறிவிக்கும்போது, “வானவர் ஜிப்ரீல் வானுக்கும் பூமிக்கும் இடையில் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 73, ஹதீஸ் எண்: 232

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيَّ ‏ ‏وَكَانَ مِنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يُحَدِّثُ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ يُحَدِّثُ عَنْ ‏ ‏فَتْرَةِ ‏ ‏الْوَحْيِ قَالَ فِي حَدِيثِهِ ‏ ‏فَبَيْنَا أَنَا أَمْشِي سَمِعْتُ صَوْتًا مِنْ السَّمَاءِ فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا ‏ ‏الْمَلَكُ ‏ ‏الَّذِي جَاءَنِي ‏ ‏بِحِرَاءٍ ‏ ‏جَالِسًا عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَجُئِثْتُ ‏ ‏مِنْهُ ‏ ‏فَرَقًا ‏ ‏فَرَجَعْتُ فَقُلْتُ ‏ ‏زَمِّلُونِي ‏ ‏زَمِّلُونِي ‏ ‏فَدَثَّرُونِي ‏ ‏فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى [‏يَا أَيُّهَا ‏ ‏الْمُدَّثِّرُ ‏ ‏قُمْ فَأَنْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْ وَالرُّجْزَ فَاهْجُرْ] ‏

‏وَهِيَ الْأَوْثَانُ قَالَ ثُمَّ تَتَابَعَ الْوَحْيُ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏ثُمَّ ‏ ‏فَتَرَ ‏ ‏الْوَحْيُ عَنِّي ‏ ‏فَتْرَةً ‏ ‏فَبَيْنَا أَنَا أَمْشِي ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏فَجُئِثْتُ ‏ ‏مِنْهُ فَرَقًا حَتَّى هَوَيْتُ إِلَى الْأَرْضِ ‏ ‏قَالَ ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏وَالرُّجْزُ الْأَوْثَانُ قَالَ ثُمَّ حَمِيَ الْوَحْيُ بَعْدُ وَتَتَابَعَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏وَقَالَ فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى ‏[‏يَا أَيُّهَا الْمُدَّثِّرُ ‏ ‏إِلَى قَوْلِهِ ‏ ‏وَالرُّجْزَ فَاهْجُرْ] ‏

‏قَبْلَ أَنْ تُفْرَضَ الصَّلَاةُ وَهِيَ الْأَوْثَانُ وَقَالَ فَجُئِثْتُ مِنْهُ كَمَا قَالَ ‏ ‏عُقَيْلٌ

“நான் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது வானிலிருந்து வந்த ஒரு குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்தேன். (குகை) ஹிராவில் என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததில் அஞ்சி அதிர்ந்து போனேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி வந்து (என் மனைவியிடம்), “என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்” என்று சொன்னேன். அவர்களும் போர்த்தி விட்டார்கள். அப்போது, “போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுவீராக! (எழுந்து) எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப் படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தங்களிலிருந்து விலகியிருப்பீராக” எனும் (74:1-5) வசனங்களை, நற்பேறுகளுக்கு உரியவனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் அருளினான். பின்னர் வஹீ தொடர்ந்து வரலாயிற்று” என்று தமக்கு வஹீ தடைப்பட்ட (இடைவெளி) காலகட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

மேற்கண்ட (74:5ஆவது) வசனத்திலுள்ள ‘அர்ருஜ்ஸு’ (அசுத்தம்) என்பது, வணங்கப்படும் சிலைகளைக் குறிப்பதாகும்.

அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) வழி அறிவிப்பில், “… பின்னர் சிறிது காலம் எனக்கு வஹீ நின்று போயிருந்தது. (ஒருநாள்) நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன் …” என்பதைத் தொடர்ந்து “அவரைப் பார்த்ததில் அஞ்சி அதிர்ந்து போய்த் தரையில் விழுந்து விட்டேன் …” என்றும் “பின்னர் வேத அறிவிப்புத் தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று” என்றும் நபி (ஸல்) கூறியதாக ஜாபிர் (ரலி) அறிவித்தார் என்று இடம் பெற்றுள்ளது. அதிலும் “அர்ருஜ்ஸு என்பது வணங்கப்படும் சிலைகளைக் குறிக்கும்” என்ற விளக்கம் இடம் பெறுகிறது.

மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “போர்த்திக் கொண்டிருப்பவரே! … என்பதில் தொடங்கி, … அசுத்தங்களிலிருந்து விலகியிருப்பீராக எனும் (74:1-5) வசனங்கள் முடிய நற்பேறுகளுக்கு உரியவனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் அருளினான். அவை, முறையான தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளப்பட்ட வசனங்களாகும்” என்று இடம் பெற்றுள்ளது. அதிலும் ‘வணங்கப்படும் சிலைகள்’ பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 73, ஹதீஸ் எண்: 231

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ سَرْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرَتْهُ ‏‏أَنَّهَا قَالَتْ :‏

كَانَ ‏ ‏أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الْوَحْيِ الرُّؤْيَا الصَّادِقَةَ فِي النَّوْمِ فَكَانَ لَا يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ ثُمَّ حُبِّبَ إِلَيْهِ الْخَلَاءُ فَكَانَ يَخْلُو ‏ ‏بِغَارِ حِرَاءٍ ‏ ‏يَتَحَنَّثُ فِيهِ ‏ ‏وَهُوَ التَّعَبُّدُ ‏ ‏اللَّيَالِيَ أُوْلَاتِ الْعَدَدِ ‏ ‏قَبْلَ أَنْ يَرْجِعَ إِلَى أَهْلِهِ وَيَتَزَوَّدُ لِذَلِكَ ثُمَّ يَرْجِعُ إِلَى ‏ ‏خَدِيجَةَ ‏ ‏فَيَتَزَوَّدُ لِمِثْلِهَا حَتَّى فَجِئَهُ الْحَقُّ وَهُوَ فِي ‏ ‏غَارِ حِرَاءٍ ‏ ‏فَجَاءَهُ الْمَلَكُ فَقَالَ اقْرَأْ قَالَ مَا أَنَا بِقَارِئٍ قَالَ فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي ‏ ‏الْجَهْدَ ‏ ‏ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ قَالَ قُلْتُ مَا أَنَا بِقَارِئٍ قَالَ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ أَقْرَأْ فَقُلْتُ مَا أَنَا بِقَارِئٍ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّالِثَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ [‏اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ] ‏

‏فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَرْجُفُ ‏ ‏بَوَادِرُهُ ‏ ‏حَتَّى دَخَلَ عَلَى ‏ ‏خَدِيجَةَ ‏ ‏فَقَالَ زَمِّلُونِي زَمِّلُونِي فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ ثُمَّ قَالَ ‏ ‏لِخَدِيجَةَ ‏ ‏أَيْ ‏ ‏خَدِيجَةُ ‏ ‏مَا لِي وَأَخْبَرَهَا الْخَبَرَ قَالَ لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي قَالَتْ لَهُ ‏ ‏خَدِيجَةُ ‏ ‏كَلَّا أَبْشِرْ فَوَاللَّهِ لَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا وَاللَّهِ إِنَّكَ ‏ ‏لَتَصِلُ ‏ ‏الرَّحِمَ ‏ ‏وَتَصْدُقُ الْحَدِيثَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ فَانْطَلَقَتْ بِهِ ‏ ‏خَدِيجَةُ ‏ ‏حَتَّى أَتَتْ بِهِ ‏ ‏وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ الْعُزَّى ‏ ‏وَهُوَ ابْنُ عَمِّ ‏ ‏خَدِيجَةَ ‏ ‏أَخِي أَبِيهَا وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ يَكْتُبُ الْكِتَابَ الْعَرَبِيَّ وَيَكْتُبُ مِنْ الْإِنْجِيلِ بِالْعَرَبِيَّةِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ فَقَالَتْ لَهُ ‏ ‏خَدِيجَةُ ‏ ‏أَيْ عَمِّ اسْمَعْ مِنْ ابْنِ أَخِيكَ قَالَ ‏ ‏وَرَقَةُ بْنُ نَوْفَلٍ ‏ ‏يَا ‏ ‏ابْنَ أَخِي مَاذَا ‏ ‏تَرَى فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَبَرَ مَا رَآهُ فَقَالَ لَهُ ‏ ‏وَرَقَةُ ‏ ‏هَذَا النَّامُوسُ الَّذِي أُنْزِلَ عَلَى ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا لَيْتَنِي فِيهَا ‏ ‏جَذَعًا ‏ ‏يَا لَيْتَنِي أَكُونُ حَيًّا حِينَ يُخْرِجُكَ قَوْمُكَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوَ مُخْرِجِيَّ هُمْ قَالَ ‏ ‏وَرَقَةُ ‏ ‏نَعَمْ لَمْ يَأْتِ رَجُلٌ قَطُّ بِمَا جِئْتَ بِهِ إِلَّا عُودِيَ وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا ‏


‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏ ‏أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الْوَحْيِ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَوَاللَّهِ لَا يُحْزِنُكَ اللَّهُ أَبَدًا وَقَالَ قَالَتْ ‏ ‏خَدِيجَةُ ‏ ‏أَيْ ابْنَ عَمِّ اسْمَعْ مِنْ ابْنِ أَخِيكَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏سَمِعْتُ ‏ ‏عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ ‏ ‏يَقُولُ قَالَتْ ‏ ‏عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَجَعَ إِلَى ‏ ‏خَدِيجَةَ ‏ ‏يَرْجُفُ فُؤَادُهُ وَاقْتَصَّ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏وَمَعْمَرٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ أَوَّلَ حَدِيثِهِمَا مِنْ قَوْلِهِ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الْوَحْيِ الرُّؤْيَا الصَّادِقَةُ وَتَابَعَ ‏ ‏يُونُسَ ‏ ‏عَلَى قَوْلِهِ فَوَاللَّهِ لَا ‏ ‏يَخْزِيكَ اللَّهُ أَبَدًا وَذَكَرَ قَوْلَ ‏ ‏خَدِيجَةَ ‏ ‏أَيْ ابْنَ عَمِّ اسْمَعْ مِنْ ابْنِ أَخِيكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத வெளிப்பாடுகளின் தொடக்கம், அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்ற (தெளிவான), தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தன. அதற்குப் பின்னர் தனித்திருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. எனவே, அவர்கள் ஹிரா (எனும்) குகையில் தனித்திருந்து எண்ணற்ற இரவுகளில் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். அதற்காகத் தம் இல்லத்தார் (கதீஜா ரலி) இடம் சென்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைப் பெற்றுச் செல்வார்கள். இது, ‘ஹிரா’ குகையில் அவர்களுக்கு சத்திய(வேத)ம் வெளிப்படும்வரைக்கும் நீடித்தது. (ஒருநாள்) வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஓதுவீராக!” என்றார். நபி (ஸல்), “நான் ஓதத்தெரிந்தவனில்லையே!” என்று சொன்னார்கள். (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:

“நான் திணறும் அளவிற்கு வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து இறுகத் தழுவினார். பிறகு என்னை விடுவித்து விட்டு ‘ஓதுவீராக!’ என்றார். “நான் ஓதத் தெரிந்தவனல்லனே!” என்றேன். (மீண்டும்) நான் திணறும் அளவிற்கு என்னைப் பிடித்து இறுகத் தழுவினார். பிறகு என்னை விடுவித்து விட்டு ‘ஓதுவீராக!’ என்றார். அப்போதும் “நான் ஓதத் தெரிந்தவனல்லனே!” என்றேன். மூன்றாவது முறையாக என்னைப் பிடித்து, என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகத் தழுவினார். பின்னர் என்னை விடுவித்துவிட்டு, “படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன்தான் கருவின் நிலையிலிருந்து மனிதனைப் படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் பெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் கற்பித்தான். மனிதன் அறியாத அனைத்தையும் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார்.

பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்), அந்த வசனங்களுடன், (அச்சத்தால்) தம் கழுத்து நரம்புகள் புடைத்து, படபடப்புடன் திரும்பி(த்தம் மனைவி) கதீஜா (ரலி) அவர்களிடம் சென்று, “என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்” என்றார்கள். அவ்வாறே அவர்களுக்குப் போர்த்திவிட, படபடப்பு அவர்களை விட்டு அகன்றது. பின்னர் கதீஜா (ரலி) அவர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்து விட்டு “எனக்கு என்ன ஆயிற்று? எனக்கேதும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன்!” என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா(ரலி), “அமைதியடையுங்கள்; உங்களுக்கு அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணை(யிட்டுச் சொல்கின்றேன்)! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கின்றீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சோதனைக்குள்ளானோருக்கு உதவி செய்கின்றீர்கள்” என்று (பலவாறு ஆறுதல்) சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அஸத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் சென்றார்கள்.

வரக்கா, அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி (மற்றும் எபிரேய) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இஞ்சீல் வேதத்தை அல்லாஹ் நாடிய அளவிற்கு (எபிரேய மொழியிலிருந்து) அரபு மொழியில் (மொழிபெயர்த்து) எழுதுபவராகவும் கண்பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா (ரலி), “என் தந்தையின் சகோதரரே! உங்களுடைய சகோதரரின் மகன் (முஹம்மது) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்” என்றார்கள். அப்போது வரக்கா பின் நவ்ஃபல், “என் சகோதரர் மகனே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தாம் பார்த்தவற்றை அவரிடம் விவரித்தார்கள். (இதைக் கேட்ட) வரக்கா, “(நீர் கண்ட) அவர்தாம் (இறைத்தூதர்) மூஸா (அலை) அவர்களுக்கு அனுப்பப்பட்ட வானவர் (நாமூஸ் என்ற ஜிப்ரீல்) ஆவார்” என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, ” உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும்போது நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே!” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(என் சமூக) மக்கள் என்னை (நாட்டைவிட்டு) வெளியேற்றுவார்களா?” என்று கேட்க, வரக்கா, “ஆம், நீங்கள் பெற்றுள்ள(உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுத்துவப் பணி பரவலாகும் அந்த) நாளை நான் அடைந்தால் உங்களுக்கு உறுதியான உதவி புரிவேன்” என்று கூறினார்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)


குறிப்பு :

மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், அன்னை கதீஜா (ரலி) அவர்களின் கூற்றான “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்” என்பதற்குப் பதிலாக, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் கவலையுறச் செய்ய மாட்டான்” என்றும் “என் தந்தையின் சகோதரரே!” என்று வராக்காவை விளித்தது, (என் தந்தையின் சகோதரின் புதல்வரே!” என்றும் இடம் பெற்றுள்ளது)

உக்கைல் பின் காலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “(அச்சத்தால்) தம் கழுத்து நரம்புகள் புடைத்து, படபடப்புடன் திரும்பி(த்தம் மனைவி) கதீஜா (ரலி) அவர்களிடம் சென்று …” என்பதற்குப் பதிலாக “(அச்சத்தால்) இதயம் படபடக்க (தம் மனைவி) கதீஜாவிடம் திரும்பிச் சென்று …” என்று மட்டும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் தொடக்கமான, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத வெளிப்பாடுகளின் தொடக்கம், அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்ற (தெளிவான), தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தன” என்பது இடம்பெறவில்லை.

யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் கவலையுறச் செய்யமாட்டான்” என்றே அன்னை கதீஜா (ரலி) ஆறுதல் கூறியதாகவும் வராக்காவிடம், “என் தந்தையின் சகோதரரின் புதல்வரே! உங்கள் சகோதரரின் மகனிடம் கேளுங்கள்” என்று வேண்டியதாகவும் இடம் பெற்றுள்ளது.

தம் மகனையொத்தவர்களை, “என் சகோதரரின் மகனே!” என்று விளிப்பதும் குறிப்பதும் அரபியரின் பொது வழக்கமாகும்.

அத்தியாயம்: 1, பாடம்: 72, ஹதீஸ் எண்: 230

حَدَّثَنَا ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ ‏ ‏الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏:‏

‏سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ قَوْلِ اللَّهِ تَعَالَى ‏[وَالشَّمْسُ ‏ ‏تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا]


‏قَالَ ‏ ‏مُسْتَقَرُّهَا تَحْتَ الْعَرْشِ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “சூரியன் தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது” எனும் (36:38ஆவது) வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது நிலைகொள்ளுமிடம் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் அல்-கிஃபாரீ (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 72, ஹதீஸ் எண்: 229

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لَأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ :‏ ‏

‏دَخَلْتُ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَالِسٌ فَلَمَّا غَابَتْ الشَّمْسُ قَالَ يَا ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏هَلْ تَدْرِي أَيْنَ تَذْهَبُ هَذِهِ قَالَ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ ‏ ‏فَإِنَّهَا تَذْهَبُ فَتَسْتَأْذِنُ فِي السُّجُودِ فَيُؤْذَنُ لَهَا وَكَأَنَّهَا قَدْ قِيلَ لَهَا ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا


قَالَ ثُمَّ قَرَأَ فِي قِرَاءَةِ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏وَذَلِكَ مُسْتَقَرٌّ لَهَا

நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அமர்ந்திருந்தார்கள். சூரியன் மறைந்த போது (என்னிடம்), “இந்தச் சூரியன் எங்குச் செல்கிறது என்று உமக்குத் தெரியுமா, அபூதர்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “அது (இறை அரியாசனத்துக்குக் கீழே) சென்று தலைவணங்குவதற்கு அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதனிடம், ‘நீ வந்த இடத்துக்குத் திரும்பிச் செல்’ என்று கூறப்படும். (இறுதியாக ஒரு நாள்) அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் அல்-கிஃபாரீ (ரலி)


குறிப்பு:

இதை அறிவித்து விட்டு, (குர்ஆனில் ‘வஷ்ஷம்ஸு தஜ்ரீ லி முஸ்தகர்ரின் லஹா’ என்று இடம்பெற்றுள்ள 36:38 ஆவது வசனத்தை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களது முறையில், ‘வ தாலிக முஸ்தகர்ருன் லஹா’ (அது நிலைகொள்ளும் இடம் அதுவே) என்று அபூதர் (ரலி) ஓதிக் காட்டினார்கள்.