அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 188

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

جَاءَ نَاسٌ مِنْ ‏ ‏أَصْحَابِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلُوهُ إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ قَالَ ‏ ‏وَقَدْ وَجَدْتُمُوهُ قَالُوا نَعَمْ قَالَ ذَاكَ ‏ ‏صَرِيحُ ‏ ‏الْإِيمَانِ ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو الْجَوَّابِ ‏ ‏عَنْ ‏ ‏عَمَّارِ بْنِ رُزَيْقٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ ‏

நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமான) நினைவுகள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகின்றோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்), “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு, “அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 187

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏الْجَعْدِ أَبِي عُثْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ :‏ ‏‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى قَالَ ‏ ‏إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ وَإِنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ سَيِّئَةً وَاحِدَةً ‏


و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْجَعْدِ أَبِي عُثْمَانَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏عَبْدِ الْوَارِثِ ‏ ‏وَزَادَ وَمَحَاهَا اللَّهُ وَلَا يَهْلِكُ عَلَى اللَّهِ إِلَّا هَالِكٌ ‏

“நன்மைகளையும் தீமைகளையும் அல்லாஹ் (வரையறுத்து) விதி செய்து, பின்னர் அவற்றை விளக்கி விட்டான். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டவருக்கு, அதைச் செய்யாவிட்டாலும் ஒரு முழுமையான நன்மையாக அதை அல்லாஹ் பதிவு செய்கின்றான். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்து, அதைச் செய்தும் முடித்துவிட்டால் அதை அவருக்குப் பத்து முதல் எழுநூறு மடங்காக, இன்னும் பல மடங்குகளாகப் பதிவு செய்கின்றான். ஒரு தீமையைச் செய்ய நினைத்து, (அல்லாஹ்வின் அச்சமேற்பட்டு) அதைச் செய்யாதவருக்கு அதை ஒரு முழு நன்மையாகப் பதிவு செய்கிறான். நினைத்தவாறு அவர் செய்து முடித்தால் ஒரு தீமையாக (மட்டுமே) பதிவு செய்கின்றான்” என்று மிக்குயர்ந்தோனும் வளங்களுக்கு உரியவனுமான தம் இறைவனைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு:

அப்துல் வாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “விரிந்து-பரந்து கிடக்கும் அல்லாஹ்வின் அருளை அள்ளிக் கொள்ளாமல் அலட்சியப் படுத்தியவன் அழிந்து விடுவான்” என்று அவரது கருத்துப் பதிவாகியுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 186

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏ ‏‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَعَمِلَهَا كُتِبَتْ لَهُ عَشْرًا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا لَمْ تُكْتَبْ وَإِنْ عَمِلَهَا كُتِبَتْ ‏

“ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டவருக்கு, அதைச் செய்யாவிட்டாலும் ஒரு நன்மையாக அது பதிவு செய்யப்பட்டுவிடும். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்து, அதைச் செய்தும் முடித்துவிட்டவருக்குப் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாக அது பதிவு செய்யப்படும். ஒரு தீமையைச் செய்ய நினைத்து, அதைச் செய்யாதவருக்கு அ(வரது தீய எண்ணமான)து (தீமையாகப்) பதியப்படுவதில்லை. நினைத்தவாறு அவர் செய்து முடித்தால் (மட்டுமே) பதிவு செய்யப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 185

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ :‏ ‏‏

عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏إِذَا ‏ ‏تَحَدَّثَ ‏ ‏عَبْدِي بِأَنْ يَعْمَلَ حَسَنَةً فَأَنَا أَكْتُبُهَا لَهُ حَسَنَةً مَا لَمْ يَعْمَلْ فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا بِعَشْرِ أَمْثَالِهَا وَإِذَا ‏ ‏تَحَدَّثَ ‏ ‏بِأَنْ يَعْمَلَ سَيِّئَةً فَأَنَا أَغْفِرُهَا لَهُ مَا لَمْ يَعْمَلْهَا فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا لَهُ بِمِثْلِهَا وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ الْمَلَائِكَةُ رَبِّ ذَاكَ عَبْدُكَ يُرِيدُ أَنْ يَعْمَلَ سَيِّئَةً وَهُوَ أَبْصَرُ بِهِ فَقَالَ ارْقُبُوهُ فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً إِنَّمَا تَرَكَهَا مِنْ جَرَّايَ وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَحْسَنَ أَحَدُكُمْ إِسْلَامَهُ فَكُلُّ حَسَنَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَكُلُّ سَيِّئَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ بِمِثْلِهَا حَتَّى يَلْقَى اللَّهَ ‏

“என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய நினைத்தால், அவன் அதைச் செய்து முடிக்காவிட்டாலும் ஒரு நன்மையாகப் பதிவு செய்வேன். அதை அவன் செய்து முடித்துவிட்டால், அதைப் போன்ற பத்து நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய வேண்டும் என நினைத்து, அதைச் செய்யாவிட்டால் அவனை மன்னித்து விடுவேன். அவன் (செய்ய நினைத்த) அந்தத் தீமையைச் செய்துவிட்டால் செய்ததற்கொப்ப ஒரு தீமையாகப் பதிவு செய்வேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கூறினான்”.

“தன் (ஒவ்வொரு) அடியானை(யும்) பார்த்து (அவனது எண்ணவோட்டங்களை) அல்லாஹ் அறிந்து கொண்டிருக்கும் நிலையில், ‘இறைவா! உன்னுடைய இன்ன அடியான் ஒரு தீமையைச் செய்ய விரும்புகிறானே?’ என்று வானவர்கள் கேட்டதற்கு, ‘அவனைக் கண்காணித்து வாருங்கள்! அந்தத் தீமையை அவன் செய்து முடித்து விட்டால் செய்ததற்கொப்ப ஒரு தீமையாக அதைப் பதிவு செய்யுங்கள். அந்தத் தீமையைச் செய்வதை அவன் கைவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். ஏனெனில், என்(மீதிருந்த அச்சத்தி)னால் தான் அதை அவன் கைவிட்டான்’ என்று அல்லாஹ் கூறினான்”.

“உங்களுள் இஸ்லாத்தைத் தம் செயல்பாடுகளால் அழகுபடுத்தும் ஒருவருக்கு, அவர் (மரணித்து) அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் அதைப் போன்று பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை (நன்மை) பதிவு செய்யப்படுகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அதற்கொப்ப ஒரு தீமையே பதிவு செய்யப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)


குறிப்பு:

“இது, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்தப் பல ஹதீஸ்களுள் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முநப்பிஹ் (ரஹ்) கூறும் குறிப்பொன்று இதில் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 184

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏ ‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏إِذَا هَمَّ عَبْدِي بِحَسَنَةٍ وَلَمْ يَعْمَلْهَا كَتَبْتُهَا لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا كَتَبْتُهَا عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَإِذَا هَمَّ بِسَيِّئَةٍ وَلَمْ يَعْمَلْهَا لَمْ أَكْتُبْهَا عَلَيْهِ فَإِنْ عَمِلَهَا كَتَبْتُهَا سَيِّئَةً وَاحِدَةً ‏

“என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். அவன் (எண்ணியவாறு) அந்த நன்மையைச் செயல்படுத்திவிட்டால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மையாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு தீமையாகப் பதிவு செய்வதில்லை. அவன் (எண்ணியவாறு) அந்தத் தீமையை செய்துவிட்டால் அதை ஒரேயொரு தீமையாகப் பதிவு செய்வேன் என்று மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் கூறினான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 183

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏إِذَا هَمَّ عَبْدِي بِسَيِّئَةٍ فَلَا تَكْتُبُوهَا عَلَيْهِ فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا سَيِّئَةً وَإِذَا هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا حَسَنَةً فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا عَشْرًا ‏

“என் அடியான் ஒரு தீமை செய்ய எண்ணமிட்டால் (மட்டும்) அதை நீங்கள் பதிவு செய்துவிட வேண்டாம். அவன் அதைச் செயல்படுத்திவிட்டால் ஒரேயொரு தீமையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்து விட்டாலும் அதை ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அதை அவன் செய்துவிட்டால் பத்து நன்மைகளாகப் பதிவு செய்யுங்கள் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் (தன் வானவர்களுக்குக்) கட்டளையிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 58, ஹதீஸ் எண்: 182

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏وَعَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏ ‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ ‏ ‏تَجَاوَزَ ‏ ‏لِأُمَّتِي عَمَّا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ بِهِ ‏


و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مِسْعَرٌ ‏ ‏وَهِشَامٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏

“என் சமுதாயத்தவரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை, அவர்கள் செயல்படுத்தாவிட்டால், அல்லது அதை(வெளிப்படுத்தி)ப் பேசாவிட்டால் மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் (தீய எண்ணங்களைச் சிந்தித்த அவர்களது பாவத்தைத்) தள்ளுபடி செய்து விடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 58, ஹதீஸ் எண்: 181

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وُمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِسَعِيدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ بْنِ أَوْفَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ:‏ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ ‏ ‏تَجَاوَزَ ‏ ‏لِأُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ يَتَكَلَّمُوا أَوْ يَعْمَلُوا بِهِ ‏

“என் சமுதாயத்தவரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை, அவர்கள் (வெளிப்படுத்திப்) பேசாவிட்டால் அல்லது அதைச் செயல்படுத்தாவிட்டால், (தீய எண்ணங்களைச் சிந்தித்த அவர்களது பாவத்தை) அல்லாஹ் தள்ளுபடி செய்து விடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 57, ஹதீஸ் எண்: 180

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏آدَمَ بْنِ سُلَيْمَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏خَالِدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏ ‏

لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ [‏وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ ] ‏قَالَ دَخَلَ قُلُوبَهُمْ مِنْهَا شَيْءٌ لَمْ يَدْخُلْ قُلُوبَهُمْ مِنْ شَيْءٍ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَسَلَّمْنَا قَالَ فَأَلْقَى اللَّهُ الْإِيمَانَ فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى [‏لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا ‏ ‏وُسْعَهَا ‏ ‏لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ]‏

‏قَالَ قَدْ فَعَلْتُ ‏
‏رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا ‏ ‏إِصْرًا ‏ ‏كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ‏

‏قَالَ قَدْ فَعَلْتُ ‏
‏وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا ‏

‏قَالَ قَدْ فَعَلْتُ ‏

“… உங்கள் உள்ளத்துள் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அல்லாஹ் அதைக் கணக்கெடுத்து விடுவான் …” எனும் (2:284) வசனம் அருளப்பட்டபோது (மக்களது) மனங்களில் அதுவரை குடிபுகாத (சஞ்சலம்) ஒன்று குடிபுகுந்தது. அப்போது, “சொல்லுங்கள்: செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; கட்டுப்படுகின்றோம் என்று” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுக்குக் கூறினார்கள். (அவ்வாறே மக்கள் கூறவே) அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் நம்பிக்கையை ஊட்டி(வலுப் படுத்தி)னான். கூடவே,

“தாங்கிக் கொள்ளவே இயலாத அளவுக்கு யாருக்கும் அல்லாஹ் துன்பத்தை அளிப்பதில்லை. அவரவர் தேடிக்கொண்ட நன்மையும் தீமையும் அவரவர்க்கே! (ஓரிறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவா! (உன் கட்டளைகளை நிறைவேற்றுவதில்) நாங்கள் (எதையும்) மறந்துவிட்டிருந்தாலோ (அதில்) பிழை செய்திருந்தாலோ எங்களைக் குற்றம் பிடித்து விடாதே!” என்ற (2:286) (கற்பிக்கும்) வசனத்தை அருளினான்.

(மக்கள் அதை மீட்டிக் கோரியபோது,)

“ஏற்றுக் கொண்டேன்” என்றான் அல்லாஹ்.

தொடர்ந்து, “எங்கள் இறைவா! எங்களுக்கு முன்வாழ்ந்த(சமுதாயத்த)வர் மீது சுமத்திய (பெருஞ்)சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தி விடாதே!” (என்ற வசனத்தை மக்கள் மீட்டியபோது,)

“ஏற்றுக் கொண்டேன்” என்றான் அல்லாஹ்.

அதைத் தொடர்ந்து, “எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது பேரருள் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்” (என்று மக்கள் வேண்டியபோது,)

“ஏற்றுக் கொண்டேன்” என்றான் அல்லாஹ்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 57, ஹதீஸ் எண்: 179

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ ‏ ‏وَأُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأُمَيَّةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ وَهُوَ ابْنُ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

لَمَّا نَزَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [‏لِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ] ‏

‏قَالَ فَاشْتَدَّ ذَلِكَ عَلَى ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَوْا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ بَرَكُوا عَلَى الرُّكَبِ فَقَالُوا أَيْ رَسُولَ اللَّهِ كُلِّفْنَا مِنْ الْأَعْمَالِ مَا نُطِيقُ الصَّلَاةَ وَالصِّيَامَ وَالْجِهَادَ وَالصَّدَقَةَ وَقَدْ أُنْزِلَتْ عَلَيْكَ هَذِهِ الْآيَةُ وَلَا نُطِيقُهَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتُرِيدُونَ أَنْ تَقُولُوا كَمَا قَالَ أَهْلُ الْكِتَابَيْنِ مِنْ قَبْلِكُمْ سَمِعْنَا وَعَصَيْنَا بَلْ قُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ فَلَمَّا اقْتَرَأَهَا الْقَوْمُ ذَلَّتْ بِهَا أَلْسِنَتُهُمْ فَأَنْزَلَ اللَّهُ فِي ‏ ‏إِثْرِهَا [‏آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ] ‏

‏فَلَمَّا فَعَلُوا ذَلِكَ نَسَخَهَا اللَّهُ تَعَالَى فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ [‏لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا ‏ ‏وُسْعَهَا ‏ ‏لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا] ‏

‏قَالَ نَعَمْ ‏
‏رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا ‏ ‏إِصْرًا ‏ ‏كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ‏

‏قَالَ نَعَمْ ‏
‏رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ‏

‏قَالَ نَعَمْ ‏
‏وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ‏

‏قَالَ نَعَمْ ‏

“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன. இன்னும் உங்கள் உள்ளத்துள் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அல்லாஹ் அதைக் கணக்கெடுத்து விடுவான். அவன், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை தண்டிப்பான். அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆதிக்கப் பேராற்றல் உடையவன்” எனும் (2:284) வசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டபோது, அவர்களின் தோழர்களுக்கு அது கடின தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சக்திக்கு மீறிய(தாக நாங்கள் நினைத்த) தொழுகை, நோன்பு, அறப்போர், தர்மம்(ஸகாத்) ஆகியவற்றைச் செய்யுமாறு நாங்கள் உத்தரவிடப்பட்டோம். ஆனால், (இப்போது) உங்களுக்கு இந்த வசனம் அருளப்பட்டுள்ளது. இது எங்கள் சக்திக்கு மீறியதாயிற்றே?” என்று கேட்டார்கள். அதற்கு, “உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்ட இரு வேதக்காரர்(களான யூதர்களும் கிறிஸ்தவர்)களும் கூறியதைப் போன்று, செவியுற்றோம்; மாறு செய்தோம் என்று நீங்களும் கூற விரும்புகின்றீர்களா? வேண்டாம். (மாறாக,) எங்கள் இறைவா! நாங்கள் (உன் கட்டளைகளுக்குச்) செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; உன்னிடமே மன்னிப்பை வேண்டி நிற்கிறோம்; உன்னிடமே மீண்டு வருவோம் என்று கூறுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அவ்வாறே, “எங்கள் இறைவா! நாங்கள் (உன் கட்டளைகளுக்குச்) செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; உன்னிடமே மன்னிப்பை வேண்டி நிற்கிறோம்; உன்னிடமே மீண்டு வருவோம்” என்று மக்கள் கூறத் தொடங்கினர். அவர்கள் சொல்லச் சொல்ல, (மனமொன்றி) அவர்களது நாவுகள் (இறைவனுக்குப்) பணிந்தன.

அதைத் தொடர்ந்து,

“தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை இறைத்தூதரும் ஓரிறை நம்பிக்கையாளர்களும் (உறுதியாக) நம்புகின்றனர். (மட்டுமின்றி,) அவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய அனைத்து மறைகளையும் தூதர்களையும் நம்புகின்றனர். இறைத்தூதர்களுக்கிடையில் (அவர்களை நம்புவதில்) நாம் வேற்றுமை பாராட்ட மாட்டோம். எங்கள் இறைவா! நாங்கள் (உன் கட்டளைகளுக்குச்) செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; உன்னிடமே மன்னிப்பை வேண்டி நிற்கின்றோம்; உன்னிடமே மீண்டு வருவோம் (என்ற நம்பிக்கையில் வாழ்கின்றோம்) என்று அவர்கள் வேண்டுகின்றனர்” என்ற (2:285) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

மக்கள் (தன் கட்டளைகளை ஏற்றுச்) செயல்பட்டதைத் தொடர்ந்து, முந்தைய கடுமைக்கு மாற்றாக,

“தாங்கிக் கொள்ளவே இயலாத அளவுக்கு யாருக்கும் அல்லாஹ் துன்பத்தை அளிப்பதில்லை. அவரவர் தேடிக்கொண்ட நன்மையும் தீமையும் அவரவர்க்கே! (ஓரிறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவா! (உன் கட்டளைகளை நிறைவேற்றுவதில்) நாங்கள் (எதையும்) மறந்துவிட்டிருந்தாலோ (அதில்) பிழை செய்திருந்தாலோ எங்களைக் குற்றம் பிடித்து விடாதே!” என்ற (ஆறுதலான, கற்பிக்கும்) (2:286) வசனங்களை அருளினான். (மக்கள் அவ்வாறே அவனிடம் வேண்டவே,)

“ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.

தொடர்ந்து, “எங்கள் இறைவா! எங்களுக்கு முன்வாழ்ந்த(சமுதாயத்த)வர் மீது சுமத்திய (பெருஞ்)சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தி விடாதே!” (என்ற வசனத்தை மக்கள் மீட்டியபோது),

“ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.

அதைத் தொடர்ந்து, “எங்கள் இறைவா! எங்களால் சுமக்க இயலாத எதையும் எங்கள் மீது சுமத்தி விடாதே!” (என்ற வசனத்தால் மக்கள் வேண்டியபோது,)

“ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.

இறுதியாக, “எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது பேரருள் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். இறைமறுப்பாளக் கூட்டத்தாரை நாங்கள் வென்றெடுக்க எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (என்று மக்கள் வேண்டினர்.)

“ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)