அத்தியாயம்: 15, பாடம்: 38, ஹதீஸ் எண்: 2209

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْحَقَ الْمُسَيَّبِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏أَخْبَرَهُ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اسْتَقْبَلَ ‏ ‏فُرْضَتَيْ الْجَبَلِ ‏ ‏الَّذِي بَيْنَهُ وَبَيْنَ الْجَبَلِ الطَّوِيلِ نَحْوَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏يَجْعَلُ الْمَسْجِدَ الَّذِي بُنِيَ ثَمَّ يَسَارَ الْمَسْجِدِ الَّذِي بِطَرَفِ ‏ ‏الْأَكَمَةِ ‏ ‏وَمُصَلَّى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْفَلَ مِنْهُ عَلَى ‏ ‏الْأَكَمَةِ ‏ ‏السَّوْدَاءِ يَدَعُ مِنْ ‏ ‏الْأَكَمَةِ ‏ ‏عَشْرَةَ أَذْرُعٍ أَوْ نَحْوَهَا ثُمَّ ‏ ‏يُصَلِّي مُسْتَقْبِلَ ‏ ‏الْفُرْضَتَيْنِ ‏ ‏مِنْ الْجَبَلِ الطَّوِيلِ الَّذِي بَيْنَكَ وَبَيْنَ ‏ ‏الْكَعْبَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (‘தூத் தவா’வில்) கஅபாவின் திசையில் அமைந்த ஓர் உயரமான மலையின் இரு குன்றுகளை நோக்கி(அல்லாஹ்வை வணங்கி)னார்கள். (அதாவது தற்போது) அங்கு கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலை, மேட்டுப் புறத்தில் அமைந்த தொழும் இடத்திற்கு இடப்பக்கமாக ஆக்கிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுத இடம், கருப்பு மேட்டிற்குக் கீழே சுமார் பத்து முழம் தள்ளி இருந்தது. உமக்கும்* கஅபாவிற்கும் இடையே அமைந்த உயரமான மலையின் இரு குன்றுகளை நோக்கித் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு:
*“உமக்கும்“ என்று இப்னு உமர் (ரலி) அவர்களால் குறிப்பிடப்படுபவர், அவரின் மாணவரும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளருமான நாஃபிஉ (ரஹ்) ஆவார்.

அத்தியாயம்: 15, பாடம்: 38, ஹதீஸ் எண்: 2208

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْحَقَ الْمُسَيَّبِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏حَدَّثَهُ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَنْزِلُ ‏ ‏بِذِي طَوًى ‏ ‏وَيَبِيتُ بِهِ حَتَّى يُصَلِّيَ الصُّبْحَ حِينَ يَقْدَمُ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَمُصَلَّى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَلِكَ عَلَى ‏ ‏أَكَمَةٍ ‏ ‏غَلِيظَةٍ لَيْسَ فِي الْمَسْجِدِ الَّذِي بُنِيَ ثَمَّ وَلَكِنْ أَسْفَلَ مِنْ ذَلِكَ عَلَى ‏ ‏أَكَمَةٍ ‏ ‏غَلِيظَةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனாவிலிருந்து) மக்காவுக்குச் செல்லும்போது ‘தூத் தவா’ எனும் இடத்தில் இறங்குவார்கள்; ஸுப்ஹுத் தொழும்வரை அங்கேயே இரவில் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுத இடம் அங்குள்ள கெட்டியான மேட்டின் மீது அமைந்துள்ளது. அங்குத் தற்போது பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடம் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுத) இடமன்று. மாறாக, அந்தப் பள்ளிவாசலுக்குக் கீழ்ப்புறமாக அமைந்துள்ள கெட்டியான மேடுதான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுத) அந்த இடமாகும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர்

அத்தியாயம்: 15, பாடம்: 38, ஹதீஸ் எண்: 2207

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ : ‏

كَانَ ‏ ‏لَا يَقْدَمُ ‏ ‏مَكَّةَ ‏ ‏إِلَّا بَاتَ ‏ ‏بِذِي طَوًى ‏ ‏حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ ثُمَّ يَدْخُلُ ‏ ‏مَكَّةَ ‏ ‏نَهَارًا وَيَذْكُرُ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ فَعَلَهُ

இப்னு உமர் (ரலி) மக்காவிற்கு வந்தால், ‘தூத் தவா’வில் இரவில் தங்காமல் இருக்க மாட்டார்கள். காலையில் குளித்துவிட்டுப் பின்னர் பகல் நேரத்தில் மக்காவினுள் நுழைவார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்வார்கள் என அவர்கள் குறிப்பிடுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 38, ஹதீஸ் எண்: 2206

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَاتَ ‏ ‏بِذِي طَوًى ‏ ‏حَتَّى أَصْبَحَ ثُمَّ دَخَلَ ‏ ‏مَكَّةَ


قَالَ ‏ ‏وَكَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏يَفْعَلُ ذَلِكَ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ سَعِيدٍ ‏ ‏حَتَّى صَلَّى الصُّبْحَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَوْ قَالَ حَتَّى أَصْبَحَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘தூத் தவா’ எனுமிடத்தில் இரவில் தங்கி விட்டுக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

“இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள்” என்று இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) கூறுகின்றார். உபைதுல்லாஹ் பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) ஸுப்ஹுத் தொழும்வரை தங்கியிருப்பார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 37, ஹதீஸ் எண்: 2205

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ عَامَ الْفَتْحِ مِنْ ‏ ‏كَدَاءٍ ‏ ‏مِنْ أَعْلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏فَكَانَ أَبِي يَدْخُلُ مِنْهُمَا كِلَيْهِمَا وَكَانَ أَبِي أَكْثَرَ مَا يَدْخُلُ مِنْ ‏ ‏كَدَاءٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் உயரப் பகுதியிலுள்ள ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக நுழைந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி


குறிப்பு  :
“என் தந்தை உர்வா (ரஹ்) (‘கதாஉ’ எனும் உயரப் பகுதி, மற்றும் ‘குதாஉ‘ எனும் தாழ்வுப் பகுதி ஆகிய) அவ்விரண்டு வழிகளிலும் நுழைவார்கள்; பெரும்பாலும் ‘கதாஉ’ வழியாகவே நுழைவார்கள்” என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 37, ஹதீஸ் எண்: 2204

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ : ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا جَاءَ إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏دَخَلَهَا مِنْ أَعْلَاهَا وَخَرَجَ مِنْ أَسْفَلِهَا

நபி (ஸல்), மக்கா நகருக்கு வந்தபோது, அதன் மேற்புற வழியாக நுழைந்து, அதன் கீழ்ப்புற வழியாக வெளியேறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி

அத்தியாயம்: 15, பாடம்: 37, ஹதீஸ் எண்: 2203

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَخْرُجُ مِنْ طَرِيقِ الشَّجَرَةِ وَيَدْخُلُ مِنْ طَرِيقِ ‏ ‏الْمُعَرَّسِ ‏ ‏وَإِذَا دَخَلَ ‏ ‏مَكَّةَ ‏ ‏دَخَلَ مِنْ ‏ ‏الثَّنِيَّةِ الْعُلْيَا ‏ ‏وَيَخْرُجُ مِنْ ‏ ‏الثَّنِيَّةِ السُّفْلَى ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏و قَالَ ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏الْعُلْيَا ‏ ‏الَّتِي ‏ ‏بِالْبَطْحَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனாவிலிருந்து) ‘அஷ்ஷஜரா’ எனும் இடத்தின் வழியாக வெளியேறுவார்கள். (திரும்பும்போது) ‘அல் முஅர்ரஸ்’ எனும் இடத்தின் வழியாக நுழைவார்கள். மக்காவிற்குள் செல்லும்போது மேற்புறக் கணவாய் வழியாக நுழைந்து, கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) வழி அறிவிப்பில், “மேற்புறக் கணவாய் (அஸ்ஸனிய்யத்துல் உல்யா) என்பது அல்பத்ஹாவில் உள்ளதாகும்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 36, ஹதீஸ் எண்: 2202

‏و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبِيبٌ الْمُعَلِّمُ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ : ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لِامْرَأَةٍ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏يُقَالُ لَهَا ‏ ‏أُمُّ سِنَانٍ ‏ ‏مَا مَنَعَكِ أَنْ تَكُونِي حَجَجْتِ مَعَنَا قَالَتْ ‏ ‏نَاضِحَانِ ‏ ‏كَانَا لِأَبِي فُلَانٍ زَوْجِهَا حَجَّ هُوَ وَابْنُهُ عَلَى أَحَدِهِمَا وَكَانَ الْآخَرُ يَسْقِي عَلَيْهِ غُلَامُنَا قَالَ فَعُمْرَةٌ فِي رَمَضَانَ تَقْضِي حَجَّةً أَوْ حَجَّةً مَعِي

நபி (ஸல்), உம்மு ஸினான் எனும் அன்ஸாரிப் பெண்ணிடம், “நீ எங்களுடன் ஹஜ் செய்வதற்கு உனக்கு என்ன தடை?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “என் பிள்ளையின் தந்தையிடம் (அதாவது என் கணவரிடம்) தண்ணீர் இறைக்கும் இரு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் அவரும் அவருடைய மகனும் ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர்; மற்றொன்றில் எங்களின் அடிமை தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கின்றார்” என்றார். நபி (ஸல்), “ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும்; அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 36, ஹதீஸ் எண்: 2201

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يُحَدِّثُنَا قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِامْرَأَةٍ ‏ ‏مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏سَمَّاهَا ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏فَنَسِيتُ اسْمَهَا ‏ ‏مَا مَنَعَكِ أَنْ تَحُجِّي مَعَنَا قَالَتْ لَمْ يَكُنْ لَنَا إِلَّا ‏ ‏نَاضِحَانِ ‏ ‏فَحَجَّ أَبُو وَلَدِهَا وَابْنُهَا عَلَى ‏ ‏نَاضِحٍ ‏ ‏وَتَرَكَ لَنَا ‏ ‏نَاضِحًا ‏ ‏نَنْضِحُ ‏ ‏عَلَيْهِ قَالَ فَإِذَا جَاءَ رَمَضَانُ فَاعْتَمِرِي فَإِنَّ عُمْرَةً فِيهِ تَعْدِلُ حَجَّةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்ஸாரிப் பெண் ஒருவரிடம், “நீ எங்களுடன் ஹஜ் செய்வதற்கு என்ன தடை?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன; ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக அவர் விட்டுச் சென்றுள்ளார். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கின்றோம்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான(பலனுடைய)தாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு  :

“இப்னு அப்பாஸ் (ரலி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்” என்று இதன் அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 35, ஹதீஸ் எண்: 2200

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏قَالَ ‏ ‏

دَخَلْتُ أَنَا ‏وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏الْمَسْجِدَ فَإِذَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏جَالِسٌ إِلَى حُجْرَةِ ‏ ‏عَائِشَةَ ‏ ‏وَالنَّاسُ يُصَلُّونَ الضُّحَى فِي الْمَسْجِدِ فَسَأَلْنَاهُ عَنْ صَلَاتِهِمْ فَقَالَ بِدْعَةٌ فَقَالَ لَهُ ‏ ‏عُرْوَةُ ‏ ‏يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏كَمْ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَرْبَعَ عُمَرٍ إِحْدَاهُنَّ فِي رَجَبٍ فَكَرِهْنَا أَنْ نُكَذِّبَهُ وَنَرُدَّ عَلَيْهِ وَسَمِعْنَا‏ ‏اسْتِنَانَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فِي الْحُجْرَةِ فَقَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏أَلَا تَسْمَعِينَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِلَى مَا يَقُولُ ‏ ‏أَبُو عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏فَقَالَتْ وَمَا يَقُولُ قَالَ ‏يَقُولُ اعْتَمَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْبَعَ عُمَرٍ إِحْدَاهُنَّ فِي رَجَبٍ فَقَالَتْ يَرْحَمُ اللَّهُ ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا وَهُوَ مَعَهُ وَمَا اعْتَمَرَ فِي رَجَبٍ قَطُّ

நானும் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம். அங்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), ஆயிஷா (ரலி) அவர்களின் அறைச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் பள்ளிவாசலில் முற்பகல் நேர(ளுஹா)த் தொழுகை தொழுது கொண்டிருந்தனர்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் மக்களின் அந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், “இது புதிய நடைமுறை (பித்அத்)” என்றார்கள். பிறகு அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) கேட்டார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நான்கு உம்ராக்கள் செய்தார்கள்; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்” என்றார்கள். நாங்கள் அவர்களது சொல்லைப் பொய்யாக்கவோ மறுக்கவோ விரும்பவில்லை. இதற்கிடையே அறையினுள் ஆயிஷா (ரலி) பல் துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா (ரஹ்), “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அபூஅப்திர் ரஹ்மான் சொல்வதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஆயிஷா (ரலி), “அவர் என்ன சொல்கின்றார்?” என்று கேட்டார்கள். “நபி (ஸல்) நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள்; அவற்றில் ஒன்று ரஜப் மாதத்தில் நடந்தது என்று சொல்கின்றார்” என்று உர்வா (ரஹ்) கூறினார்கள். ஆயிஷா (ரலி), “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்ராச் செய்யும்போதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார் (இப்போது மறந்துவிட்டார் போலும்!). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருபோதும் ரஜப் மாதத்தில் உம்ராச் செய்ததே இல்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்)


குறிப்பு  :

ளுஹாத் தொழுகை பித்அத் அல்ல; அதைக் கூட்டாகத் தொழுவது பித்அத் எனும் பொருளில் இப்னு உமர் (ரலி) கூறியுள்ளார்கள்.