அத்தியாயம்: 8, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1478

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏فُلَيْحٌ ‏ ‏عَنْ ‏ ‏ضَمْرَةَ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ ‏ ‏قَالَ :‏‏

‏سَأَلَنِي ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏عَمَّا قَرَأَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي يَوْمِ الْعِيدِ فَقُلْتُ ‏ ‏بِاقْتَرَبَتِ السَّاعَةُ ‏ ‏وَ ‏ ‏ق وَالْقُرْآنِ الْمَجِيدِ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெருநாளி(ன் தொழுகையி)ல் எ(ந்த அத்தியாயத்)தை ஓதுவார்கள்?” என்று என்னிடம் உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நான் “இக்தரபத்திஸ் ஸாஅத்து எனும் (54ஆவது) அத்தியாயத்தையும் காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்” என்று விடையளித்தேன்.

அறிவிப்பாளர் : அபூவாக்கித் அவ்ஃபு பின் அல்ஹாரிஸ் அல்லைஸீ (ரலி)

அத்தியாயம்: 8, பாடம்: 3, ஹதீஸ் எண்: 1477

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏:‏

‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏سَأَلَ ‏ ‏أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ ‏ ‏مَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْأَضْحَى وَالْفِطْرِ فَقَالَ كَانَ ‏ ‏يَقْرَأُ فِيهِمَا ‏ ‏بِق وَالْقُرْآنِ الْمَجِيدِ ‏ ‏وَاقْتَرَبَتْ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ

உமர் பின் அல்கத்தாப் (ரலி), அபூவாக்கித் அவ்ஃபு பின் அல்ஹாரிஸ் அல் லைஸீ (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள்(தொழுகை)களில் எ(ந்த அத்தியாயத்)தை ஓதுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூவாக்கித் (ரலி), “காஃப் வல்குர்ஆனில் மஜீத் எனும் (50ஆவது) அத்தியாத்தையும் இக்தரபத்திஸ் ஸாஅத்து வன்ஷக்கல் கமர் எனும் (54ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூவாக்கித் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 8, பாடம்: 2, ஹதீஸ் எண்: 1476

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجَ يَوْمَ أَضْحَى أَوْ فِطْرٍ فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْ:‏دَهَا ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ ‏ ‏بِلَالٌ ‏ ‏فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ فَجَعَلَتْ الْمَرْأَةُ تُلْقِي ‏ ‏خُرْصَهَا ‏ ‏وَتُلْقِي ‏ ‏سِخَابَهَا ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏غُنْدَرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஹஜ்ஜுப் பெருநாளில் அல்லது நோன்புப் பெருநாளில் புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் (பெருநாள் தொழுகை மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு தம்முடன் பிலால் (ரலி) இருக்க, பெண்கள் பகுதிக்கு வந்து (அறிவுரை வழங்கினார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித்தார்கள். பெண்கள் தம் காதணிகளையும் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் (கழற்றி பிலால் (ரலி) அவர்களின் கையிலிருந்த துணியில்) போட்டனர்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 8, பாடம்: 1, ஹதீஸ் எண்: 1475

و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ بِنْتِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ :‏‏

‏أَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ نُخْرِجَهُنَّ فِي الْفِطْرِ وَالْأَضْحَى ‏ ‏الْعَوَاتِقَ ‏ ‏وَالْحُيَّضَ وَذَوَاتِ ‏ ‏الْخُدُورِ ‏ ‏فَأَمَّا الْحُيَّضُ فَيَعْتَزِلْنَ الصَّلَاةَ وَيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لَا يَكُونُ لَهَا جِلْبَابٌ قَالَ ‏ ‏لِتُلْبِسْهَا أُخْتُهَا مِنْ جِلْبَابِهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இளம் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரையிட்டுக்கொள்ளும் பெண்களையும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய (இரு) பெருநாட்களிலும் (தொழுகைத் திடலுக்கு) அழைத்துச் செல்லுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையிலிருந்து ஒதுங்கியிருந்து (பிற) நன்மையான செயல்களிலும் முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்கெடுக்க வேண்டும் (என்றும் கட்டளையிட்டார்கள்). அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருத்தியிடம் துப்பட்டா இல்லாவிட்டால் (என்ன செய்வது)?” என்று கேட்டேன். அதற்கு, “அவளுடைய சகோதரி தனது துப்பட்டாவில் ஒன்றை அவளுக்கு இரவலாக அணிவிக்கட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி)

அத்தியாயம்: 8, பாடம்: 1, ஹதீஸ் எண்: 1474

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ بِنْتِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏كُنَّا نُؤْمَرُ بِالْخُرُوجِ فِي الْعِيدَيْنِ ‏ ‏وَالْمُخَبَّأَةُ ‏ ‏وَالْبِكْرُ قَالَتْ الْحُيَّضُ يَخْرُجْنَ فَيَكُنَّ خَلْفَ النَّاسِ يُكَبِّرْنَ مَعَ النَّاسِ

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரையிட்டுக்கொள்ளும் பெண்களையும் கன்னிப் பெண்களையும் அழைத்துச் செல்ல வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி)

அத்தியாயம்: 8, பாடம்: 1, ஹதீஸ் எண்: 1473

حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏أَمَرَنَا ‏ ‏تَعْنِي النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ نُخْرِجَ فِي الْعِيدَيْنِ ‏ ‏الْعَوَاتِقَ ‏ ‏وَذَوَاتِ ‏ ‏الْخُدُورِ ‏ ‏وَأَمَرَ الْحُيَّضَ أَنْ يَعْتَزِلْنَ مُصَلَّى الْمُسْلِمِينَ

இரு பெருநாட்களில் இளம் பெண்களையும் திரையிட்டுக்கொள்ளும் பெண்களையும் (திடலுக்கு) அழைத்துச் செல்லும்படி நபி (ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் முஸ்லிம்களின் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கியிருக்குமாறும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1472

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَخْرُجُ يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ فَيَبْدَأُ بِالصَّلَاةِ فَإِذَا صَلَّى صَلَاتَهُ وَسَلَّمَ قَامَ فَأَقْبَلَ عَلَى النَّاسِ وَهُمْ جُلُوسٌ فِي مُصَلَّاهُمْ فَإِنْ كَانَ لَهُ حَاجَةٌ بِبَعْثٍ ذَكَرَهُ لِلنَّاسِ أَوْ كَانَتْ لَهُ حَاجَةٌ بِغَيْرِ ذَلِكَ أَمَرَهُمْ بِهَا وَكَانَ يَقُولُ ‏ ‏تَصَدَّقُوا تَصَدَّقُوا تَصَدَّقُوا وَكَانَ أَكْثَرَ مَنْ يَتَصَدَّقُ النِّسَاءُ ثُمَّ يَنْصَرِفُ ‏

‏فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى كَانَ ‏ ‏مَرْوَانُ بْنُ الْحَكَمِ ‏ ‏فَخَرَجْتُ ‏ ‏مُخَاصِرًا ‏ ‏مَرْوَانَ ‏ ‏حَتَّى أَتَيْنَا الْمُصَلَّى فَإِذَا ‏ ‏كَثِيرُ بْنُ الصَّلْتِ ‏ ‏قَدْ بَنَى مِنْبَرًا مِنْ طِينٍ وَلَبِنٍ فَإِذَا ‏ ‏مَرْوَانُ ‏ ‏يُنَازِعُنِي يَدَهُ كَأَنَّهُ يَجُرُّنِي نَحْوَ الْمِنْبَرِ وَأَنَا أَجُرُّهُ نَحْوَ الصَّلَاةِ فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ مِنْهُ قُلْتُ أَيْنَ ‏ ‏الِابْتِدَاءُ بِالصَّلَاةِ فَقَالَ لَا يَا ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏قَدْ تُرِكَ مَا تَعْلَمُ قُلْتُ كَلَّا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَأْتُونَ بِخَيْرٍ مِمَّا أَعْلَمُ ثَلَاثَ مِرَارٍ ثُمَّ انْصَرَفَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்புப் பெருநாளன்றும் (திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று, முதலில் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.

தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்ததும் மக்களை முன்னோக்கி (உரை நிகழ்த்தியபடி) நிற்பார்கள். மக்கள் தொழுத இடத்தில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஏதேனும் படைப் பிரிவை அனுப்ப வேண்டிய தேவையிருந்தால் அதை மக்களிடம் அறிவிப்பார்கள்; அல்லது வேறு தேவை ஏதேனும் இருந்தால், அதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார்கள்.

(அன்றைய தினம்) அவர்கள், “தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று (திரும்பத் திரும்பக்) கூறுவார்கள். மக்களில் அதிகமாகத் தர்மம் செய்வோர் பெண்களாக இருந்தார்கள். பிறகு திரும்பிச் செல்வார்கள்.

மர்வான் பின் அல்ஹகம் (மதீனாவின் ஆளுநராக) வரும்வரை (முதலில் தொழுகை, பிறகு உரை எனும்) அதே நிலை தொடர்ந்து நீடித்தது. (மர்வான் ஆட்சிப் பொறுப்பேற்று) அவரும் நானும் கை   கோத்தவர்களாக இணைந்து (பெருநாள் ஒன்றில்) தொழும் திடலுக்கு வந்தபோது, அங்குக் களிமண்ணாலும் செங்கல்லாலும் கட்டியிருந்த ஒரு சொற்பொழிவு மேடை (புதிதாகக்) காணப்பட்டது. அதை, கஸீர் பின் அஸ்ஸல்த் என்பவர் கட்டியிருந்தார்.

அப்போது மர்வான் என்னை சொற்பொழிவு மேடை நோக்கி இழுக்க, நான் அவரைத் தொழுகைக்காக இழுக்க அவர் என்னிடமிருந்து தனது கையை விடுவித்துக் கொண்டார். (தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்திட நின்றார்) அவரிடம் இந்த (மாற்றமான) நிலையைக் கண்ட நான், “முதலில் நடைபெறவேண்டிய தொழுகை எங்கே?” என்று கேட்டேன். அதற்கு மர்வான், “இல்லை அபூஸயீதே! நீங்கள் அறிந்திருக்கும் அந்த நடைமுறை கைவிடப்பட்டது” என்று கூறினார். அதற்கு நான், “இல்லை, என் உயிர் கையிலுள்ளவன்மீது சத்தியமாக! நான் அறிந்திருக்கும் (நபிவழியான) நடைமுறையைவிடச் சிறந்த ஒன்றை உங்களால் கொண்டுவர முடியாது” என்று மறுத்துப் பேசினேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

“நான் அறிந்திருக்கும் (நபிவழியான) நடைமுறையைவிடச் சிறந்த ஒன்றை உங்களால் கொண்டுவர முடியாது” என்று மூன்று முறை கூறிவிட்டு, அபூஸயீத் (ரலி) திரும்பிச் சென்றுவிட்டார்கள் என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான இயாள் பின் அப்தில்லாஹ் பின் ஸஅத் (ரஹ்) அறிவிக்கின்றார்.

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1471

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبَا بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏كَانُوا يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன்பே இரு பெருநாள் தொழுகைகளைத் தொழுபவர்களாய் இருந்தனர்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1470

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَحَسَنُ بْنُ الرَّبِيعِ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعِيدَيْنِ غَيْرَ مَرَّةٍ وَلَا مَرَّتَيْنِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரு பெருநாள் தொழுகைகளை ஒரு முறை, இரு முறை அல்ல; (பல முறை) தொழுதிருக்கின்றேன்; (அவற்றில்) பாங்கும் இகாமத்தும் இருந்ததில்லை.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1469

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏:‏

‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَرْسَلَ إِلَى ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏أَوَّلَ مَا بُويِعَ لَهُ ‏ ‏أَنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ لِلصَّلَاةِ يَوْمَ الْفِطْرِ فَلَا تُؤَذِّنْ لَهَا قَالَ فَلَمْ يُؤَذِّنْ لَهَا ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏يَوْمَهُ وَأَرْسَلَ إِلَيْهِ مَعَ ذَلِكَ إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلَاةِ وَإِنَّ ذَلِكَ قَدْ كَانَ يُفْعَلُ قَالَ فَصَلَّى ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏قَبْلَ الْخُطْبَةِ

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) (மக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்று) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) நடைபெற்ற முதல் நாளில், இப்னு அப்பாஸ் (ரலி), “(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாள் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதில்லை. எனவே, நீங்களும் அத்தொழுகைக்கு பாங்கு சொல்லாதீர்கள்” என்ற செய்தியை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள்.

அவ்வாறே அன்றைய தினம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் பாங்கு சொல்லவில்லை. மேலும், ‘பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறுதான் (முன்பு) செய்யப்பட்டுவந்தது’ எனும் செய்தியையும் அவர்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) தெரிவித்தார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ (ரஹ்)